பிறமலைக் கள்ளர் என்கிற சாதியினர் அதிகம் வாழும் பகுதி மதுரை மாவட்டம். எட்டு நாடுகளைக் கொண்டதாக சொல்லப்படும் இந்தப் பகுதியில், செக்கானூரணியை அடுத்த கொக்குளம் முக்கியமானது. இது ஒரு நாடு என்றழைக்கப்படுகிறது. இந்த மக்களின் பிரதான வழிபாட்டு மரியாதை, பேய்க்காமன் என்கிற நாட்டார் தெய்வத்திற்கு வழங்கப்படு கிறது. இத்தெய்வத்திற்கு பூசை புனஸ் காரங்களை நிகழ்த்துபவர் ஒரு பறையர். கள்ளர்கள் கோவிலாக இருந்தாலும், தீண்டத் தகாதவர்களுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு. இக்கோவிலின் நான்காம் நாள் திரு விழா பறையர்களுக்கானது, என்று லூயிஸ் டூமாண்ட் என்ற பிரெஞ்சு நாட்டு மானுவியல் அறிஞர், தனது பிரமலைக் கள்ளரின் சமூக அமைப்பு மற்றும் மதம் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். லூயிஸ் டூமாண்ட் தனது ஆய்வினை பிரமலைக் கள்ளர் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும், சுமார் 2 ஆண்டு காலம் (1957-59) தங்கியிருந்து ஆய்வு நடத்தி தெரிவித்த தகவல்களில் ஒன்றுதான், மேலே நாம் குறிப்பிட்டது. இன்றைய நிலை குறித்து விசாரித்த போதும், ஆமாம், பறையர் சாதியைச் சார்ந்த மனிதர் பூசை செய்து தருகிற பொருள் களை பக்தியோடு கள்ளர் சாதியைச் சார்ந்த மனிதர்கள் பெற்றுக் கொள்வதைப் பார்க்க முடியும், என்கிறார்கள். இது நெடுங்காலமாக, தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப் பட்டுவரும் உண்மை என்பதை தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் அறியாதது.
thanks to http://esskannan.blogspot.com/2010/05/blog-post_7950.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment