குடும்ப பாசம் , சாதி பாசம்

0 c
சாதி ஒழிப்பாளர்கள் ...கவனிக்க ...
இதை தான் குடும்ப பாசம் , சாதி பாசம்
என்று சொல்கிறார்கள்
----------------------------------------------------------------------
டிசம்பர் மாதம் முதுமலை பயணம் சென்றிருந்தேன். யானை தன் குட்டியை
மிகவும் அதிக கவனத்துடன் பாதுகாத்து அழைத்துச்செல்வதை நிறைய சந்தர்ப்பங்களில் பார்த்து இருக்கிறேன் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால்
முதுமலையில் ஆறு யானைகள்
குளித்துக்கொண்டு இருந்த போது
எங்களது இடதுபுறம் சரிவில் நின்றிருந்த
ஒரு யானை, குட்டியுடன் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தயானையைப் பார்த்து கத்திக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த யானையின் பிளிரல் தொடரவே குளித்துக்கொண்டிருந்த யானைகள் கரை ஏறத்தொடங்கின.
வளர்ந்த யானைகள்சாதுரியத்துடன் கரை ஏறுகையில், குட்டி கரை ஏறமுடியாமல் தவித்த போது, தாய் யானை தனது முன் இரண்டுகால்களுக்கு இடையில் குட்டியை இருத்திக்கொண்டு அது விழாமல் கரை ஏற தனது முன்காலில் குட்டியை உந்திஏற உதவியது.
இருந்தபோதிலும் எங்களது இடது பக்கம் பிளிரிக்கொண்டிருந்த யானை தனது அறைகூவலைதொடர்ந்து கொண்டே
எங்களை நோக்கி மிக அருகில் வந்து கொண்டிருந்தது. கரை ஏறிய யானை தனது குட்டியை பாதுகாப்பாக தனது அருகிலேயே வருமாறு அழைத்துக்கொண்டு பிளிரிய யானையை நோக்கி சென்றது
. குட்டி யானை பாதுகாப்பாக
தாய் யானையுடன் பிளிறிய யானை அருகில் வந்த போது உணர்ச்சிப்பூர்வமானது.
பின்னர் யானைகள் அனைத்தும்
குட்டியை யாரும் பார்க்காதவாறு அனைத்தும் சென்றது.
விலங்குகள் ஆறு அறிவுள்ள
மனிதனைப் காட்டிலும்
பாசமாக பாதுகாப்பாக
தனதுகுட்டியை அழைத்துச்சென்ற முறை மெய்சிலிர்க்க வைத்தது.
‎Ponmoorthy Ramasamy‎ பெறுநர் காடுகள் (forest)
25 நிமிடங்கள்










இந்திய இராணுவ தினம் ஜனவரி 15

0 c


இந்திய இராணுவ தினம் ஜனவரி 15...
இந்திய இராணுவ நாள் இந்தியாவில் ஜனவரி 15 ம் ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர்
இந்திய இராணுவ தளபதியாக 
ஆங்கில அதிகாரிகள் இருந்தனர்.
சுதந்திர இந்தியாவில் 

இந்தியத் தரைப்படையின்
முதல் படைத்தலைவராக (commander-in-chief)
லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா
1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார்.
இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி
ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார்.
சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து 
ஜெனரல் கே எம் கரியப்பா
இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.
இந்திய ராணுவத்துக்கு 
இந்தியரே 
முதல் இந்திய
இராணுவ தளபதியாக
லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் ஆண்டுதோறும் 
இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

களப்பிரர் பற்றிய வரலாற்று நூல்

0 c

#சேர #சோழ #பாண்டியர் என #மூவேந்தரையும் வென்று தமிழகத்தை ஒரு குடைக்குள் ஆட்சி செய்த
#களப்பிரர் பற்றிய வரலாற்று நூல்களும்
அவை கிடைக்கும் தொடரிகளும் (EBOOK LINK)
இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
.
.
நூல் 1
.
களப்பிரர் காலத் தமிழகம் (கி.பி.300-600) ஆசிரியர் திரு .பன்னீர்செல்வம்
https://www.amazon.in/dp/B07L1RNBCW
.
.
நூல் 2
.
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் ஆசிரியர் . திரு மயிலை,சீனி.வேங்கடசாமி
https://www.amazon.in/dp/B07L69236F
.
.
நூல் 3
.
களப்பிரர் வருகை ஆசிரியர் . திரு நடன காசிநாதன்
https://www.amazon.in/dp/B07MBR2L92
.
.
நூல் 4
.
பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆசிரியர் . திரு அருணாசலம் மு.
https://www.amazon.in/dp/B07LH4B7YC
.
.
நூல் 5
.
வச்சிரநந்தியின் திரமிள சங்கம் ஆசிரியர் . திரு மயிலை,சீனி.வேங்கடசாமி
https://www.amazon.in/dp/B07L1RNBCW
.
.
நூல் 6
.
இறையனார் அகப்பொருள் வரலாற்று ஆய்வு ஆசிரியர் . திரு மயிலை,சீனி.வேங்கடசாமி
https://www.amazon.in/dp/B07L6JKV8W
.
.
.
நூல்களை பற்றிய விரிவான விபரங்கள்
-----------------------------------------------------------------------
களப்பிரர் காலத் தமிழகம் (கி.பி.300-600)
.
https://www.amazon.in/dp/B07L1RNBCW
KALAPIRAR KAALA TAMILAGAM
(Tamil Edition) Kindle Edition
by PANNEER SELVAM R (Author)
கிபி 300 முதல் 600 வரை
தமிழகத்தை ஆட்சி செய்த
அரசவம்சம் பற்றிய வரலாறு
--------------------------------------------------------
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
.
https://www.amazon.in/dp/B07L69236F
(Tamil Edition) Kindle Edition
by SEENI.VENKATASAMI MAYALAI (Author)
களப்பிரர் ஆட்சியின் கீழ் அடங்கியிருந்த நாடுகள் சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, துளுநாடு, கொங்கு நாடு, இரேணாடு, ஈழநாடு.
களப்பிரர் ஆட்சிக்காலம்
தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது.
ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது.
வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து,
இது வெளியிடப்பட்ட பிறகுதான்
களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும்
அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரியவந்தது.
--------------------------------------------------------------------------------------
களப்பிரர் வருகை Kindle Edition
by நடன காசிநாதன் (Author)
https://www.amazon.in/dp/B07MBR2L92
தமிழக வரலாற்றைக் கற்காலம் தொட்டு தற்காலம் வரை வரலாற்றாசிரியர்கள் எழுதி வருகின்றனர் என்றாலும் சங்க காலத்தை அடுத்து மூன்று நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தின் நிலை என்ன என்பதைச் சரிவரக் கூறமுடியாத நிலையிலேயே உள்ளனர். அக்கால கட்டத்து வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் குறிப்பிட்ட அளவில் கிடைக்காத காரணத்தால் அதனை ‘இருண்டகாலம்’ என்று கூறுகின்றனர். அக்கால கட்டத்தில் ‘களப்பிரர்கள்’ என்னும் அரச பரம்பரையினர் ஆண்டிருக்கக்கூடும் என்பதை வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பால் உணர்த்துவதால் ‘களப்பிரர் காலம்’ என்றும் கூறுவர். பொதுவாகக் களப்பிரர்கள் கி. பி. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 6-ஆம் நூற்றாண்டு வரை ஆண்டவர் என்பர். அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில கல்வெட்டுக்களால் அவர்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழகத்தில் சிறுபகுதியையேனும் ஆண்டிருக்க கூடும் என்பது தெரியவருகிறது. அதற்குப் பிற்பட்ட காலத்தில் அவர்கள் ஓரளவுக்குத் தம் நிலை தாழ்ந்து சோழ, பாண்டிய மன்னர்களிடத்தில் அரசு அதிகாரிகளாகப் பணிபுரிந்து வந்திருக் கின்றனர் என்பதற்கும் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன.
--------------------------------------------------------------------------------------
வச்சிரநந்தியின் திரமிள சங்கம்
https://www.amazon.in/dp/B07L1RNBCW
VACHIRA NANDHI THIRAMILA SANGAM
(Tamil Edition) Kindle Edition by MAYILAI SEENI VENKATASAMY (Author)
களப்பிரர் ஆட்சிக்கு முன்னே பாண்டியர் தமிழ் மொழியை ஆராய்வதற்குப் புலவர்களின் கூட்டத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தமிழ்ச் சங்கம் என்பது பிற்காலத்துப் பெயர். அதன் பழைய பெயர் தமிழ்க் கழகம் என்பது. பிற்காலத்துப் பாண்டியர் அமைத்திருந்த சங்கம் மதச் சார்பான சங்கம் அன்று. அது தமிழ் மொழியை ஆராய்வதற்கு ஏற்பட்ட சங்கம்
வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கம் இது கி.பி. 470 இல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நடந்தது. . இந்தத் திரமிள சங்கத்தில் சைன சமயத் துறவிகள் மட்டுமே இருந்தார்கள். இவர்களுடைய வேலை, முன்னமே சொல்லியது போல சைன சமயத்தைப் பரப்பியதாகும்
வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் சைன மதத்தை வளர்ப்ப தற்கான சங்கமாகும் (சங்கம்- கூட்டம்). பௌத்தப் பிக்குகளின் கூட்டத்துக்குப் பௌத்த சங்கம் என்பது பெயர்.
--------------------------------------------------------------------------------------
இறையனார் அகப்பொருள் வரலாற்று ஆய்வு
https://www.amazon.in/dp/B07L6JKV8W
Iraiyanar Agaporul Varalatru Aivu (Tamil History Book 3) (Tamil Edition) Kindle Edition
களப்பிரர் ஆட்சிக் காலத்தில், பக்தி இயக்கம் தோன்றிய போது இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூல் எழுதப்பட்டது . தொல்காப்பியப் பொருளதி காரம் இருக்கும்போது இந்தப் புதிய அகப்பொருள் நூலை எழுதிய நோக்கம் என்ன? யாது காரணம் பற்றி இந்தப் புதிய நூல் எழுதப்பட்டது என்பதை பற்றிய ஆய்வு நூல் இது
--------------------------------------------------------------------------------------
பாண்டிய நாட்டில் களப்பிரர்
PANDIYA NAATIL KALAPPIRAR (TAMIL HISTORY Book 7) (Tamil Edition) Kindle Edition
by அருணாசலம் மு. (Author)
நன்றி
KALAPRAR TAMIL BOOK