மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் (முனைவர்) நீதியரசர் பி.வேணுகோபால் (ஓய்வு)

0 c


எனது தலைமையிலான
மண்டைகாடு கலவரங்கள் குறித்த விசாரணை குழு
மதமாற்றங்களை தடைசெய்யும்
ஒரு சட்டத்தினை 1983 இலேயே பரிந்துரை செய்தது.
.
.
அண்மையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்து
பின்னர் அரசியல் நிர்பந்தங்களால் நீக்கிவிட்ட)
கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தினை
சரியான கோணத்தில் அறிந்துகொள்ள
.
.
(அன்றைய) விசாரணைக்குழு
மதமாற்றத் தடைச்சட்டத்தினை
பரிந்துரை செய்யுமாறு தூண்டிய பின்புலத்தையும்
சூழலையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
.
.
ஒரு சிறுபான்மை சமுதாயம்
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில்
பெரும்பான்மை ஆகும் போது அது
ஆக்கிரமிப்புத்தன்மையுடனும்
வன்மைத்தன்மையுடனும் (millitant),
இறுமாப்புடனும் இயங்க ஆரம்பிக்கிறது.
..
.
அது தனது ஆற்றலை மாநாடுகள் மூலமும்
பேரணிகள் மூலமும் காட்ட முனைகிறது.
.
.
கிறிஸ்தவர்கள் கன்னியாகுமரி 'கன்னி மேரி ' எனவும்,
நாகர்கோவில் 'நாதர் காயல் ' எனவும் பெயர்
மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர்.
.
.
இது பெரும்பான்மை சமுதாயத்திற்கு வருத்தத்தையும்,
நம்பிக்கையின்மையையும், ஐயப்பாட்டையும் உண்டாக்கிற்று
.
.
இதன் விளைவாக வகுப்புவாத சூழல் உருவாயிற்று.
இது சட்ட ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது.
இவ்விசயத்தை ஒவ்வோர் பிரச்சனையாக அணுகலாம்.
.
.
அ) அரசியல் நிர்ணய சட்டத்தின் 25 ஆவது பிரிவு வழங்கும்
ஒருவருக்கு
தமது மதத்தினை பரப்பும் உரிமை என்பது கிறிஸ்தவ மிசினரிகளால்,
ஹிந்து மதத்தினையும்
அதன் தேவதேவியரையும் வன்முறைத்தனமாக சிறுமைப்படுத்துவதற்கும்,
.
.
ஹிந்து மதத்தினை தவறாக சித்தரிப்பதற்கும்
என்பதான மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்
வழக்கமாக தொடங்கப்பட்டு,
சீரழிக்கப்பட்டது (degenerated).
.
.
இது அதே அளவு மோசமான எதிர்வினைகளை
-கிறிஸ்தவ மதத்தின் மீதாக
படுமோசமான தாக்குதல் பிரச்சாரத்தை-
ஹிந்துக்களிடமிருந்து உருவாக்கியது.
.
.
இது தொடர்ந்து ஒருவர் மற்றவரது வழிபாட்டு தலங்களை தாக்கவும்,
அழிக்கவும், அவமானப்படுத்தவும் செய்வதாக
வெளியிட்ட மிரட்டல்களைத் தொடர்ந்து
வெளிப்படையான தாக்குதல்களாகவும்
சவால்களாகவும்
ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உருமாறியது.
.
.
இதனைத் தொடர்ந்து வெளிப்படையாக
தம் மதத்தினரை வன்முறை கலவரங்களுக்குத் தூண்டும்,
சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள்
இரு மதத்தினரிடையேயும் புழங்கலாயின.
.
.
மிக மோசமான வார்த்தைகளால்
மாற்று மதத்தினரைத் திட்டும்
சுவரொட்டிகள்
கன்னியாகுமரியில் ஆரம்பித்து
இரு சமுதாயத்தினராலும்
கட்டுக்கடங்காத ஆவேசத்துடன்
தடுப்பாரற்று ஒட்டப்பட்டுவந்தன.
.
.
இது கடந்த இருவருடங்களாகவே நடைபெற்று வந்து
இறுதியில்
மிகமோசமான வகுப்புவாத கலவரமாக
பெருமளவு வன்முறையுடனும் சூறையாடலுடனும் வெடித்தது.
.
.
ஆ. அதன் பின்னர்
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் நடந்தது
என்பது
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அறியப்படாத ஒரு நிகழ்ச்சியாகும்.
.
.
சொத்துக்கள் (வீடுகள், கடைகள், துணிக்கடைகள், தென்னந்தோப்புகள், வாழைத்தோட்டங்கள்) மிகக்கடுமையாக சூறையாடப்பட்டன.
.
.
கல்வி நிறுவனங்கள், கான்வெண்ட்கள்,
கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள்,
ஹிந்து ஆலயங்கள் ஆகியவை
வன்முறையின் இலக்குகளாயின.
.
.
கல்லறைத் தோட்டங்கள் கூட விட்டுவைக்கப்படவில்லை.
வன்முறைக்கெல்லாம்
.
.
உச்சகட்டமாக
மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள்.
இதெல்லாம் மதத்தின் பெயரால் நடந்ததென்பதுதான் கொடுமையான விசயம்.
.
.
சில கிராமங்களில் கிணறுகள் பெட்ரோல், டாசல்,
மோசமான இரசாயனம் ஊற்றப்பட்டு
அதன் நீர் பயன்படுத்தப்பட முடியாமல் ஆனது.
பல கிராமங்களில் மக்கள் வசிக்க
தலையின் மீதோரு கூரையும் இல்லாத
பரிதாபநிலையில் இருந்தனர்.
.
.
வெட்டவெளியில் பொங்கித்தின்றவாறு
இருந்த மக்களை பார்க்கவே கொடுமையாக இருந்தது.
இக்கொடுமையின் தீவிரத்தன்மையும்
வீச்சும் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.
.
.
கிறிஸ்தவர்கள் தங்கள் இழப்புகளை
ஒரு கோடி எனக் கணக்கிட்டிருந்தனர்.
.
.
பள்ளந்துறை கிராமத்தில் மட்டுமே கிறிஸ்தவர்கள்
ஒன்றரை - இரண்டு கோடி ரூபாய் இழப்பினை சந்தித்திருக்கலாம்.
.
.
மாவட்ட ஆட்சியர் எடுத்த
மறுவாழ்வு சீரமைப்பு முயற்சிகளின்
மொத்த செலவு பத்து இலட்சம் ரூபாய் ஆகும்.
.
.
கிறிஸ்தவர்கள் தரப்பில் உயிரிழப்பு பத்து ஆகும்.
ஹிந்துக்கள் தரப்பில் பதினொன்று ஆகும்.
.
.
இரு பக்கங்களிலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் பெரியதாகும்.
கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஹிந்துக்கள். அவர்கள் திரும்பவே இல்லை.
.
.
இருமுறை போலிஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும் மக்கள் உயிரிழந்தனர்.
.
.
இ. விசாரணைக் குழு
.
161 சாட்சியங்களையும், பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட 323 காட்சிப்பொருட்களையும்,
ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய தரப்பினரால்
16 வழக்கறிஞர்கள் மூலம் முன்வைக்கப்பட்ட
பல வாதங்களையும் ஆராய்ந்த பின்னர்
மிகத்தெளிவாக
கன்னியாகுமரி மாவட்ட கலவரங்களுக்கு
மூலவேர் காரணமாக
ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு
மதமாற்றியமையும்
அதற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளுமே காரணம்
என தெளிவாக கண்டுரைத்தது.
.
.
சட்ட ஒழுங்கினைக் கட்டிக்காப்பது மாநில அரசின் பொறுப்பாகும்.
அரசாங்கம்
ஒரு மானுட சோக நிகழ்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில்
உருவாகிக்கொண்டிருக்கும் போது
.
.
கைகட்டி அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாகாது.
.
.
வருங்காலத்தில் இத்தகைய விரும்பத்தகாத
வன்முறைச்சம்பவங்கள் நடக்காமலிருக்க
என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென
பரிந்துரை செய்ய விசாரணைக் குழு கேட்கப்பட்டபோது,
.
.
அக்கேள்வி விசாரணைக் குழுவினால் கீழ்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது:
.
.
பாகிஸ்தான், மியான்மர் மற்றும் நேபாளம் ஆகியவை
கிறிஸ்தவ மிசினரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த
சட்டங்கள் இயற்றியுள்ளன.
இஸ்ரேல் மதமாற்றத்தினை தடைசெய்துள்ளது.
சுவிட்சர்லாந்து ஏசுசபையினரை தடைசெய்துள்ளது.
கொலம்பியாவில் கத்தோலிக்கர்களை
கத்தோலிக்கரல்லாதவர்கள் மதமாற்றம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
.
.
கத்தோலிக்கர்
பெரும்பான்மையாக உள்ள
இலத்தீன் அமெரிக்க நாடுகளில்
சமுதாய அமைதியையும்,
அரசியல் ஸ்திரத்தன்மையையும்
குலைப்பதாக காரணம் காட்டி
மிசினரிகளின் மதமாற்ற வேலைகள்
தடைசெய்யப்பட்டுள்ளன.
.
.
வெனிசூலா அரசாங்கம்
மெதாடிஸ்ட் கிறிஸ்தவ சபையினை
தடை செய்து மிசினரிகளை வெளியேற்றியுள்ளது.
.
.
ஸயர் (Zaire) அரசாங்கம்
ஆப்பிரிக்க தனித்தன்மையை காப்பாற்ற
மிசினரி செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
.
.
இந்தோனேசியாவில் மதத்தினை பரப்பும் உரிமை அளிக்கப்பட்டு
அது வகுப்பு ஒற்றுமைக்கு இடராக இருந்த காரணத்தால்,
இந்தோனேசிய அரசாங்கம் மதமாற்றங்களைத் தடை செய்து
மிசினரி நடவடிக்கைகளில்
கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
.
உலகமெங்கும் இத்தகைய போக்கு காணப்படும் போது
.
.
இந்த நாட்டில் எவாஞ்சலிக்கல் செயல்பாடுகளை முழுமையாக
நிறுத்த முடியாவிட்டாலும் கூட
குறைந்தபட்சமாக நாம் செய்யக்கூடியது
.
.
பெருத்த மதமாற்றங்களையும் (mass conversions),
மோசடி முயற்சிகள் மூலமும்
சட்டவிரோத செயல்பாடுகள் மூலமும்
நடக்கும் மதமாற்றங்களை தடைசெய்யலாம்.
.
.
திரு. பாலகிருஷ்ணன், ஹிந்துக்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்,
தாம் எழுத்துருவாக சமர்ப்பித்த அறிக்கையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில்
கிறிஸ்தவ மக்கள் தொகை பெருக்கம்
மதமாற்றம் மூலம் நிகழ்வதாகவும்
.
.
அது மதமாற்றத் தடைச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட வேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
.
.
இவ்விசாரணைக் குழுவின்
முன்னால் பல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
.
.
அவை கிறிஸ்தவ மிசினரிகள்
இந்தியாவில் மேற்கொண்டுள்ள செயல்பாடுகளைக் காட்டுகின்றன.
.
.
'கிறிஸ்தவ மிசினரிகளின் செயல்பாடுகள் குறித்த
விசாரணைக் குழு அறிக்கை
: மத்திய பிரதேசம் ', 'கிறிஸ்தவம்: ஒரு அரசியல் பிரச்சினை ' (மேஜர் வேதாந்தம்),
விவேகானந்த கேந்திர பிரகாஷனால் வெளியிடப்பட்ட 'கிறிஸ்தவம் ஒரு விமர்சனப் பார்வை ' ஆகியவை இதனை தெளிவாக்குகின்றன
.
.
. இவை எல்லாம்
இந்த நாட்டிலே நடக்கும் மதமாற்றங்கள் நம்பிக்கை, உறுதிப்பாடு, மனமாற்றம்,
இறை அனுபவம் ஆகியவற்றாலெல்லாம்
ஏற்படுகிற மாற்றங்கள் அல்ல என்பதை தெளிவாக்குகின்றன.
.
.
மாறாக, ஹரிஜனங்கள் மற்றும்
வனவாசிகளின் பெருமளவு மதமாற்றம் என்பது தூண்டுதல்,
கட்டாயப்படுத்தல், பொருளாதார ஆசைகாட்டல்,
வசதி வாய்ப்புகளால் ஆசைகாட்டல்
ஆகியவை மூலம் நடத்தப்படுகின்றன.
.
.
இவை அனைத்துமே இலஞ்சத்திற்கே நிகரானவை.
தனி நபரின் மதமாற்றம் என்பது
ஒரு விதிவிலக்கே அன்றி வழக்கமல்ல.
.
.
கடந்த காலங்களில் நடந்த மதமாற்றங்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு
ஜனநாயக் சூழலில் மக்கள் மதமாற்றங்களைக் குறித்து
விழிப்படைந்துவிட்டார்கள்.
.
.
ஹிந்துக்களை மற்ற மதங்களுக்கு மாற்ற முயற்சிப்பது
சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்கே வழிவகுக்கும்.
.
.
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில்
ஹிந்துக்களை கிறிஸ்தவத்திற்கோ இஸ்லாத்திற்கோ மாற்ற முயற்சிப்பது
வட்டார பாரம்பரியங்களையும், நம்பிக்கையையும்,
அமைப்புகளையும் குலைக்கும்.
.
.
இதனால் அப்பகுதி மக்கள்
தங்கள் ஆளுமைகளை இழக்கிறார்கள்.
.
.
அது பாரம்பரியத்தில் பிடிப்பில்லாததோர்
பிளவினை சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது.
.
.
அது சமுதாய அமைப்பினை சிதைத்து
கலாச்சார மோதல்களையும்,
சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளையும்,
நிலவிவரும் வகுப்பு சமரசத்தையும் குலைக்கிறது.
.
.
மதமாற்றங்கள் விரிசல்களையும்,
ஆத்திரத்தையும் உருவாக்கி
நியாயமாகவோ அநியாயமாகவோ
வகுப்பு-விரோத உணர்ச்சிகளை வளர்க்க வழி கோலுகிறது.
.
.
இத்தகைய மதமாற்றங்கள் பெருமளவில் நடக்கும் போது
கிறிஸ்தவ ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் என ஹிந்துக்கள் அஞ்சுகின்றனர்.
.
.
எனவேதான் தேசப்பிதா காந்திஜி
'மதமாற்றம் அது நடக்கும் இடங்களில்
ஒரு ஆன்மிகத்தன்மையுடன் நடைபெறவில்லை.
அவை வசதிகளுக்காக நடைபெறுகின்றன ' என கூறினார்.
.
.
ஒருமுறை அவர் கூறினார்,
'எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால்
மதமாற்ற முயற்சிகள் அனைத்தையும் தடை செய்வேன். '
.
.
. ஹிந்து குடும்பங்களில்
ஒரு மிசினரி வருவதென்பது
குடும்ப வாழ்க்கையில் கலகத்தையும்,
ஆடைகள் நடை உடை பாவனைகள் உணவு வழக்கங்கள் ஆகிய
அனைத்திலும் ஒரு குழப்பத்தையும் உருவாக்குவதாகும்.
.
.
மகாத்மாவின் மதமாற்றங்களை தடுக்கும் கனவு
மத்தியபிரதேச அரசினால் நனவாகியுள்ளது
.
.
. அதனைத் தொடர்ந்து ஒரிசாவும் அதனை பின்பற்றியுள்ளது.
இந்த மதமாற்றத் தடைச்சட்டங்களின்
சட்டரீதியில் செல்லுமா என்பது உச்ச நீதி மன்றத்தின் முன் வைக்கப்பட்டது
.
.
(புனித ஸ்டெயின்ஸ் vs மத்திய பிரசேதம் AIR 1977 Supreme Court 908 at 911)
உச்ச நீதி மன்றம் மதத்தினை பரப்பும் அதிகாரமானது
மதமாற்றத்திற்கான அதிகாரம் இல்லை எனக்கூறி ஒரிசா மற்றும் மத்தியபிரதேச சட்டங்கள் சட்டரீதியாக செல்லுபடியாகும் எனக் கூறிவிட்டது.
.
.
கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஹிந்துக்களின்
மீள்-மதமாற்ற முயற்சிகளால் பெரிதும் வருத்தமடைந்துள்ளனர்.
.
.
பெருமளவு மதமாற்றங்களே
பெருமளவு மீள்-மதமாற்றங்களுக்கு வகை செய்துள்ளன.
.
.
ஹிந்துக்கள் மீண்டும் மதமாற்றம் செய்வதில்
கொண்டிருந்த மனத்தடையினை நீக்கிக் கொண்டுவிட்டு
அம்முயற்சிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
.
.
தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழலில்
ஒரு மதமாற்றத்தடை சட்டத்தின் அவசியம் என்ன
என்று கேள்வி எழலாம்.
.
.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தது
மீண்டும் நடக்காது என்பதற்கு
எவ்வித உறுதியும் கிடையாது.
.
.
மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம் சுவரில்
எழுதப்பட்ட எச்சரிக்கையாக இருப்பதை
அரசாங்கம் கவனிக்காமல் இருக்கலாகாது.
.
.
பிரச்சனையை தடுப்பதே பிரச்சனையை
தீர்ப்பதைக்காட்டிலும் புத்திசாலித்தனமாகும்.
.
.
அரசாங்கம் முன்னெச்சரிக்கை கொடுக்கப்படவில்லை
எனக் கூறமுடியாது.
.
.
அது அனைத்து விளைவுகளையும் எதிர்பார்த்து
மதமாற்றங்களை தடைசெய்ய
ஒரு சட்டத்தினை கொண்டு வந்தே தீரவேண்டும்.
.
.
(Necessity and validity of an Act banning conversion,
by (Dr) Justice P. Venugopal (Retd.)
Organiser Nov.7.2004
தமிழ் மொழிபெயர்ப்பு: எஸ்.அரவிந்தன் நீலகண்டன்)
URL: http://www.organiser.org/dynamic/modules.php ?name=Content&pa=showpage&pid=49&page=39
, ’மதமாற்ற தடை சட்டம் தேவையும் நியாயமும்’ எனச்சொல்லும் வாசகம் இன் டூடுலாக இருக்கக்கூடும்
புள்ளிவிவரங்களையும் விளம்பரங்களையும் காண்க
எல்லா உணர்ச்சிகளும்:
Gk Kathiravan Mannasingari


சேத்தூர். சிங்கம்பட்டி.

0 c

 ஒருங்கிணைந்த இந்தியாவுடன்

சேத்தூர், சிங்கம்பட்டி ஜமீன்கள் இணைந்தது
1950 க்குப் பிறகுதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
.
1953,March 8.- சேத்தூர்.
1952 February - சிங்கம்பட்டி.
.
Muniraj Vanathirayar
15 ஆகஸ்ட், 2023

பெருந்தமிழன் - . ஆழ்வார்

0 c
அது ஒரு காலம். தமிழகமெங்கும் பாலி, பிராக்ருதம், சமஸ்க்ருதம் போன்ற பிற மொழிகள் கோலோச்சிய காலம். வட மதங்கள் ஆதிக்கம் செலுத்திய காலம். தனது சொந்த நிலத்திலேயே தமிழானது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.
.
இந்த சூழலில் சிறைப்பட்டிருந்த தமிழை மீட்டெடுத்தப் பெருமை பக்தி இலக்கியங்களுக்கே உண்டு என்பதை வரலாறு தெரிந்த யாவரும் அறிவார்கள்.
.
சைவத்திருமுறைகளின் பதிகங்களும் வைணவப் பிரபந்தங்களின் பாசுரங்களும் செந்தமிழைச் செம்மையாக மக்களிடம் கொண்டுசேர்த்தன.
.
பாசுரங்களும் பதிகங்களும் அழகுத் தமிழில் அமுதத் தமிழில் பாடப்பட்ட செந்தமிழ் சொற்களஞ்சியமாகும்.
.
தேவார நால்வரும் பன்னிரு ஆழ்வார்களும் பைந்தமிழில் பாடிப்பாடியே சிவனையும் பெருமாளையும் போற்றினார்கள்.
.
ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தும் தீந்தமிழ் சொற்களால் உருகி உருகி பாடப்பட்டதாகும். தமிழ்மொழியை வளர்த்த பெருமையில் வைணவத்திற்கு பெரும்பங்குண்டு.
.
ஒவ்வொரு ஆழ்வாரும் தனிச் சிறப்புடன் தனித்தமிழை வழக்கில் கொண்டு வந்தனர்.
.
வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்” என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையானது போற்றப்படுகிறது.
.
பைந்தமிழின் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே' எனக் குமரகுருபரரால் போற்றப்பட்டவர் திருமழிசையாழ்வார்.
.
திருமழிசை ஆழ்வார் பாடிய பாசுரம் ஒன்று இவ்வாறு ஆரம்பிக்கும்.

""நற்றமிழை வித்தி, என் உள்ளத்தை நீ விளைத்தாய் கற்ற மொழியாகக் கலந்து''
நல்ல தமிழை எனக்குள் விதைத்து , தான் கற்ற தமிழ் மொழியாகி என்னுள் கலந்த பெருமாளே எனக்கூறி தமிழால் வைணவ முழக்கம் செய்தவர்.

திருமாலின் மொழியான தமிழை என்னுள் விதைத்தவர் எம்பெருமான் என்று உவகை கொள்கிறார்.
.
பூதத்தாழ்வாரின் பாசுரம் ஒன்றில் அற்புதமான ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்.
.
"பெருந்தமிழன் என்பதுதான் அந்த வார்த்தை "
.
இந்த வார்த்தை இடம் பெறும் அந்த அதி அற்புதமான பாசுரம்
"யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான்,
யானே இருந்த தமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்
, பெருந்தமிழன் நல்லேன் பெரிது "
.
‘எம்பெருமானே! -
ஏழு பிறப்புகளிலும் எல்லா நிலைகளிலும் தவம் செய்ததற்கான பலனைப் பெற்றேன். எப்போதும் இருக்கும் தமிழ்மொழியால் பாசுரம் பாடி உன் திருவடிகளைப் போற்றும் பெருந்தமிழன் நானே ..
.
தன்னை பெருந்தமிழன் என்கிறார் பூதத்தார்.
.
இவ்வாறா பாசுரங்களின் வழியே செந்தமிழின் சிறப்பையும் செம்மையையும் சொல்லிட்டே இருக்கலாம்.
ஆழ்வார் பாடிய தீந்தமிழ் பாசுரங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பாரதமெங்கும் உள்ள பெருமாள் கோவில்களில் இன்றும் பாடப்படுகிறது.
=========================
பின்குறிப்பு -
பைந்தமிழ் பாவலர்களான ஆழ்வார்கள் வழி பெருமாளைப் போற்றுவதாகக் கூறும் இன்றைய வைணவர்களில் ஒரு சிலர்
தமிழ் மொழியை இழித்தும் பழித்தும் பேசுகின்றனர், எழுதுகின்றனர். கேலியும் கிண்டலும் செய்து ஏசுகின்றனர்.
.
இவர்களை ஆழ்வார்களும் மன்னிக்கமாட்டார்கள். பெருமாளும் மன்னிக்கமாட்டார்.
.
ஆழ்வார்கள் வழி பெருமாளைக் காணும் எந்த ஒரு வைணவரும் எந்த சூழலிலும் தமிழ்மொழியை விட்டுத்தரமாட்டார்.

அன்புடன் -
மா.மாரிராஜன்
நினைவிடம் மற்றும் கோவில் படமாக இருக்கக்கூடும்
புள்ளிவிவரங்களையும் விளம்பரங்களையும் காண்க
எல்லா உணர்ச்சிகளும்:
Nepolian Devadoss மற்றும் K S G. HariHaran


திருநெல்வேலியில் ராஜராஜன் கல்வெட்டு-திருவாலீஸ்வரம்

0 c

திருவாலீஸ்வரம்

இவ்வூர் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மன்னார் கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் கடனாநதிக் கரையில் நெல்வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள சிவன் கோயில் இவ்வூரின் வரலாற்றினை அறிந்துகொள்வதற்கு உதவுகின்றது.
கடனாநதியின் பெயர் கடம் என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்துள்ளது. கடம் என்றால் பானை அல்லது கலசம் என்று பொருள். இந்நதிநீர் அகஸ்தியர் கையிலிருந்த கலசநீர் என்றும் அகஸ்தியர் இக்கோயிலுக்கு மேற்கேயுள்ள மலையடிவாரத்தில் தங்கியிருந்தார் என்றும் நம்பப்படுகிறது.
இக்கோயில் சோழர் காலக் கட்டடக் கலைப்பாணிக்கு கல்வெட்டுகள் இவ்வூரைத் திருவாலீஸ்வரம் என்றும் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடுகின்றன.
எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயிலில் சோழர், சோழ பாண்டியர் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 9-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவ்வூரை முள்ளிநாட்டு ராஜராஜவளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகின்றது. பிரம்மதேசம், திருவாலீஸ்வரம் மற்றும் மன்னார்கோயில் ஆகிய இம்மூன்று ஊர்களும் ஒரே பகுதியாக ராஜராஜச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் ஒரு பிரம்மதேயமாக விளங்கியுள்ளது. முதலாம் இராசராசன் காலத்திலும் அவனுக்குப் பின்னும் இப்பகுதி ஒரு முக்கிய இராணுவ மையமாக விளங்கியுள்ளது. இவர்கள் காலத்தில் அவனுக்குப பின்னும் இப்பகுதி ஒரு முக்கிய இராணுவ மையமாக விளங்கியுள்ளது.
இவர்கள் காலத்தில் நாகர்கோவிலில் கோட்டாற்றுக்கு அருகில் நிறுத்தியதைப் போன்று பெரும் படையொன்று இப்பகுதயிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கு மூன்று கை மகாசேனை என்று பெயர். சடாவர்மன் சுந்தரசோழ பாண்டியனின் கல்வெட்டு இக்கோயில் இறைவனைத் திருவாலீஸ்வரம் உடைய மகாதேவர் எனக் குறிப்பிடுகின்றது. ஊரினை முள்ளிநாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டு ராஜராஜப் பாண்டிநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகின்றது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடாவர்மன் குலசேகர பாண்டியன் (பூவின்கிழத்தி) சீவல்லபன் ஆகியோரின் கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பாண்டியர் கல்வெட்டுகள் இவ்வூரை திருவாலீஸ்வரம்ம் என்றும் ராஜ ராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடுகின்றன.
இங்குள்ள சௌந்தர்யநாயகி அம்மன் கோயிலில் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிற் கல்வெட்டுகளிலிருந்து திருவாலீஸ்வரம் என்பது ஊரினையும், கோயிலினையும் குறிப்பிடுவதை அறியலாம். இக்கோயில் விமானத்தில் கர்ணகூடுசாலைப் பகுதிகளில் காணப்படும் சிற்பங்கள் சிறந்த கலை நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.
நன்றி-குற்றாலம் அகழ்வைப்பகக் கையேடு.

தமிழரின் நீர் மேலாண்மை

0 c
உதிரப்பட்டி
போர்க்களத்தில் செயற்கரிய செயல் செய்து உத்திரம் சிந்தி உயிர் நீத்த ஒரு வீரனுக்கோ,
நாடு காக்கும் பணியில் உயிர்நீத்த ஒரு தலைவனுக்கோ
நீர் பாய்ச்சும் பணியில் உயிர் துறந்த ஒருவனுக்கோ
அவனுடைய இறப்பிற்கு பிறகு
அவனுடைய குடும்பத்தினர் வாழ
அளிக்கப்பெறும் நிலமோ அல்லது வேறு வகை வருவாயோ
அரசால் அங்கீகரிக்கப்பட்டு உதிரப்பட்டிகை என்ற பெயரில் சாசனமாக
பதிவு செய்யப்பெறும் .
இதனை உதிரப்பட்டி என்றும் குறிப்பிடுவர்.
இம்மரபு தமிழகத்தில் மிகப்பழங்காலம்தொட்டே இருந்து வந்துள்ளது .


முனைவர் மணி.மாறன் அவர்கள் எழுதிய

தமிழரின் நீர் மேலாண்மை

என்ற நூலிலிருந்து


பெருங்காமநல்லூர் பிரமலைக் கள்ளர்கள்

0 c

#போர்க்குடி "விவசாயம் செய்து பிழைத்து வரும்
நாங்கள்
எப்படி குற்றவாளிகள் ஆவோம்?"
என்று கேள்வி எழுப்பி
வீரமரணம்
எய்தியவர்கள்தான்
.
பெருங்காமநல்லூர் பிரமலைக் கள்ளர்கள்.
--------------------------------------------------------------------
.
"நாங்கள் உங்களுக்கு வரிச் செலுத்த மாட்டோம்"
.
என்று சொன்ன ஒரே காரணத்திற்காக
மேலூர்
வெள்ளளூர் நாட்டில்
.
பெண்கள் குழந்தைகள் என்று பாராமல்
5000 கள்ளர்கள்
வெள்ளையனால்
சுட்டுக் கொள்ளப்பட்டடார்கள்.
-
எங்கே எத்தனை சாதிகள்
இதுபோல இறந்திருக்கிறார்கள்
என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
-
கள்ளர்கள் விட்டுக்கொடுக்காத போர்க்குடிகள்.
ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
-
களப்படையினர் என்பது
களபர் என்றும் பின்னர் கள்ளர் என்று மறுவி நிற்கிறது.
பெருமாள் அம்மாசி தேவன் அவர்கள் பதிவிலிருந்து ஜனவரி 29-2018

கீழத்தூவல்

0 c
1957 செப்டம்பர் 11
இமானுவேல் கொலை.
12-13- ல் அருங்குளம் கலவரம்.
14 காலை
கீழத்தூவல் கிராமம் போலீஸால் முற்றுகை இடப்படுகிறது.
பள்ளியின் ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி சங்கையாபாண்டியன் அவசர அவசரமாக இடமாற்ற உத்தரவு தந்து ஊரை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.
சுமார் 150 வீடுகள் கொண்ட கீழத்தூவல் போலீஸால் அல்லோலகல்லோப் படுத்தப்படுகிறது.
ஆண்கள் அனைவரும் மந்தைக்குக் கொண்டு வந்து சேர்க்கபட்டனர்.
முதுகுளத்தூர்
சப் இன்ஸ்பெக்டர் நடராஜ அய்யர்
அடையாளம் சொல்ல
முப்பது பேர்களை தனியாகப் பிரித்தனர்
.பிறகு அதில் 5 பேரை பிரித்து மற்றவர்களை பள்ளிக்கூடத்தினுள் அடைக்கின்றனர்.
போலீஸ் அட்டக்காசத்தைக் கண்டு அஞ்சிய சிறுவன் கண்கரையில் இருந்த இலுப்பைமரம் புளியமரங்களில் அடர்த்தியான மரத்தில் ஏறி மறைந்திருந்தான்.
தனிமைப்படுத்தப் பட்ட 5 பேரும் கண்மாய்கரைக்கு கொண்டுவரப்படுகின்றனர். கண்மாய்கரையின் உள்வாய் இறக்கத்தில் வரிசையாக நிறுத்தப்படுகின்றனர் .கைகள் கண்கள் கட்டப்படுகின்றன. கடைசியாக வாத்து என்ற முத்துமணி மணமாகாத இளைஞன் நடககப்போவது என்னவென்று அறியாதநிலை போலீஸிற்கு உத்தரவு தரப்படுகிறது போலீஸ் சுடுகிறது .4 பேர் கண்மாய்கரை சரிவில் சாய்கிறார்கள்.குறிதவறிய துப்பாக்கியில் தோட்டா ஏற்றப்பட்டு மீண்டும் சுட முத்துமணியும் சாய்கிறார்.
ஐந்து பேர் ஆறு தோட்டா. நேரம் காலை 11.30 .முக்கிய அதிகாரிகள் வந்து, போகிறார்கள்
மாலை 5 மணிக்குமேல் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த
முனியசாமி தேவர்
அழைக்கப்பட்டு 5 பாய்கள் கொண்டு வர பணிக்கப்பட்டார் .
ஐந்து பாய்களை எடுத்துச்சென்ற முனியசாமித்தேவர் விறுவிறு என்று கரையில் ஏறிவிடுகிறார்.
ஐந்து பேரும் கால்மாடு தலைமாடாக சரிந்து கிடப்பதைகண்டுஅதிர்ச்சிஅடைந்தார்.
அதற்குள் போலீஸ் ஏய் கீழே இறங்கு என்று அதட்ட பாயைக் கொடுத்து விட்டு திரும்ப பள்ளியில் அடைக்கப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைப் பகிர்கிறார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்
ஐந்து பாய்களில் சுற்றிக் கட்டப்பட்டு
லாரியில் ஏற்றி கொண்டு சென்றது போலீஸ்.
பிணங்களை என்ன செய்தார்கள் .
எரியூட்டினார்களா
புதைத்தார்களா
தெரியாது.
சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை .
முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்படவில்லை.
அதுவரை பார்வர்டுபிளாக் காங்கிரஸ் மோதலாக இருந்த நிலை மாறி
காமராஜ் போலீஸ்
பார்வர்டுபிளாக் மோதலாக மாறியது.
போலீஸுக்கு ஆதரவாக
காங்கிரஸ்
வெளிமாவட்ட கூலியாட்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இம்மானுவேலை கொன்றவர்களை
கண்டு பிடிக்க
போலீஸ் முதலில் சென்றது
மேலத்தூவலுக்கு.
சுட்டக் கொல்லப்பட்டவர்கள் தான்
குற்றவாளிகள் என்றால்
அதன் பிறகு
தேவரவர்கள் உட்பட
பன்னிரெண்டு பேர் மீது
கொலை வழக்கு ஏன்.
கீழத்தூவல் கொலைவெறியாட்டத்தின்
மதுரை வடமலையான் மருத்துவமனை.
வெள்ளைச்சாமிநாடார் கல்லூரி விழா.
நாடார் மகாஜன சங்க விழாக்களில்
முதல் மந்திரி கு.காமராஜநாடார்
கலந்து கொண்டார் .
Vsnavamani Maran அவர்கள் பதிவிலிருந்து