முதுமக்கள் தாழி

முதுமக்கள் தாழிகள் என்பன பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள். ஈமத்தாழிகள் என்றும் அழைக்கப்படும் இவை பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது. ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இவ்வாறு புதைக்கப்பட்டத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இத்தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.

-----------------------------------
 · 
நன்னன் துளு நாட்டு மன்னர் மரபினர்
(கொங்கண நாடு அரசர் -இன்றைய மங்களூர் உள்ளிட்ட வடக்கு கன்னட மாவட்டம் ,வடக்கு கேரளா மாவட்டம் மற்றும் கோவா பகுதிகள் )
கேரளத்தில் 
நன்னனைப் பெரிய மன்னனாகக் மதிக்கின்றனர்
முதுமக்கள் தாழிகளைப் புதைக்கும் இடுகாடுகளை
இன்றும் நன்னங்காடி என்று அழைக்கிறக்கின்றனர்.
முதுமக்கள் தாழியை நன்னங்காடிக் குடங்கள் என்றழைக்கின்றனர்.
இவ்வாறு சிறந்த
அரசபரம்பரையின் பெயரால்
முதுமக்கள் தாழியை பெயரிட்டழைப்பது
கன்னட நாட்டிலும் பழக்கமென்றுதெரிகின்றது.
கன்னட நாட்டில் இதையே ‘மோரியர் மனை’.
மோரியரங்காடி’ என்று அழைக்கின்றனர்.
மோரிய அரசர் களுடன் தொடர்புபடுத்திக் கூறுவதைக் கவனிக்கலாம்.
சங்க நூல்களில் மோரியர் படையெடுப்பு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
சந்திரகுப்த மௌரியன் தன்
இறுதிக் காலத்தில்
கன்னட நாட்டில் தவம் புரிந்து
சல்லேகனம் செய்ததாக சைன நூல்கள் கூறுகின்றன.
மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின்
துளு நாடு நூலிலிருந்து

No comments: