தங்களது வாழ்க்கையினை வரையறுக்கும் ஓர் அடிப்படை அம்சமாகவே சிறிலங்காவில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரும் காணியைக் கருதுகிறார்கள்.

குறித்த ஒருவரது காணியின் அமைவிடம் தரும் பெறுமதி மற்றும் அதனை அவர் சொந்தமாக வைத்துருப்பது என்பன அவரது சமூக பெறுமானத்தை காட்டும் சுட்டியே.

திருமணத்திற்கான வாய்ப்பு மற்றும் கல்விகற்பதற்கான வாய்ப்பு என்பவை உள்ளிட்ட குறிப்பட்ட சில அம்சங்களிலும் காணி செல்வாக்குச் செலுத்துகிறது.

குறித்த ஒரு காணியை அவர் வைத்திருப்பதற்கான உறுதியான ஆவணங்கள் இருக்குமிடத்து அது அவரது பொருளாதார மேம்பாட்டுக்கும் துணை புரிகிறது.

குறிப்பாக காணியின் உறுதியைப் பயன்படுத்தி வங்கிகளில் கடனைப் பெற்று வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதோடு வருமானத்தினையும் பெருக்கிக்கொள்ளலாம்.

No comments: