சங்ககால தமிழ்ச் சமூகத்தில் அரச குடியினர் குல முன்னோராக இந்திரன் தலைமைப் பதவியைக் குறித்து நிற்கின்றது.
தமிழரசர்களின் குல வழக்கு சங்ககால இலக்கியங்களில் இல்லை. ஆனால் காப்பியக்காலம் முதல் சூரிய, சந்திர, சந்திராதித்ய, பாரத்வாஜ, கங்கை, இந்திர குலமென்றும் கூறிக் கொண்டனர்.
இதில் சோழ மன்னர்கள் மற்றும் சேதுபதி மன்னர்கள் தங்களை சூரிய குலமென்று கூறியுள்ளனர்.
1) இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராச ராச சோழன் மகனாகிய இராசேந்திர சோழன் காலத்தில் சூரியகுலம் என்ற பெயர் மாற்றம் அடைந்து இராசேந்திர குலம் என்று அழைக்கப்பட்டது.
13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் கீழ் சோழர்கள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர் அதன் பிறகு 14 ஆம் நூற்றாண்டில் வடுகர் படையெடுப்பின் போது இராசேந்திர சோழனின் வம்சத்தில் தோன்றிய கோனேரி மேல்கொண்டான் (கோனேரிராசன்) கி.பி 1377 விஜய சாம்ராஜய அதிபதியான ஹரிஹரர்-2 அவர்களின் இரண்டாவது மகனான கருநட தேசத்தரனாகிய விருப்பன்ன உடையார் என்பானுடன் போர் செய்து தோல்வியுற்று நாடும் இழந்தான்.
இவன் தன் பரிவாரங்களுடன் இராசாளிவிடுதி,
பன்னிகொண்டான்விடுதி, உஞ்சிவிடுதி, சென்னிவிடுதி, சிறுவாவிடுதி போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். இக்கால கட்டத்தில் இராசேந்திர குலத்தவரென்று சொல்வத்ற்கு அஞ்சி இராசு என்ற பதத்தை மறைத்து இந்திரகுலத்தவரென்று மாற்றிக்கொள்ளுமளவுக்கு கள்ளர்கள் உந்தப்பட்டனர்.
சூரியகுலம் இராசேந்திர குலமாகி முதற்குறை பெற்று இறுதியில் இந்திரகுலமாகிய வராலாறு இதுவாகும். (சூரியகுல கள்ளர் சரித்திரம் பக்கம் 213)
2) சோழர்களில் இந்திரனின் பெயரை கொண்டவர்கள் (இராசேந்திரனும் அவன் மகன்களின் பெயர்களும் இந்திரன் பெயரையே தாங்கி நிற்கின்றன)
* ஆதிராசேந்திரசோழன் (தொன்மச் சோழர்)
* இரண்டாம் ஆதித்த பார்த்திவேந்திர கரிகாலன் (956 - 969)
* முதலாம் இராசேந்திர சோழன் (1012-1044)
* இராஜாதிராஜ சோழன் (பூபேந்திரச் சோழன்)(1012-1044)
* இரண்டாம் இராசேந்திர சோழன் : (1051-1063)
* இராஜ மகேந்திர சோழன் : கி.பி (1052-1064)
* வீர ராசேந்திர சோழன் ( 1063–1070)
* அதி ராசேந்திர சோழன் ( 1070)
* குலோத்துங்க சோழன் ( இயற்பெயர் இராசேந்திரன்) : கி.பி.1070-1120
* குலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். அவரது படைத் தளபதி சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்.
* மூன்றாம் ராசேந்திர சோழன் (1246 - 1279)
மேலும் சோழர்கள் போற்றி வழிபட்ட இந்திர தேவர் (தேவர் + வேந்தன் + இந்திரன் = தேவேந்திரன்).
சூரிய குலத்தில் தோன்றிய சோழர்கள் இந்திரனை போற்றி வழிபட்டு, விழா எடுத்து சிறப்பித்தனர்.
3) வேதங்களில் மூன்று இந்திரர்கள் உள்ளனர்.
அவர்களுள் இரண்டு இந்திரர்கள் தமிழர்கள்; ஒருவர் கிருஷ்ணர் எனப்பட்ட கரவேல், மற்றொருவர் திருமால் எனப்பட்ட செம்பியன் கரிகால்சோழன். முதல் இந்திரனே அந்நிய நாட்டவன். இவனுக்கும் ஒரு இந்தியத் தமிழ்ப்பெண்ணுக்கும் பிறந்தவனாலேயே இந்த அந்நிய இந்திரன் அடக்கி ஒடுக்கப்பட்டான். அப்படி அடக்கி ஒடுக்கியவனே செவ்வாய் எனப்பட்ட செங்குட்டுவன்.
4) முசுகுந்தன் என்று பெயரையுடைய சோழ மன்னன் கருவூரில் இருந்து அரசாண்டவன். இவன் காலத்தில் கருவூர் சோணாட்டிற் சேர்ந்திருந்தது போலும்! இவன் இந்திரன் என்னும் பேரரசன் ஒருவற்குப் போரில் உதவி செய்து, அவனது நன் மதிப்பைப் பெற்றான்.
இவன் சிறந்த சிவபக்தன். இவன் இந்திரன் பூசித்து வந்த சிவலிங்கம் உட்பட ஏழு லிங்கங்களை இந்திரன் பால் பெற்று மீண்டான்; அவற்றைத் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு திருப்பதிகளிலும் எழுந்தருளச் செய்தான். ஆதலின் இந்த ஏழு பதிகளும் ‘சப்த விடங்கத் தலம்’ எனப்படுகின்றன
5) குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற பிற்காலச் சோழ மன்னன் ஒருவனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையர் என்ற பெண்பாற் புலவர்,
“....................... சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கனோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே”
‘இச்சோழனே அகத்திய முனிவரது கட்டளையால் காவிரிப்பூம் பட்டணத்தில் முதன்முதல் இந்திரனுக்கு விழாச் செய்தான்; அவ்விழாக் காலமாகிய 28 நாள்களிலும் தன் நகரில் வந்து உறையுமாறு இந்திரனை வேண்டினன்; இந்திரன் அதற்கு இசைந்தான்’ என்று மணிமேகலை குறித்துள்ளது.
இவன் துரங்கெயில் எறிந்த செயலைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப்பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் குறித்துள்ளன.
“தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாட நல்லிகை நற்றேர்ச் செம்பியன்.”
6) தஞ்சைப்பெரிய கோயிலில், ராஜராஜ சோழன் வடதிசையில் இந்திரனுக்கு சன்னதியும் அமைத்துள்ளார்.
"செந்திரு மடந்தை மண் சீராசராசன்
இந்திரசமானன் இராச சாவஞ்ஞன்"
என்று திருக்கோயிலூர்க் கல்வெட்டு அவனைப் புகழ்ந்து பேசுகிறது.
செந்திருமடந்தை - செந்தாமரை பூவில் அமர்ந்த திருமகள் போன்ற மண்ணின் சீர் மிகு ராசராசன், இந்திரனுக்கு சமமானவன், மன்னர்களுக்குரித்த சகல வேள்விகளை அறிந்த அறிஞன். (ராச சாவஞ்ஞன் =ராஜ சர் வக்ஞன்) வக்ஞன் - வேள்விக்கலை அறிந்த நிபுணன்.
7) சோழப் பேரரசன் முதலாம் குலோத்துங்க சோழனின் (1070-1120) பிறப்பு குறித்து ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் பாடியது
" அவனியார்க்குப் புரந்தரனா மடையாளம் அவயொத்தி னடைவே நோக்கி
இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பாரிக்கத் தகுவ வென்றே"
அரசர்களுள் இந்திரனைப் போன்று சோழ மன்னர்கள் வரிசையில் இவனும் அக்குல மேன்மைக்கு காரணமாயிருப்பான்.
அவனிபர் - அரசன்
புரந்தரன் - இந்திரன்
பாரிக்க - வளர்க்க
"சுராதி ராசன் முதலாகவரு சோழன்" எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது.
8) பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்துமாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.
9) குமரிமாவட்டத்தின் பிரம்மாண்டமான கோயில்களில் ஒன்று சுசீந்திரம். ஸ்ரீ இந்திரன் என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்பது ஆய்வாளர் கருத்து. கிபி 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இந்த ஊரை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு நாஞ்சில்நாட்டு பிரம்மதேயம் சுசீந்திரமான சுந்தர சதுர்வேதி மங்கலம்‘ என்று சொல்கிறது.
" ஸ்ரீ இந்திரன் பிரம்மதேய கிராமம்" அதாவது மன்னர்களால் வேதம் பயின்ற பிராமணர்களுக்கு நிலமும் கிராமமும் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் இது.
10) திருவருட்பாவில் அரசர் (தேவர்) குலம் என்பது இந்திர குலம் என்ற பாடல்
"கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறமென்றேன் வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப் பாடார் குலமோர்"
உரை:
ஏடீ, சேடி; வளமை மாறாத திருவொற்றியூரை யுடையவரே, உமது குலம் யாது கூறுமின் என்று கேட்டேனாக, மலர் சூடிய கூந்தலையுடையவளே, வீடடைதற்குரிய அறிவையுடைய எமது குலம், பிரம குலம், தேவர் (வேந்தர்) குலம், நல்வினை வசியர் குலம், உரைக்கின்றார். பிரம குலம் - பிரமன் பூசித்த கோயில், பிராமண சாதி. தேவர் குலம் - தேவர்கள் வழிபட்ட கோயில், தேவர் என்பார் மரபு, வேந்தர் குலம் - வேந்தர்கள் கட்டி வழிபட்ட கோயில், வேந்தரினத்து இந்திரன் வழிபட்டெடுத்த கோயில், அரசர் மரபு. நல்வினை - வாணிகம், பிறவும் தமபோற் செயும் விற்பனை நலம் பெற்றது பற்றி, வாணிகம், “நல்வினை” எனப்பட்டது. வணிகரை வடநூலார் வைசியர் என்பர்;
* தமிழகத்தில் இறுதியாக இருந்த ஒரே ராஜ்யம் புதுக்கோட்டை ராஜ்யம் மட்டுமே. அதனை ஆட்சி செய்த கள்ளர் குல தொண்டைமான் மன்னர்களும் தங்களை இந்திரன் குலத்தார் என்றே கூறியுள்ளனர்.
என்றே கூறியுள்ளனர்.