ஒரு வரலாற்று மாணவன் என்ற முறையில் தமிழ்க்கலாச்சாரத்துக்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ள வளமும் ஆழமும் மிக்க திருநெல்வேலியின் சரித்திரம் எப்போதும் என்னைப் பெரிதும் ஈர்ப்பதுண்டு.
எந்த ஒரு பிரதேசத்தையும் போலவே திருநெல்வேலியின் சீர்மையும் சிறப்புகளும் சில தோல்விகளோடும், விரும்பத்தகாதனவற்றோடும் கலந்தே இருக்கின்றன. இது நம்மை மனம் குலையச் செய்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான், ஒரு வரலாற்றாளரின் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது. இன்றைய சமூகக் கொந்தளிப்புகளுக்கு உண்மையான மூலகாரணங்களாகத் திகழ்கிற சமூகக் கட்டமைப்பின் பலவீனங்களை ஒரு வரலாற்றாளர் (கடந்த காலம் குறித்த தனது பரந்து விரிந்த ஞானத்தின் மூலம்) சரியாகச் சுட்டிக் காட்ட முடியும்.
இன்று மோதுகிற இரு சமூகக் குழுக்களான மறவர்கள் மற்றும் தலித்துக்கள் சமூக வாழ்வில் நடந்து கொள்கிற விதம் (Behaviour patterns) குறித்து ஆய்வு செய்வது இன்றைய காலத்தின் தேவையாகும்.
தலித் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் பல ஆய்வுகள் அறிவுத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், மறவர்களின் உணர்ச்சி வேகத்துக்கும் ஆக்கிரமிப்பு மனோபாவத்துக்கும் காரணமான சரித்திரப் பின்னணி என்ன என்பதைப் புரிந்து கொள்ள இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
READ MORE...இக் கட்டுரையில் காலனி ஆதிக்கத்துக்கு முந்தைய சகாப்தத்தில் மறவர்கள் எப்படித் தென்னிந்திய அரசியலில் மேம்பட்ட நிலையில் இருந்தனர் என்பதையும், வெள்ளையரை எதிர்த்த போரில் முன் நின்றதால் அவர்களை அடக்கி ஒடுக்க பிரிட்டி‰ ஏகாதிபத்தியம் எப்படிக் 'குற்றப் பரம்பரைச் சட்ட'த்தைக் கொண்டு வந்தது என்பது பற்றியும் அதிலிருந்து இச் சமூகத்துக்குழுவின் பெரும்பகுதி இன்னும் விடுபட முடியாமலிருப்பது குறித்தும் சுட்டிக் காட்ட முயற்சிக்கிறேன்.
1
சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் 'தேவர்கள்' என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக 'சேதுசமுத்திரம்' எனப்படும் (ராமேŠவரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே 'சேதுபதி' மன்னர் என்ற பெயரும் பெற்றார்.
மேற்கண்ட இரு தகவல்களும் நமக்குச் சொல்வது என்னவெனில் ராமநாதபுரம் பகுதியே ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி. அங்கிருந்து புலம் பெயர்ந்தே இவர்கள் அருகிலிருந்த திருநெல்வேலிச்சீமை போன்ற பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பதே. மறவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தங்கள் தலைவர் எனும் மரியாதையை மன்னர் சேதுபதிக்கே அளித்து வந்தனர் என்பதை 'மறப்பாட்டு' சொல்கிறது. சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் 'குல வம்சம்' தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள் பங்கேற்றது பற்றியும் 'குலவம்சம்' பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் பதினெட்டாம் நூற்றாண்டில் மறவர்சீமை என அறியப்பட்டிருந்தது. வடக்கே வெள்ளாற்றின் கரையிலிருந்த அறந்தாங்கியிலிருந்து தெற்கே சாயல்குடி வரையிலுமான கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுமையும் மறவர் சீமையாகும். மேற்கே அது மதுரை நாயக்கரின் ராˆƒியம் வரை நீண்டிருந்தது. தஞ்சை மராட்டிய அரசும், புதுக்கோட்டை கள்ளர் பிரதேசமும் வடக்கே சூழ்ந்திருக்க, மேற்கிலும் தெற்கிலும் மதுரை நாயக்கர் அரசு பரவியிருக்க கிழக்கே ஆங்காங்கு போர்ச்சுகீசிய மற்றும் டச்சுக் குடியேற்றங்கள் தென்பட்டன.
நெல்லைச் சீமையில் களக்காடு முதல் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடியைத் தொட்டு நின்ற இராƒபாளையம் வரை மறவர்கள் பரவியிருந்தார்கள். பெரும்பாலான மறவர் பாளையங்கள் இப் பகுதியிலேயே உருவாக்கப்பட்டன. அவை சிங்கம்பட்டி, ஊர்க்காடு, ஊத்துமலை, வடக்கரை, சுரண்டை, நடுவக்குறிச்சி, குருக்கள்பட்டி, அழகாபுரி, நெற்கட்டும் செவல், தலைவன்கோட்டை, தென்மலை (சிவகிரி) கொல்லம் கொண்டான் மற்றும் சேத்தூர் ஆகும். களக்காட்டுக்கு அருகே திருக்குறுங்குடியிலும், வள்ளியூர்,பணக்குடியிலும் கூட மறவர் குடியிருப்புகள் இருந்தன. இச் சீமையின் கிழக்கே மாநாடு, பூச்சிக்காடு, ஆறுபங்குநாடு போன்ற பகுதிகளிலும் மறவர் குடியிருப்புகள் இருந்தன. மத்தியப் பகுதியில் இருந்த மூன்று மறவர் பாளையங்கள் கடம்பூர், மணியாச்சி மற்றும் ஏழாயிரம் பண்ணை ஆகும்.
1922 இல் நவநீதக் கிரு‰ண மருதப்பத்தேவர் திருநெல்வேலி சிவில் நீதிமன்றத்தில் சம்ர்ப்பித்த ஓலைச்சுவடிகளின்படி இராமநாதபும் பகுதியிலிருந்த ஊத்துமலைக்குப் பதினோராம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்ததாக அறிகிறோம். பதிப்பிக்கப்படாத ஓலைச்சுவடியில் உள்ள 'வடக்கரை ஆதிக்கம்' வரலாற்றின்படி ராமநாதபுரத்திலிருந்து வடக்கரைக்கு மறவர்கள் குடிபெயர்ந்தது பன்னிரண்டாம் நூற்றாண்டில் எனலாம். சிங்கம்பட்டி, ஊர்க்காடு மற்றும் சேத்தூர் மறவர்கள் பதினோராம் நூற்றாண்டுக்கு முன்பாகவும் களக்காடு மறவர்கள் திருக்குறுங்குடிக்குப் போனது பதினைந்தாம் நுற்றாண்டின் மத்தியில்தான் எனவும் அறிகிறோம்.
மறவர், கள்ளர், அகமுடையார்களுக்கிடையே நெருங்கிய உறவு இருக்கிறது.
'கள்ளர் மறவர்
கனத்ததோர் அகமுடையார்
மெல்ல மெல்லவே
வெள்ளாளரானார்'
எனும் பழமொழி வழக்கிலுள்ளதை அறிவோம். அடிப்படையில் தங்கள் தலைவர்களுக்கு ராணுவ சேவை அல்லது காவல் கடமைகள் ஆற்றி வந்த இனமாகவே மறவர்கள் இருந்தனர். இதே நிலைமைதான் கள்ளர்களுடையதும். கள்ளர்கள் முதலில் தஞ்சைப் பகுதியில் இருந்து வந்துள்ளனர். பின்னர் பதினோராம் நூற்றாண்டில்தான் பாண்டிய அரசுப் பகுதிக்கு வந்து குடியேறினர். அகமுடையார்கள் ஆதியில் விவசாயம் பார்க்கிறவர்களாகக் காஞ்சிபுரம் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
இந்த மூன்று பிரிவினருக்குள்ளேயும் ஏராளமான உப பிரிவுகள் உண்டு. இந்த உப பிரிவுகளுக்குள்ளே சண்டை சச்சரவுகளே நடக்கவில்லை என்று உறுதியாக யாரும் கூற முடியாது. வெவ்வேறு உப பிரிவுகளுக்கிடையேயும் தனி நபர்களுக்கிடையேயும் குழுப் பகைமைகளும், சண்டைகளும் இருந்தன. மறவர்களிடைய கொண்டையங்கோட்டைப் பிரிவினர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டனர். எண்ணிக்கையில் அதிகமான பேர் இருந்ததோடு மறவர் சாதிகளிலேயே அதிக தைரியமும் ஆக்ரோ„மும் உடையவர்களாக கொண்டையங்கோட்டையார் இருந்தது இதற்கு காரணமாக இருக்கலாம். பெரும்பாலான மறவர் பாளையங்களை இவர்களே ஆதிக்கம் செய்யமுடிந்ததற்கு இது காரணமாக இருந்திருக்கலாம். முத்துராமலிங்கத்தேவர் குடும்ப ஆவணங்களிலிருந்து ராமநாதபுரம் சீமையில் இக் கொண்டையங்கோட்டைத் தளபதிகள் பல சிறப்புச் சலுகைகளை அனுபவித்து வந்ததை அறிய முடிகிறது.
மறவர்கள் குழக்களாக வாழ்ந்தனர். மறவர் கிராமங்கள் கோட்டைச் சுவர்களுடன் இருந்தன. கிராமத்தலைவர்கள் கிராமத்தைப் பாதுகாக்க வலுவான ஒரு படை வைத்திருந்தனர். கிராமத் தலைவர்கள் முழு சுயாட்சி அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் தேவைப்படும் சமயங்களில் மன்னருக்கு ராணுவச்சேவை செய்தனர். பாண்டிய மன்னர்களின் பலமே இம் மறவர் தலைவர்கள் அளித்த ஆதரவில்தான் அடங்கியிருந்தது. கிறிŠதவ ஆதாரங்களும் 'குலவம்சம்' கூறியவற்றை உறுதிப்படுத்துகின்றன.
மதுரை பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகும் சேதுபதிகளின் முந்தைய மேலாதிக்கம் தொடர்ந்தது. மதுரை நாயக்க மன்னர் முத்துக்கிரு‰ணப்ப நாயக்கரும் கூட, முந்தைய பாண்டிய அரசின் அரசுரிமை பெற்ற மறவர் சீமையின் வாரிசுதாரர்களாக அவர்களை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சேதுபதிகளின் ஆட்சியின் கீழ் மறவர் கிராமங்கள் முழுமையும் மறவர் தலைவர்களுக்கே சொந்தமாக இருந்தன. சேதுபதி மன்னர் கேட்கும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை அக் கிராமங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருந்தது.
ஒவ்வொரு மறவரும் போர் வீரராகவே இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நிலங்களில் பாடுபட்டனர். இந்த வீரர்கள் தங்கள் கிராமத்தில் காவலர்களாக இருந்தனர். தலைவர்களின் போர்க்காலங்களில் பங்கேற்றும் கோட்டைகளைக் காத்தும் தங்கள் தலைவருக்கு ஆதரவாகப் போரில் உதவினர். 'அவர்களின் சொந்த இனத்தவரே மன்னராக இருந்தும் கூட ஏன் வியாபாரத்தில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள்' என்று ஒரு கிறிŠதுவ எழுத்தாளர் ஆச்சரியப்பட்டு எழுதுகிறார்.
மறவர்கள் முதலாவதாகத் தங்களின் கிராமத் தலைவருக்கே கட்டுப்பட்டவராக இருந்தனர். அவரே அவர்களைப் பாதுகாப்பவராகவும் ஆள்பவராகவும் இருந்தார். அச் சமூக முழுமையின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக சேதுபதி, மறவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றிருந்தார்.எனவேதான் மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட முப்பதாயிரம், நாற்பதாயிரம் படை வீரர்களைச் சேதுபதியால் திரட்ட முடிந்தது.
இம் மறவர்களின் இனக்குழு வாழ்க்கை முறையும், வீர மிக்க நடவடிக்கைகளும், தங்கள் இனத்துக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டவராக உண்மையாக இருந்த தன்மையும், இவர்களைப் பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வல்லமை மிக்கதொரு அரசியல் சக்தியாக உருவாக்கி இருந்தது.
2
நெல்லைச் சீமையில் மறவர் பாளையக்காரர்கள் அல்லது காவல் தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இம் மறவர்கள் காவல்காரர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். காவல் என்பது கண்காணிப்புப் பணியைக் குறிக்கும். அது ஒரு Šதாபனமாக ஓரளவு இன்றைய போலீŠ ஏற்பாட்டை ஒத்திருந்தது.
Šதலக்காவல் மற்றும் தேசக் காவல் என காவல் இரு வகைப்பட்டது. Šதலக் காவலில் காவல் தலைவர் கிராமத்தைப் பகுதிகளாகப் பிரித்துக் காவல்காரர்களின் குடும்பங்களுக்குப் பங்கீடு செய்வார். காவல் பகுதிகள் தலைவரின் விருப்பப்படி மாற்றவும் படலாம்.
காவல் தலைமை என்பது பரம்பரை உரிமையாக இருந்தது. கிராமக்கோயில் காவல் தலைமையின் ஆளுகையில் இருந்தது.
காவல்காரர்களின் தலையாய கடமை கிராம மக்களின் சொத்துக்களான பயிர்கள், தானியங்கள், கால்நடைகள் மற்றும் பிற குடும்ப சொத்துக்களைப் பாதுகாப்பதும், பொது இடங்களான கோயில்கள், சாலைகள் மற்றும் சந்தைகளைப் பாதுகாப்பதும் ஆகும். ஏதாவது திருட்டு நடந்துவிட்டால் சம்பந்தப்பட்ட காவல்காரரே களவு போன பொருளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். பொருளை மீட்டுத் தரத் தவறினால் அவரே ந‰ட ஈடும் தர வேண்டும். இதனை அமல்படுத்துவதே காவல் தலைமையின் கடமை. எனவே, காவல் தலைவர் தான் மக்களுக்கு நேரடியாகப் பொறுப்பானவர். காவல்காரர்கள் அல்லர். காவல்காரர்களுக்கும் மக்களுக்கும் இடையே உறவுப்பாலமாகக் காவல் தலைவர் இருப்பார். காவல் தலைவர் திருட்டுப் பொருளுக்கான ந‰டஈட்டை உடனடியாகக் காவல்காரரிடம் வசூலிப்பதில்லை. தன் உதவியாளர்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு திருடனைக் கண்டுபிடித்து ந‰ட ஈட்டை அவனிடமே வசூலிப்பார். அது சாத்தியமாகாது போனால் மட்டுமே, காவல்காரரை இழப்புத் தொகையை வழங்கச் சொல்வார். இவ்விதமாக கிராமக்காவல் தலைவர் போலீŠ மற்றும் நீதி பரிபாலன அதிகாரத்தை எடுத்துக் கொள்வார். அவரும் அவரது உதவியாளர்களும் குற்றங்களைக் கண்டுபிடிக்க மிகக் கொடூரமான முறைகளைக் கையாண்டனர்.
காவல்காரர்களின் சேவைகளுக்கு ஈடாக 'Šதலக்காவல்' என்ற பெயரில் ஒரு கட்டணம் வழங்கப்பட்டது. அது அவர்கள் பாதுகாத்து வந்த தானியங்களின் (விளைச்சலில்) ஒரு பகுதியாகவோ அல்லது அதற்கு ஈடான பணமாகவோ இருக்கும். காவல்காரர்கள் தங்கள் வசூலில் ஒருபகுதியைக் காவல் தலைவருக்கு வழங்கினர்.
கோயில் காவலுக்கான வருமானம் காவல்தலைவருக்கு வரும். அவர் அதில் ஒரு பகுதியைத் தன் கீழ்ப்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிப்பார். பெரும்பாலும் கோயில்கள் காவல் தலைவருக்கு நிலங்களை வழங்கின. அதைக் கொண்டு அவர்கள் தங்களையும் தங்கள் பரிவாரங்களையும் காத்து வளர்த்துக் கொண்டனர். காலப்போக்கில் மைய அரசுகள் வலு இழந்தபோது இக் காவல் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தாங்களே கிராமத்தின் ஆட்சியாளர்களாக மாறினர். ஏற்கனவே காவல் மற்றும் நீதி பரிபாலன அதிகாரத்தை இவர்கள் தங்கள் கையில் வைத்திருந்தது இதற்கு உதவியாக இருந்தது.
தேசக்காவல்
தேசக்காவல் அமைப்பில் பல கிராமங்கள், ஒருதலைவரின் ஆளுகையின் கீழ் இருக்கும். இக் கிராமங்களின் தலைவராகக் காவல் தலைவராக அவர் இருப்பார். இதுவும் மறவர்களுக்கானத் தனிவகையான அமைப்பாகும். இதன் மற்ற முறைகளெல்லாம் Šதல காவலையே ஒத்திருந்தன. கிராமங்களில் காவல் பணிபுரிந்த தலைவர்கள் தேசக்காவல் தலைவருக்குக் கட்டுப்பட்டு இருந்தனர். கிராமங்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளைத் தேசக்காவல் தலைவர்கள் தீர்த்து வைத்தனர். இந்தத் தீர்ப்பு மறு பேச்சில்லால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கு 'தேசக்காவல்' என்ற பெயரில் ஒரு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தங்கள் பகுதிகளில் மறவர் பாளையக்காரர்களும் தேசக்காவல் தலைவர்களாக இருந்துள்ளனர். இதனை மறவர் தலைவர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரர்களுக்கும் இடையே எழுந்த பல 'காவல் சச்சரவு'களில் இருந்து அறிய முடிகிறது.
1776 இல் நாங்குநேரி மறவர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரரான பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனுக்கும் இடையே நடைபெற்ற போர் குறிப்பிடத்தக்கது. நாங்குநேரி மற்றும் களக்காடு மறவர்கள் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தாங்கள் தேசக்காவல் உரிமையைப் பெற்றிருந்தமையால் நாயக்கர்கள் அதில் தலையிடக் கூடாது என்றனர். இதன் மூலம் நாயக்கர்களுக்கு முன்பே மறவர்கள் தேசக்காவல் தலைமை ஏற்றிருந்தனர் என்பது உறுதியாகிறது. தேசக்காவல் முறை 1780 முதல் 1781 வரையிலான காலத்தில் மிக உச்சத்தில் இருந்தது. காவல், நீதி மற்றும் நிர்வாக அதிகாரங்களைத் தேசக்காவல் தலைவர் செலுத்தி வந்தார். இத் தலைவர்கள் தங்களுடன் எப்போதும் சி‰யர்களை வைத்திருந்தனர். இவர்கள் அநேகமாகப் பள்ளர் இன மக்களாக இருந்தனர்.
காவல் அமைப்பு மறவர்கள் ஒரு தலைவரின் கீழ் ஒன்றுபட்டு நிற்கவும் அத் தலைவரை வலுவானவராக நிறுத்தவும் வாய்ப்பாக அமைந்திருந்தது. மைய நிர்வாகம் சீர்குலைந்தபோது ஊர்களின் பாதுகாப்பு அவர்கள் கையில் இருந்தது.
3
மதுரை விƒயநகர அரசர்களின் கீழ் வந்தபோது ராமநாதபுரம் மதுரைப் பேரரசின் கீழ் வந்தது. ஆனால் அரசியல் சூழல்கள் மதுரை அரசர் முத்துக் கிரு‰ணப்ப நாயக்கரை 1605 ஆம் ஆண்டின் பண்டைய சேதுபதி எல்லை வரை மறவர் ஆளுகையை ஏற்றுக் கொள்ளவும் தொடர்ந்து செயல்படுத்தவும் நிர்பந்தித்தன என்ற போதிலும், மறவர் அரசு மதுரை அரசின் விருப்பத்திற்கிணங்கவே செயல்பட்டது. தங்களின் ராணுவ வல்லமையின் காரணமாக அதன் ஆதிக்கத்தின் கீழ்தான் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், ராமநாதபுர மறவர்கள் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டனர். நாயக்கர் ஆட்சி நீடித்து நிலைப்பது என்பதே மறவர்களின் ஆதரவில் என்பதால் நாயக்க அரசர்கள் குறிப்பிடத்தக்க செயல்பாட்டுச் சுதந்திரத்தை மறவர்களுக்கு அளித்திருந்தனர்.
வேறு பல களங்களில் நாயக்க மன்னர்கள் செலுத்திய ஈடுபாடானது சேதுபதிக்கு, நாயக்க அரசர்களுக்கு எதிரான மனநிலை வளரக் காரணமாக அமைந்தது. மதுரை அரசருடனான சேதுபதியின் தொடர்புகள் வெறும் சம்பிரதாயப் பூர்வமாகவே இருந்தன. நடைமுறையில் அவர் சுயாட்சியாளராகவே இருந்தார். சேதுபதி மன்னர் மதுரை அரசுக்கு ஆண்டுக் கப்பத்தைச் செலுத்திய ஒரே நடைமுறை தவிர வேறு தொடர்புகள் இல்லை. அதையும் அவர் ஒழுங்காகச் செலுத்த அக்கறை காட்டியதில்லை. கிழக்குக் கடற்கரையின் மூலமாக வெளிநாட்டு அரசர்களுடன் சேதுபதி மன்னர் நேரடித் தொடர்புகள் வைத்திருந்தார். இது போன்ற நடைமுறைகளுக்கு அவர் மதுரை அரசின் ஒப்புதலைப் பெற்றதில்லை.
சேதுபதியின் வளர்ச்சி தனது அரசுக்கு ஆபத்தாக மாறக் கூடுமென கருதிய நாயக்க அரசர், சேதுபதியை ஒடுக்கும் பொருட்டு போர்ச்சுகீசியருடன் 1639 ஆகŠட் 13 அன்று ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். நாயக்க அரசரின் இம் முயற்சியை சேதுபதி டச்சுக்காரர்களுடனான ஒப்பந்தத்தின் மூலம் முறியடித்தார். அதன் பின் மறவர்களின் மீதான நாயக்க அரசின் ஆதிக்கம் மங்கத் தொடங்கியது. ராமநாதபுர ராƒாக்களுடனான டச்சுத்தொடர்புகள் மதுரை நாயக்கர்களுக்கு எதிரான வளர்ச்சியைக் குறிக்கின்றன.
ஒரு டச்சு ஆதாரக்கூற்றின்படி 'கட்டத்தேவர்' எனும் இந்த இளவரசர் மதுரை நாயக்கரின் பிர ƒயும் உப பகுதியும் ஆவார். ஆனால் இவ் அரசருடனான எங்களின் நட்புப்பூர்வமான உடன்பாட்டுக்குப் பிறகு, மதுரை நாயக்கர்களுக்கு அவர் முன்பு அளித்த மரியாதையை அளிக்கவில்லை'.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு கடிதம் மேற்கண்ட டச்சு ஆதராத்தினை உறுதி செய்து மறவர்களின் விரிந்த இராணுவ பலத்தினை விவரிக்கிறது. அக் கடிதத்தில் பாதர் மார்ட்டின் எழுதுகிறார்.
'மறவர் சீமை எனும் இப் பேரரசு மதுரைக்குக் கட்டுப்பட்ட உப பகுதியாகும். ஆனால் இது பெயரளவுக்குத்தான். எப்போதேனும் மதுரை அரசு பலப் பிரயோகத்தின் மூலம் இவரிடமிருந்து கப்பம் வசூலிக்க முயன்றால், மதுரைப்படைகளை முறியடிக்கும் வல்லமை மறவர் பட்டாளத்துக்கு இருந்தது. பல சிற்றரசுகளைத் தன் கீழ்க் கொண்டிருந்த இவ் அரசு முழு வீச்சுள்ள அதிகாரத்துடன் இயங்கியது''.
ஏப்ரல் 1771 இல் ƒாசியŠ டு ப்ரி, வாரன் †Šடிங்Š, சாமுவேல் ஆர்ட்லி ஆகியோரைக் கொண்டு சென்னை ஆளுநரால் அமைக்கப்பட்ட குழு தன் அறிக்கையில், 'திருமலை நாயக்கர் விலக்களித்த பின்பு மதுரை அரசர்கள் இராமநாதபுரம் மறவர்களிடமிருந்து கப்பம் வசூலித்ததற்கான எந்த ஆதாராமும் இல்லை. திருமலை நாயக்கரின் வாரிசுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்திருந்தாலும் அது நடைமுறை சாத்தியமாயிருக்காது. நாயக்க மன்னர்களில் வீரம் செறிந்தவரான திருமலை நாயக்கரே கப்பம் கட்ட வலியுறுத்த இயலாத அளவிற்கு மறவர்கள் வலுவான சக்தியாகத் திகழ்ந்தனர். ராமநாதபுரத்தில் பலவீனமான ஆட்சியாளர் இருந்தபோதோ, அல்லது ராமநாதபுரம் அரசு உள்நாட்டு விவகாரங்களில் சிரமப்படும்போதோ மட்டுமே மதுரை அரசின் மேலாதிக்கத்தை அமுல்படுத்துவது சாத்தியமாக இருந்தது'' என்று கூறுகிறது.
இந்த நட்பற்ற உறவு மதுரைக்குப் படைபல உதவிகள் செய்யும் கடமையைச் சேதுபதி நிறைவேற்றத் தடையாக இருக்கவில்லை.
1656 இல் மைசூர் அரசர்கள் மதுரை நாயக்க அரசின் மீதான படையெடுப்புச் செய்தபோது திருமலை நாயக்கர், ரகுநாத சேதுபதியின் உதவியை நாடினார். அவரும் மதுரை அரசின் எல்லையிலிருந்து மைசூர்ப் படைகளை விரட்ட உதவினார்.
மதுரை ஆளுகையிலிருந்து விடுபட்டு சேதுபதி தன்னிச்சையாய் செயல்படும் சூழல் ஏற்பட்டதும் அவர் தனது சொந்த உளவுத்துறை வலைப்பின்னலை, நாயக்க ராˆƒியம் முழுவதிலும் பற்றிப் படர்ந்திருந்த மறவர்களின் உளவு வலைப்பின்னல் குறித்து இராமநாதபுரம் அரண்மனை ஆவணங்கள் பேசுகின்றன. சேதுபதிகள் நீதிபரிபாலனத்தில் நாயக்க மன்னர்களின் சட்ட திட்டங்களைப் பின்பற்றாமல் தங்களது சொந்தக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்தனர். ராமநாதபுர அரசர்கள் முதுகுளத்தூர், சாயல்குடி போன்ற பல துணை மையங்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் உருவாக்கினர்.
'மறவர் சீமையின் வளர்ந்து வரும் ராணுவ வல்லமை யதார்த்த நிலைமையை ஏற்றுக்கொள்ளும்படி நாயக்கர்களை நிர்ப்பந்தித்தது. விŠவநாதர் என்ற நாயக்க அரசின் அமைச்சர் இந்த நிலைமையைச் சமாளிக்க ஒரு சமரசத் திட்டத்தை முன் வைத்தார். அதன்படி மறவர் தலைவர்கள் 'பாளையக்காரர்கள்' என்ற புதிய பெயரில் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்' என்பது சத்திய நாதய்யரின் கூற்று.
4
மறவர் தலைவர்கள் பாளையக்காரர்கள் எனும் புதிய ஏற்பாட்டில் மேலும் வல்லமையே பெற்றனர். ஆயுதம் தாங்கிய படையையும், துறைமுகங்களையும் தொடர்ந்து பராமரித்தனர். நடைமுறையில் அவர்கள் சுயாட்சி பெற்றவர்களாகவும், மைய நிர்வாகத்தின் எத்தகைய நேரடிக் கட்டுப்பாடுகளும் அற்றவர்களாகவும் இருந்தனர். மேலும் மறவர் தலைவர்களே மத்திய அரசுக்கான இராணுவத்தை அனுப்புகிறவர்களாக இருந்தனர். இதன் மூலம் மைய அரசின் திடம் என்பது பாளையக்காரர்களின் விசுவாசத்தையும் ஒத்துழைப்பையும் சார்ந்து இருந்தது. நெருக்கடிகளைச் சந்திக்க ஒரு நிரந்தரமான ராணுவ ஏற்பாடு மதுரை நாயக்கர்களிடம் இருக்கவில்லை. இந்நிலையைச் சமாளித்து சமநிலையில் வைக்கவே சில நாயக்கப் பாளையங்கள் நாயக்க மன்னர்களால் ஏற்படுத்தப்பட்டன என்று தோன்றுகிறது. மறவர்களும் நாயக்கர்களும் ஒன்றுபட வாய்ப்பு இல்லாதிருந்ததால் மைய அரசை எதிர்த்த பாளையக்காரர்களின் கூட்டுக்கலகம் குறித்த ஆபத்து எதுவும்இல்லை. அப்படி ஏதேனும் ஒரு பிரிவு பாளையக்காரர்களின் கலகம் ஏற்பட்டால் மற்றொரு பிரிவின் உதவியோடு அதனை அடக்கிடவும் முடியும்.
பாரம்பரியமாக மறவர்கள் ஒரு வரையறைக்குட்பட்ட தன்னாட்சியும் தங்களின் எல்லைகளுக்குள் முழு சுதந்திரமும் பெற்றே செயல்பட்டனர். அத்தகைய சுதந்திரம் நாயக்கப் பாளையக்காரர்களுக்கும் இப்போது வழங்கப்பட்டது. தங்களுக்கு சமமாக நாயக்கப் பாளையக்காரர்கள் நடத்தப்படுவதை மறவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர்களைக் கடுமையாக வெறுக்கத் துவங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொருளாதார மேம்பாடு அடைந்த நாடார்களுடனும் அவர்கள் இத்தகைய எதிர்ப்பு அணுகுமுறையைக் கையாண்டனர் என்பதையே மதுரை, சிவகாசி, கமுதி, கழுகுமலைத் தொடர் கலவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. தற்போதைய சூழலில் மறவர்களின் அடக்குமுறைக்கெதிராய்ப் போராடும் தலித்துகளிடமும் இதேவித அணுகுமுறையே தொடர்கிறது.
மறவர்கள் ஒரு சாதியாகவும், நாயக்கர்கள் மற்றொரு சாதிக் குழுவாகவும் இருந்ததால் ஏற்பட்ட கசப்புணர்வு பெருகி வெளிப்படையான முரண்பாடுகளும், மோதல்களும் வளர்ந்தன. கடம்பூர், மணியாச்சி, ஏழாயிரம் பண்ணை நீங்கலாகப் பிற மறவர் பாளையங்கள் எல்லாமே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஒருங்கிணைந்த பிராந்தியமாக அமைந்திருந்தன. எனவே, பின்னர் அவை மேற்குப்பகுதி (மேகாடு)என அழைக்கப்பட்டன. எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, மேல்மாந்தை, குளத்தூர் மற்றும் காடல்குடி ஆகிய நாயக்கப் பாளையங்கள் எல்லாம் நாட்டின் கிழக்கே அமைந்ததால் கிழக்குப் பகுதி (கீகாடு) என அழைக்கப்பட்டன,
எழுதப்பட்ட வரலாற்றில் நாயக்கப் பாளையங்களை மறவர்களோ மறவர் பாளையங்களை நாயக்கர்களோ ஆண்டதாக எங்கும் குறிப்பு இல்லை. தனிப்பட்ட பாளையங்களில் இவர்களுக்குள் ஒற்றுமை இருந்ததாகத் தெரிகிறது. கட்டபொம்ம நாயக்கரின் தளபதியாக பகதூர் வெள்ளை என்ற மறவர் சமூகத்தவர் இருந்திருக்கிறார்.
தேசக்காவல் வசூலை நாயக்கப் பாளையக்காரர்கள் கையிலெடுத்தபோது மறவர்களுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மனுக்கும், நாங்குநேரி மறவர்களுக்கும் இடையேயான மோதல் இதற்கு ஓர் உதாரணமாகும். அதே நாயக்கப் படைகள்தான் திருக்குறுங்குடி சிவராமத் தலைவரையும் தாக்கின. ஆனால் இதெல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டில் தான் நடந்தது. மறவர் பாளையக்காரர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரர்களுக்கும் இடையேயான பகைமை இதற்கும் முன்பிருந்தே நிலவி வந்தது. எட்டயபுரம் நாயக்கப் பாளையக்காரர், மதுரை நாயக்கப் பாளையக்காரர், மதுரை நாயக்க மன்னரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது திருநெல்வேலி மறவர் தலைவர்கள் இணைந்து எட்டயபுரம் நாயக்கரை ஒடுக்கினர். எங்கேனும் ஒரு மறவர் பாளையக்காரர் அரசுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், தளவாய் முதலியார் நாயக்க இனத் தலைவர்களின் உதவியைப் பெற்று ஒடுக்கினார்.
5
இரண்டாம் கர்நாடகப் போருக்குப் பின் 1754 இல் மதுரை திருநெல்வேலி மீதான நவாபின் ஆட்சி உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. பிரிட்டி‰ கிழக்கிந்தியக் கம்பெனியும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, உள்ளூர் அரசுகளும் இக்கட்டான நேரத்தில் நவாபுக்கு உறுதுணையாய் நின்றன. இருந்தபோதிலும் மறவர்களின் எதிர்ப்பினால் நவாப் தெற்கே தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த எதிர்ப்பைப் புலித்தேவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். மைசூர் அரசு மற்றும் பிரெஞ்சுக்காரர்களால் உண்டான பிரச்சினைகளைச் சமாளித்த பின்னர் நவாப் தான் பிரிட்டி‰ படைகளைச் சார்ந்திருப்பதை உதறி விட நினைத்தார். ஆனால் தெற்கே மறவர்கள் தொடர்ந்து ஒரு அச்சுறுத்தலாக இருந்து வந்ததால் அவரால் அதைச் சாதிக்க முடியவில்லை. மறவர்களைப் பணிய வைக்க வேண்டும் என்பதில் நவாபும் பிரிட்டி„ாரும் உடன்பட்டனர். ஆனால் நவாபுக்கும் பிரிட்டி„ாருக்கும் இடையே இருந்த பரŠபர பகைமையால் இத் திட்டம் உடனே நிறைவேறவில்லை. இருந்தபோதிலும் வெளிநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து வந்த மறவர்களை ஒழித்துக் கட்டுவதில் நவாப் ஈடுபட்டார்.
புலித்தேவரின் எதிர்ப்பு முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. ஆனால் இராமநாதபுரம், சிவகங்கை மறவர்களை அவரால் பிரிட்டி„ாருக்கு எதிராக அணி திரட்ட இயலவில்லை. இரண்டு மறவர் அரசுகளுமே நவாபுக்கும், பிரிட்டி„ாருக்கும் எதிரான அவர்களின் போருக்காகத் திருநெல்வேலி மறவர்களை அணி திரட்டவில்லை. புதுக்கோட்டை கள்ளர் அரசு மறவர்களின் நலனுக்கு எதிராகவே நடந்துகொண்டது. இத்தகைய ஒற்றுமையின்மை நிலவியபோதும் நவாபும் பிரிட்டி„ாரும் காவல்தலைவர்கள் மற்றும் மறவர் பாளையக்காரர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டித்தான் வந்தது. சிவகிரி பாளையக்காரர் தனது நிதி முழுவதும் தீர்ந்து ஓட்டாண்டியாகும் வரை போர் புரிந்தார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதி சிவகங்கையில் மருது சகோதரர்களின் எழுச்சியைக் கண்டது. பிரிட்டி‰ எதிர்ப்புணர்வு கொண்ட போதிலும் அவர்கள் அகமுடையார் பிரிவினராக இருந்தபடியால், மறவர்களின் முழு ஒத்துழைப்பைப் பெற முடியவில்லை. குறிப்பாக இராமநாதபுர சேதுபதி இவர்களின் அதிகார எழுச்சியை விரும்பவில்லை. மறவர், அகமுடையார் முரண்பாடு பிரிட்டி„ாருக்கு மருது சகோதரர்களை எளிதாகச் சமாளிக்கப் பெரிதும் உதவிகரமாய் அமைந்தது. தஞ்சாவூர் மராத்தியர்கள் மற்றும் புதுக்கோட்டை கள்ளர்களின் எதிர்ப்பு நிலைப்பாடு தெற்கே மறவர்களின் அரசியல் ஆதிக்கம் தகர்ந்து போவதை விரைவுபடுத்தியது.
6
பிரதேசத்தின் ஆதிக்கத்துக்கான பல்முனைப் போட்டியில் பிரிட்டி„ார் வெற்றிகரமாக முன்னேறி 'மெட்ராŠ பிரசிடென்சி' யை 1803 இல் உருவாக்கினார். பாளையக்காரர்களின் அனைத்துக் கோட்டைகளும் அழிக்கப்பட்டன. சர்க்கார் பகுதியில் வாழ்ந்தாலும் சரி. பாளையப் பகுதியில் வாழ்ந்தாலும் சரி. எல்லா மறவர்களும் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி ஆணையிடப்பட்டது (1803). காவல் என்கிற நிறுவன அமைப்பு 1816 இல் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டது. காவல் மற்றும் இராணுவம் தவிர வேறு எதிலும் பயிற்சி பெற்றிராத மறவர்கள் முற்றிலுமாக நிலை குலைந்து போயினர். சிறிய நிலங்களை வைத்திருந்த மறவர்கள் பிரிட்டி„ாரின் நில வருவாய்த் திட்டத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளாயினர். ஆனால் மறவர்களின் ஆக்ரோ„ உணர்ச்சி மட்டும் மடியவில்லை. அவன் பிறப்பால் ஒரு போர்வீரனாக இருந்தமையால் சமூகத்தின் சாதுவான பகுதியைத் தனது வலிமையால் ஆளத் தனக்குரிமை உண்டு என எண்ணினான்.
மரபான நடைமுறைகளை ஒரே இரவில் மாற்றி விட முடியாது. மறவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிட்டி‰ சட்டத்தை மீறி அதற்கு மாறாகத் தங்களது காவல் பணியைத் தொடர்ந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மதச்சேவைக்குழு ஒன்றின் அறிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவிய சுவாரசியமான நடைமுறை குறித்த தகவல்களைத் தருகிறது.
'நகரத்திலிருந்து விலகி உள்ளடங்கியுள்ள நாட்டுப்புறப் பகுதிகளில் வாழும் மக்கள் முற்றிலுமாக மறவர்களின் பிடியிலேயே வாழ்கின்றனர். ஒவ்வொரு மண் குடிசையில் வாழும் வீட்டு உரிமையாளரும் மறவர்களுக்கு அரைப்பணம் (அதாவது ஒரு அணா எட்டுப் பைசாவை) வருடந்தோறும் தர வேண்டும். கால்நடை வைத்திருப்போர் ஒரு பணம் தர வேண்டும். அறுவடையின்போது எதிரிநாட்டு வயல்களில் தானியங்களை அறுத்துக்கொண்டு போவது தென் தமிழகத்தின் வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. பிரச்சினையை ஒரு நெருக்கடியை நோக்கி நகர்த்தி முற்ற விட்டு எதிரியைச் சரியான இடத்தில் நிறுத்தி சாதகமான ஒரு உடன்பாட்டுக்கு வர எதிரியை நிர்ப்பந்திக்கும் ஒரு வழிமுறையாக இத்தகைய கொள்ளைகளை அவர்கள் பயன்படுத்தினர். இத்தகைய சூழலில் காவல்காரர்களின் பயன் என்பது புரிந்து கொள்ளத்தக்கதே. மறவர்கள் பெரும்பாலும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதில்லை.
சில சமயங்களில் அதிகப் பணம் தருபவர் பக்கம் போனதும் உண்டு. அவர்களது காவல் திட்டம் - போலீசைப் போல ரோந்து சுற்றி வருவது - நூறு மறவர்கள் பத்து குழுக்களாகப் பிரிந்து பணியாற்றுவது - எனப் பலவாகும். ஒவ்வொரு குழுவும் ஒரு தனிப்பட்ட பணியைச் செய்யும். அவர்களுக்கு அவர்கள் காவல் பகுதியில் உள்ள மக்கள் ஊதியம் தந்தனர். பத்து ரூபாய்க்கு மேற்படாத பொருள் திருட்டுப் போனால் பத்து குழுக்களும் தலா ஒரு ரூபாய் வீதம் வழங்கி அதனை இழந்தவருக்கு வழங்குவர். திருட்டுப் பொருளின் மதிப்பு பத்து ரூபாயை விட அதிகமாகும்போது பத்துக் குழுக்களில் உள்ள நூறு மறவர்களும் இணைந்து அப் பொருளை மீட்பதற்காகத் திட்டமிடுவர். எனவே மறவர்கள் கொள்ளையடிப்பவர்களாப் பிறரால் கருதப்படவில்லை.
மறவர்களின் 'காவல்காரர்கள்' என்கிற அந்தŠது அனைத்துச் சமூக மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது. யாரும் அவர்களுக்குப் பயப்படவில்லை. நீண்ட நெடுங்காலமாகவே அவர்களுக்கு ஒரு தொகையை வழங்குவது என்பது பரம்பரையாக நடைமுறையாக இருந்தது. சட்ட விரோதமானதாகவே இருந்தாலும் கூட இந்தியாவில் சம்பிரதாயங்களுக்கு விரோதமாக நடப்பவர் யாரும் உண்டா? கிராமத்து மக்களால் ஆண்டுதோறும் வழங்கப்பட்ட மிகச் சிறிய தொகை அவர்களின் உடைமைகளைப் பாதுகாக்கப் பயன்பட்டதால் யாருக்கும் அது ஒரு சுமையாக இருக்கவில்லை. காவல் ஊதியத்தை ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாடாக நடைமுறைப்படுத்த முடியாததால் இவ் அமைப்பை பிற சாதி மக்கள் எதிர்க்கத் துணிவு கொண்டனர். அதைத் தொடர்ந்து வேலையிழந்த மறவர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவர்களின் திருட்டுகளினாலும், கொள்ளையினாலும் பிறரின் வெறுப்புக்கு ஆளாகி கள்ளன் எனும் சொல்லால் சுட்டப்பட்டு அவர்கள் பூர்வக்குடி கள்ளர்களாகக் கருதும் நிலை ஏற்பட்டது. 1886 இன் மெட்ராŠ நிர்வாக அறிக்கையின்படி, 'மக்களிடம் மறவர்களுக்கென்று ஒரு பேரும் பயமும் உருவாகியிருந்தது. அந்தப் பேரே அவர்களின் வன்முறைக் குற்றங்கள் வெற்றியடைய உதவின. மறவர்களை எதிர்ப்பது என்ற நினைப்பே வர விடாதபடி அந்தப் பேர் காத்தது. ஒவ்வொருவரும் மறவர்களைப் பற்றிய பயத்தோடே வளர்க்கப்படுகிறார்கள்.'
'கள்ளர்கள், மறவர்கள், அகமுடையார்கள் ஆகியோரே தென் மாவட்டக் குற்றங்களுக்குப் பொறுப்பாவார்கள். அக் குற்றங்கள் அவர்களின் எண்ணிக்கை பலத்தை மீறிய அளவிலானவை' என்று 1901 மக்கள் தொகை அறிக்கையில் பிரான்சிŠ பதிவு செய்துள்ளார். மதுரைச்சிறையில் உள்ள குற்றவாளிகளில் 42 சதவீதமும் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள குற்றவாளிகளில் 30 சதவீதமும் இம் மூன்று சாதிகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவராக உள்ளனர் என்று 1897 இல் சிறைத்துறை ஐ.ƒி. அறிக்கை தந்துள்ளார்.
1894 இல் திருநெல்வேலியில் இம் மூன்று சமூகத்தவரால் 131 கால்நடைத் திருட்டுக் குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே ஆண்டில் பிற சமூகத்தினரால் 47 திருட்டுக் குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விகிதாச்சார அடிப்படையில் பிற சமூகத்தினர் 37,830 பேருக்கு ஒருவர் திருட்டுக் குற்றவாளி என்றால், இம் மூன்று சமூகத்தில் 1497 இல் ஒருவர் திருட்டுக் குற்றவாளியாய் இருந்திருக்கிறார். மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களிலும் குற்றவியல் புள்ளி விவரங்கள் மோசமாகவே இருந்துள்ளன.
7
சென்னையில் இருந்த காலனி அரசு மறவர்களை ஈவு இரக்கமின்றி அடக்கி ஒடுக்க முடிவு செய்தது. காவல் அமைப்பு என்பது பகுத்தறிவுள்ள ஒரு சமூகத்தில் நியாயமான நிர்வாக நடைமுறையாக ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று அவர்கள் விளக்கமளித்தனர். மறவர்களுக்கு எதிராகக் 'குற்றப் பரம்பரைச் சட்டம்' அமலாக்கப்பட்டது. 1871 இல் முதலில் குற்றப் பரம்பரைச் சட்டம் என்பது பிரிட்டி„ாரின் உத்தரவுப்படி விவசாயத்தில் ஈடுபட மறுத்த பழங்குடி மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. 1897, 1911, 1923 ஆகிய ஆண்டுகளில் மும்முறை திருத்தி எழுதப்பட்ட இச் சட்டம் 1911 வரை சென்னை மாகாணத்தில் அமலாக்கப்படவில்லை.1897 இல் சென்னை அரசு இது தெற்கிற்குப் பொருத்தமில்லாத சட்டம் என முடிவு செய்தது. இருந்தபோதிலும் மாகாணத்தில் 1911இல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. எந்தக் குழுவோ, கூட்டமோ, இனமோ ƒாமீனில் வெளி வர முடியாத குற்றங்களைத் தொடர்ச்சியாகத் திட்டமிட்ட முறையில் புரிந்தால், அதனைக் குற்றப்பரம்பரை என அறிவிக்கும் அதிகாரத்தை அரசுக்கு இச் சட்டம் வழங்கியது. ஒருமுறை அறிவிக்கப்பட்டு விட்டால் அக் குழுவின் உறுப்பினர் இதனை எதிர்த்து நீதிமன்றங்களில் முறையிட முடியாது.
1871 ஆம் ஆண்டின் இச் சட்டப்படி இக் குற்றப் பரம்பரையினரின் மறுசீரமைப்பிற்கும், மறுவாழ்விற்குமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருந்தது. இச் சட்டத்தில் பின்னர் கொண்டு வரப்பட்ட திருத்தமானது இக்கடப்பாடு அரசுக்கு இல்லையென நீக்கப்பட்டது. இது இச் சட்டத்தை பெரும் சமூகங்களான கள்ளர்கள், மறவர்களுக்கு எதிராக அரசு பயன்படுத்த வகை செய்தது. குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்ட உறுப்பினர்கள் தாங்களே முன்வந்து காவல்நிலையத்தில் பதிவு செய்து கொள்ளும்போது கைரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மறுத்தால் அதுவே ஒரு குற்றமாகக் கருதப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனையோ இருநூறு ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்பட்டது.
குற்றப் பரம்பரைச் சட்டம் மறவர்கள், கள்ளர்களின் நடமாட்டத்தினைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியது. இச் சட்டத்தின் பிரிவு 10(a) மோசமான நபர்கள் மற்றும் படுகுற்றவாளிகள் எந்த நேரத்தில் காவல்நிலையத்தில் இருக்க வேண்டுமென்பதை நிர்ணயம் செய்தது. கள்ளர்கள், மறவர்களைப் பொருத்தமட்டில் இது இரவு பதினொரு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை என ஆனது. இரவு நேரங்களில் குற்றங்கள் நிகழாமல் தடுக்க அரசு இம் முயற்சியை எடுப்பதாகக் கூறியது. ஆனால் இதன்படி கள்ளர்கள் மற்றும் மறவர் இன மக்கள் தினசரி காவல் நிலையத்திலேயே உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
70,000 முதல் 80,000 வரை கள்ளர்கள் வசித்து வந்த திருமங்கலம் மற்றும் மதுரை மாவட்டத்தின் பக்கத்து வட்டாரங்களில் 1920 மத்தி வரை இச் சட்டத்தின் கீழ் 14,283 பேரும் 1924 இன் இறுதிக்குள் 32,054 பேரும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
இச் சட்டத்தின் கொடூரத்தை அறிந்த சில கள்ளர்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய பெருமித உணர்வுடன் இதனை எதிர்க்கத் தொடங்கினர். ஏப்ரல் மூன்றாம் தேதி மதுரைக்கருகே ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் தங்களைப் பதிவு செய்ய மறுத்தவர்களைக் கைது செய்ய வந்த போலீசாரை எதிர்த்தனர். கம்பு, அரிவாள், மண்வெட்டியுடன் திரண்ட மக்களைப் போலீசார் சுட்டனர். சம்பவ இடத்திலேயே பதினொரு பேர் இறந்தனர். காயம் பட்டிருந்த மேலும் எட்டு பேரில் மூவர் பின்னர் மரணமடைந்தனர். இச் சம்பவத்தால் மாகாண அரசு 'கள்ளர் மறு சீரமைப்பு திட்ட' த்தை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இத் திட்டத்தின் கீழ் கள்ளர்களுக்குப் பள்ளிகள், கிராம கூட்டுறவுக் கடன்கள், மற்றும் நில மானியங்கள், மதுரை நூற்பாலைகளில் வேலைகள், நீலகிரி மற்றும் ஆனைமலையில் டீ மற்றும் காபித் தோட்டங்களில் வேலைகள் ஆகியவை தரப்பட்டன. பதிவேடுகளின்படி சுமார் ஐயாயிரம் பிரன்மலைக் கள்ளர்கள் 1920 களில் ஆனைமலைக்கு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டுள்ளனர். இத்தகைய திட்டத்தைத் திருநெல்வேலி மறவர்களுக்கும் அமல்படுத்தக் கள்ளர் சீரமைப்புத் திட்டத்தின் அளவும், செலவும் அரசுக்குத் தடையாக இருந்தன.
குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஒழிக்கக் காங்கிரŠ முயன்றது. 1915 க்கும் 1920 க்கும் இடைப்பட்ட காலத்தில் ƒார்ˆ ƒாசப் எனும் மதுரையைச் சேர்ந்த காங்கிரŠகாரர் இதற்கான ஒரு பிரச்சாரத்தைத் துவக்கினார். 1920 களில் தஞ்சை காங்கிர…ாரும் இதில் ஈடுபட்டனர். ஆனால் திரு. முத்துராமலிங்கத் தேவர் அவர்களே இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியதில் வெற்றியடைந்தார். 1934 இல் அவர் இதற்கென இயக்கம் நடத்தி மறவர்களையும், கள்ளர்களையும், இச் சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்ய வேண்டாமென அறைகூவல் விடுத்தார். 1937 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் குற்றப் பரம்பரைச் சட்டம் ஒழிப்பு என்பது காங்கிர…ின் முக்கிய கோ„மாகத் தமிழகத்தில் மாறியது.
மறவர்களின் கோரிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய திரு. முத்துராமலிங்கத்தேவர் தேர்தலில் ƒŠடிŠ கட்சி வேட்பாளராகிய இராமநாதபுரம் இராƒாவை எதிர்த்து மகத்தான வெற்றி பெற்றார். அதன் பின்னர் எழுச்சி பெற்ற ƒனநாயக அரசியல் அமைப்பில் முத்துராமலிங்கத் தேவர், தேவர் சமூகத்தின் கண்கண்ட தெய்வமாகக் கருதப்பட்டார்.
பல அரசியல் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இச் சட்டம் தேவை என 1945 வரை பிரிட்டி‰ ஆளும் வர்க்கம் நம்பியது. மதுரையில் இருந்து வந்திருந்த ஒரு மனுவிற்கு பதில் எழுதுகையில் கவர்னரின் ஆலோசகர்களில் ஒருவர் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். 'எக்காரணம் கொண்டும் குற்றப் பரம்பரைச் சட்டத்தை என்னால் தள்ளுபடி செய்ய இயலாது. அதை இன்னும் நன்றாகச் செயல்படுத்துவதற்காக மாற்றங்கள் என்றால் சரி. நீக்குவது என்றால் முடியாது' என்கிறார். இறுதியாக 1947 இல் காங்கிரŠ இடைக்கால அமைச்சரவையால் இச் சட்டம் நீக்கப்பட்டது. ஆனால் காங்கிர…ாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் முத்துராமலிங்கத்தேவர் 1949 இல் ஃபார்வர்டு பிளாக்கைத் தொடங்கினார். மறவர்கள் பெரும் எண்ணிக்கையில் காங்கிர … விட்டு வெளியேறித் தேவரின்த்பார்வர்டு பிளாக்கில் இணைந்தனர்.1957 இல் முதுகுளத்தூர் கலவரங்களின் காரணமாக மறவர்களைத் தமிழகக் காங்கிரŠ ஆட்சி கொடூரமாகக் கையாண்டது. குற்றப் பரம்பரைச் சட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த இம் மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அமல்படுத்த வேண்டிய தருணத்தில் காங்கிரŠ ஆட்சி அவர்களைக் கடுமையாக ஒடுக்கியது. துயரப்பட்ட முன் சரித்திரம் அவர்களுக்கு இருந்தது மறுக்கப்பட்டது. இது ஒரு வருந்தத்தக்க நிலையே.
கல்வியும் வளர்ச்சியும் இம் மக்களின் பெருந்திரளானவர்களுக்கு இன்னமும் போய்ச் சேரவில்லை. இன்றும் தொடர்கிற அவர்களின் கொந்தளிப்புக்கும், தாக்குதல் மனோபாவத்துக்கும் இவையே காரணமாக அமைந்துள்ளன.
No comments:
Post a Comment