கீழத்தூவல்

1957 செப்டம்பர் 11
இமானுவேல் கொலை.
12-13- ல் அருங்குளம் கலவரம்.
14 காலை
கீழத்தூவல் கிராமம் போலீஸால் முற்றுகை இடப்படுகிறது.
பள்ளியின் ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி சங்கையாபாண்டியன் அவசர அவசரமாக இடமாற்ற உத்தரவு தந்து ஊரை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.
சுமார் 150 வீடுகள் கொண்ட கீழத்தூவல் போலீஸால் அல்லோலகல்லோப் படுத்தப்படுகிறது.
ஆண்கள் அனைவரும் மந்தைக்குக் கொண்டு வந்து சேர்க்கபட்டனர்.
முதுகுளத்தூர்
சப் இன்ஸ்பெக்டர் நடராஜ அய்யர்
அடையாளம் சொல்ல
முப்பது பேர்களை தனியாகப் பிரித்தனர்
.பிறகு அதில் 5 பேரை பிரித்து மற்றவர்களை பள்ளிக்கூடத்தினுள் அடைக்கின்றனர்.
போலீஸ் அட்டக்காசத்தைக் கண்டு அஞ்சிய சிறுவன் கண்கரையில் இருந்த இலுப்பைமரம் புளியமரங்களில் அடர்த்தியான மரத்தில் ஏறி மறைந்திருந்தான்.
தனிமைப்படுத்தப் பட்ட 5 பேரும் கண்மாய்கரைக்கு கொண்டுவரப்படுகின்றனர். கண்மாய்கரையின் உள்வாய் இறக்கத்தில் வரிசையாக நிறுத்தப்படுகின்றனர் .கைகள் கண்கள் கட்டப்படுகின்றன. கடைசியாக வாத்து என்ற முத்துமணி மணமாகாத இளைஞன் நடககப்போவது என்னவென்று அறியாதநிலை போலீஸிற்கு உத்தரவு தரப்படுகிறது போலீஸ் சுடுகிறது .4 பேர் கண்மாய்கரை சரிவில் சாய்கிறார்கள்.குறிதவறிய துப்பாக்கியில் தோட்டா ஏற்றப்பட்டு மீண்டும் சுட முத்துமணியும் சாய்கிறார்.
ஐந்து பேர் ஆறு தோட்டா. நேரம் காலை 11.30 .முக்கிய அதிகாரிகள் வந்து, போகிறார்கள்
மாலை 5 மணிக்குமேல் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த
முனியசாமி தேவர்
அழைக்கப்பட்டு 5 பாய்கள் கொண்டு வர பணிக்கப்பட்டார் .
ஐந்து பாய்களை எடுத்துச்சென்ற முனியசாமித்தேவர் விறுவிறு என்று கரையில் ஏறிவிடுகிறார்.
ஐந்து பேரும் கால்மாடு தலைமாடாக சரிந்து கிடப்பதைகண்டுஅதிர்ச்சிஅடைந்தார்.
அதற்குள் போலீஸ் ஏய் கீழே இறங்கு என்று அதட்ட பாயைக் கொடுத்து விட்டு திரும்ப பள்ளியில் அடைக்கப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைப் பகிர்கிறார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்
ஐந்து பாய்களில் சுற்றிக் கட்டப்பட்டு
லாரியில் ஏற்றி கொண்டு சென்றது போலீஸ்.
பிணங்களை என்ன செய்தார்கள் .
எரியூட்டினார்களா
புதைத்தார்களா
தெரியாது.
சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை .
முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்படவில்லை.
அதுவரை பார்வர்டுபிளாக் காங்கிரஸ் மோதலாக இருந்த நிலை மாறி
காமராஜ் போலீஸ்
பார்வர்டுபிளாக் மோதலாக மாறியது.
போலீஸுக்கு ஆதரவாக
காங்கிரஸ்
வெளிமாவட்ட கூலியாட்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இம்மானுவேலை கொன்றவர்களை
கண்டு பிடிக்க
போலீஸ் முதலில் சென்றது
மேலத்தூவலுக்கு.
சுட்டக் கொல்லப்பட்டவர்கள் தான்
குற்றவாளிகள் என்றால்
அதன் பிறகு
தேவரவர்கள் உட்பட
பன்னிரெண்டு பேர் மீது
கொலை வழக்கு ஏன்.
கீழத்தூவல் கொலைவெறியாட்டத்தின்
மதுரை வடமலையான் மருத்துவமனை.
வெள்ளைச்சாமிநாடார் கல்லூரி விழா.
நாடார் மகாஜன சங்க விழாக்களில்
முதல் மந்திரி கு.காமராஜநாடார்
கலந்து கொண்டார் .
Vsnavamani Maran அவர்கள் பதிவிலிருந்து

No comments: