ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்

0 c
ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

யாசிப்போருக்கும்,
ஏழைகளுக்கும்,
அதை வசூலிப்போருக்கும்,
உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், 
அடிமை(களை விடுதலை செய்வதற்)கும்,
கடன்பட்டோருக்கும், 
 அல்லாஹ்வின் பாதையிலும்,
நாடோடிகளுக்கும்

தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)

இங்கே... கூர்ந்து கவனித்தால் மேற்கூறப்பட்ட ஏனைய எட்டு பிரிவினரில் ஒரே ஒருவர்தான் யாசிப்பவர்...! யாசிப்பதால், 'இவர் தர்மம் செய்யப்பட வேண்டியவர்' என்று ஒரு பிரிவினரை மிக இலகுவாக அறியலாம். இதில் ஏழைகளும் இருப்பர்..! ஏழை அல்லாதோரும் இருப்பர்..! ஏனென்றால்...

அடுத்து, ஒரே ஒரு பிரிவினர்தான் ஏழைகள்...! அதாவது, யாசிக்காத தன்மானமுள்ள ஏழைகள்..! அதேநேரம், மீதம் உள்ளவர்கள் இவ்விரு பிரிவினரும் இல்லை..! ஆனால், மற்றவர்களை 'இவர்கள் தர்மத்துக்கு உரியவர்கள்தான்' என்று எப்படி அறிவது..? இதுதான் இஸ்லாம். நம் அறிவிற்கும் சிந்தனைக்கும் தீனி போடும் நுண்ணிய இஸ்லாம். எனது மேற்படி கேள்விகளுக்கும் பதில் தந்த இஸ்லாம்.

thanks to http://pinnoottavaathi.blogspot.com/2011/04/vs.html

நண்பர்கள் தேர்ந்தெடுப்பதை மரபணுதான் தீர்மானிக்கிறது

0 c
தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலங்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதேபோன்று, ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, அவரது மரபணுதான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி, குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பர் யார் என்பதை தீர்மானிப் பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இளம் வயதில், எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும் இந்த மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர்தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
THANKS TO http://www.marikumar.co.cc/2011/02/blog-post_2509.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FFGMcq+%28%3Ccenter%3E%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%3C%2Fcenter%3E%29