LIBRARY IN CHENNAI
PASUMPON FINE ARTS,
Pasumpon thirumana mandabam,
TNagar,Chennai.
They r in the process of collecting our books to setup a library there.FUI
THANK U (thaniyan....ORKUT )
BOOK..1
Kallar Marabinarin Patta Peyarkal - Oru Varalatru Parvai".
This book is the result of years of research on Kallar Community, once rulers, now spread not only in Tamilnadu but all over the world and in various capacities in Government as well as in Business ventures.
This book enlists all 'Suffix Titles of Kallar Community' - some 1135 and looks into their history and presence. Also includes the lists compiled by Na. Mu. Venhkadasamy Nattar, Dr. A. Datchinamurthy, U. Subramanian and V. Karuppaiyan. This book has also been reviewed in Dinamani & Dailythanthi. A good book to read and preserve. Recommended for all.(THANKS Dr.Saravanan )
BOOK.....2
ராமலிங்க விலாசம் அகழ்வைபபகம்
publisher: தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வு துறை
this is the book of seathupathy palace ..museium
rare tamil peoples weapon...like valare....more details
price....just....Rs.3.00(THANKS....SATHIYAMOORTHY)
BOOK.....3
பசும்பொன் களஞ்சியம்------- காவ்யா சண்முக சுந்தரம்
BOOK.....4
சங்ககால மறவர் --முத்தையா
BOOK.....5
முக்குலத்தோர் சரித்திரம் --காவ்யா சண்முக சுந்தரம்
BOOK.....6
பாண்டிதுரை தேவர் --சிலம்பு .நா.செல்வராசு
BOOK.....7
புலிதேவர்--- ந. சஞ்சீவி
BOOK.....8
மருது பாண்டியர்கள் ந சஞ்சீவி
BOOK.....9
மறவர் கதை பாடல்கள் --- ஞான தாய்
BOOK.....10
வேலூர் சிறையில் தேவர் --செந்தூர் பாண்டியன்
BOOK.....11
தேவரும் எடின்பர்கும் -- காமாட்சி
BOOK.....12
கள்ளர் சரித்திரம் ---நா.மு. வேங்கடசாமி நாட்டார்
BOOK.....13
கள்ளர் சரித்திர சுருக்கம் -- அல்லூர் கரிகாலன்
Book..........14
பசும்பொன் தேவரின் மேடை முழக்கம் (தொகுப்பு) Rs.100.00
Book..........15
சட்டப் பேரவையில் பசும்பொன் தேவர் (தொகுப்பு) Rs.75.00
Book..........16
தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் (தொகுப்பு) Rs.40.00
Book..........17
பசும்பொன் தேவரின் பன்முகத் தோற்றம்
Book..........18
பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்டுகளும்
you can get the above books from
AnyIndian Book Shop# 102, No. 57, PMG ComplexSouth Usman RoadT. Nagar,
Chennai - 17Phone: 24329283
Book..........19
தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு
முகவரி
மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் : 1447,7 (ப.எ.4), தணிகாசலம் சாலை,(தமிழ்நாடுமின்சார, வாரியம் எதிரில்),தியாகராய நகர், சென்னை – 600 017,தொலைபேசி : +914424342926
also if interested check out
சிந்தனைச் சுடர் முத்துராமலிங்கத் தேவர்-- எஸ்.புனிதவல்லி
thanks : D.ARUN KUMAR
Book..........20
பசும்பொன் தேவரின் வரலாற்று சுவடுகள்
- முனைவர் பேரா. க.செல்வராஜ்.
1. பிறப்பும் அதன் சிறப்பும்
2. விடுதலைப் போராளியாக தேவர்
3. சமூகப் போராளியாக தேவர்
4. தொழிலாளர்களின் தோழராக தேவர்
5. உழவர்களின் தோழராக தேவர்
6. அரசியல் அறிஞராக தேவர்
7. ஆன்மீக ஞானியாக தேவர்
8. சாத்திய பேதமற்ற சமத்துவவாதியாக தேவர்
9. சாதி மறுப்பு சித்தாந்தவாதியாக தேவர்
என்ற தலைப்புகளில் தனது ஆழ்ந்த ஆய்வு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.மேலும்"இருட்டடிப்பு செய்யப்படுகிறதே என்கின்ற ஏக்கத்தாலும் உண்மைகளை பதிவு செய்து வைப்போம் என்ற கடமை உணர்வுடனும் பேராசிரியர் முனைவர்.க.செல்வராஜ் பல ஆதாரங்கள், தடயங்கள், ஆவணங்கள் தேடிச் சேர்த்து தொகுத்து தேவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். தேவரை நேரில் பார்க்க, கேட்க, தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்த இளம் சந்ததியினருக்கு வீரத் தியாகியை அரசியல் துறவியை மாசுமறுவற்ற தேச பக்தனை தெரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும்: என்ற தோழர் தா.பாண்டியன் அவர்களின் அணிந்துரையோடும் மற்றும் "தேவர் திருமகனாரின் புகழ் மகுடத்தில் மாணிக்கக்கல்லாக பேராசிரியர் முனைவர் க.செல்வராஜ் அவர்கள் எழுதியுள்ள பசும்பொன் தேவரின் வரலாற்று சுவடுகள் என்ற இந்நூல் விளங்குகிறது. தேவர் பெருமகனாரின் பொது வாழ்விற்கு பெருமை சேர்க்க, கால வெள்ளத்தால் கரைந்து போகாத சான்று ஆவணங்களை இந்நூல் முழுவதும் தருவதற்கு நூலாசிரியர் கடுமையான உழைப்பை தந்திருக்கிறார் என்பதை நூலை படிப்பதன் மூலம் உணரலாம். இவரது எழுத்து நடை விரைந்து படிக்க தூண்டும் ஆற்றொழுக்கு நடை." என்ற திரு.வைகோ அவர்களின் மதிப்புரையோடும் வந்திருக்கிறது.
Book..........21
பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் அய்யாவின் நூற்றாண்டு விழா
சிறப்பு வெளியீடு.
நக்கீரன் பதிப்பகத்தாரின் வெளியீடு
.AVAILABLE @:Permanent Book Fair, Connemara Public Library, chennai-08
THANKS .....THANIYAN PANDIYAN
Book..........22
தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
[Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974]
{
தென்னாட்டு பாளையக்காரர்களைப்பற்றி நம்நாட்டினர் யாராவது சுதந்திரத்துக்குப் பின்னர் நல்ல நூல்களை எழுதியிருக்கிறார்களா என வரலாற்றுப் பேராசிரியர்களைக் கேட்டேன். பெரும்பாலானவர்கள் ராஜையன் மட்டும்தான் எழுதியிருக்கிறார் என்றார்கள். பேராசிரியர் ராஜையன் மதுரை பல்கலையில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக விளங்கியவர். இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தில் [ஐ.சி.எச்.ஆர்] உறுப்பினராக இருந்தவர். பொதுவாகவே அவர்மீது கல்வித்துறையில் ஒரு மதிப்பு இருக்கிறது. அவரது தென்னிந்தியப் புரட்சி [The South Indian Rebellion ]முக்கியமான நூலாக கருதப்படுகிறது. அந்நூலை பொன்.முத்துராமலிங்கம் தழுவி தென்னட்டுப்புரட்சி என்று தமிழில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். மு.கருணாநிதியின் தென்பாண்டிச்சிங்கம் என்ற நாவலுக்கு ஆதாரமும் ராஜையனின் நூலே என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
READ MORE...ராஜையனின் தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவராலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு வந்திருப்பதாகச் சொன்னார்கள்.பலவாறாகத் தேடியும் அந்நூல் கிடைக்கவில்லை. இந்த நூல் பாளையப்பட்டுக்களைப் பற்றி அறியும் ஆவலுடன் வாசிக்கும் ஒரு பொதுவாசகனுக்கு ஏமாற்றம் அளிப்பது என்பதே என் எண்ணமாகும்.
சிறிய இந்த நூல் பாளையப்பட்டுக்கள் உருவான வரலாறை சுருக்கமாகச் சொல்கிறது. பொதுவாக தென்னாட்டைக் கைப்பற்றி முடிசூடிய விஜயநகரத்தளபதி விஸ்வநாத நாயக்கர் காலத்தில் [1528-1564] அவரது தளவாயாக இருந்த அரியநாத முதலியார் பாளையப்பட்டுகக்ளை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. பேரா சத்தியநாத அய்யர் இதை எடுத்துக் கூறுகிறார்.
ராஜையன் பாளையப்பட்டு என்ற அமைப்பு முன்னரே ஏதோ வடிவில் தமிழ்நாட்டில் இருந்தது என்று ஊகிக்கிறார். தமிழ்நாட்டு அரச அமைப்பு மூன்று அடுக்கு கொண்டது. மேலே மன்னர். அவருக்குக் கீழே அவருக்குக் கட்டுப்பட்டு கப்பம் அளித்து ஆனால் காவல்பொறுப்பும் வரிவசூல் உரிமையும் கொண்டு ஆட்சிசெய்த குறுநில ஆட்சியாளர்கள். அவர்களுக்குக் கீழே கிராமத்து ஆட்சியாளர்கள். இந்த குறுநில ஆட்சியாளர்கள் தொடர்ந்து உருவாகியும் மறைந்தும் வருகிறார்கள். மாலிக் காபூரின் படையெடுப்பால் பாண்டிய குலம் சிதறியபோது பாண்டிய வம்சாவளியைச் சேர்ந்த பலர் பலபகுதிகளில் குடியேறி சிறு நிலப்பகுதிகளை ஆட்சி செய்திருக்கிறார்கள். உதாரணமாக கயத்தாற்றை தலைநகரமாகக் கொண்டு பஞ்ச வழுதிகள் என்ற பேரில் ஐந்து பாண்டியர்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்களை அரியநாத முதலியார் வென்று அழித்தார் என்று வரலாற்றில் தெரிகிறது.
எட்டையபுரம் பாளையக்காரர் உண்மையில் விஜயநகர படையெடுப்புக்கு முன்னரே சந்திரகிரியில் இருந்து பாண்டிய நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னரிடம் இருந்து மண்ணை பெற்றுக் கொண்டு எட்டயபுரத்தை ஆள ஆரம்பித்தவர். போடிநாயக்கனூர் பாளையக்காரரும் இவ்வாறு மலையாள ஜெயத்துங்க நாட்டு மன்னனிடமிருந்தே நிலத்தைப் பெற்றார்.
அரியநாதர் இந்த ஆட்சியாளர்களை பாளையக்காரர்களாக வரைமுறை செய்து ஒரு நிலையான அமைப்பை உருவாக்கி பாளையப்பட்டு என்று பிற்பாடு அழைக்கப்பட்ட ஆட்சிமுறையை உருவாக்கினார். பொதுவாக இப்பாளையப்பட்டு முறை ஒருவகை ‘குத்து மதிப்பான’ கணக்காகவே இருந்தது என்று சொல்லும் ராஜையன் திருவிதாங்கூர் அரசும் ராமநாதபுரம் சேதுபதி நாடும் எல்லாம் மதுரையின் பாளையங்களாக சொல்லப்பட்டாலும் அவை எந்த அளவுக்கு மதுரைநாட்டின் பகுதிகளாக இருந்தன என்பது கேள்விக்குறியே என்பதை விளக்குகிறார். கிழவன் சேதுபதி காலத்தில் சேதுநாடு தனியாகப்பிரிந்து சுதந்திர நாடாகியது. அதை மதுரையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1730க்குப்பின்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்ட திருவிதாங்கூர் வடகேரளத்தை வென்று தனிநாடாகியது. ஆற்காடு நவாப் அன்வாருதீன் கான் இலங்கையிலும் தனக்கு பாளையப்பட்டுக்கள் இருப்பதை குறிப்பிடுவதை எடுத்துக்காட்டும் ராஜையன் அவருக்கு அந்நிலப்பகுதியுடன் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்.
பாளையக்காரர் என்ற அமைப்பின் அடிபப்டை ஊர்களில் விளங்கிய ஊர்க்காவல் என்ற முறையே என்று விளக்குகிறார் ராஜையன். ஊர்க்காவல் தலையாரி என்னும் ஊர்க்காவலர் குழுவால் நிகழ்த்தப்படுகிறது. அதை வழிநடத்துபவர் மணியக்காரர் என்னும் ஊர்த்தலைவரும் கர்ணம் என்னும் கணக்குப்பிள்ளையும். இவர்கள் பாளையப்பட்டுகளுக்கு ஊரில் வசூலாகும் வரியை அளிக்கிறார்கள். பாளையப்பட்டுக்களுக்கும் ஊர்களுக்கும் இடையேயான தொடர்பு இதோடு முடிந்துவிடுகிறது. பாளையப்பட்டுகக்ளின் ஒரே வேலை ஊர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்வதுதான் .
இந்த ஊர்க்காவல் என்பது ‘திருடனைப்பிடிக்க இன்னொரு திருடனை நிறுத்துவது’ என்ற முறையில் அமைந்தது [பக்கம்31] என்று சொல்லும் ராஜையன் இந்த ஊர்க்காவல்படை பிற ஊர்களில் திருடுவதை தொழிலாகக் கொண்டிருந்தது என்கிறார். பாளையக்காரர்- ஊர்க்காவல் என்ற இரு அமைப்புகளும் ஒன்றையொன்று வளர்த்தன என்று சொல்கிறார்.
பாளையக்காரர்கள் போரில் மன்னரின் மைய ராணுவத்துக்கு ஆளும் ஆயுதங்களும் பணமும் அளித்து உதவ வேண்டும். பாளையம் என்றாலே வைப்புராணுவம் [ரிசர்வ் ஆர்மி] என்றுதான் பொருள். ஆனால் மைய அரசு வலுவாக இருந்த நாட்களில் மட்டுமே பாளையக்காரர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் மையராணுவத்தின் வேலையே பாளையக்காரர்களை கட்டுபப்டுத்துவதுதான். திருமலை நாயக்கர் காலத்தில் எட்டையபுரம் நாயக்கர் தலைமையில் பாளையக்காரர்கள் கிளர்ச்சி செய்ய அதை ராயர் ராமநாத புரம் சேதுபதியை அனுப்பி அடக்கினார். அந்த ராமநாதபுரம் சேதுபதியே பின்னர் மங்கம்மாள் காலத்தில் கலகம் செய்தார்.
பாளையக்காரர்கள் பெரும்பாலும் நேர்போர் செய்வதில்லை என்று ராஜையன் சொல்கிறார்.[ பக் 35] போர் என வந்தால் உடனே நாட்டை கைவிட்டுவிட்டு காடுகளில் ஏறிச் செல்வது அவர்களின் வழக்கம். அதாவது அவர்களுக்கு காவல் வரி கட்டிய மக்கள் எதிரியின் கருணைக்கு விடப்படுவார்கள். காரணம் பாளையக்காரர்களில் எட்டையபுரம், போடிநாயக்கனூர், தலைவன் கோட்டை, நெற்கட்டும்செவல் ,பாஞ்சாலங்குறிச்சி போல சில தவிர பிறருக்கு பெரிய ராணுவமோ போர்பலமோ இல்லை.
இந்நூலின் பெரும்பகுதி பாளையக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கும் உள்ள உறவைப்பற்றியதாகும். பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் பிரிட்டிஷார். உண்மையில் அவர்கள் அதை அப்படியே ஜமீந்தாரி முறையாக மாற்றிக் கொண்டனர். எட்டயபுரம், புதுக்கோட்டை, கடம்பூர், சேத்தூர், சிவகிரி, சொக்கம்பட்டி போல அவர்களுக்கு ஆதரவாக நின்ற பாளையக்காரர்களை ஜமீந்தார்களாக ஆக்கினார்கள். அவர்களை எதிர்த்த பாஞ்சாலங்குறிச்சி [வீரபாண்டிய கட்டபொம்மன்] நெற்கட்டும் செவல்[புலித்தேவன்], சிவகங்கை [மருதுபாண்டியர்]போன்றவற்றை முற்றாக அழித்தனர். சிவகங்கையின் பெரும்பகுதி புதுக்கோட்டை ஜமீனுக்கு அளிக்கப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியும் நெற்கட்டும் செவலும் பெரும்பாலும் எட்டையபுரத்துடன் சேர்க்கப்பட்டு அது ஒரு குட்டி சம்ஸ்தானம்போல விரிந்தது.
வெள்ளையர் பாளையக்காரர்களுடன் நடத்திய போர்களை குறிப்பிட்டு பாளையக்காரர்களின் ராணுவபலத்தை முற்றிலும் இல்லாமல்செய்ததை விவரிக்கிறார் ராஜையன். அவர்கள் பிற்பாடு வெறும் வரிவசூல் முகவர்களாக ஆனார்கள். சுதந்திர இந்தியாவில் முற்றாக ஒழிக்கப்பட்டார்கள். இந்நூலின் பிற்பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் வெள்ளை ஆட்சிக்கும் நடந்த பூசலும் பின்னர் மருது சகோதரர்களின் கலகமும் பிரிட்டிஷ் குறிப்புகளை அடியொற்றி கூறப்படுகின்றன.
*
ராஜையனின் நூலை இந்திய வரலாற்றாய்வில் இருக்கும் ஒரு சமகாலப்போக்கின் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். ஆங்கிலத்தில் வாசிக்கவும் எழுதவும் உள்ள திறனையே முதன்மைத்தகுதியாகக் கொண்டு இயங்கும் ஓருவகை ‘குமாஸ்தா’ ஆய்வு இது. [சமகாலத்தில் இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்] ஆங்கில நூல்களை மட்டுமே நம்பி தமிழக ஆய்வைச் செய்வதும் தமிழ் தெரிவதனால் கிடைக்கும் சர்வ சாதாரணமான தகவல்களை அரிய ஆய்வுத்தகவல்களாக ஊடே தெளித்து விடுவதும் இவர்களின் வழிமுறை. இந்த நூல்களுக்கு மேலை ஆய்வாளர் மத்தியில் வரவேற்பு இருப்பது இவர்கள் அடையும் பதவிகள் அங்கீகாரங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது. ஆனால் வரலாற்றை அறிய ஆவலுடன் படிக்கும் தமிழ் வாசகனுக்கு இந்நூல்கள் அளிப்பது ஆழமான ஏமாற்றமே.
ராஜையன் பிரிட்டிஷ் ஆவணங்களை மட்டுமே நம்பி இந்நூலை எழுதியிருக்கிறார். பாளையப்பட்டுக்களின் தோற்றம் அவற்றுக்கிடையே உள்ள உறவுச்சிக்கல்கள் குறித்து இந்நூலில் எதுவுமே இல்லை. சாதாரணமாக தமிழ் வாசகர்களுக்குத் தெரிந்த தகவல்கள் கூட இல்லை. எட்டையபுரம்,சொக்கம்பட்டி முதலிய பெரும்பாலான பாளையப்பட்டுக்கள் அவர்களுடைய தோற்றுவாய் வம்சவரலாறு முதலியவற்றை பேணி சிறு நூல்களாகக்கூட வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. பல்லாயிரம் ரூபாய் செலவில் லண்டன் நூலகத்துக்குச் செல்லத்துணியும் ராஜையன் நூறு ரூபாய் செலவிட்டிருந்தால் மதுரையில் இருந்து எட்டையபுரத்துக்கும் தெற்கேயும் வந்து பலமடங்கு தகவல்களைச் சேர்த்திருக்கலாம்.
எட்டையபுரத்துக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் எப்போதுமே பூசல்தான். எட்டையபுரம் நாயக்கர்கள் தொட்டியருக்குள் சில்லவார் குலம். பாஞ்சாலங்குறிச்சி நாயக்கர்கள் அதே சாதியில் தொக்லவார் குலம். இந்த வேறுபாடு உருவாக்கிய சிக்கலை நாம் ‘பேட்’டின் ஆவணப்பதிவில் காண்கிறோம். சமகால வரலாற்றை அறிய முயலும் வாசகனுக்கு இம்மாதிரி தகவல்கள் மிக முக்கியம். ராஜையன் இந்த விஷயங்களுக்குள் நுழைவதே இல்லை.
பாளையப்பட்டுக்களைப் பற்றி ஆங்காங்கே தமிழில் எழுதப்பட்டுள்ளது. அவை அறிவியல் சார்ந்தவையாக இல்லாமல் குலவரலாறாகவே உள்ளன. இவற்றை விரிவாகத்தொகுத்து அறிவியலடிபப்டையில் நோக்கினாலே நல்ல வரலாறுகளை எழுத முடியும். ஜகவீர பாண்டியனார் தன் பாஞ்சலங்குறிச்சி வீரவரலாறு நூலில் 72 பாளையப்பட்டுக்களைக் குறிப்பிடுவதை அ.கி.பரந்தாமனார் அவரது ‘மதுரை நாயக்க வரலாறு’ நூலில் சொல்கிறார்.
அவை, பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை,காடல்குடி, குளத்தூர்,மேல்மாந்தை, ஆற்றங்கரை,கொல்லம்பட்டி, கோலார்பட்டி, கடம்பூர், மணியாச்சி,தலைவன் கோட்டை, நெற்கட்டுச்செவல், சொக்கம்பட்டி, ஊத்துமலை,சேற்றூர், சிவகிரி,சிங்கம்பட்டி,அழகாபுரி,ஊர்காடு, சுரண்டை,சந்தியூர், ஏழுமலை,இராசாக்கநாயக்கனூர்,கோட்டையூர், மருங்காபுரி,மன்னார் கோட்டை, பாவாலி,இலக்கையனூர், முல்லையூர்,கடவூர், இடையகோட்டை,நிலக்கோட்டை, தேவாரம்,இராமகிரி, கல்போது, கன்னிவாடி, தொட்டப்பநாயக்கனூர், கம்பம்,காசையூர், வாராப்பூர்,தோகைமலை, படத்தூர், ஆய்குடி, சமுத்தூர்,விருப்பாட்சி, படமாத்தூர்,கண்டவநாயக்கனூர், காமயநாயக்கனூர், தும்பிச்சி நாயக்கனூர், நத்தம் வெள்ளியக்குன்றம்,மலையப்பட்டி, வடகரை, அம்மையநாயக்கனூர், போடி நாயக்கனூர்,சக்கந்தி, பதவல நாயக்கனூர்,ரோசலப்பட்டி, வீரமலை,பெரியகுளம், குருவிக்குளம், ஆத்திப்பட்டி, இளசைபட்டி, மதுவார்பட்டி,கோம்பை, கூடலூர்,கவுண்டன்பட்டி,குமாரவாடி, உத்தப்ப நாயக்கனூர், கொல்லக் கொண்டான்– என்று சொல்லபப்டுகிறது. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு பாளையப்பட்டுக்களின் வாரிசுகள் இன்றும் உள்ளன. இவர்களை அணுகி ஆய்வு செய்வதன் மூலமே இவ்வரலாற்றை எழுத இயலும். மாறாக ராஜையன் பிரிட்டிஷ் நூல்களைப் பார்த்து பாளையப்பட்டுக்களை எண்ண முயல்கிறார்
ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் ஆகியோரின் பழைய ஆவணப்பதிவுகளை வாசித்த பின் இந்நூலை வாசிக்கும் ஒருவர் இதில் மேலதிகமாக என்ன இருக்கிறது என்ற ஆச்சரியத்தையே அடைவார். சில சிறு தகவல்கள் சிற்சில ஊகங்கள் அவ்வளவுதான். ஆனால் முன்னர் சொன்ன பிரிட்டிஷ் எழுத்துக்கள் மிகமிக விரிவானவை. அவற்றின் தகவல்கள் ஒரு நவீன வாசகனுக்கு பெரும் களஞ்சியம் போன்றவை. உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை குமாரகிரி பாளையம் போன்றவை கற்குரிச்சி மறவர்கள். சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னிக்குட்டி மறவர்கள். இவர்கள் வன்னியர்கள் அல்ல என்ற துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார்.
ராஜையன் எழுதிய நூலில் இத்தகைய விவரங்கள் எதுவுமே இல்லை. கிட்டத்தட்ட கோனார் நோட் போடுவதுபோல இவ்வரலாறு எழுதப்பட்டுள்ளது. நம் கல்விதுறை அறிவுஜீவிகள் படிப்பவற்றைக் குறிப்பெடுத்து மீண்டும் எழுதுவதில் மட்டுமே தேர்ச்சி உடையவர்கள்.
இந்நூலின் பின்னடைவில் ஏறத்தாழ நூற்றைம்பது நூல்கள் மற்றும் ஆவணங்களை ராஜையன் பட்டியலிட்டுச் சொல்கிறார். அவற்றை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்தார் என்பதை எவ்வளவு தேடியும் நூலுக்குள் கண்டடைய இயலவில்லை.
எவ்வளவோ கேள்விகள் உள்ளன. பாளையக்காரர் என்ற முறையின் வேர்கள் எங்குள்ளன? முற்கால சோழ பாண்டிய ஆட்சிகளில் இருந்த வேளிர்கள், கடல்சேர்ப்பர்கள், குறவ மன்னர்கள் போன்றவர்கள் அடங்கிய அமைப்புக்கும் இதற்கும் ஏதேனும் தொடப்புச்சரடு உண்டா? பிற்கால சோழ பாண்டிய அரசுகளில் இருந்த குறுநில அரசர்களின் வம்சங்களுக்கும் இதற்குமான உறவு என்ன? பாளையக்காரர் முறை எவ்வகையிலேனும் அதிகாரப்பரவலுக்கும் பலவகை சாதிகள் உரிய பங்கைப்பெறும் ஒரு ஜனநாயக அமைப்புக்கு அவை உதவினவா?
அதற்கெல்லாம் பதில் தேட மீண்டும் நெல்சன்,பேட் போல ஏதேனும் வெள்ளையர்கள் வந்துதான் ஆய்வுசெய்யவேண்டும் என்று படுகிறது.இந்திய அரசும் பல்கலை மானியக்குழுவும் அதற்காக ஏதேனும் நிதியுதவிகள் செய்யலாம்.இவ்வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு அளிக்கும் பலகோடிகளில் சிறுபகுதியை ஒதுக்கினாலே போதுமானதாக இருக்கும்.}
thanks tohttp://jeyamohan.in/?p=14
Book..........23
சில வரலாற்று நூல்கள் 1 - மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்)
July 5, 2007 – 8:51 pm[The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]
நெல்சனின் நடையின் சிறப்பியல்பே சரசரவென வரும் அவரது தனிப்பட்ட அவதானிப்புகள்தான். ”போலிப்பாவனை கொண்ட பிராமணன் [Pharisaical] சட்டங்களே இல்லாத மறவன், கஞ்சத்தனமான செட்டி, சுயநலவாதியான வெள்ளாளன்,மந்தமான நாயக்கன், தந்திரமாய் பதுங்கும் கள்ளன் [skulking] நிலைகொள்ளாத குறவன், கூறுகெட்ட பறையன் [licentious] ஆகியவையே கூரிய அவதானிப்பின் மூலம் தெளிவாக பிரித்தறியத்தக்க இச்சாதிகளின் உள்ளார்ந்த இயல்புகள்” [பாகம் I ,பக்கம் 16 ] என்று அவர் எழுதிச்செல்லும்போது அதில் அன்றைய ஆதிக்கவாதியின் பார்வை தெரியும் அதே நேரத்தில் தனிப்பட்ட அவதானிப்பு மூலம் உருவாகும் செறிவான மொழியையும் காணலாம்.READ MORE...சில வரலாற்று நூல்கள் 1 - மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்)
July 5, 2007 – 8:51 pm
[The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]
இந்தியாவில் நேரடியாக ஆங்கில ஆட்சி வேரூன்றிய நாட்களில் ஆங்கில அதிகாரிகள் இந்திய நிலவியல் சமூக பொருளியல் சூழலைப்புரிந்துகொள்ள கடுமையான முயற்சிகள் எடுத்தனர். அவற்றை முறையாகப்பதிவுசெய்து அடுத்துவருபவர்களுக்காக விட்டுச்சென்றனர். அடுத்த கட்டத்தில் இப்பதிவுகளை தொகுத்து ஆவணநூல்களாக[manual] மாற்றும் பணியை அதிகாரிகள் செய்தனர். இப்பதிவுகள் இன்று பதினாறு, பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டு இந்திய இந்திய அரசியலைப் புரிந்துகொள்வதற்கு உதவும் முதன்மையான ஆதாரங்களாக உள்ளன.இவை அவர்கள் தங்களுக்குள் எழுதிக்கொண்டவை ஆதலால் பொதுவாக பிரச்சார நோக்கமற்ற நேர்மையான பதிவுகளாக உள்ளன.
இப்பதிவுகளைச்செய்த இவ்வதிகாரிகள் முறையான வரலாற்றுக் கல்வியும் மொழிப்பயிற்சியும் கொண்டவர்கள். அவர்களுக்கு தகவல்களை சேர்க்கவும் தொகுக்கவும் பெருமளவில் குமாஸ்தா மற்றும் உதவியாளர் உதவிகளும் அரசாங்க ஆவணங்களை நேரில் பார்வையிடும் வசதிகளும் இருந்தன. அனைத்துக்கும் மேலாக இவர்களுக்கு லத்தீன் தெரிந்திருந்தமையாலும் பிரெஞ்சு போர்ச்சுக்கல் ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகள் கையெட்டும் தொலைவில் இருந்தமையாலும் இவர்களுடைய வரலாற்று நூல்கள் சாதாரணமாக தமிழில் வளவளவென்றும் மிகைப்படுத்தியும் பக்கச்சார்புகளுடனும் எழுதப்படும் வரலாற்று நூல்களைப் போல அல்லாமல் செறிவான மொழியில் நுட்பமான தகவல்களுடன் அமைந்துள்ளன.
மதுரை ஆட்சியராக இருந்த ஜெ.எச்.நெல்சன் [ஜேம்ஸ் ஹென்றி நெல்சன்] 1868ல் எழுதி வெளியிட்ட மதுரை நாடு- ஆவணப்பதிவு என்ற நூல் இன்றுவரை மதுரையை அறிவதற்கான முதன்மை ஆதாரத்தொகுப்பாக உள்ளது. இதன் ஆசிரியரான நெல்சன் சென்னை ஆட்சப்பணியில் பணியற்றியவர்.[எஸ்குயர் ஆ·ப் மெட்றாஸ் சிவில் செர்வீஸஸ்] கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் ·பெல்லோ ஆக இருந்தவர். இந்நூல் ஐந்து பாகங்களாக ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்டது.
முதல் பாகத்தின் முதல் அத்தியாயம் மதுரையின் நில அமைப்பு சார்ந்த தகவல்களை விரிவாகச் சொல்கிறது.இரண்டாவது அத்தியாயம் மதுரை பகுதியின் கனிவளம் குறித்தது. மூன்றாம் அத்தியாயம் தட்பவெப்ப பதிவு மற்றும் மழையளவு குறித்தது. நான்காம் அத்தியாயம் மதுரை பகுதியின் சுகாதாரச் சிக்கல்கள் கொள்ளை நோய்கள் மற்றும் மருத்துவப்பிரச்சினைகள் சாந்தது.
இரண்டாம் பாகம் மதுரை பகுதி மக்கள் இனங்கள், சாதிகள், தாவரங்கள், மிருகங்கள் குறித்தது. முதல் அத்தியாயம் பொதுவாக சாதிகளைப்பற்றி பேசிவிட்டு இரண்டாம் அத்தியாயத்தில் வேளாளர் முதலிய வேளாண் சாதிகளைப்பற்றியும் மூன்றாம் அத்தியாயத்தில் செட்டி முதலிய வணிக சாதிகளைப்பற்றியும் நான்காம் அத்தியாயத்தில் வடுகர்கள் முதலிய குடியேற்ற சாதிகளைப்பற்றியும் ஐந்தாம் அத்தியாயத்தில் மிருகங்களைப்பற்றியும் ஆறாம் அத்தியாயத்தில் செடிகொடிகளைப்பற்றியும் விரிவாக பேசுகிறார் நெல்சன்
மூன்றாம் பாகம் மதுரைபகுதியின் அரசியல் வரலாறு குறித்தது. முதல் அத்தியாயம் பண்டைய பாண்டியர்களைப்பற்றி பேச ஆரம்பிக்கிறது. இரண்டாம் அத்தியாயம் கூன்பாண்டியனுக்குபிறகு உருவான அரசியல் நிலைமைகளைப்பற்றிய விவரணையுடன் தொடங்குகிறது. மூன்றாம் அத்தியாய நாயக்கர் காலத்தை விசுவநாத நாயக்கரில் இருந்து தொடங்கி விரிவாகப்பேசுகிறது. நான்காம் அத்தியாய மூன்றாம் விசுவநாத நாயக்கரின் ஆட்சி குறித்தது. ஐந்து ஆறு ஏழாம் அத்தியாய ‘மாபெரும்’ திருமலை நாயக்க மன்னனைப்பற்றியது. எட்டாம் அத்தியாயம் திருமலை மன்னரின் மறைவுக்குப்பின் 1682 வரையிலான நாயக்க ஆட்சியைப்பற்றியது. தொடர்ந்த ஒன்பது பத்து பதினொன்றாம் அத்தியாயங்களில் தன் காலம்வரையிலான மதுரைப்பகுதியின் அரசியலை நுட்பமான தகவல்களுடன் சொல்கிறார் நெல்சன்
நாலாம் பகுதி மதுரை நாட்டின் பொருளியல் வரலாறாகும். இதில் முந்தைய ஆட்சியாளர்களின் குறிப்புகளையும் கிழக்கிந்திய கம்பெனிப்பதிவுகளையும் அடிபப்டையாகக் கொண்டு வரிவசூல், பாசனம், வரட்சி ,வணிகச் சிக்கல்கள் குறித்த விரிவான தரவுகளை நெல்சன் அளிக்கிறார். ஐந்தாம் பகுதி உதிரி தலைப்புகளினால் ஆனது. கல்வி நிர்வாகம் குறித்த தரவுகள் இதில் உள்ளன. ஏராளமான அட்டவணைகளும் அக்கால நில அளவை வரைபடமும் உள்ளது.
*
நெல்சனின் நூலின் மிக முக்கியமான சிறப்பியல்பு இதன் ஆங்கில நடையாகும். வழக்கமான ஆவணப்பதிவுகள் மிக சம்பிரதாயமான நடையில் சலிப்பூட்டும்படி இருக்கும். நெல்சனின் நடை தேர்ந்த புனைவெழுத்தாளனுக்கு உரியதுபோஅல் இருப்பதனால் இந்த நூலை பல பகுதிகளில் நிறுத்த முடியாத ஆர்வத்துடன் படிக்க வேண்டியிருக்கும். ஒரு தகவலுக்காக இதை புரட்ட ஆரம்பித்து பலநூறு பக்கங்களுக்கு படித்துச் செல்வது என்னைப்போலவே பலருக்கும் நிகழலாம்.
சாதாரணமாக ஆவண நூல்களில் நூலாசிரியரின் தனிப்பட்ட ஆளுமை சார்ந்த மதிப்பீடுகள் இருப்பதில்லை. ஆனால் இந்நூலில் நெல்சன் தனிப்பட்ட குரல் ஒலிக்கவே பேசுகிறார். நூலின் ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மைக்கு இது ஒரு காரணம். stupid போன்ற பதங்களும் நகைச்சுவை கொண்ட அவதானிப்புகளும் சாதாரணமாக வருகின்றன. ‘சாளரங்கள் குறித்த உயர்வான அபிப்பிராயம் இந்திய கட்டிட வல்லுநர்களிடம் இல்லை’ போன்ற வரிகள் புன்னகைக்க வைப்பவை
இதில் இரண்டு தளங்கள் உள்ளன. ஒன்று நெல்சனின் தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் இயல்பாக நூலில் கலந்துள்ளன. அக்கால இந்திய நகைகளை ‘அழகோ நுட்பமோ இல்லாத உலோகப்பொருட்கள்’ என்று அவர் சொல்கிறார். கட்டிட அமைப்புகளை ‘காற்றும் வெளிச்சமும் இல்லாத அழகுநோக்குடன் கட்டப்படாத அமைப்புகள்’என்கிறார். அதேசமயம் இதில் அளிக்கபப்டும் தகவல்களுக்கு அவர் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார். ஏசு சபை பாதிரியார்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டும்போதுகூட தனிப்பட்ட முறையில் அதை உறுதிசெய்துகொள்ள முயல்கிறார்.
இப்போது அரசு வெளியிடும் ஆவணப்பதிவுகள் பலரால் பல சமயங்களில் எழுதப்பட்டவற்றின் தொகுதிகளாக உள்ளன. ஆகவே அவற்றை நூலாக கொள்ள முடியாது. ஆவணத்தொகைகளாக மட்டுமே அவை இருக்கும். பல பகுதிகள் தேவையில்லாத நீட்டலுடன் இருக்க பல பகுதிகள் உரிய தகவல்கள் கூட இல்லாமல் சுருங்கி கிடக்கும்.பாதாவது தகவல்கள் தெரிவு இலலமல் முரைமை இல்லாமல் பரந்து கிடக்கும் பக்கங்கள் அவை. கடந்த முப்பதுவருடங்களாக தமிழ்நாட்டில் இத்தகைய ஆவணப்பதிவுகளை அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சார சாதனமாக மார்றி பொய்யான மிகைப்படுத்திய தகவல்களை குவித்து வைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் மேலோங்கியிருக்கிறது. இன்றைய அரசு ஆவணவெளியீடுகள் பாதியளவே நம்பத்தக்கவை என்று ஆய்வாளர்கள் சொல்லியதை நினைவுகூர்கிறேன். நெல்சனின் நூல் தனிப்பட்ட குரலாக ஒலிப்பதனால் நம்பகத்தன்மைடன் வாசிப்பு சுவையும் கொண்டதாக உள்ளது.
நெல்சனின் நடையின் சிறப்பியல்பே சரசரவென வரும் அவரது தனிப்பட்ட அவதானிப்புகள்தான். ”போலிப்பாவனை கொண்ட பிராமணன் [Pharisaical] சட்டங்களே இல்லாத மறவன், கஞ்சத்தனமான செட்டி, சுயநலவாதியான வெள்ளாளன்,மந்தமான நாயக்கன், தந்திரமாய் பதுங்கும் கள்ளன் [skulking] நிலைகொள்ளாத குறவன், கூறுகெட்ட பறையன் [licentious] ஆகியவையே கூரிய அவதானிப்பின் மூலம் தெளிவாக பிரித்தறியத்தக்க இச்சாதிகளின் உள்ளார்ந்த இயல்புகள்” [பாகம் I ,பக்கம் 16 ] என்று அவர் எழுதிச்செல்லும்போது அதில் அன்றைய ஆதிக்கவாதியின் பார்வை தெரியும் அதே நேரத்தில் தனிப்பட்ட அவதானிப்பு மூலம் உருவாகும் செறிவான மொழியையும் காணலாம்.
மிகச்சிறந்த சித்தரிப்பாளராக நெல்சன் இந்நூலில் வெளிபடுகிறார். நாயக்கராட்சிக்காலத்து ஆட்சிக்குழப்பங்களை மிகத்துல்லியமாக நாவல் போல சித்தரித்துக் காட்டுகிரார். 1910ல் ராமநாதபுரத்தில் வந்த பஞ்சமும் அதன் காட்சிகளும் பிரமிக்க வைப்பவை. அதைத்தொடர்ந்து வந்த கனமழை, ஒருநாள் அம்மழை விட்டு உருவான ஆழ்ந்த அமைதி, அதன் பின் அடித்த மாபெரும் புயல், அதில் கிராமங்கள் அழிந்தது, ஒவ்வொரு கண்மாயாக நிறைந்து உடைத்து அடுத்ததை உடைக்கப்புறப்பட்டது போன்ற காட்சிகள் மனக்கிளர்ச்சி ஊட்டுபவை. அதேபோல கிழவன் சேதுபதியின் நாற்பத்தேழு மனைவிகளும் அவரது சிதையிலேயே எரிக்கப்பட்ட காட்சி அரண்டுபோகச்செய்வது.
நெல்சனின் நூலின் வரலாற்றுப்பகுதியே மேலும் முக்கியமானது. அதில் பாண்டியர் வரலாறு இன்று மேலும் தகவல்களுடன் மிக விரிவாகப்பேசபப்ட்டு விட்டது. ஆனால் நாயக்கர் காலச் சிக்கல்களைப்பற்றிய அவரது சித்தரிப்பு இன்றும் மிக முக்கியமான கவனத்துக்கு உரியது. செந்திநாத அய்யரின் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ போன்ற புகழ் மிக்க நூல்களுக்கு அடித்தளமாக அமைந்த நூல் இதுவே
தட்பவெப்ப நிலைப்பதிவுகளும் பொதுவாசகனுக்கு ஆர்வம் தருபவை. ஏறத்தாழ பத்துவருட சீரான இடைவெளியில் மதுரையில் பஞ்சமும் வரட்சியும் உடனே மீண்டும் புயலும் வந்தபடி இருப்பதைக் காணலாம்
சாதிகளை இனங்களாக கண்டு உடற்கூறுகளை பதிவுசெய்ய ஆங்கிலேயர் எடுத்த முயற்சி [ சென்ற இடமெங்கும் ஐரோப்பியர் இதைச் செய்திருக்கிறார்கள். பொதுமைபப்டுத்தல் அவர்களுடைய சிந்தனையில் ஊறியது. அதையே முன்னர் காட்டிய மேற்கோளில் கண்டோம். இதன் விளைவுகளை 'ரவாண்டா ஹோட்டல்' என்ற திரைப்படத்தில் பார்கலாம்] இந்நூலில் ஆவணபப்டுத்தப்பட்டுள்ளது.
அதிகமும் ஏசு சபை பாதிரியார்களின் கடிதங்களைச் சார்ந்து எழுதபப்ட்ட இந்நூலில் அப்பகுதிகள் மொழிபெயர்க்கபப்டாமலேயே கொடுக்கபப்ட்டுள்ளன. இது ஒரு முக்கியமான குறை. மெல்லிதாக வெளிபப்டும் மதக்காழ்ப்பு இன்னொரு குறை. உதாரணமாக இந்துக்கள் தங்கள் குருநாதர்களின் [பிராமணர்கள்] மலத்தையும் சிறுநீரையும் புனித நட்களில் சாப்பிடுகிறார்கள் என்பது போன்ற தகவல்களை பாதிரிமார் சொல்ல நம்பி எழுதிவைத்திருக்கிறார் நெல்சன்.
ஆனாலும் நம்மை நாமே அறிய உதவும் நுட்பமான தகவல்களின் பெரும் தொகுப்பு இந்த நூல்
Book..........24
திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு - ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்
[Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ]
திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம்.READ MORE...
ஆங்கிலேயர் எழுதிய ஆவணக்குறிப்புகள் மற்றும் வரலாற்று நூல்கள் பொதுவாக கீழ்க்கண்ட சிறப்புகள் உடையவை. 1. தெளிவான செறிவான நடை 2. ஏராளமான தகவல்கள் 3. தகவல்களை பகுக்கவும் தொகுக்கவும் அறிவியல்நோக்கு சார்ந்த ஒரு அடிப்படைத்தளம் 4. பிரச்சார நோக்கம் இல்லாத பதிவுத்தன்மை. 5. பலதுறை அறிதல்களை தொகுக்கும் இயல்பு
அவை அனைத்துக்குமே கீழ்க்கண்ட குறைகளும் உண்டு 1. ஆதிக்க இனத்தின் நோக்கில் இந்தியாவை பார்ப்பதனால் உருவாகும் இயல்பான அலட்சியமும் புரிதல் குறைகளும் 2. மதக்காழ்ப்பும் மதக்காழ்ப்புள்ள பாதிரிமாரின் நூல்களை சார்ந்திருக்கும் தன்மையும் 3. இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டின் பல்லினப் பலமொழி பலமதப் பண்பாட்டை எளிதில் பொதுமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி. இக்குறைகளை கவனத்தில்கொண்டபின்பு நாம் இவர்கள் அளிக்கும் தகவல்களை கணக்கில் கொண்டால்கூட நம்மைப்பற்றி நாம் அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் இவை.
மேலும் நாம் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஒரு பகுதியாக உருவாக்கிக் கொண்ட சுயபெருமிதம் சுதந்திரத்துக்குப் பின்பு ஒரு பெரும்போக்காக மாறி இப்போது நம்மைப்பற்றி பொய்யான கற்பிதங்களை உருவாக்கிக் கொள்ளும் மிகை வரலாறுகளை எந்தவித ஆவணப்பின்புலமும் இல்லாமல் எழுதிக்கொள்ளும் இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. பிரிட்டிஷ் ஆவணப்பதிவுகள் இந்நிலையில் ஒப்புநோக்க மேலும் சமநிலை கொண்ட வரலாற்றுக்குறிப்புகளாக உள்ளன. நமது எம்பித்தாவல்களை சமன்படுத்தும் பின் எடைகளாக இவை அமையலாம்.
இன்னொரு முக்கியமான அம்சம் இரு உலகப்போர்களை ஒட்டி இந்தியாவில் உருவான தீவிர நவீனமயமாதலால் இந்தியாவின் முகம் மாறியது. சாலைகள் உருவாயின. பல தொழில்கள் பிறந்தன, மரபான தொழில்கள் அழிந்தன. ஏராளமான மரபுச்சின்னங்கள் அழிந்தன. இவ்வழிவுக்கு முந்திய சித்திரங்களை இந்நூல்கள் அளிக்கின்றன. உதாரணமாக இந்நூலில் ஹெச்.ஆர்.பேட் வள்ளியூர் , திருக்கணங்குடி, பணகுடி பகுதிகளில் பல கோட்டைகளின் இடிபாடுகள் இருந்ததாகச் சொல்கிறார். இவை பெரும்பாலும் மண்கோட்டைகள் அல்லது வெட்டுபாறையால் கட்டபட்டவை. கற்கோட்டைகள் மட்டுமே நவீனமயமாதலை தாண்டின. அவரது கணக்கெடுப்பில் வள்ளியூரிலும் சுற்றுப்புறங்களிலும் பற்பல இடிந்த சமணக்கோயில்கள் இருந்திருக்கின்றன. 1930களில் பிறந்த முதியவர்களுக்குக் கூட அவற்றை பார்த்த நினைவு இல்லை. அவ்வகையிலும் இந்நூல்கள் முக்கியமானவை
இந்த ஆங்கிலேயரின் குறைபாடுகளை வரலாற்று எழுத்தில் எழுதுபவனின் ஆளுமையும் ஆதிக்க நோக்கும் வெளிப்படும் தவிர்க்க இயலாத குறைகளாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் எழுதப்பட்ட சுதேசிய வரலாறுகளிலும் முறையே பிராமண வேளாள நோக்குகள் ஓங்கியிருந்தன என்று காணலாம். வெள்ளை அதிகாரிகளின் நோக்கில் உள்ள திரிபுகள் இயல்பாக நிகழ்பவை, திட்டமிட்டு செய்யப்படுபவை அல்ல என்றே சொல்ல வேண்டும். உதாரணம் ஹெச்.ஆர்.பேட் இந்நூலில் இந்துமதம் குறித்து எழுதும் பகுதிகள். நெல்லையில் சைவ வைணவ மதங்களைவிட மேலாக சிறுதெய்வ வழிபாடு ஓங்கியிருந்த சித்திரத்தை நேர்த்தியாக பதிவுசெய்கிறார்.பெரும்பாலான ஆட்சியர்கள் அவர்களின் கோணத்தில் அக்காலத்தில் ஓங்கியிருந்த காலனிய நோக்கையும் மீறி அறிவியல் ரீதியாக செயல்பட்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. ஹெச்.ஆர்.பேட்டின் இந்நூலும் அத்தகையது. மனோன்மணியம் பல்கலை 1993ல் இந்நூலை மறு பதிப்புசெய்துள்ளது.
**
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் நில அமைப்பு குறித்த விரிவான சித்திரத்தை அளிக்கிறது முதல் அத்தியாயம். நெல்லை கனிவளத்தில் வளம் மிக்கதல்ல என்று சொல்லும் ஹெச்.ஆர்.பேட் அதன் முக்கியமான நிலத்தனித்தன்மையாகச் சொல்வது கோயில்பட்டியை மையமாக்கிய பருத்திக்கான கரிசல் நிலத்தையே. பின்னர் அரசியல் வரலாறு. தொல்லியலாளர் புரூஸ் ·பூட் [Bruce Foote] 1883ல் சாயர்புரத்தில் ஒரு மேட்டு நிலத்தில் கற்கால பண்பாட்டின் தடையங்களை கண்டெடுத்ததையும், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளையும் குறிப்பிட்டு நெல்லை மண்ணின் தொன்மையை விவரித்து பேச ஆரம்பிக்கிறார். ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் பிற்பாடு ஆதிச்சநல்லூரைப்பற்றிய குறிப்புகளில் மிக விரிவாக அளிக்கப்படுகின்றன. இக்காலகட்டத்தில் திராவிட -ஆரிய வாதம் முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும்கூட இங்கு முதுமக்கள் தாழிகளில் புதைக்கப்பட்ட மக்கள் எவர் ,எந்த இனம் என்பதெல்லாம் மேலதிக ஆய்வுக்குப்பின்னரே வகுக்கப்பட இயலும் என்கிறார் ஹெச்.ஆர்.பேட் .
வழக்கம்போல பண்டைவரலாறு சுருக்கமாகவும் அதிக தகவல்கள் இல்லாமலும்தான் உள்ளது, ஆய்வுகள் பிற்பாடு தான் வளர்ந்தன. ஆனால் நாயக்கர் காலத்தில் உருவான பாளையப்பட்டுகள் எப்படி நெல்லைநிலத்தை பகுத்து ஆண்டன என்பதன் மிக விரிவான சித்திரமும் அவற்றுக்கிடையேயான பூசல்களின் ஏராளமான உள்தகவல்களும் இந்நூலில் உள்ளன. இப்பகுதி colleries என்றும் cullers என்றும் பாதிரிகளால் குறிப்பிடப்படும் கள்ளர்கள் மற்றும் தொட்டிய நாயக்கர்கள், கம்பளத்து நாயக்கர்கள் ஆகியோரின் சிறு சிறு படைகளால் தனித்தனி துண்டுகளாக ஆளப்பட்டன. சிவகிரி ,அழகாபுரி ஆகிய பாளையப்பட்டுகள் வன்னியர்களுக்குரியவை. பிரிட்டிஷார் நெல்லையில் காலெடுத்து வைக்கும்போது இந்த பாளையப்பட்டுகள் பலவாறாகபெருகி விட்டிருந்தன என்று ஹெச்.ஆர்.பேட் சொல்கிறார். அவரது நோக்கில் முதலில் நெல்லைக்கு வந்த வெள்ளைய அதிகாரி லெ·ப்டினெண்ட் இன்னிஸ் தான் [Lt.Innis]
பிரிட்டிஷ் அதிகாரியான ஓர்மே [Orme] எழுதிய ஒரு குறிப்பு எடுத்து தரப்படுகிறது ” இப்பகுதியின் கள்ளர்கள் [திருநெல்வேலி மேற்கு] பொதுவாக மலைவாழ்மக்களில் காணப்படும் குரூபத்தையோ உருவப்பிழையோ கொண்டவர்கள் அல்ல. இவர்கள் உயரமான திடமான நல்ல தோற்றம் கொண்டவர்கள். அம்புகள் ஈட்டிகள் ஆகியவற்றை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். ஆண்கள் எப்போதும் வாளும் கேடயமும் தரித்திருக்கிறார்கள். இவர்கள் தீரமான போர்வீரர்கள். ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு ஏற்ப பல குழுக்களாக போரில் ஈடுபட்டாலும் கூட வேல்கம்பு ஏந்தியவர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்களே போர்களில் முன்னேறித்தாக்குபவர்கள். பதினெட்டடி நீளம் வரை வரும் கூரிய ஆயுதம் இது. இதில் முனைக்கு கீழே செங்காவி நிறத்தில் குதிரைமுடியை கட்டியிருப்பார்கள். குதிரைகளைத் தாக்கும்போது அதில் சிறிய மணியையும் கட்டியிருப்பார்கள். முன்கூட்டிய தயாரிப்போ ஒத்திகையோ இல்லாமல் அவர்கள் ஒரு இறுக்கமான குழுவாக திரண்டுகொள்வார்கள். ஒருவரோடொருவர் ஒண்டிக் கொண்டபடி நிதானமான உறுதியான அடிகள் வைத்து வேல்கம்புகளை நீட்டியபடி முன்னேறுவார்கள். ஈட்டிகளை ஆட்டி மணியொலி எழுப்பி குதிரைகளை அச்சுறுத்தி கலையவைத்து தாக்குவார்கள். காலாள்படையை வேகமாக தாக்குவார்கள். பீரங்கிகளை எதிர்கொள்ளும் பயிற்சி இவர்களுக்கு இல்லை….”
நாயக்கராட்சியின் இறுதியில் சந்தா சாகிபின் படைகள் நெல்லையையும் அதன் வழியாக குமரியையும் சூறையாடிய சித்திரம் ஏராளமான தகவல்கள் வழியாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கட்டப்பொம்மு நாயக்கனும் பூலித்தேவனும் நடத்திய கலகங்களின் விரிவான சித்திரம் அளிக்கப்படுகிறது. கட்டப்பொம்மு நாயக்கரின் கலகம் நாம் நன்கறிந்த சிவாஜிகணேசனின் திரைப்படம் காட்டும் சித்திரத்துக்கு பலவகையிலும் வேருபட்டு இந்நூலில் காட்சியளிக்கிறது. கட்டபொம்மு நாயக்கருக்கு தேசியம் சார்ந்த புரிதலோ ஒரு நாட்டை அமைக்கும் நோக்கமோ இருந்ததாக தெரியவில்லை. பிற பாளையக்காரர்களைப்போல அவரும் மற்ற பாளையபப்ட்டுகளில் மக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷார் அவரை கட்டுப்படுத்தி கடுமையான கிஸ்தி போடுகிறார்கள். பொதுவாக பாளையக்காரர்களுக்கு போடப்பட்ட கிஸ்திக்கு எதிராக கடுமையான அதிருப்தி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெ·ப்.ஜாக்ஸனிடம் வாதாடியபின் இறங்கிச்ச்செல்லும் வழியில் கட்டப்பொம்மு நாயக்கர் அவரை தடுக்க முயன்ற ஆங்கில ஊழியர் கிளேர்க்கை கொன்று தப்பிச்செல்கிறார்.
கட்டபொம்மு நாயக்கருக்கு அவரைச் சுற்றியிருந்த மறவர், வன்னியர் பாளையக்காரர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள். ஊத்துமலை ஜமீந்தாரும், சிவகிரி ஜமீந்தாரும் சுப்ரமணியபிள்ளை தலைமையில் தங்கள் நாடுகளில் கொள்ளையடிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு எதிராக போராட வெள்ளையரை தங்கள் உதவிக்கு அழைக்கிறார்கள். இவர்களின் உதவிகொண்டு கட்டப்பொம்மு நாயக்கர் ஒடுக்கப்படுகிறார். இதன் விரிவான தகவல்கள் இந்நூலில் அளிக்கப்படுகின்றன.
ஹெச்.ஆர்.பேட் டின் சித்தரிப்பில் நமக்குக் கிடைப்பது நாயக்கர் கால மைய ஆட்சி ஒழிந்து சுதந்திரம் பெற்ற பாளையப்பட்டுகள் எவ்விதமான நியதியுமில்லாமல் பரஸ்பரம் போரிட்டு மக்களைக் கொள்ளையடித்து அட்டூழியம் செய்த ஒரு சித்திரம். பல்வேறு நாட்டார் இலக்கியங்களும் இதை உறுதிசெய்கின்றன. இந்த அராஜகநிலையை பயன்படுத்திக்கொண்டு வெள்ளையர் காலூன்றுகின்றனர். அவர்கள் உருவாக்கிய உறுதியான நிர்வாகம் மக்களிடையே பேராதரவு பெற்று அவ்வாதரவு வ.உ.சிதம்பரனார் காலத்து சுதந்திரப்போராட்டம் வரை அப்படியே நீடித்தது. நாம் அறியும் பாஞ்சாலங்குறிச்சி கதை சில சில நாட்டுப்புற வீரகதைப்பாடல்களில் இருந்து மாயாண்டி பாரதி பின்னர் ம.பொ.சிவஞான கிராமணி போன்றோரால் உருவாக்கபபட்டு சுதந்திரப்போராட்டத்தின் ஒருபகுதியாக முன்வைக்கப்பட்ட சித்திரமாகும்.
மூன்றாம் அத்தியாயம் மக்களைப்பற்றியது. பொதுவாசகனை மிகவும் கவரக்கூடியதாக இது இருக்கும். பல்வேறு சாதிகளைப்பற்றிய ஆங்கிலநோக்கிலான அவதானிப்புகள் ஆர்வமூட்டக்கூடியவை. உதாரணமாக மறவர் சாதியில் உள்ள உள்பிரிவுகளில் கொண்டையங்கோட்டை, செம்புநாடு பிரிவுகள் மட்டுமே நெல்லையில் உள்ளன என்கிறார் ஹெச்.ஆர்.பேட் . கொண்டையங்கோட்டைபிரிவே நெல்லையில் பெருவாரியாக உள்ளவர்கள். கொண்டையங்கோட்டை பிரிவுக்குள் மிளகு, வெற்றிலை, தென்னை, பனை, ஈச்சம் என மரங்களின் அடிபப்டையில் பிரிக்கப்பட்ட இனக்குடும்பங்களும் உள்ளன என்று ஹெச்.ஆர்.பேட் விவரம் அளிக்கிறார். ஒட்டுமொத்த மறவர் குலமே போடும் தாலியின் அடிபப்டையில் பெருந்தாலி சின்னத்தாலி என்று பிரிக்கபட்டிருப்பது போன்ற தகவல்கள் ஏராளமாக சொல்லபப்டுகின்றன. இப்பிரிவுகள் அனைத்துமே தாய்வழியாக வருபவை என்று ஹெச்.ஆர்.பேட் சொல்வது மிகவும் ஆர்வமூட்டுவது. ட்
அதேபோல நாடார்கள் என்றும் சாணார்கள் என்றும் அழைக்கப்பட்ட சாதியினர் தங்களை 1911ல் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சத்ரியர்கள் என்று குறிப்பிட்டார்கள். காரணம் தாங்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை என்றார்கள் என்று கணக்கதிகாரி மோலோனி [Molony] குறிப்பிடுவதை சுட்டிக்காட்டும் ஹெச்.ஆர்.பேட் இக்காலகட்டத்தில் சாணார் சாதியினர் விவசாயம் வணிகம் தொழில் ஆகியவற்றில் ஆழ வேரூன்றி செல்வம் மிக்க சாதியினராக மாறிவருவதையும் சுட்டிக்காட்டுகிறார். இக்காலத்தில் நடக்கும் நிலவிற்பனைப் பதிவுகளில் கணிசமானவை இவ்வகுப்பினரால் வாங்கபப்டுபவை என்கிறார். இது மறவர் ,வேளாளார் முதலிய சாதிகளில் உருவாக்கிய கோபத்தை குறிப்பிடுகிறார். 1899ல் சிவகிரியில் நாடார்களுக்கும் பிறருக்கும் கடுமையான பூசலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன என்று விவரிக்கிறார்.
நாடார்கள் அதிகமும் பனை ஏறும் தொழில் செய்தாலும் வணிகமும் தொழிலாக பண்டுமுதலே இருந்தது என்கிறார். இவர்களில் கருக்குமட்டையன், மேனாட்டான்,கொடிக்கால் அல்லது நட்டாத்தி, காவடி புரத்தான் மற்றும் புழுக்கச் சாணான் என்னும் பிரிவுகள் இருப்பதைச் சொல்லும் ஹெச்.ஆர்.பேட் நட்டாத்தி மற்றும் காவடிபுரத்தார்கள் உயர்ந்தவர்கள் புழுக்கச்சாணார் அடிமைகள் என்று குறிப்பிடுகிறார். மறவரிலும் புழுக்கமறவன் என்னும் சாதி அடிமைகளாக இருந்தது. வேளாளர்களிலும் புழுக்கவேளார் என்ற அடிமைகள் இருந்தனர்.
நான் எழுதி இன்னும் வெளிவராத ‘ஏழுகோட்டைவீடு ‘ என்ற கதையில் நெல்லையில் குற்றங்களில் ஈடுபடும் ஒரு நாடார் வகுப்பைப் பற்றி சில தகவல்கள் சொல்லியிருந்தேன். அப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் தன்னை உவரிவழி என்று சொல்லியதாக நினைவு. அதை உறுதிப்படுத்தும் தகவலை இந்நூலில் கண்டேன். ஹெச்.ஆர்.பேட் உவரியை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த நாடார்கள் மறவர்களைப்போல ஊர்க்காவல் செய்தார்கள் என்றும் அவர்களுக்கு அம்பலக்காரர் பட்டம் இருந்தது என்றும் சொல்கிறார்.
இக்காலகட்டத்தில் நெல்லைப்பகுதியில் தெலுங்கு பிராமணர்களுக்கும் சைவ வேளாளர்களுக்கும்தான் ஆதிக்கப்போட்டி இருந்தது என்ற தகவலை காணலாம். வேளாளர்கள் சைவ உணவை உண்பதன் மூலம் சாதி மேன்மைக்கு முயல்வதை, ஒருவரை பார்த்ததுமே அவர் சைவ உணவா என்று கேட்டு அறிவதையும் அப்பிரிவினையின் சமூகவியல் உள்ளடக்கங்களையும் , வேளாளர்களில் சிறுபான்மையினரான கார்காத்த வேளாளர்களின் மதம்சார்ந்த மேலதிக சாதிமேன்மையையும் சுட்டிக்காட்டுகிறார் ஹெச்.ஆர்.பேட் .
அதன் பின் வேளாண்மை [அத்யாயம் 4] காடுகள் [அத்தியாயம் 5] தொழில் [அத்தியாயம் 6] செய்திபரிமாற்றம் [அத்தியாயம்7-- இத்தகைய ஒரு தலைப்பு ஜெ.ஹெச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவில் இல்லை என்பதை கவனிக்கலாம். அது ஏறத்தாழ அறுபது வருடம் முற்பட்டது] மழைப்பருவங்கள் [அத்தியாயம் 8] ஆரோக்கியம் [அத்தியாயம் 9] கல்வி [10] நிலநிர்வாகம் [அத்தியாயம் 11] சில்லறை பொருளியல் [அத்தியாயம் 12] நீதி [அத்தியாயம் 13] உள்ளூர் நிர்வாகம் [ அத்தியாயம் 14] ஆகியவை பிற தலைப்புகள்.
பொதுவாசகனுக்கு மிக ஆர்வமூட்டுவது அதன் பின் 15 வது அத்தியாயத்தில் நெல்லையை தாலுக்காக்களாக பிரித்து ஊர்களைப்பற்றி ஹெச்.ஆர்.பேட் அளிக்கும் சித்திரம். குற்றாலம் வள்ளியூர் என எனக்கு நன்குதெரிந்த ஆர்வமூட்டும் ஊர்களைப்பற்றி படிப்பது உற்சாகமளித்தது. இடையான்குடி பற்றிய சித்தரிப்பில் பிஷப் கால்டுவெல்லின் வாழ்க்கையைப்பற்றிய அழகிய சித்தரிப்பு உள்ளது. தான் உருவாக்கிய நகரை மேற்பார்வையிட மரத்தில் மேல் ஏறி உட்கார்ந்திருக்கிறார் கால்டுவெல். அப்பகுதியை பொட்டலாக விற்ற நில உரிமையாளரான நாடார் தன் நிலத்தை பாத்திபோட்டு சீரழித்துவிட்டார் என்று புலம்புகிறார். சீரான தெருக்கள் அந்த அளவுக்கு அவரது கண்களுக்கு வித்தியாசமாக தெரிகின்றன. பாண்டிச்சேரியில் இருந்து இளையான்குடிவரை செருப்பில்லாமல் நடந்து வந்த கால்டுவெல்லின் சித்திரமும் அவர் பள்ளி தொடங்கியபோது வந்த எதிர்ப்புகளும் [ தாசிக்கும் அரசிக்கும்தானே கல்வி தேவை? எங்கள் பெண்கள் இரண்டும் அல்ல] ஆர்வமூட்டுபவை. அக்கால பாளையங்கோட்டை கோட்டைபகுதியைப்பற்றிய வரைபடமும் உள்ளது.
ஆய்வாளர்களுக்கும் பொதுவாக தமிழ்நாட்டை தெரிந்துகொள்பவர்களுக்கும் உதவும் நூல் இது.
No comments:
Post a Comment