தொல்காப்பியம்
பொருளதிகாரத்தில், “பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப்
போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது’
(வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.
இதைப்போல, மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான “அறவணர் தொழுத காதை’ என்னும்
பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,
“”பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்” (1384-87)
என்கிறார். “சுருங்கை’ என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய்.
அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை
வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில்
பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச்
சென்றடையும் என்பதே இதன் பொருள்.
1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து
நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே
“குமிழித்தூம்பு’ என்பதாகும்.
பழங்காலந்தொட்டு நடைபெற்றுவரும் நீர்மேலாண்மைக்கு பயன்பட்ட இவ்வகை குமிழித்தூம்புகள் தற்பொழுதுள்ள சூழலில் முற்றிலுமாய் தவிர்க்கப்பட்டு, வெறும் நினைவுச்சின்னங்களாய் காட்சியளிக்கிறது.
பட.திலிருக்கும் குமிழிக்கல் கொடும்பாளூர் அருகேயுள்ள ஓர் ஊரணியிலிருந்தது. ஐநூற்றுவர் வணிகக்குழுவின் தன்மம் இது...
Kathiervel Kumar
No comments:
Post a Comment