காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்

நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுத தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்க கூட முடியவில்லை.

நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையை சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது?

வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா? கள்ளர்களின் பூர்வீக தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய பொய். ஏன் கள்ளர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளின் மீது அக்கறை கொள்ளவேயில்லை


அவருக்கு கள்ளர்களின் வாழ்க்கை அவலங்களை விடவும் அவர்கள் இரவில் களவு செய்யப்போவதில் தான் அதிகமான சுவராஸ்யமிருக்கிறது. இதை தான் காலம்காலமாக தமிழ் சினிமா காட்டி வருகிறது. திருடன் எப்பேர்பட்ட காவலையும் மீறி திருடிவிடுவான். அவனை போலீஸôல் ஒருநாளும் பிடிக்கவே முடியாது. திருடன் அதி புத்திசாலி.

இருட்டிலும் அவனுக்கு கண் தெரியும் , அவன் ஒரு மாயாவி என்று தமிழ் சினிமா கட்டிய பிம்பத்திற்கும் அசலான கள்ளர்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ வேறுபாடு இருக்கிறது.


மதுரையை சுற்றிய கள்ளர் கிராமங்களில் வாழ்ந்து வருபவர்களிடம் பேசிப்பாருங்கள். எவ்வளவு வாழ்க்கை அவலங்களை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். எத்தனை ரணங்கள், வலிகள் அவர்களிடம் மறைந்திருக்கின்றன என்று புரியும்.

.READ MORE...

No comments: