பண்டுக் கலவரம்
இந்தப்பகுதியில் வாழும் பிரமலைக் கள்ளர்களின் சமூக வரலாற்றைப் பார்க்கும் பொழுது எட்டுநாடு, இருபத்தியெட்டு உபகிராமம் என்ற கள்ள நாட்டுப் பகுதியில் கள்ளர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையில் ஒரு மேம்பட்ட சமூக உறவு இருந்துள்ளதற்கான அடையாளங்களை நம்மால் பார்க்க முடிகிறது.
கள்ள நாட்டுப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் கள்ளர்கள் மற்றும் தலித்துக்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் உமைகள் அவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எட்டு நாட்டில் ஒரு நாடான கொக்குளத்தில் ஆதி தொட்டு இன்று வரை ஒரு தலித்தான் பூசாரியாக இருக்கின்றார். அவரிடம் தான் கொக்குளம் ஆறு ஊரைச் சேர்ந்தவர்களும், வாக்கு கேட்டு, திருநீறு வாங்கி பூசிக் கொண்டிருக்கின்றனர்.
கருமாத்தூர் கடசா நல்லகுரும்பன் கோயில் அய்யம் பிடுக்கி ஒரு தலித். மீனாட்சிபட்டி மதீச்சிய கருப்பு கோயில் பூசாரி தலித். வகூரணி பள்ளக்கருப்புப் கோயில் கொப்புற பூசாயும், கிடாவெட்டியும் கள்ளர்கள், கோடாங்கியும் உள் பூசாரியும் தலித்கள், இது தலித்தும் கள்ளரும் இணைந்து கும்பிடும் கோயில். கள்ளபட்டி வெண்டி கருப்புக்கோயில் பூசாரி தலித், கோடங்கி கள்ளர். புத்தூர் பூங்கொடி ஐய்யனார் கோயில் ஐய்யனார் தலித் மற்றும் கள்ளர்களின் குலதெய்வமாகும்.
எனவே இருவரும் பங்காளிகள் என்று இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல் உசிலம்பட்டி கள்ளர்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்யவும், சத்தியம் செய்யவும் முக்கியக் கோயிலாக இருப்பது வடுகபட்டி போயன் கருப்பு கோயில். இது தலித்துகளின் கோயில். தலித் தான் பூசாரி. உடமையற்றவர்களாகிய இரண்டு சமூகத்திற்கும் இடையில் கடந்த காலத்தில் நிலவிய பண்பாட்டு ஒற்றுமையின் அடையாளங்களே இவைகள்.
கள்ளர்கள் விவசாயப் பிரிவினர் அல்லர், காவல் மற்றும் களவு தொழினை செய்து வந்தவர்கள். சமவெளிப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் என்றே இவர்கள் வரையறுக்கப்படுகிறார்கள். கடந்த இரு நூற்றாண்டாக பரவி வந்த இந்துமயமாக்கலுக்கு உட்படாத இனக்குழுவாக இவர்கள் இருந்து வந்துள்ளதை மதுரையின் வரலாற்றை எழுதிய என்.கெச்.நெல்சன் போன்றவர்களும் மற்ற பல ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.
இதுமட்டுமல்ல இஸ்லாமியர்களின் பழக்கவழக்கங்களின் தாக்கம் அதிகமுள்ள ஒரு இனக்குழுவாகவும் இதுவுள்ளது. இஸ்லாமியர்களுக்கே உரிய ஒரு பழக்கமான சுன்னத் செய்யும் பழக்கம். இப்பொழுது வரை கள்ளர் இனத்தில் நடைமுறையில் உள்ளது. திருமணத்தின் பொழுது மாப்பிள்ளையை குதிரையின் மீது அமர வைத்து முகத்தை மூடி அழைத்துவரும் பழக்கம் சமீபகாலம் வரை இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. இஸ்லாமியப் பெண்களைப் போலவே காதில் கொப்பு, குருத்தட்டு, முருக்குச்சி, கழுத்தில் தாக்குப் பதில் கருப்புபாசி (பொட்டுமணி) ஆகியவற்றை கள்ளர் இனப் பெண்கள் அணிகின்றனர்.
இதுமட்டுமின்றி பெண்ணுரிமைப் பார்வையில் முற்போக்கான பண்புகளை இந்த இனக்குழு இன்று வரை கொண்டுள்ளது. விவகாரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு, எந்தப் பெண்ணும் விவகாரத்துப் பெற்றுக் கொள்ளலாம், அதற்கான வழிமுறைகள் மிக எளியது. அதுமட்டுமின்றி விவகாரத்திற்கான நஷ்ட ஈடும் உண்டு என்று, கள்ள நாட்டு சட்டங்களில் இருந்தும், பழக்க வழக்கங்களில் இருந்தும் அறிய முடிகிறது.
இதுமட்டுமின்றி, விவகாரத்து செய்து கொண்டவர்கள் மற்றும் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை கொண்டவர்கள். இவ்வாறாக இந்து மதத்தின் சாயல்கள் பெரிய அளவு விழுந்து விடாத ஒரு இனக்குழுவாக போன நூற்றாண்டு வரை பிரமலைக் கள்ளர் இனக்குழு இருந்து வந்துள்ளது.
இந்தக் காரணங்களால் தான் இந்தப்பகுதியில் சுமார் 130 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற கத்தோக கிருத்துவமதமானது தனது தேவாலயத்தில் ஒரு கிறித்துவ ஆணோ, பெண்ணோ, பிரமலைக் கள்ளர் இனத்தைச் சார்ந்த ஒரு ஆணையோ, பெண்ணையோ, திருமணம் முடித்துக் கொள்ள எந்த தடையும் விதிக்காமல் அனுமதி அளித்தது. அது இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
பிரிட்டிஸ் அரசு 19ஆம் நூற்றாண்டில் தனது நவீன காவல் கொள்கையை அறிமுகப்படுத்திய பொழுது ஏற்கனவே காவல் பணியில் இருந்த கள்ளர்களுக்கு எதிரான செயல்பாடாக அது அமைந்தது. கிராம காவல், குடிக்காவலை சட்ட விரோதமென அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மாற்று ஏற்பாடு ஏதுவுமில்லாமல் கள்ளர்கள் நிர்கதியாக்கப்பட்டனர்.
இந்நிலையில் மறைமுகமாக காவல் மற்றும் துப்புக்கூ முறை உருவானது. இதனை தடுக்க நெடுங்காலம் வரை பிட்டிஸாரால் முடியவில்லை. எனவே கள்ளர்களுக்கு எதிராக பிற விவசாய சாதியினை மோத விடுவதில் அரசு முக்கிய பங்காற்றியது. இதன் விளைவு தான் 1895ல் திண்டுக்கல் பகுதியில் நடந்த பண்டுக் கலவரம். பிரிட்டிஸாரின் ஆட்சி காலத்தில் மிக நீண்ட காலம் நடைபெற்ற கலவரம் இது. அதற்கு காரணம் அரசின் மறைமுக ஆதரவு இந்த கலவரத்தை நடத்தியவர்களுக்கு இருந்தது. இதன் மூலம் திண்டுக்கல் சமவெளிப் பகுதி முழுவதிலும் கள்ளர்கள் தங்களின் காவலை இழக்க நேட்டது. இந்த கொள்கையின் தொடர்ச்சிதான் 1914ல் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம்.
ஒரு குறிப்பிட்ட இனத்தில் பிறந்தாலே அவன் குற்றவாளியாகத்தான் இருப்பான் என்ற கொடூரமான சட்டம். 12 வயது முதல் அவன் அரசின் குற்றவாளி பட்டியல் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டவனாக இருப்பான். கட்டாயக் காவல் முகாம்களில் குடியேற்றப்படுவான். தேயிலை எஸ்டேட்டுகளுக்கு அனுப்பப்படுவான். கட்டாய இராணுவப் பணிகளுக்கு அனுப்பப்படுவான். எந்த நிமிடமும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவான்.
இந்தியாவெங்கும் இந்த கொடூரமா ன அடக்குமுறைச்சட்டத்தில் சுமார் தொண்ணூறாயிரம் பேர் பதியப்பட்டார்கள் என்றால் அதில் பிரமலைக்கள்ளர்கள் மட்டும் முப்பத்தி ஐயாயிரம் பேர் ஆவர்.
அப்படி என்றால் இந்த அடக்குமுறையின் கொடுமை இந்தப்பகுதியில் எவ்வளவு இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக ஜார்ஜ் ஜோசப், சுப்புராயன், ஜானகி அம்மாள், பி.இராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்றவர்கள் பாடுபட்டார்கள். ஆனால் இதில் முத்துராமலிங்கத் தேவர் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் தொடர்ச்சியாக இதில் கவனம் செலுத்தி பிட்டிஸாருக்கு எதிரான இயக்கங்களை நடத்தினார்.
நாட்டு விடுதலைக்குப்பின் , குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டபின் அவர் அரசியல் கட்சியான பார்வர்டு பிளாக்கை இந்த இனமக்கள் முழுமையாக தழுவினார். குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக திராவிட இயக்கம் எதையும் செய்யவில்லை. இந்த சட்டத்திற்கு எதிரான சில நடவடிக்கைகளை இடதுசாரி இயக்கம் செய்த போதிலும் அதில் தொடர் கவனம் செலுத்தவில்லை.
துவக்கத்தில் காங்கிரஸ் கட்சி சட்டத்தை எதிர்த்துப் போராடினாலும் 1939ல் ராஜாஜி மந்திரி சபை அமைந்தபின் இச்சட்டத்தை நீக்க முடியாது என்று காங்கிரஸ் வெளிப்படையாக சொன்னபின் இந்த பகுதிக்குள் அந்த இயக்கத்தால் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் தேசிய இயக்கத்தின் தாக்கமோ, இடதுசாரி இயக்கத்தின் தாக்கமோ, திராவிட இயக்கத்தின் தாக்கமோ இல்லாத பகுதியாக இதுமாறியது. இந்தக் குறிப்பிட்ட இனமக்கள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குள் இருக்கும் நிலை உருவானது. ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் இருக்குமோ, அந்த வடிவத்தில் தான் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் அமையும். எனவே தான் ஒரு குறிப்பிட்ட சாதியின் மீது பயன்படுத்தப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அந்த குறிப்பிட்ட சாதியின் அடிப்படையிலான ஒற்றுமை உருவானது.
இந்த ஒற்றமையானது, சட்டம் வாபஸ் பெற்றபின், அச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய அரசியல் கட்சியின் அடித்தளமாக மாறியது. அந்த அரசியல் கட்சியானது 1950களுக்குப் பின் மேற்கொண்ட சாதிய பகைமையின் அடிப்படையிலான செயல்பாடு. இந்தப்பகுதியில் சாதீய மனோபாவத்தை, பெருமிதத்தை, வெறியை விஷம் போல ஏற்ற வாய்ப்பாக அமைந்தது.
அப்படி ஏற்றப்பட்டதன் முற்றிய வடிவங்கள் தான் இன்று நாம் காணுகிற பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம். இதற்கான பொருளியல் காரணிகள் மிக முக்கியமானவை. குறிப்பாக 1950களில் கட்டப்பட்ட வைகை அணையால் இந்த பகுதியில் புதிய விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டது. இதனால் செல்லப்பட்டி ஒன்றியத்தில் கணிசமான பிரமலைக் கள்ளர்கள் சிறு விவசாயிகளாக மாறினர். நிரந்தர வருமானம், தொழில் என்று எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கை முறைமாறி உடமையாளர்களாக பரிமாணம் அடைந்தனர். அதுவரை விவசாயத் தொழிலை பார்த்திராத ஒரு சமூகம், அரசால் விவசாயத்திற்குள் புகுத்தி விடும் பொழுது இரண்டு விளைவுகள் ஏற்பட்டன. இதனை மேலூர் கள்ளர்களின் வாழ்விலும் பார்க்க முடிகிறது, உசிலம்பட்டிப் பிரமலைக் கள்ளர்களின் வாழ்விம் பார்க்க முடிகிறது. அதுவரை அரசுக்கு வரிகட்டாத, சட்ட ஒழுங்கைக் கடைபிடிக்காத, நில அளவைக்குக் கூட அனுமதி அளிக்காத பகுதியாக இருந்த மேலூரில் பெரியார் அணை கட்டப்பட்ட தண்ணீர் வந்தவுடன், ஒவ்வொரு ஊராக அரசுக்கு கட்டுப்படுவோம், சட்ட ஒழுங்கை மதிப்போம் வரிகட்டுவோம், என்று எழுதி வாங்கி தண்ணீர் கொடுத்தது பிரிட்டிஸ் அரசு. இதன் விளைவாக பத்தே ஆண்டுகளில் விவசாய சாதியினராக மேலூர் கள்ளர்கள் மாறினர்.
போலீஸ்துறை சாதிக்காததை பொதுப்பணித்துறை சாதித்தது என பிரிட்டிசார் புகழ்ந்தனர். இதனால் தான் குற்றப்பரம்பரை சட்டம் இங்கு அமுல்படுத்தப்படவில்லை. இது இரண்டு விளைவுகளை உருவாக்கியது. ஒன்று நில உடமையாளனாக மாறி அதை காப்பாற்ற அரசின் மேலதிகாரத்தை ஏற்று முறையாக வரி செலுத்தி சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்பட்டது. இரண்டு, உடமையாளராக மாறியவுடன் தான் சமூகத்தின் மேல் சாதி என்ற மனோநிலையும், பெருமிதமும் தனக்கு கீழ் உள்ளவர்களின் மீதான கட்டுப்பாடற்ற தீண்டாமையை நிலை நிறுத்துவது. இதற்கான உதாரணங்கள் தான். அம்பேத்கார் நடத்திய பத்திரிக்கையில் 1940 களில் மேலூர் பகுதி பற்றி வந்த எண்ணற்ற கடிதங்கள் முதல் மேலவளவு வரை. இதே அனுபவம் தான் 1950களுக்குப்பின் இன்றுவரை உசிலம்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ளது. '''
உடமையற்ற வர்க்கமாக இருந்தபொழுது கள்ளர்களுக்கும், தலித்துக்களுக்கும் இடையில் நிலவிய சமூக உறவுகள், கள்ளர் சமூகம் உடமைவர்க்கமாக மாறியபின் தலைகீழானது. கடந்த காலங்களில் நடந்துள்ள இந்த சமூக அரசியல், பொருளியல் காரணங்கள் இந்தப்பகுதியில் சாதீயக் கருத்துக்கள் கெட்டிப்படவும் விஷம் போல் உச்சத்திற்கு ஏறவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் கொடூரத்தை த்தான் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
thanks to http://www.lankahermes.com/2005_07_01_archive.html
கீழக் குயில்குடி
ஆங்கில காலனீய ஏகாதிபத்தியம் இந்தியாவில் தனது கட்டளைக்கும்; உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள் , பாடித்திரியும் இனங்கள் போன்ற மக்களை அடக்குவதற்கு 1871 ஆம் ஆண்டு „குற்றப் பரம்பரைச் சட்டம்“ (Crimainal Tribes Act) என்ற அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160 இனக்குழுக்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். முதலில் வடக்கிலும் 1876 ஆம் ஆண்டு வங்காளத்திலும் அமுல்படுத்தப் பட்டது. பின்னர் 1911 ம் ஆண்டே தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக „கீழக்குயில்குடி“ என்ற ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கீழக் குயில்குடி என்ற அந்தச் சிற்றூர் மதுரையின் வடகீழ்திசையில் சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் சமண(அமண) மலை என்ற ஒரு குன்றின் சாரலில் இருக்கின்றது. அதிகமாக பிரான்மலைக் கள்ளர் இனத்தவர்கள் வாழும் இந்த ஊர் மதுரையின் காலனிய எதிர்ப்புச் சரித்திரத்தில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. மதுரையில் எது நடந்தாலும் உடனே கீழக்குயில்குடிக்கு காவல்துறை விரைந்து வருவதற்கு வெலிங்கடன் வீதி என்ற பெயருள்ள வீதியே மதுரைப் பகுதியில் முதலில் போடப்பட்ட சீரான வீதியாகும். எந்த்க் குற்றச் செயல் நடந்தாலும் இந்தக் கீழக்குயில் குடி மக்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் பெற்றோரிடமிருந்த் பிரித்தெடுக்கப் பட்டனர். குழந்தைகளுக்குக்கான கட்டாயப் பாடசாலை பிரசன்னம், அவர்களுக்குக் கல்வி புகட்டுவதற்காகவல்ல, மாறாக கண்காணிப்புக்கு மிக உகந்ததாக இருந்தது. கணக்கெடுப்புக்கு மிக உதவியளித்தது.அன்று அந்தச் சட்டத்தை எதிர்த்து தம்மீதான அடக்குமுறைக்கு எதிராகக் கிழம்பி மரணித்தவர்களை, தமது முன்னோர்களின் அவ்வகை எதிர்க்கும் பண்பினை இன்றும் கீழக்குடி மக்கள் நினைவு கூருகின்றனர். அவர்களது பெயர்களை மனங்களில் வைத்துப் பூசிக்கின்றனர். திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறையில் புகுந்து வெற்றிகரமாகத் திருடிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்ற இறுமாப்பு அவர்களிடம் இன்றும் உண்டு

திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறைத் திருட்டு ஒரு பெரிய அத்தியாயம் அதை நான் பின் எப்போதாவது எழுதலாம். ஆதி மதுரையின் முக்கிய காவல் துறையாகச் செயற்பட்ட இந்த மக்கள் காலனித்துவ ஆட்சியில் அந்தப் பரம்பரைப் பணி அற்றுப் போனது. அதனால் எழுந்த சமூகப் பிரச்சினைகள் பலகாலம் தொடந்தது சமுகவியல் வரலாறு. பலத்த காவலுக்கு மத்தியிலும் ஒரு சவாலுக்காக திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறையில் திருடுவது ஒன்றும் அவர்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை என்பதையே நிரூபணமாக்க முயன்றதன் விழைவுதான் இத் திருட்டு. திருடியவனைப் பிடிக்க முடியவில்லை. பகிரங்க மன்னிப்பு வழங்கப்படும், சரணடையுமாறு அறிவித்து, அதனால் சரணடைந்தவனை பின்னர் சிரச்சேதம் செய்தனராம். அந்தமான் தீவுக்குக் கடத்தப் பட்டுச் சிறைவைக்கப் பட்டபோதும் தப்பி வந்த கிழவர் இன்றும் உயிருடன் அங்கே வாழ்கிறார் கீழக்குயில் குடியில். இப்படியாக இந்த ஊரினதும் ஊரின் புதல்வர்களினதும் பெருமைசால் வரலாறுகளை எழுதிவைக்க நிறையவே உண்டு. நிற்க.
அந்தக் காலத்தில் வளரி அல்லது வளரித்தடி(Bumerang/Boomerang) என்ற ஆயுதமே அவர்களது பிரதான ஆயுமாக இருந்திருக்கிறது. ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறைவடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் இக் கருவி செய்யப்படுகிறது. இந்த மக்கள் இன்றும் தமது வீரர்களுக்கு செய்யும் ஆயுத பூசையில் இந்த வளரி காணிக்கையாக்கப்படுகின்றது. அவர்கள் இரகசியமாகப் பூஜிக்கும் ஒரு நிலவறை ஒன்றுக்குச் சென்ற நண்பர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் இன்று வரை தமது முன்னோருக்குக் காணிக்கை செலுத்திய இந்த வளரிகள் பெருங்குவியலாகக் கிடப்பதனையும்; இன்று இந்த ஆயுதம் வழக்கொழிந்து போனதால் அதன் செய்கையில் ஏற்பட்ட உரு மாற்றங்களையும் விபரித்தார்.

கீழக்குயில் குடியைச் சேர்ந்த புலவர் அரிச்சந்திரன். அவர் ஒரு அரிய பொக்கிஷம். ஒரு அற்புதமான கதை சொல்லி..சமண மலையின் பாறைகளில் சொக்கிக் கிடந்தபோது அந்தக் குன்றின் உச்சியில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிகின்ற காட்சிகளின் விளிம்புநிலைச் சரிதைகளை விலாவாரியாகச் சொல்வதுமட்டுமல்ல அதன் அரசியலோடு சொல்லும் திறன் பெற்றவர் அவர். கீழக்குடி மக்களின் சமூகஎழுச்சி நாள் இன்றும் அங்கே கொண்டாடப் பெறுகின்றது. சமண மலையின் ஒரு புறத்தில் சமணர் குகை இருக்கின்றது. அதன் வாசலில் மகாவீரர் செதுக்கப்பட்டிருக்கின்றார். மேலே ஏறிச் சென்றால் அங்கே சமணப் பள்ளி இருந்ததற்கான தடயங்கள்; ஒரு கோவில் இருந்தற்கான அடையாளங்கள், மற்றும் நிறைய பாறையிற் செதுக்கிய சமண சிற்பங்கள் இருக்கின்றன. காற்றிலும் மழையிலும் பலநூற்றாண்டுகளாகச் சிதைந்தபடி.
http://www.lankahermes.com/2005_07_01_archive.html
கள்ளர்
கள்ளர்
தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.
முக்குலத்தோர் (தேவர்)
முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய முக்குலங்களை உள்ளடக்கியதால் இச்சாதியினர் முக்குலத்தோர் என்றும் இந்திர குலத்தினர் என்பதால் தேவர் என்றும் குறிக்கப்பெறுவர்.கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றனர்
சங்ககாலம்
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய முன்று அரசர்கள் சேரர் சோழர் பாண்டியர் ஆவர இவர்கள் முவேந்தர்கள் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர்அவர்களை தவிர சில சிற்றரசர்களும் அதியமான், மலையமான்,தொண்டைமான், போன்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர் இவர்கள் அழைக்கப்பட்டனர்
இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் இவன் தமிழகத்தை தவிர மொத்த இந்தியாவையும் ஆண்டு வந்தான் தனது கல்வெட்டுகளில் சோழர் பாண்டியர் கேரளபுத்ரர் ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல. தனி ஆட்சி நடத்தியவை.
கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபான கள்ளர் குலத்தினர் எனக் கருதப்படுகிறது. இவர்கள் மலையமான் என்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர் சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன
மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான மலையமான் குலத்தை சேர்ந்தவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.
சோழர்
சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் அல்லது முக்குலத்தோரின் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. சோழர்கள் கள்ளர்கள் என்பதற்கு பல அதாரங்கள் உள்ளன தொல்லியல் துறையும் பல வரலாற்று ஆசிரியர்களும் இதை உறுதி செய்கின்றனர். இந்திரன் ஆரியர் வழபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை, சுராதி ராசன் முதலாகவரு சோழன் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவ்வற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும். தேவர் என்னும் பெயர், இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்கசோழதேவர் எனச் சோழ மன்னர்க்கு வழங்கியிருப்பதும், கள்ளர், மறவர் அகம்படியர் என்னும் இவ்வகுப்பினரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலன.இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்ற தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சோழர்களுக்கு வழங்கப்பட்ட அத்துணை பட்டப்பெயர்களும் இன்று கள்ளர்களுக்கே வழங்கப்படுகின்றன(தேவர்,மேல்கொண்டான், சோழங்கன், சோழகங்கன், நாடாள்வார்.) சோழர்கள் பலர் திருமணம் செய்து கொண்டது மழவராயர் குடும்பத்தில் அந்த மழவராயரும் கள்ளர் தான். மேன்மை பொருந்திய வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் இந்திர குலாதிபர் சங்கத்தின் நான்காவது அண்டு விழாவில் தலைவராக அமர்ந்து செய்த விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்: 'இந்நாட்டை யாண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்வர் எனவே டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளாரகள். திருவாளர்கள் ம. சீனிவாசையங்கார் அவர்கள், 'சோழர் சாதியிற் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை' என்பர். (செந்தமிழ், தொகுதி -2 , பக்கம்--175 இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் சோழர்கள் கள்ளர்கள் வகுப்பினரே என்பதில் சந்தேகம் இல்லை. [1]
பல்லவர்
"பல்லவர் யாவர்? எங்கிருந்து வந்தனர்? தென்னாட்டு மன்னர்களில் எங்ஙனம் தலைமை யெய்தினர்? கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன்.
இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன என்பதில் எத்துணையும் ஐயமில்லை. தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும் ஒரு பொருளுள்ளனவே எனச் சிலர் கருதுகின்றனர். பல்லவர்க்கு வழங்கும் போத்தரசர் என்னும் பெயரும் இப்பொருளதே யென்கினறனர். எனவே பல்லவர்கள் சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர். கள்ளர்களின் தலைவராகிய புதுக்கோட்டை மன்னர் தம்மை ராஜபல்லவ ரென்றும், பழைய அரச வமிசத்தின ரென்றும் சொல்லிக் கொள்கின்றனர். சர் வால்டர் எலியட் என்பார் கள்ளர்களில் ஒரு பிரிவினர் கலகக்கூட்டத்தாரில் ஒரு வகுப்பின ரென்றும, ஆண்மையும், அஞ்சாமையும், வீரமும் உள்ளவர்களென்றும் கூறுகின்றார். சரித்திர்ப்படி பல்லவர்களும் அவர்களை யொத்தவர்கள்தான். கள்ளர்கள் இன்று வரையிலும் கருநாடக பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு, அவர்களிடமிருந்து. மகாராட்டியர் செளத் என்ற வரிவாங்கி வந்ததுபோல் ஒருவரியும்வாங்கி வந்திருக்கின்றனர். பல்லவரும் எதிரிகளாகிய தமிழ் மன்னர்களின் வலிமைக்கேற்பத் தமது ஆட்சியை நிலைநிறுத்தி வந்திருக்கின்றனர் இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென நிலை நாட்டப்படுகின்றது.
http://ta.wikipedia.7val.com/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D
விருமாண்டி, மாயாண்டி, பேயாண்டி
முன்னாள் மதுரை மாவட்டத்தினைச் சேர்ந்த உசிலம்பட்டி தற்போது புதியதான தேனி மாவட்டத்தில்
>அமைந்துள்ளது. உசிலம்பட்டியும் அதன் அருகாமை ஊரினில் 'பிரமலைக் கள்ளர்', என்று அழைக்கப்படும் அன்பர்கள்
>வாழ்கின்றனர். மிகவும் பின்தங்கியவர்களாக க்கணக்கிடப்பட்டதுடன் குற்றவியல் இயல்புடையவர்களாக ஆதி
>நாளில் கருதப்பட்டு காவற்துறையின் நேரடி கவனத்தில் அவர்களை கண்காணித்துஅவர்களுக்கு தக்க பொருளாதார
>மற்றும் கல்வி உதவிகள் செவ்வனே செய்து, பிறிதொரு நன்னாளில் குற்றப்பரம்பரை பட்டியலினின்றும் நீக்கி
>(denotified tribes) சீர் மரபினர்)என்ற ஒரு பட்டியலில் அவர்களைச் சேர்த்து காவற்துறையின்
>பொருப்பினின்றும் நீக்கப்பட்டு வருவாய்த்துறையின் கீழ் 'கள்ளர் சீரமைப்பு துறையின் 'தனித் துணை
கலெக்டர்
>(கள்ளர் சீரமைப்பு ) என்ற ஒரு அலுவலரின் பராமரிப்பில் வந்தனர்.
>இன்னாட்களில் அந்த சீர்மரபினைச் சேர்ந்தவர்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் சட்ட
>ஆலோசகர்களாகவும் சிலர் இந்திய ஆட்சிப்பணியிலும்(I A S) உள்ளனர்.
>
> அவர்கள் முக்குலத்தோர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. அதாவது மூன்று கோயில் தெய்வங்களை வணங்குபவர்கள்.
>அவர்கள் வணங்கும் தெய்வங்கள் முறையே விருமாண்டி, மாயாண்டி, பேயாண்டி ஆகியோர். அந்த
>தெய்வத்திருநாமத்தின் பெயரால் அவர்களின் குலம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
>
> வழிபாடியற்றி விழா எடுப்பதில் நான்முந்தி நீமுந்தி என உறுதியோடு செயற்படுவது அவர்கள் இயல்பு
>அறங்காவற் குழுவின் நியமங்களை மீறிவன்முறைகூட நிகழ்வதுண்டு. கோயில் விழாக்களுக்கு குழுக்களுக்குள்
>வேற்றுமை தோன்றி பல விதமான வழக்குகள் கூட உயர் நீதிமன்றம்வரை சென்று அங்கு நிலுவையில் உள்ளன.
>
> நான் அங்கு அவர்களுடன் கலந்து பழகி இருக்கிறேன். அங்கு கோயில்களில் உட்சென்று
>வழிபாடியற்றுகையில் பல புதிய முறைகளைப் பற்றி அரியலானேன். அருள்மிகு விருமாண்டி நான்கு சிரசுகளுடன்
>குதிரை மீதேறி அமர்ந்துள்ளார். பிரம்மாவின் மருவுபெயரே விருமாண்டி.
>
> அதே போல் மாயங்கள் செய்யும் மாயாண்டி கோயிலில் புல்லாங்குழலுடன் நின்றதிருக்கோ லத்தில்
>உள்ளார். அங்கு மருக்கொழுந்து (பசுமையான வண்ணத்தில் குளிர் மையான மணத்துடன் இருக்கும் இலை; மருள் என்றும்
>கிராமத்தில் அழைப்பர்.) மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப் படுகிறது. இதர மலர்கள் உள்ளே
>கொண்டுவருவதற்குத் தடையுண்டு.
>
> பேயாண்டி என்பவர் காடுடைய சுடலைப் பொடிபூசிய சிவன். மும்மூர்த்திகளும்நாமம் மருவி வேறு
>பெயர்பெற்றுள்ளனர்.
>
> கிராமங்களில் பெரிய மரங்களுக்கு அடியினில் , முன்கால்களைத் தூக்கி குள்ளமான இரு அசுரர்கள் மீது
>வைத்துக் கொண்டிருக்கும் குதிரைமேல் அமர்ந்திருக்கும் பெரிய உருவில் கருப்பசாமி சிலை வடிவங்களாக
அழகிய
>வண்ணப் பூச்சுகளுடன் ஆங்காங்கே காணப்படுகின்றனர்.
>
> நீங்கள் சொல்வது போல மூணுசாமி முனிசாமி ஆனதாக நான் கேள்வியுறவில்லை. முனீஸ்வரன் என்று
>வழங்கும் (தர்ம முனீஸ்வரரும்) முனிஸ்வாமியில் அடங்கியுள்ளதாகக் கூறுவர்.கண்ணப்ப நாயனார் போன்ற
இறையன்பு
>உடையவர்கள். தன்னலம் கருதாது உழைக்கும் பெருமக்கள். பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைகளும்
>மகாத்மா காந்தி சிலைகளும் இல்லாத சிற்றூர்களே அங்கு கிடையாது. ஆசாரம் அனுஷ்டானம் என்பதற்கு அங்கே
>முக்கியத்துவம் அளிப்பதில்லை. கோயில் கொடை என்றால் காது செவிடுபட திரைப்படப்பாடல்கள் உச்ச
>நிலையில் ஊரை இரண்டாக்கும். போகும்பேரூந்துகள் கொடையின் காரணமாக கிராமத்தின் ஊடே
நேரத்திற்கு
>செல்லமுடியாமல் தவிப்பதைக் காணமுடியும்.
>"செட்டி கெட்டால் பட்டுடுப்பான்" என்ற ஒரு முதுமொழி உண்டு. திவாலாகும் நிலையினை ஒரு வணிகர் அடைய
>நேரிட்டு அவதியுற நேரும்போது அவர் பட்டணிந்து செல்வார். அதை சாடையால் புரிந்துகொண்ட சமூகப்
>பெரியவர் குழுவினைக் கூட்டி அந்த வணிகரின் அசையும் -அசையாச் சொத்துகள் அவரது வரவு செலவு நிகர
>லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊர் சமூகப் பொது நிர்வாக நிதியிலிருந்து குறைந்தவட்டிக்குக் கடன்
>உதவி செய்து கைதூக்கிவிடும் உன்னத ஒற்றுமையின் தனி ரகசியம் அது..
>அதைப் போல சீர்மரபினர்கள் தன்னுடைய குழந்தைக்கு பேர் சூட்டுதல், (காது குழந்தைக்கு குத்தி) அணி
>அணிவித்தல் நிகழ்த்தும் போது உறவினர்கள் அரச பரம்பரையினர் போல் சீர் வரிசைகள் மேள தாளத்துடன்
>கொண்டுவருவர். தெருவினை அடைத்து உறவினர் அனைவரும் வந்து 'மொய் ' எழுதவேண்டும். வந்த
சீர்வரிசைகள்
>துல்லியமாக ஏற்ற தாழ்வின்றி கணக்கில் எழுதப்பட்டு அவரவர் வீட்டு விசேடங்களுக்கு குறைந்தபட்சம் அதே
>அளவிற்காவது பயனீட்டாளி திரும்பச்செய்யவேண்டும் என்பது எழுதாத சட்டம். அன்புடன்
>வெ. சுப்பிரமணியன்.
thanks to http://www.treasurehouseofagathiyar.net/29000/29073.htm
அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்க
தமிழில் பிடிஎப் செய்யலாம்…
தமிழ்ச் சமூகத்தில் மறவர் சாதி - முனைவர். எŠ.கதிர்வேல்
வட ஈழ மறவர் மான்மியம்
கள்ளர். என்பது. தப்பான. விளக்கத்தில். நோக்கப் படுகிறது.காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்
எளிய தமிழில் கணினி புத்தகங்கள்
DEVAR LIBRARY
இலவசமாய் கிடைக்கும் சில பயனுள்ள மென்பொருட்கள்
இன்டர்நெட் தளத்தில் இலவசமாக நமக்குப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றின் பயன்பாடுகள் பலவகையாகும். இலவச டிவி, ஆடியோ மற்றும் வீடியோ வசதி, கம்ப்யூட்டரில் ஆட்டோ ஹாட் கீ அமைப்பு என இவை பல்வேறு வகைகளாகும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.* டவுண்லோட் மேனேஜர்இன்டர்நெட்டினை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு புரோகிராமையாவது டவுண்லோட் செய்கிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. எத்தனை வைரஸ் பயமுறுத்தல் இருந்தாலும் இலவசம் மற்றும் புதிய பயன்பாடு என்று தெரிந்தவுடன் அந்த புரோகிராமினை இறக் கிப் பார்க்கத்தான் மனசு துடிக்கிறது. இவ்வாறு டவுண் லோட் செய்திடும் புரோகிராம் களை பலர் தங்கள் கம்ப்யூட்டர் டிரைவ் களில் அப்படியே சாப்ட்வேர் ஸ்டோர் ரூம் தயார் செய்து வைத்துவிடுகின்றனர். 45 சதவிகிதம் பேரே பயன்படுத்துகின்றனர்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்*
ஒர்பிட் டவுன்லோடர்
இதில் டவுண் லோட் சம்பந்தப்பட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராமினைப் பிரித்து டவுண்லோட் செய்வது, ஒரே பைலுக்கு பல மிர்ரர் பைல்களை உருவாக்குவது, யு–ட்யூப் போன்ற வீடியோ தளங்களிலிருந்து பிளாஷ் வீடியோக்களை டவுண்லோட் செய் வது, இதற்கான பிட் டாரண்ட் சப்போர்ட் என இது தரும் வசதிகள் நீண்டு கொண்டே போகின் றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராம் ஸிப் பைலாக இருந் தால் அதில் என்ன என்ன பைல்கள் உள்ளன என்று பார்த்து நமக்குத் தேவயான பைல்களை மட்டும் டவுண்லோட் செய்திடும் வசதி குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாகும்.
இதனைப் பயன்படுத்தி டவுண்லோட் செய்தவர்கள் அளித்துள்ள கருத்துக்களை இந்த தளத்தின் சமுதாய தளப்பிரிவில் படிக்கலாம். மிகவும் பயனுள்ளவையாகவும் இந்த புரோகிராமினைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. அண்மையில் தரப்படும் இந்த FDM புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுவதுமாக ஸ்கேன் செய்து நீங்கள் வைத்துள்ள புரோகிராம்கள் அனைத்தும் லேட்டஸ்ட் புரோகிராம்களா என்று சோதனை செய்து அப்படி இல்லை என்றால் அவற்றை அப்டேட் செய்வதற்கான வழிகளையும் தருகிறது. ஆனால் FDM போல கூடுதலான வசதிகள் இதில் இல்லை.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
2.உங்கள் இஷ்டத்திற்கு ஷார்ட் கட் கீகம்ப்யூட்டர் வந்ததிலிருந்து நேரம் மிச்சம் செய்வதற்கும், குறைந்த உழைப்பிற்கும் பல வழிகளை நாம் பெற்று வருகிறோம். அந்த வகையில் கீ போர்டு ஷார்ட் கட் கீகளை அந்த அந்த அப்ளிகேஷன் புரோகிராம்களே தந்து வருகின்றன. எம்.எஸ். ஆபீஸ் மற்றும் பிரவுசர்கள் அனைத்திற்கும் ஹாட் கீகள் உள்ளன.இருப்பினும் நம் வசதிக்கு நாம் விரும்பும் வகையில் இந்த ஆட்டோ ஹாட் கீகள் அமைந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம், விரும்புகிறோம். அந்த வகையில் நமக்கு உதவிட கிடைப்பது Auto Hotkey என்னும் அப்ளிகேஷன் புரோகிராம். இதன் மூலம் எந்த கீ இணைப்புகளிலும் நீங்கள் விரும்பும்செயல்பாட்டினை அமைத்துப் பயன்படுத்தலாம். அத்துடன் இந்த புரோகிராம் உங்கள் கீ போர்டு மற்றும் மவுஸ் பயன்பாட்டினை பதிவு செய்து அவற்றை நீங்கள் விரும்பும் எத்தனை முறையும் சுருக்கமாகச் செயல்படுத்த உதவிடுகிறது.
இந்த புரோகிராம் தன்னுடைய ஸ்கிரிப்டிங் மொழியைப் பயன்படுத்துகிறது. இதை உணர்ந்து பயன் படுத்துவதும் எளிது. தெரிந்து கொண்டால் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் நம்மால் ஆட்டோ ஹாட் கீ களை அமைக்கலாம். இந்த ஸ்கிரிப்டிங் மொழியைக் கட்டாயம் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதில்லை. இந்த புரோகிராம் தரும் ஆட்டோ ஸ்கிரிப்ட் ரைட்டர் உங்களுக்காக மேக்ரோக்களைப் பதிவு செய்கிறது.ஆட்டோ ஹாட் கீ புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்குப் பிடித்த அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறக்க ஆட்டோ ஹாட் கீகளை உருவாக்கலாம். எடுத்துக் காட்டாக Windows + W இணைந்து எம்.எஸ்.வேர்டைத் திறக்குமாறு செய்திடலாம். இப்படியே பல புரோகிராம்களுக்கான ஹாட் கீகளை அமைக்கலாம். ஆனால் இந்த புரோகிராமின் முழு பயனை அடைய இதன் ஸ்கிரிப்டிங் மொழியை புரிந்து கொள்வது நல்லது. இதற்கான வழிகாட்டியும் இந்த தளத்தில் உள்ளது. நீங்கள் உருவாக்கும் ஹாட் கீகளை எடுத்துச் சென்று பயன்படுத்தும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரிப்டையும் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாக்கலாம். அதன் மீது ரைட் கிளிக் செய்து Compile script என்பதில் கிளிக் செய்தால் அது ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாகும். இந்த பைலை எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.இவை அனைத்தும் புதிய கம்ப்யூட்டரில் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு உதவிடும். Exit கொடுத்தால் இவற்றிலிருந்து வெளியேறலாம். புதிய அந்த கம்ப்யூட்டரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாது.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்இதே போன்ற இன்னொரு புரோகிராம் உள்ளது. ஆனாலும் ஆட்டோ ஹாட் கீ போல அனைத்து வசதிகளையும் தரும் வேறு புரோகிராம் எதுவும் இல்லை என்றே கூறலாம்.தரவிறக்கம் செய்ய : கிளிக் செய்யவும்
3.இலவச டிவி புரோகிராம்இன்டர்நெட் இணைப்பு வசதி குறைந்த கட்டணத்தில் கிடைப்பதால் (மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு மிக மிக அதிகம்தான்) பலரும் இதன் மூலம் அனைத்து வசதிகளையும் பெற எண்ணுகின்றனர். அவ்வகையில் டிவி மற்றும் திரைப்படங்களையும் பார்க்க துடிக்கின்றனர். உங்களிடம் மத்திய நிலை வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்தால் இது சாத்தியமே. இந்த வகையில் நமக்கு உதவிடுவது Joost என்னும் புரோகிராம் ஆகும்.
முற்றிலும் இலவச டிவி தரும் புரோகிராம் என இதனைக் கூறலாம். மேலே குறிப்பிட்டுள்ள தளத்திலிருந்து Joost புரோகிராமினை டவுண்லோட் செய்து கொள்ளவும். இந்த கிளையண்ட் புரோகிராம் மூலம் உலகெங்கும் உள்ள டிவி நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது. (ஆனால் எத்தனை நிகழ்ச்சிகளை நாம் பார்த்து புரிந்து ரசிக்க முடியும் என்பது வேறு விஷயம்) இதன் மூலம் கிடைக்கும் வீடியோவின் தன்மை அவ்வளவு சிறப்பாக இருக்குமா என்பது நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களைப் பொறுத்து உள்ளது. இருந்தாலும் பார்க்க சகிக்க முடியாத அளவில் இது அமைவதில்லை.இது தரும் சேனல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அசந்து போவீர்கள். மொத்தம் 480 சேனல்களைத் தருகிறது. இதனை வகை வகையாகப் பிரித்தும் பார்க்கலாம். காமெடி, கார்ட்டூன், டாகுமெண்டரி என வகைகளும் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சேனலிலும் உங்களுக்குப் பிடித்த படக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை இணைத்து பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.இந்த Joost புரோகிராமின் சிறப்பு நாம் கேட்பதை வழங்குவதுதான். நாம் விரும்புவதை நாம் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் தருகிறது. எப்போது வேண்டுமானாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை மூடிவிடலாம். ஆனால் ஒரு சின்ன பிரச்னை உள்ளது. விளம்பரங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவை தரும் நிதி பலத்தில் தான் இந்த இலவச டிவி புரோகிராம் இயங்குகிறது. அதனால் என்ன! இங்கு நாம் கேபிளுக்குப் பணம் கட்டிப் பார்க்கையில் எத்தனை விளம்பரங்கள் வருகின்றன என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது. எனவே குறுக்கிடும் விளம்பரங்களுக்குப் பழகிய நமக்கு Joost தரும் விளம்பரங்கள் ஒரு பொருட்டே அல்ல. இதே போல இன்னொரு தளம் இதுவரை எனக்குத் தென்படவில்லை.தள முகவரி :இங்கே கிளிக் செய்யவும்
4.சிடிக்களில் எழுத நம்முடைய கம்ப்யூட்டர்களில் சிடி மற்றும் டிவிடி ரைட்டர்களை நிறுவுகையில் அதனுடன் வரும் நீரோ சிடி ரைட்டிங் புரோகிராமுடன் பழகிப் போன நமக்கு அதே போல மற்ற புரோகிராம்கள் குறித்து எண்ணுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும் நீரோ போலவே, அதன் வசதிகளுக்கு இணையான வசதிகளைத் தரும் இலவச புரோகிராம்களும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.
சிடி மற்றும் டிவிடிக்களில் தகவல்களை எழுத CD Burner XP என்றொரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. சிடி, டிவிடி மற்றும் புளுரே டிஸ்க்குகளில் நீரோ போலவே அனைத்து வகை தகவல்களையும் எழுதுகிறது. ஐ.எஸ்.ஓ. இமேஜ்களை சிடிக்களில் அமைத்துத் தருகிறது. ஆடியோ சிடிக்களை உருவாக்குகிறது.
இப்படி நீரோ நமக்குத் தரும் அனைத்து செயல்பாடுகளையும் தருகிறது. இதனுடைய இன்டர்பேஸும் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. ஜஸ்ட் ட்ராக் அண்ட் ட்ராப் என்ற முறையில் அமைந்துள்ளது. 2.8 எம்பி அளவிலான இந்த பைல் அநாவசியமாக எந்த தகவலையும் எழுதிவைப்பதில்லை. சிடிக்களின் இடத்தை வேஸ்ட் செய்வதில்லை. இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நீரோ புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்வது குறித்து யோசிக்கத் தொடங்கிவிடுவீர்கள் என்பது உறுதி.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
5. உங்கள் கம்ப்யூட்டரைத் தூக்கிச் செல்ல
நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது. அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும்.
இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது. . மிக எளிதாக இதனை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் உங்கள் டிரைவை இணைத்துச் செயல்படுத்தத் தொடங்கினாலும் அது உடனே உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் சூழ்நிலையைத் தருகிறது. இதனால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த MojoPac புரோகிராம் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. உங்கள் யு.எஸ்.பி. டிரைவ் உங்களின் இ: டிரைவாக மாறுகிறது.இதனால் எந்த கம்ப் யூட்டரில் இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவயான புரோகிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல்லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன் படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.இதன் வேகத்தை அதிக பட்சம் பயன் படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து அதில் யு.எஸ்.பி. டிரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இதில் ஹார்ட்வேர் என்னும் பகுதியில் யு.எஸ்.பி. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே ே “Optimize for quick removal” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதற்குப் பதிலாக “Optimize for Performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். MojoPac போல செயல்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.தரவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யவும்ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த Portable Apps Suite என்னும் புரோகிராம் கிடைக்கிறது.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்இலவசமாய் எவ்வளவோ இணையத்தில் கிடைக்கின்றன.மேலே தரப்பட்டுள்ள மென்பொருட்களை ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது தெரியாமலும் இருக்கலாம். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தரவிறக்கி கொள்ளுங்கள்.thanks to : http://www.honeytamilonline.co.cc/2009/07/blog-post_13.html
டிஜிட்டல் காமெராவை ஸ்கேன்னராக பயன்படுத்துவது எப்படி?
உங்களிடம் ஸ்கேன்ன்னர் இல்லை. ஒரு ஆவணத்தை(Document) ஸ்கேன் செய்ய வேண்டும். உங்களிடம் டிஜிட்டல் கேமரா / நல்ல மொபைல் போன் கேமரா இருக்கிறதா? கவலையை விடுங்கள். நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டிய ஆவணத்தை புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள். Snapter என்ற மென்பொருள் மூலம் ஸ்கேன் காப்பி நீங்கள் பெற்று கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை இந்த லின்க்கில் சென்று(http://snapter.atiz.com/snapter.exe) தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது பற்றி மேலும் விபரங்களை இங்கே பாருங்கள்.
அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்க
அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்ககல்லூரி இறுதி ஆண்டுகளில் ப்ராஜெக்ட் செய்யும் போது பெரும்பாலானோர் ப்ராஜெக்ட் அறிக்கை ( Project Report) முந்தய வருட மாணவர்களின் அறிக்கையை வாங்கி நமக்கு ஏற்றவாறு காப்பி செய்து உபயோகித்து இருப்போம். முந்தய ஆண்டு மாணவர் Word Document (.DOC) ஆக கொடுத்து இருந்தால் சிக்கல் இல்லை. வேண்டுபவற்றை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். சிலர் பழைய ப்ராஜெக்ட் புத்தகத்தை தூக்கி கொடுப்பர். அனைத்தையும் டைப் செய்து முடிப்பதற்குள் ஒரு வழியாகி விடும்.
சில ஸ்கேன் செய்யப்பட்ட கோப்புகள் பட வடிவில் இருக்கும். அவற்றில் உள்ள எழுத்துக்களை, வாக்கியங்கள் நமக்கு சில இடங்களில் உபயோகிக்க தேவைப்படும். அந்நேரத்தில் அவற்றில் டைப் செய்ய வேண்டி இருக்கும். அதே போல் நாளிதழ்கள், பத்திரிக்கைகளில் மற்றும் அச்சு புத்தகங்களில் உள்ள எழுத்துகளை இணையத்தில் ஏற்ற விரும்பினால் அவை முழுவதையும் டைப் செய்ய வேண்டி இருக்கும். அதே போல் பல எழுத்து படைப்புகள் இணையத்தில் பட வடிவில் கிடைக்கும். அதில் உள்ள எழுத்துகளை காப்பி செய்யவோ, எடிட் செய்யவோ நம்மால் முடியாது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு உதவ TopOCR என்ற இலவச மென்பொருள் இருக்கிறது. இந்த லின்க்கில் சென்று (http://www.topocr.com/topocr.exe)இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.
நம்மிடம் டிஜிட்டல் கேமரா அல்லது ஸ்கானர் இருந்தால் போதும். நமக்கு தேவையான அச்சு வடிவத்தை (ப்ராஜெக்ட் ரிப்போர்ட் / அச்சு புத்தக பக்கம்) டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தோ அல்லது ஸ்கானர் மூலம் ஸ்கேன் செய்தோ பட வடிவமாக (JPG) சேமித்து கொள்ளுங்கள்
TopOCR மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். File ---> Open மூலம் நீங்கள் சேமித்து வைத்துள்ள பட வடிவ (JPG) திறங்கள் . வலது புற விண்டோவில் நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துள்ள படத்தில் உள்ள எழுத்துக்கள் நீங்கள் எடிட் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு கிடைக்கும். அவற்றை நீங்கள் காப்பி செய்து Word போன்றவற்றில் உபயோகித்து கொள்ளலாம்.பழைய புத்தகங்களையோ, அச்சு வடிவங்களையோ கணினிக்கு ஏற்ற எடிட் செய்ய கூடிய எழுத்து வடிவமாக மாற்றுவதில் இந்த மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். முழுமையாக டைப் செய்யும் கால விரயத்தை மிச்சம் செய்யும்.
இது ஆங்கில பக்கங்களில் மட்டுமே வேலை செய்கிறது. தமிழில் இது போன்று பொன்விழி என்ற மென்பொருள் இருப்பதாக நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் தெரிவித்து உள்ளார். அந்த மென்பொருளுக்கான விபரங்கள் , தரவிறக்கம்செய்வதற்கான லிங்க் இதோ .(http://ildc.gov.in/GIST/htm/ocr_spell.htm)
thanks www.tvs50.blogspot.com
தமிழில் பிடிஎப் செய்யலாம்…
இதுவரை தமிழ் இணையதளங்கள் பல்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்தன. இன்றைய நிலையில் யுனிகோடு என்னும் ஒருங்குறி முறைக்கு மாறிவருகின்றன. அன்று முதல் இன்று வரை தமிழ் இணையதளங்களில் தோன்றும் எழுத்துருச் சிக்கலின் தீர்வுகளில் தனித்தன்மையுடன் விளங்குவது பிடிஎப் என்னும் முறையாகும். அடாப் ரீடர் வாயிலாக இந்த பிடிஎப் கோப்புகளைப் படிக்கமுடியும்.இதற்கென வேறு எழுத்துருக்கள் தேவையில்லை என்பதால் பலராலும் விரும்பத்தக்கதாக பிடிஎப் இன்றுவரை விளங்கி வருகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒரு புள்ளிக்குள் அடக்கி வைத்திருப்பதாக இம்முறை விளங்குவது குறிப்பிடத்தக்கது.இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களைப் பல்வேறு இணையதளங்கள் இன்று இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.
பல்வேறு இணையதளங்கள் இலவசமாக வேர்டு உள்ளிட்ட தரவுகளை பிடிஎப் முறைக்கு மாற்றித்தருகின்றன. இவ்விணையதளங்களுக்குச் சென்று மாற்ற வேண்டிய தரவுகளை உள்ளிட்டு நம் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் சில மணித்துளிகளில் நம் மின்னஞ்சலுக்கு நம் பிடிஎப் கோப்புகள் வந்து விடும்.இவ்விணையதளங்களில் மாற்றித்தரப்படும் பிடிஎப் கோப்புகள் ஆங்கில முறைக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எவ்விதமான சிக்கலுமின்றி உள்ளன.ஆனால் தமிழ்த்தரவுகளை இவ்விணையதளங்களின் வாயிலாக பிடிஎப்பாக மாற்றும் போது தமிழ் எழுத்துருக்கள் சிதைந்து காணப்படும் நிலையே இன்று வரை உள்ளது.மேலும் இணைய இணைப்பில் மட்டுமே பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் நிலை இருந்தது.இதற்கு மாற்றாக இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் தமிழ் பிடிஎப் கோப்புகளை நாமே உருவாக்குவதற்காக ஒரு மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.
(http://getitfreely.co.cc/content/cute-pdf-creater//" )
இவ்விணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு முதல் பக்கத்தில் கிடைக்கும் Converter, Cute pdf writer என்னும் இரு மென்பொருள்களையும் பதிவிறக்கிக் கொள்ளவேண்டும்.இணையத்தில் நிறுவிக் கொள்ளவேண்டும் முதலில் கன்வெர்டரையும், பிறகு கியூட் பிடிஎப் ரைட்டரையும பதிவிறக்கவும். மாற்றித் பதிவிறக்கினால் சிக்கல் ஏற்படும்.
நாம் பிடிஎப் செய்யவேண்டிய தமிழ்த் தரவுகளை திறந்துகொள்ளவும் (எம்.எஸ் வேர்டு) (File>Print) பின் அந்தக் கோப்பில் இடது மேல்பக்க மூலைப்பகுதியில் உள்ள பைல் செல்லவும், அதன் கீழ் உள்ள பிரிண்ட் பகுதியைச் சொடுக்கினால் Print Window தோன்றும் அதில் டிராப் டவுன் லிஸ்ட் பாக்ஸ் தோன்றும். அதில் Cute pdf writer ஐத் தெரிவு செய்து பிரிண்ட் கொடுக்கவும். கோப்பு தயாரிக்கப்பட்டு சில நொடிகளில் எங்கு சேமிக்கவேண்டும் என்று தோன்றும். இடத்தைச் சுட்டினால் கோப்பு சேமிக்கப்பட்டுவிடும்.
எவ்விதமான எழுத்துருச் சிக்கலுமின்றி இணைய இணைப்பே இல்லாமல், இலவசமாகத் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் பிடிஎப் கோப்பினை எந்த இணையதளத்திலும் சிக்கலின்றித் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் படிக்க அடாப் ரீடர் மட்டும் அக்கணினியில் இருக்கவேண்டும்
thanks : http://gunathamizh.blogspot.com/2009/05/blog-post_01.html
தமிழ்ச் சமூகத்தில் மறவர் சாதி - முனைவர். எŠ.கதிர்வேல்
ஒரு வரலாற்று மாணவன் என்ற முறையில் தமிழ்க்கலாச்சாரத்துக்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ள வளமும் ஆழமும் மிக்க திருநெல்வேலியின் சரித்திரம் எப்போதும் என்னைப் பெரிதும் ஈர்ப்பதுண்டு.
எந்த ஒரு பிரதேசத்தையும் போலவே திருநெல்வேலியின் சீர்மையும் சிறப்புகளும் சில தோல்விகளோடும், விரும்பத்தகாதனவற்றோடும் கலந்தே இருக்கின்றன. இது நம்மை மனம் குலையச் செய்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான், ஒரு வரலாற்றாளரின் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது. இன்றைய சமூகக் கொந்தளிப்புகளுக்கு உண்மையான மூலகாரணங்களாகத் திகழ்கிற சமூகக் கட்டமைப்பின் பலவீனங்களை ஒரு வரலாற்றாளர் (கடந்த காலம் குறித்த தனது பரந்து விரிந்த ஞானத்தின் மூலம்) சரியாகச் சுட்டிக் காட்ட முடியும்.
இன்று மோதுகிற இரு சமூகக் குழுக்களான மறவர்கள் மற்றும் தலித்துக்கள் சமூக வாழ்வில் நடந்து கொள்கிற விதம் (Behaviour patterns) குறித்து ஆய்வு செய்வது இன்றைய காலத்தின் தேவையாகும்.
தலித் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் பல ஆய்வுகள் அறிவுத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், மறவர்களின் உணர்ச்சி வேகத்துக்கும் ஆக்கிரமிப்பு மனோபாவத்துக்கும் காரணமான சரித்திரப் பின்னணி என்ன என்பதைப் புரிந்து கொள்ள இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
READ MORE...இக் கட்டுரையில் காலனி ஆதிக்கத்துக்கு முந்தைய சகாப்தத்தில் மறவர்கள் எப்படித் தென்னிந்திய அரசியலில் மேம்பட்ட நிலையில் இருந்தனர் என்பதையும், வெள்ளையரை எதிர்த்த போரில் முன் நின்றதால் அவர்களை அடக்கி ஒடுக்க பிரிட்டி‰ ஏகாதிபத்தியம் எப்படிக் 'குற்றப் பரம்பரைச் சட்ட'த்தைக் கொண்டு வந்தது என்பது பற்றியும் அதிலிருந்து இச் சமூகத்துக்குழுவின் பெரும்பகுதி இன்னும் விடுபட முடியாமலிருப்பது குறித்தும் சுட்டிக் காட்ட முயற்சிக்கிறேன்.
1
சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் 'தேவர்கள்' என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக 'சேதுசமுத்திரம்' எனப்படும் (ராமேŠவரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே 'சேதுபதி' மன்னர் என்ற பெயரும் பெற்றார்.
மேற்கண்ட இரு தகவல்களும் நமக்குச் சொல்வது என்னவெனில் ராமநாதபுரம் பகுதியே ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி. அங்கிருந்து புலம் பெயர்ந்தே இவர்கள் அருகிலிருந்த திருநெல்வேலிச்சீமை போன்ற பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பதே. மறவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தங்கள் தலைவர் எனும் மரியாதையை மன்னர் சேதுபதிக்கே அளித்து வந்தனர் என்பதை 'மறப்பாட்டு' சொல்கிறது. சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் 'குல வம்சம்' தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள் பங்கேற்றது பற்றியும் 'குலவம்சம்' பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் பதினெட்டாம் நூற்றாண்டில் மறவர்சீமை என அறியப்பட்டிருந்தது. வடக்கே வெள்ளாற்றின் கரையிலிருந்த அறந்தாங்கியிலிருந்து தெற்கே சாயல்குடி வரையிலுமான கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுமையும் மறவர் சீமையாகும். மேற்கே அது மதுரை நாயக்கரின் ராˆƒியம் வரை நீண்டிருந்தது. தஞ்சை மராட்டிய அரசும், புதுக்கோட்டை கள்ளர் பிரதேசமும் வடக்கே சூழ்ந்திருக்க, மேற்கிலும் தெற்கிலும் மதுரை நாயக்கர் அரசு பரவியிருக்க கிழக்கே ஆங்காங்கு போர்ச்சுகீசிய மற்றும் டச்சுக் குடியேற்றங்கள் தென்பட்டன.
நெல்லைச் சீமையில் களக்காடு முதல் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடியைத் தொட்டு நின்ற இராƒபாளையம் வரை மறவர்கள் பரவியிருந்தார்கள். பெரும்பாலான மறவர் பாளையங்கள் இப் பகுதியிலேயே உருவாக்கப்பட்டன. அவை சிங்கம்பட்டி, ஊர்க்காடு, ஊத்துமலை, வடக்கரை, சுரண்டை, நடுவக்குறிச்சி, குருக்கள்பட்டி, அழகாபுரி, நெற்கட்டும் செவல், தலைவன்கோட்டை, தென்மலை (சிவகிரி) கொல்லம் கொண்டான் மற்றும் சேத்தூர் ஆகும். களக்காட்டுக்கு அருகே திருக்குறுங்குடியிலும், வள்ளியூர்,பணக்குடியிலும் கூட மறவர் குடியிருப்புகள் இருந்தன. இச் சீமையின் கிழக்கே மாநாடு, பூச்சிக்காடு, ஆறுபங்குநாடு போன்ற பகுதிகளிலும் மறவர் குடியிருப்புகள் இருந்தன. மத்தியப் பகுதியில் இருந்த மூன்று மறவர் பாளையங்கள் கடம்பூர், மணியாச்சி மற்றும் ஏழாயிரம் பண்ணை ஆகும்.
1922 இல் நவநீதக் கிரு‰ண மருதப்பத்தேவர் திருநெல்வேலி சிவில் நீதிமன்றத்தில் சம்ர்ப்பித்த ஓலைச்சுவடிகளின்படி இராமநாதபும் பகுதியிலிருந்த ஊத்துமலைக்குப் பதினோராம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்ததாக அறிகிறோம். பதிப்பிக்கப்படாத ஓலைச்சுவடியில் உள்ள 'வடக்கரை ஆதிக்கம்' வரலாற்றின்படி ராமநாதபுரத்திலிருந்து வடக்கரைக்கு மறவர்கள் குடிபெயர்ந்தது பன்னிரண்டாம் நூற்றாண்டில் எனலாம். சிங்கம்பட்டி, ஊர்க்காடு மற்றும் சேத்தூர் மறவர்கள் பதினோராம் நூற்றாண்டுக்கு முன்பாகவும் களக்காடு மறவர்கள் திருக்குறுங்குடிக்குப் போனது பதினைந்தாம் நுற்றாண்டின் மத்தியில்தான் எனவும் அறிகிறோம்.
மறவர், கள்ளர், அகமுடையார்களுக்கிடையே நெருங்கிய உறவு இருக்கிறது.
'கள்ளர் மறவர்கனத்ததோர் அகமுடையார்
மெல்ல மெல்லவே
வெள்ளாளரானார்'
எனும் பழமொழி வழக்கிலுள்ளதை அறிவோம். அடிப்படையில் தங்கள் தலைவர்களுக்கு ராணுவ சேவை அல்லது காவல் கடமைகள் ஆற்றி வந்த இனமாகவே மறவர்கள் இருந்தனர். இதே நிலைமைதான் கள்ளர்களுடையதும். கள்ளர்கள் முதலில் தஞ்சைப் பகுதியில் இருந்து வந்துள்ளனர். பின்னர் பதினோராம் நூற்றாண்டில்தான் பாண்டிய அரசுப் பகுதிக்கு வந்து குடியேறினர். அகமுடையார்கள் ஆதியில் விவசாயம் பார்க்கிறவர்களாகக் காஞ்சிபுரம் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
இந்த மூன்று பிரிவினருக்குள்ளேயும் ஏராளமான உப பிரிவுகள் உண்டு. இந்த உப பிரிவுகளுக்குள்ளே சண்டை சச்சரவுகளே நடக்கவில்லை என்று உறுதியாக யாரும் கூற முடியாது. வெவ்வேறு உப பிரிவுகளுக்கிடையேயும் தனி நபர்களுக்கிடையேயும் குழுப் பகைமைகளும், சண்டைகளும் இருந்தன. மறவர்களிடைய கொண்டையங்கோட்டைப் பிரிவினர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டனர். எண்ணிக்கையில் அதிகமான பேர் இருந்ததோடு மறவர் சாதிகளிலேயே அதிக தைரியமும் ஆக்ரோ„மும் உடையவர்களாக கொண்டையங்கோட்டையார் இருந்தது இதற்கு காரணமாக இருக்கலாம். பெரும்பாலான மறவர் பாளையங்களை இவர்களே ஆதிக்கம் செய்யமுடிந்ததற்கு இது காரணமாக இருந்திருக்கலாம். முத்துராமலிங்கத்தேவர் குடும்ப ஆவணங்களிலிருந்து ராமநாதபுரம் சீமையில் இக் கொண்டையங்கோட்டைத் தளபதிகள் பல சிறப்புச் சலுகைகளை அனுபவித்து வந்ததை அறிய முடிகிறது.
மறவர்கள் குழக்களாக வாழ்ந்தனர். மறவர் கிராமங்கள் கோட்டைச் சுவர்களுடன் இருந்தன. கிராமத்தலைவர்கள் கிராமத்தைப் பாதுகாக்க வலுவான ஒரு படை வைத்திருந்தனர். கிராமத் தலைவர்கள் முழு சுயாட்சி அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் தேவைப்படும் சமயங்களில் மன்னருக்கு ராணுவச்சேவை செய்தனர். பாண்டிய மன்னர்களின் பலமே இம் மறவர் தலைவர்கள் அளித்த ஆதரவில்தான் அடங்கியிருந்தது. கிறிŠதவ ஆதாரங்களும் 'குலவம்சம்' கூறியவற்றை உறுதிப்படுத்துகின்றன.
மதுரை பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகும் சேதுபதிகளின் முந்தைய மேலாதிக்கம் தொடர்ந்தது. மதுரை நாயக்க மன்னர் முத்துக்கிரு‰ணப்ப நாயக்கரும் கூட, முந்தைய பாண்டிய அரசின் அரசுரிமை பெற்ற மறவர் சீமையின் வாரிசுதாரர்களாக அவர்களை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சேதுபதிகளின் ஆட்சியின் கீழ் மறவர் கிராமங்கள் முழுமையும் மறவர் தலைவர்களுக்கே சொந்தமாக இருந்தன. சேதுபதி மன்னர் கேட்கும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை அக் கிராமங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருந்தது.
ஒவ்வொரு மறவரும் போர் வீரராகவே இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நிலங்களில் பாடுபட்டனர். இந்த வீரர்கள் தங்கள் கிராமத்தில் காவலர்களாக இருந்தனர். தலைவர்களின் போர்க்காலங்களில் பங்கேற்றும் கோட்டைகளைக் காத்தும் தங்கள் தலைவருக்கு ஆதரவாகப் போரில் உதவினர். 'அவர்களின் சொந்த இனத்தவரே மன்னராக இருந்தும் கூட ஏன் வியாபாரத்தில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள்' என்று ஒரு கிறிŠதுவ எழுத்தாளர் ஆச்சரியப்பட்டு எழுதுகிறார்.
மறவர்கள் முதலாவதாகத் தங்களின் கிராமத் தலைவருக்கே கட்டுப்பட்டவராக இருந்தனர். அவரே அவர்களைப் பாதுகாப்பவராகவும் ஆள்பவராகவும் இருந்தார். அச் சமூக முழுமையின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக சேதுபதி, மறவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றிருந்தார்.எனவேதான் மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட முப்பதாயிரம், நாற்பதாயிரம் படை வீரர்களைச் சேதுபதியால் திரட்ட முடிந்தது.
இம் மறவர்களின் இனக்குழு வாழ்க்கை முறையும், வீர மிக்க நடவடிக்கைகளும், தங்கள் இனத்துக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டவராக உண்மையாக இருந்த தன்மையும், இவர்களைப் பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வல்லமை மிக்கதொரு அரசியல் சக்தியாக உருவாக்கி இருந்தது.
2
நெல்லைச் சீமையில் மறவர் பாளையக்காரர்கள் அல்லது காவல் தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இம் மறவர்கள் காவல்காரர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். காவல் என்பது கண்காணிப்புப் பணியைக் குறிக்கும். அது ஒரு Šதாபனமாக ஓரளவு இன்றைய போலீŠ ஏற்பாட்டை ஒத்திருந்தது.
Šதலக்காவல் மற்றும் தேசக் காவல் என காவல் இரு வகைப்பட்டது. Šதலக் காவலில் காவல் தலைவர் கிராமத்தைப் பகுதிகளாகப் பிரித்துக் காவல்காரர்களின் குடும்பங்களுக்குப் பங்கீடு செய்வார். காவல் பகுதிகள் தலைவரின் விருப்பப்படி மாற்றவும் படலாம்.
காவல் தலைமை என்பது பரம்பரை உரிமையாக இருந்தது. கிராமக்கோயில் காவல் தலைமையின் ஆளுகையில் இருந்தது.
காவல்காரர்களின் தலையாய கடமை கிராம மக்களின் சொத்துக்களான பயிர்கள், தானியங்கள், கால்நடைகள் மற்றும் பிற குடும்ப சொத்துக்களைப் பாதுகாப்பதும், பொது இடங்களான கோயில்கள், சாலைகள் மற்றும் சந்தைகளைப் பாதுகாப்பதும் ஆகும். ஏதாவது திருட்டு நடந்துவிட்டால் சம்பந்தப்பட்ட காவல்காரரே களவு போன பொருளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். பொருளை மீட்டுத் தரத் தவறினால் அவரே ந‰ட ஈடும் தர வேண்டும். இதனை அமல்படுத்துவதே காவல் தலைமையின் கடமை. எனவே, காவல் தலைவர் தான் மக்களுக்கு நேரடியாகப் பொறுப்பானவர். காவல்காரர்கள் அல்லர். காவல்காரர்களுக்கும் மக்களுக்கும் இடையே உறவுப்பாலமாகக் காவல் தலைவர் இருப்பார். காவல் தலைவர் திருட்டுப் பொருளுக்கான ந‰டஈட்டை உடனடியாகக் காவல்காரரிடம் வசூலிப்பதில்லை. தன் உதவியாளர்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு திருடனைக் கண்டுபிடித்து ந‰ட ஈட்டை அவனிடமே வசூலிப்பார். அது சாத்தியமாகாது போனால் மட்டுமே, காவல்காரரை இழப்புத் தொகையை வழங்கச் சொல்வார். இவ்விதமாக கிராமக்காவல் தலைவர் போலீŠ மற்றும் நீதி பரிபாலன அதிகாரத்தை எடுத்துக் கொள்வார். அவரும் அவரது உதவியாளர்களும் குற்றங்களைக் கண்டுபிடிக்க மிகக் கொடூரமான முறைகளைக் கையாண்டனர்.
காவல்காரர்களின் சேவைகளுக்கு ஈடாக 'Šதலக்காவல்' என்ற பெயரில் ஒரு கட்டணம் வழங்கப்பட்டது. அது அவர்கள் பாதுகாத்து வந்த தானியங்களின் (விளைச்சலில்) ஒரு பகுதியாகவோ அல்லது அதற்கு ஈடான பணமாகவோ இருக்கும். காவல்காரர்கள் தங்கள் வசூலில் ஒருபகுதியைக் காவல் தலைவருக்கு வழங்கினர்.
கோயில் காவலுக்கான வருமானம் காவல்தலைவருக்கு வரும். அவர் அதில் ஒரு பகுதியைத் தன் கீழ்ப்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிப்பார். பெரும்பாலும் கோயில்கள் காவல் தலைவருக்கு நிலங்களை வழங்கின. அதைக் கொண்டு அவர்கள் தங்களையும் தங்கள் பரிவாரங்களையும் காத்து வளர்த்துக் கொண்டனர். காலப்போக்கில் மைய அரசுகள் வலு இழந்தபோது இக் காவல் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தாங்களே கிராமத்தின் ஆட்சியாளர்களாக மாறினர். ஏற்கனவே காவல் மற்றும் நீதி பரிபாலன அதிகாரத்தை இவர்கள் தங்கள் கையில் வைத்திருந்தது இதற்கு உதவியாக இருந்தது.
தேசக்காவல்
தேசக்காவல் அமைப்பில் பல கிராமங்கள், ஒருதலைவரின் ஆளுகையின் கீழ் இருக்கும். இக் கிராமங்களின் தலைவராகக் காவல் தலைவராக அவர் இருப்பார். இதுவும் மறவர்களுக்கானத் தனிவகையான அமைப்பாகும். இதன் மற்ற முறைகளெல்லாம் Šதல காவலையே ஒத்திருந்தன. கிராமங்களில் காவல் பணிபுரிந்த தலைவர்கள் தேசக்காவல் தலைவருக்குக் கட்டுப்பட்டு இருந்தனர். கிராமங்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளைத் தேசக்காவல் தலைவர்கள் தீர்த்து வைத்தனர். இந்தத் தீர்ப்பு மறு பேச்சில்லால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கு 'தேசக்காவல்' என்ற பெயரில் ஒரு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தங்கள் பகுதிகளில் மறவர் பாளையக்காரர்களும் தேசக்காவல் தலைவர்களாக இருந்துள்ளனர். இதனை மறவர் தலைவர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரர்களுக்கும் இடையே எழுந்த பல 'காவல் சச்சரவு'களில் இருந்து அறிய முடிகிறது.
1776 இல் நாங்குநேரி மறவர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரரான பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனுக்கும் இடையே நடைபெற்ற போர் குறிப்பிடத்தக்கது. நாங்குநேரி மற்றும் களக்காடு மறவர்கள் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தாங்கள் தேசக்காவல் உரிமையைப் பெற்றிருந்தமையால் நாயக்கர்கள் அதில் தலையிடக் கூடாது என்றனர். இதன் மூலம் நாயக்கர்களுக்கு முன்பே மறவர்கள் தேசக்காவல் தலைமை ஏற்றிருந்தனர் என்பது உறுதியாகிறது. தேசக்காவல் முறை 1780 முதல் 1781 வரையிலான காலத்தில் மிக உச்சத்தில் இருந்தது. காவல், நீதி மற்றும் நிர்வாக அதிகாரங்களைத் தேசக்காவல் தலைவர் செலுத்தி வந்தார். இத் தலைவர்கள் தங்களுடன் எப்போதும் சி‰யர்களை வைத்திருந்தனர். இவர்கள் அநேகமாகப் பள்ளர் இன மக்களாக இருந்தனர்.
காவல் அமைப்பு மறவர்கள் ஒரு தலைவரின் கீழ் ஒன்றுபட்டு நிற்கவும் அத் தலைவரை வலுவானவராக நிறுத்தவும் வாய்ப்பாக அமைந்திருந்தது. மைய நிர்வாகம் சீர்குலைந்தபோது ஊர்களின் பாதுகாப்பு அவர்கள் கையில் இருந்தது.
3
மதுரை விƒயநகர அரசர்களின் கீழ் வந்தபோது ராமநாதபுரம் மதுரைப் பேரரசின் கீழ் வந்தது. ஆனால் அரசியல் சூழல்கள் மதுரை அரசர் முத்துக் கிரு‰ணப்ப நாயக்கரை 1605 ஆம் ஆண்டின் பண்டைய சேதுபதி எல்லை வரை மறவர் ஆளுகையை ஏற்றுக் கொள்ளவும் தொடர்ந்து செயல்படுத்தவும் நிர்பந்தித்தன என்ற போதிலும், மறவர் அரசு மதுரை அரசின் விருப்பத்திற்கிணங்கவே செயல்பட்டது. தங்களின் ராணுவ வல்லமையின் காரணமாக அதன் ஆதிக்கத்தின் கீழ்தான் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், ராமநாதபுர மறவர்கள் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டனர். நாயக்கர் ஆட்சி நீடித்து நிலைப்பது என்பதே மறவர்களின் ஆதரவில் என்பதால் நாயக்க அரசர்கள் குறிப்பிடத்தக்க செயல்பாட்டுச் சுதந்திரத்தை மறவர்களுக்கு அளித்திருந்தனர்.
வேறு பல களங்களில் நாயக்க மன்னர்கள் செலுத்திய ஈடுபாடானது சேதுபதிக்கு, நாயக்க அரசர்களுக்கு எதிரான மனநிலை வளரக் காரணமாக அமைந்தது. மதுரை அரசருடனான சேதுபதியின் தொடர்புகள் வெறும் சம்பிரதாயப் பூர்வமாகவே இருந்தன. நடைமுறையில் அவர் சுயாட்சியாளராகவே இருந்தார். சேதுபதி மன்னர் மதுரை அரசுக்கு ஆண்டுக் கப்பத்தைச் செலுத்திய ஒரே நடைமுறை தவிர வேறு தொடர்புகள் இல்லை. அதையும் அவர் ஒழுங்காகச் செலுத்த அக்கறை காட்டியதில்லை. கிழக்குக் கடற்கரையின் மூலமாக வெளிநாட்டு அரசர்களுடன் சேதுபதி மன்னர் நேரடித் தொடர்புகள் வைத்திருந்தார். இது போன்ற நடைமுறைகளுக்கு அவர் மதுரை அரசின் ஒப்புதலைப் பெற்றதில்லை.
சேதுபதியின் வளர்ச்சி தனது அரசுக்கு ஆபத்தாக மாறக் கூடுமென கருதிய நாயக்க அரசர், சேதுபதியை ஒடுக்கும் பொருட்டு போர்ச்சுகீசியருடன் 1639 ஆகŠட் 13 அன்று ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். நாயக்க அரசரின் இம் முயற்சியை சேதுபதி டச்சுக்காரர்களுடனான ஒப்பந்தத்தின் மூலம் முறியடித்தார். அதன் பின் மறவர்களின் மீதான நாயக்க அரசின் ஆதிக்கம் மங்கத் தொடங்கியது. ராமநாதபுர ராƒாக்களுடனான டச்சுத்தொடர்புகள் மதுரை நாயக்கர்களுக்கு எதிரான வளர்ச்சியைக் குறிக்கின்றன.
ஒரு டச்சு ஆதாரக்கூற்றின்படி 'கட்டத்தேவர்' எனும் இந்த இளவரசர் மதுரை நாயக்கரின் பிர ƒயும் உப பகுதியும் ஆவார். ஆனால் இவ் அரசருடனான எங்களின் நட்புப்பூர்வமான உடன்பாட்டுக்குப் பிறகு, மதுரை நாயக்கர்களுக்கு அவர் முன்பு அளித்த மரியாதையை அளிக்கவில்லை'.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு கடிதம் மேற்கண்ட டச்சு ஆதராத்தினை உறுதி செய்து மறவர்களின் விரிந்த இராணுவ பலத்தினை விவரிக்கிறது. அக் கடிதத்தில் பாதர் மார்ட்டின் எழுதுகிறார்.
'மறவர் சீமை எனும் இப் பேரரசு மதுரைக்குக் கட்டுப்பட்ட உப பகுதியாகும். ஆனால் இது பெயரளவுக்குத்தான். எப்போதேனும் மதுரை அரசு பலப் பிரயோகத்தின் மூலம் இவரிடமிருந்து கப்பம் வசூலிக்க முயன்றால், மதுரைப்படைகளை முறியடிக்கும் வல்லமை மறவர் பட்டாளத்துக்கு இருந்தது. பல சிற்றரசுகளைத் தன் கீழ்க் கொண்டிருந்த இவ் அரசு முழு வீச்சுள்ள அதிகாரத்துடன் இயங்கியது''.
ஏப்ரல் 1771 இல் ƒாசியŠ டு ப்ரி, வாரன் †Šடிங்Š, சாமுவேல் ஆர்ட்லி ஆகியோரைக் கொண்டு சென்னை ஆளுநரால் அமைக்கப்பட்ட குழு தன் அறிக்கையில், 'திருமலை நாயக்கர் விலக்களித்த பின்பு மதுரை அரசர்கள் இராமநாதபுரம் மறவர்களிடமிருந்து கப்பம் வசூலித்ததற்கான எந்த ஆதாராமும் இல்லை. திருமலை நாயக்கரின் வாரிசுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்திருந்தாலும் அது நடைமுறை சாத்தியமாயிருக்காது. நாயக்க மன்னர்களில் வீரம் செறிந்தவரான திருமலை நாயக்கரே கப்பம் கட்ட வலியுறுத்த இயலாத அளவிற்கு மறவர்கள் வலுவான சக்தியாகத் திகழ்ந்தனர். ராமநாதபுரத்தில் பலவீனமான ஆட்சியாளர் இருந்தபோதோ, அல்லது ராமநாதபுரம் அரசு உள்நாட்டு விவகாரங்களில் சிரமப்படும்போதோ மட்டுமே மதுரை அரசின் மேலாதிக்கத்தை அமுல்படுத்துவது சாத்தியமாக இருந்தது'' என்று கூறுகிறது.
இந்த நட்பற்ற உறவு மதுரைக்குப் படைபல உதவிகள் செய்யும் கடமையைச் சேதுபதி நிறைவேற்றத் தடையாக இருக்கவில்லை.
1656 இல் மைசூர் அரசர்கள் மதுரை நாயக்க அரசின் மீதான படையெடுப்புச் செய்தபோது திருமலை நாயக்கர், ரகுநாத சேதுபதியின் உதவியை நாடினார். அவரும் மதுரை அரசின் எல்லையிலிருந்து மைசூர்ப் படைகளை விரட்ட உதவினார்.
மதுரை ஆளுகையிலிருந்து விடுபட்டு சேதுபதி தன்னிச்சையாய் செயல்படும் சூழல் ஏற்பட்டதும் அவர் தனது சொந்த உளவுத்துறை வலைப்பின்னலை, நாயக்க ராˆƒியம் முழுவதிலும் பற்றிப் படர்ந்திருந்த மறவர்களின் உளவு வலைப்பின்னல் குறித்து இராமநாதபுரம் அரண்மனை ஆவணங்கள் பேசுகின்றன. சேதுபதிகள் நீதிபரிபாலனத்தில் நாயக்க மன்னர்களின் சட்ட திட்டங்களைப் பின்பற்றாமல் தங்களது சொந்தக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்தனர். ராமநாதபுர அரசர்கள் முதுகுளத்தூர், சாயல்குடி போன்ற பல துணை மையங்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் உருவாக்கினர்.
'மறவர் சீமையின் வளர்ந்து வரும் ராணுவ வல்லமை யதார்த்த நிலைமையை ஏற்றுக்கொள்ளும்படி நாயக்கர்களை நிர்ப்பந்தித்தது. விŠவநாதர் என்ற நாயக்க அரசின் அமைச்சர் இந்த நிலைமையைச் சமாளிக்க ஒரு சமரசத் திட்டத்தை முன் வைத்தார். அதன்படி மறவர் தலைவர்கள் 'பாளையக்காரர்கள்' என்ற புதிய பெயரில் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்' என்பது சத்திய நாதய்யரின் கூற்று.
4
மறவர் தலைவர்கள் பாளையக்காரர்கள் எனும் புதிய ஏற்பாட்டில் மேலும் வல்லமையே பெற்றனர். ஆயுதம் தாங்கிய படையையும், துறைமுகங்களையும் தொடர்ந்து பராமரித்தனர். நடைமுறையில் அவர்கள் சுயாட்சி பெற்றவர்களாகவும், மைய நிர்வாகத்தின் எத்தகைய நேரடிக் கட்டுப்பாடுகளும் அற்றவர்களாகவும் இருந்தனர். மேலும் மறவர் தலைவர்களே மத்திய அரசுக்கான இராணுவத்தை அனுப்புகிறவர்களாக இருந்தனர். இதன் மூலம் மைய அரசின் திடம் என்பது பாளையக்காரர்களின் விசுவாசத்தையும் ஒத்துழைப்பையும் சார்ந்து இருந்தது. நெருக்கடிகளைச் சந்திக்க ஒரு நிரந்தரமான ராணுவ ஏற்பாடு மதுரை நாயக்கர்களிடம் இருக்கவில்லை. இந்நிலையைச் சமாளித்து சமநிலையில் வைக்கவே சில நாயக்கப் பாளையங்கள் நாயக்க மன்னர்களால் ஏற்படுத்தப்பட்டன என்று தோன்றுகிறது. மறவர்களும் நாயக்கர்களும் ஒன்றுபட வாய்ப்பு இல்லாதிருந்ததால் மைய அரசை எதிர்த்த பாளையக்காரர்களின் கூட்டுக்கலகம் குறித்த ஆபத்து எதுவும்இல்லை. அப்படி ஏதேனும் ஒரு பிரிவு பாளையக்காரர்களின் கலகம் ஏற்பட்டால் மற்றொரு பிரிவின் உதவியோடு அதனை அடக்கிடவும் முடியும்.
பாரம்பரியமாக மறவர்கள் ஒரு வரையறைக்குட்பட்ட தன்னாட்சியும் தங்களின் எல்லைகளுக்குள் முழு சுதந்திரமும் பெற்றே செயல்பட்டனர். அத்தகைய சுதந்திரம் நாயக்கப் பாளையக்காரர்களுக்கும் இப்போது வழங்கப்பட்டது. தங்களுக்கு சமமாக நாயக்கப் பாளையக்காரர்கள் நடத்தப்படுவதை மறவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர்களைக் கடுமையாக வெறுக்கத் துவங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொருளாதார மேம்பாடு அடைந்த நாடார்களுடனும் அவர்கள் இத்தகைய எதிர்ப்பு அணுகுமுறையைக் கையாண்டனர் என்பதையே மதுரை, சிவகாசி, கமுதி, கழுகுமலைத் தொடர் கலவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. தற்போதைய சூழலில் மறவர்களின் அடக்குமுறைக்கெதிராய்ப் போராடும் தலித்துகளிடமும் இதேவித அணுகுமுறையே தொடர்கிறது.
மறவர்கள் ஒரு சாதியாகவும், நாயக்கர்கள் மற்றொரு சாதிக் குழுவாகவும் இருந்ததால் ஏற்பட்ட கசப்புணர்வு பெருகி வெளிப்படையான முரண்பாடுகளும், மோதல்களும் வளர்ந்தன. கடம்பூர், மணியாச்சி, ஏழாயிரம் பண்ணை நீங்கலாகப் பிற மறவர் பாளையங்கள் எல்லாமே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஒருங்கிணைந்த பிராந்தியமாக அமைந்திருந்தன. எனவே, பின்னர் அவை மேற்குப்பகுதி (மேகாடு)என அழைக்கப்பட்டன. எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, மேல்மாந்தை, குளத்தூர் மற்றும் காடல்குடி ஆகிய நாயக்கப் பாளையங்கள் எல்லாம் நாட்டின் கிழக்கே அமைந்ததால் கிழக்குப் பகுதி (கீகாடு) என அழைக்கப்பட்டன,
எழுதப்பட்ட வரலாற்றில் நாயக்கப் பாளையங்களை மறவர்களோ மறவர் பாளையங்களை நாயக்கர்களோ ஆண்டதாக எங்கும் குறிப்பு இல்லை. தனிப்பட்ட பாளையங்களில் இவர்களுக்குள் ஒற்றுமை இருந்ததாகத் தெரிகிறது. கட்டபொம்ம நாயக்கரின் தளபதியாக பகதூர் வெள்ளை என்ற மறவர் சமூகத்தவர் இருந்திருக்கிறார்.
தேசக்காவல் வசூலை நாயக்கப் பாளையக்காரர்கள் கையிலெடுத்தபோது மறவர்களுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மனுக்கும், நாங்குநேரி மறவர்களுக்கும் இடையேயான மோதல் இதற்கு ஓர் உதாரணமாகும். அதே நாயக்கப் படைகள்தான் திருக்குறுங்குடி சிவராமத் தலைவரையும் தாக்கின. ஆனால் இதெல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டில் தான் நடந்தது. மறவர் பாளையக்காரர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரர்களுக்கும் இடையேயான பகைமை இதற்கும் முன்பிருந்தே நிலவி வந்தது. எட்டயபுரம் நாயக்கப் பாளையக்காரர், மதுரை நாயக்கப் பாளையக்காரர், மதுரை நாயக்க மன்னரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது திருநெல்வேலி மறவர் தலைவர்கள் இணைந்து எட்டயபுரம் நாயக்கரை ஒடுக்கினர். எங்கேனும் ஒரு மறவர் பாளையக்காரர் அரசுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், தளவாய் முதலியார் நாயக்க இனத் தலைவர்களின் உதவியைப் பெற்று ஒடுக்கினார்.
5
இரண்டாம் கர்நாடகப் போருக்குப் பின் 1754 இல் மதுரை திருநெல்வேலி மீதான நவாபின் ஆட்சி உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. பிரிட்டி‰ கிழக்கிந்தியக் கம்பெனியும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, உள்ளூர் அரசுகளும் இக்கட்டான நேரத்தில் நவாபுக்கு உறுதுணையாய் நின்றன. இருந்தபோதிலும் மறவர்களின் எதிர்ப்பினால் நவாப் தெற்கே தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த எதிர்ப்பைப் புலித்தேவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். மைசூர் அரசு மற்றும் பிரெஞ்சுக்காரர்களால் உண்டான பிரச்சினைகளைச் சமாளித்த பின்னர் நவாப் தான் பிரிட்டி‰ படைகளைச் சார்ந்திருப்பதை உதறி விட நினைத்தார். ஆனால் தெற்கே மறவர்கள் தொடர்ந்து ஒரு அச்சுறுத்தலாக இருந்து வந்ததால் அவரால் அதைச் சாதிக்க முடியவில்லை. மறவர்களைப் பணிய வைக்க வேண்டும் என்பதில் நவாபும் பிரிட்டி„ாரும் உடன்பட்டனர். ஆனால் நவாபுக்கும் பிரிட்டி„ாருக்கும் இடையே இருந்த பரŠபர பகைமையால் இத் திட்டம் உடனே நிறைவேறவில்லை. இருந்தபோதிலும் வெளிநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து வந்த மறவர்களை ஒழித்துக் கட்டுவதில் நவாப் ஈடுபட்டார்.
புலித்தேவரின் எதிர்ப்பு முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. ஆனால் இராமநாதபுரம், சிவகங்கை மறவர்களை அவரால் பிரிட்டி„ாருக்கு எதிராக அணி திரட்ட இயலவில்லை. இரண்டு மறவர் அரசுகளுமே நவாபுக்கும், பிரிட்டி„ாருக்கும் எதிரான அவர்களின் போருக்காகத் திருநெல்வேலி மறவர்களை அணி திரட்டவில்லை. புதுக்கோட்டை கள்ளர் அரசு மறவர்களின் நலனுக்கு எதிராகவே நடந்துகொண்டது. இத்தகைய ஒற்றுமையின்மை நிலவியபோதும் நவாபும் பிரிட்டி„ாரும் காவல்தலைவர்கள் மற்றும் மறவர் பாளையக்காரர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டித்தான் வந்தது. சிவகிரி பாளையக்காரர் தனது நிதி முழுவதும் தீர்ந்து ஓட்டாண்டியாகும் வரை போர் புரிந்தார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதி சிவகங்கையில் மருது சகோதரர்களின் எழுச்சியைக் கண்டது. பிரிட்டி‰ எதிர்ப்புணர்வு கொண்ட போதிலும் அவர்கள் அகமுடையார் பிரிவினராக இருந்தபடியால், மறவர்களின் முழு ஒத்துழைப்பைப் பெற முடியவில்லை. குறிப்பாக இராமநாதபுர சேதுபதி இவர்களின் அதிகார எழுச்சியை விரும்பவில்லை. மறவர், அகமுடையார் முரண்பாடு பிரிட்டி„ாருக்கு மருது சகோதரர்களை எளிதாகச் சமாளிக்கப் பெரிதும் உதவிகரமாய் அமைந்தது. தஞ்சாவூர் மராத்தியர்கள் மற்றும் புதுக்கோட்டை கள்ளர்களின் எதிர்ப்பு நிலைப்பாடு தெற்கே மறவர்களின் அரசியல் ஆதிக்கம் தகர்ந்து போவதை விரைவுபடுத்தியது.
6
பிரதேசத்தின் ஆதிக்கத்துக்கான பல்முனைப் போட்டியில் பிரிட்டி„ார் வெற்றிகரமாக முன்னேறி 'மெட்ராŠ பிரசிடென்சி' யை 1803 இல் உருவாக்கினார். பாளையக்காரர்களின் அனைத்துக் கோட்டைகளும் அழிக்கப்பட்டன. சர்க்கார் பகுதியில் வாழ்ந்தாலும் சரி. பாளையப் பகுதியில் வாழ்ந்தாலும் சரி. எல்லா மறவர்களும் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி ஆணையிடப்பட்டது (1803). காவல் என்கிற நிறுவன அமைப்பு 1816 இல் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டது. காவல் மற்றும் இராணுவம் தவிர வேறு எதிலும் பயிற்சி பெற்றிராத மறவர்கள் முற்றிலுமாக நிலை குலைந்து போயினர். சிறிய நிலங்களை வைத்திருந்த மறவர்கள் பிரிட்டி„ாரின் நில வருவாய்த் திட்டத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளாயினர். ஆனால் மறவர்களின் ஆக்ரோ„ உணர்ச்சி மட்டும் மடியவில்லை. அவன் பிறப்பால் ஒரு போர்வீரனாக இருந்தமையால் சமூகத்தின் சாதுவான பகுதியைத் தனது வலிமையால் ஆளத் தனக்குரிமை உண்டு என எண்ணினான்.
மரபான நடைமுறைகளை ஒரே இரவில் மாற்றி விட முடியாது. மறவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிட்டி‰ சட்டத்தை மீறி அதற்கு மாறாகத் தங்களது காவல் பணியைத் தொடர்ந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மதச்சேவைக்குழு ஒன்றின் அறிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவிய சுவாரசியமான நடைமுறை குறித்த தகவல்களைத் தருகிறது.
'நகரத்திலிருந்து விலகி உள்ளடங்கியுள்ள நாட்டுப்புறப் பகுதிகளில் வாழும் மக்கள் முற்றிலுமாக மறவர்களின் பிடியிலேயே வாழ்கின்றனர். ஒவ்வொரு மண் குடிசையில் வாழும் வீட்டு உரிமையாளரும் மறவர்களுக்கு அரைப்பணம் (அதாவது ஒரு அணா எட்டுப் பைசாவை) வருடந்தோறும் தர வேண்டும். கால்நடை வைத்திருப்போர் ஒரு பணம் தர வேண்டும். அறுவடையின்போது எதிரிநாட்டு வயல்களில் தானியங்களை அறுத்துக்கொண்டு போவது தென் தமிழகத்தின் வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. பிரச்சினையை ஒரு நெருக்கடியை நோக்கி நகர்த்தி முற்ற விட்டு எதிரியைச் சரியான இடத்தில் நிறுத்தி சாதகமான ஒரு உடன்பாட்டுக்கு வர எதிரியை நிர்ப்பந்திக்கும் ஒரு வழிமுறையாக இத்தகைய கொள்ளைகளை அவர்கள் பயன்படுத்தினர். இத்தகைய சூழலில் காவல்காரர்களின் பயன் என்பது புரிந்து கொள்ளத்தக்கதே. மறவர்கள் பெரும்பாலும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதில்லை.
சில சமயங்களில் அதிகப் பணம் தருபவர் பக்கம் போனதும் உண்டு. அவர்களது காவல் திட்டம் - போலீசைப் போல ரோந்து சுற்றி வருவது - நூறு மறவர்கள் பத்து குழுக்களாகப் பிரிந்து பணியாற்றுவது - எனப் பலவாகும். ஒவ்வொரு குழுவும் ஒரு தனிப்பட்ட பணியைச் செய்யும். அவர்களுக்கு அவர்கள் காவல் பகுதியில் உள்ள மக்கள் ஊதியம் தந்தனர். பத்து ரூபாய்க்கு மேற்படாத பொருள் திருட்டுப் போனால் பத்து குழுக்களும் தலா ஒரு ரூபாய் வீதம் வழங்கி அதனை இழந்தவருக்கு வழங்குவர். திருட்டுப் பொருளின் மதிப்பு பத்து ரூபாயை விட அதிகமாகும்போது பத்துக் குழுக்களில் உள்ள நூறு மறவர்களும் இணைந்து அப் பொருளை மீட்பதற்காகத் திட்டமிடுவர். எனவே மறவர்கள் கொள்ளையடிப்பவர்களாப் பிறரால் கருதப்படவில்லை.
மறவர்களின் 'காவல்காரர்கள்' என்கிற அந்தŠது அனைத்துச் சமூக மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது. யாரும் அவர்களுக்குப் பயப்படவில்லை. நீண்ட நெடுங்காலமாகவே அவர்களுக்கு ஒரு தொகையை வழங்குவது என்பது பரம்பரையாக நடைமுறையாக இருந்தது. சட்ட விரோதமானதாகவே இருந்தாலும் கூட இந்தியாவில் சம்பிரதாயங்களுக்கு விரோதமாக நடப்பவர் யாரும் உண்டா? கிராமத்து மக்களால் ஆண்டுதோறும் வழங்கப்பட்ட மிகச் சிறிய தொகை அவர்களின் உடைமைகளைப் பாதுகாக்கப் பயன்பட்டதால் யாருக்கும் அது ஒரு சுமையாக இருக்கவில்லை. காவல் ஊதியத்தை ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாடாக நடைமுறைப்படுத்த முடியாததால் இவ் அமைப்பை பிற சாதி மக்கள் எதிர்க்கத் துணிவு கொண்டனர். அதைத் தொடர்ந்து வேலையிழந்த மறவர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவர்களின் திருட்டுகளினாலும், கொள்ளையினாலும் பிறரின் வெறுப்புக்கு ஆளாகி கள்ளன் எனும் சொல்லால் சுட்டப்பட்டு அவர்கள் பூர்வக்குடி கள்ளர்களாகக் கருதும் நிலை ஏற்பட்டது. 1886 இன் மெட்ராŠ நிர்வாக அறிக்கையின்படி, 'மக்களிடம் மறவர்களுக்கென்று ஒரு பேரும் பயமும் உருவாகியிருந்தது. அந்தப் பேரே அவர்களின் வன்முறைக் குற்றங்கள் வெற்றியடைய உதவின. மறவர்களை எதிர்ப்பது என்ற நினைப்பே வர விடாதபடி அந்தப் பேர் காத்தது. ஒவ்வொருவரும் மறவர்களைப் பற்றிய பயத்தோடே வளர்க்கப்படுகிறார்கள்.'
'கள்ளர்கள், மறவர்கள், அகமுடையார்கள் ஆகியோரே தென் மாவட்டக் குற்றங்களுக்குப் பொறுப்பாவார்கள். அக் குற்றங்கள் அவர்களின் எண்ணிக்கை பலத்தை மீறிய அளவிலானவை' என்று 1901 மக்கள் தொகை அறிக்கையில் பிரான்சிŠ பதிவு செய்துள்ளார். மதுரைச்சிறையில் உள்ள குற்றவாளிகளில் 42 சதவீதமும் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள குற்றவாளிகளில் 30 சதவீதமும் இம் மூன்று சாதிகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவராக உள்ளனர் என்று 1897 இல் சிறைத்துறை ஐ.ƒி. அறிக்கை தந்துள்ளார்.
1894 இல் திருநெல்வேலியில் இம் மூன்று சமூகத்தவரால் 131 கால்நடைத் திருட்டுக் குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே ஆண்டில் பிற சமூகத்தினரால் 47 திருட்டுக் குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விகிதாச்சார அடிப்படையில் பிற சமூகத்தினர் 37,830 பேருக்கு ஒருவர் திருட்டுக் குற்றவாளி என்றால், இம் மூன்று சமூகத்தில் 1497 இல் ஒருவர் திருட்டுக் குற்றவாளியாய் இருந்திருக்கிறார். மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களிலும் குற்றவியல் புள்ளி விவரங்கள் மோசமாகவே இருந்துள்ளன.
7
சென்னையில் இருந்த காலனி அரசு மறவர்களை ஈவு இரக்கமின்றி அடக்கி ஒடுக்க முடிவு செய்தது. காவல் அமைப்பு என்பது பகுத்தறிவுள்ள ஒரு சமூகத்தில் நியாயமான நிர்வாக நடைமுறையாக ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று அவர்கள் விளக்கமளித்தனர். மறவர்களுக்கு எதிராகக் 'குற்றப் பரம்பரைச் சட்டம்' அமலாக்கப்பட்டது. 1871 இல் முதலில் குற்றப் பரம்பரைச் சட்டம் என்பது பிரிட்டி„ாரின் உத்தரவுப்படி விவசாயத்தில் ஈடுபட மறுத்த பழங்குடி மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. 1897, 1911, 1923 ஆகிய ஆண்டுகளில் மும்முறை திருத்தி எழுதப்பட்ட இச் சட்டம் 1911 வரை சென்னை மாகாணத்தில் அமலாக்கப்படவில்லை.1897 இல் சென்னை அரசு இது தெற்கிற்குப் பொருத்தமில்லாத சட்டம் என முடிவு செய்தது. இருந்தபோதிலும் மாகாணத்தில் 1911இல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. எந்தக் குழுவோ, கூட்டமோ, இனமோ ƒாமீனில் வெளி வர முடியாத குற்றங்களைத் தொடர்ச்சியாகத் திட்டமிட்ட முறையில் புரிந்தால், அதனைக் குற்றப்பரம்பரை என அறிவிக்கும் அதிகாரத்தை அரசுக்கு இச் சட்டம் வழங்கியது. ஒருமுறை அறிவிக்கப்பட்டு விட்டால் அக் குழுவின் உறுப்பினர் இதனை எதிர்த்து நீதிமன்றங்களில் முறையிட முடியாது.
1871 ஆம் ஆண்டின் இச் சட்டப்படி இக் குற்றப் பரம்பரையினரின் மறுசீரமைப்பிற்கும், மறுவாழ்விற்குமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருந்தது. இச் சட்டத்தில் பின்னர் கொண்டு வரப்பட்ட திருத்தமானது இக்கடப்பாடு அரசுக்கு இல்லையென நீக்கப்பட்டது. இது இச் சட்டத்தை பெரும் சமூகங்களான கள்ளர்கள், மறவர்களுக்கு எதிராக அரசு பயன்படுத்த வகை செய்தது. குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்ட உறுப்பினர்கள் தாங்களே முன்வந்து காவல்நிலையத்தில் பதிவு செய்து கொள்ளும்போது கைரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மறுத்தால் அதுவே ஒரு குற்றமாகக் கருதப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனையோ இருநூறு ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்பட்டது.
குற்றப் பரம்பரைச் சட்டம் மறவர்கள், கள்ளர்களின் நடமாட்டத்தினைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியது. இச் சட்டத்தின் பிரிவு 10(a) மோசமான நபர்கள் மற்றும் படுகுற்றவாளிகள் எந்த நேரத்தில் காவல்நிலையத்தில் இருக்க வேண்டுமென்பதை நிர்ணயம் செய்தது. கள்ளர்கள், மறவர்களைப் பொருத்தமட்டில் இது இரவு பதினொரு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை என ஆனது. இரவு நேரங்களில் குற்றங்கள் நிகழாமல் தடுக்க அரசு இம் முயற்சியை எடுப்பதாகக் கூறியது. ஆனால் இதன்படி கள்ளர்கள் மற்றும் மறவர் இன மக்கள் தினசரி காவல் நிலையத்திலேயே உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
70,000 முதல் 80,000 வரை கள்ளர்கள் வசித்து வந்த திருமங்கலம் மற்றும் மதுரை மாவட்டத்தின் பக்கத்து வட்டாரங்களில் 1920 மத்தி வரை இச் சட்டத்தின் கீழ் 14,283 பேரும் 1924 இன் இறுதிக்குள் 32,054 பேரும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
இச் சட்டத்தின் கொடூரத்தை அறிந்த சில கள்ளர்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய பெருமித உணர்வுடன் இதனை எதிர்க்கத் தொடங்கினர். ஏப்ரல் மூன்றாம் தேதி மதுரைக்கருகே ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் தங்களைப் பதிவு செய்ய மறுத்தவர்களைக் கைது செய்ய வந்த போலீசாரை எதிர்த்தனர். கம்பு, அரிவாள், மண்வெட்டியுடன் திரண்ட மக்களைப் போலீசார் சுட்டனர். சம்பவ இடத்திலேயே பதினொரு பேர் இறந்தனர். காயம் பட்டிருந்த மேலும் எட்டு பேரில் மூவர் பின்னர் மரணமடைந்தனர். இச் சம்பவத்தால் மாகாண அரசு 'கள்ளர் மறு சீரமைப்பு திட்ட' த்தை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இத் திட்டத்தின் கீழ் கள்ளர்களுக்குப் பள்ளிகள், கிராம கூட்டுறவுக் கடன்கள், மற்றும் நில மானியங்கள், மதுரை நூற்பாலைகளில் வேலைகள், நீலகிரி மற்றும் ஆனைமலையில் டீ மற்றும் காபித் தோட்டங்களில் வேலைகள் ஆகியவை தரப்பட்டன. பதிவேடுகளின்படி சுமார் ஐயாயிரம் பிரன்மலைக் கள்ளர்கள் 1920 களில் ஆனைமலைக்கு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டுள்ளனர். இத்தகைய திட்டத்தைத் திருநெல்வேலி மறவர்களுக்கும் அமல்படுத்தக் கள்ளர் சீரமைப்புத் திட்டத்தின் அளவும், செலவும் அரசுக்குத் தடையாக இருந்தன.
குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஒழிக்கக் காங்கிரŠ முயன்றது. 1915 க்கும் 1920 க்கும் இடைப்பட்ட காலத்தில் ƒார்ˆ ƒாசப் எனும் மதுரையைச் சேர்ந்த காங்கிரŠகாரர் இதற்கான ஒரு பிரச்சாரத்தைத் துவக்கினார். 1920 களில் தஞ்சை காங்கிர…ாரும் இதில் ஈடுபட்டனர். ஆனால் திரு. முத்துராமலிங்கத் தேவர் அவர்களே இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியதில் வெற்றியடைந்தார். 1934 இல் அவர் இதற்கென இயக்கம் நடத்தி மறவர்களையும், கள்ளர்களையும், இச் சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்ய வேண்டாமென அறைகூவல் விடுத்தார். 1937 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் குற்றப் பரம்பரைச் சட்டம் ஒழிப்பு என்பது காங்கிர…ின் முக்கிய கோ„மாகத் தமிழகத்தில் மாறியது.
மறவர்களின் கோரிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய திரு. முத்துராமலிங்கத்தேவர் தேர்தலில் ƒŠடிŠ கட்சி வேட்பாளராகிய இராமநாதபுரம் இராƒாவை எதிர்த்து மகத்தான வெற்றி பெற்றார். அதன் பின்னர் எழுச்சி பெற்ற ƒனநாயக அரசியல் அமைப்பில் முத்துராமலிங்கத் தேவர், தேவர் சமூகத்தின் கண்கண்ட தெய்வமாகக் கருதப்பட்டார்.
பல அரசியல் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இச் சட்டம் தேவை என 1945 வரை பிரிட்டி‰ ஆளும் வர்க்கம் நம்பியது. மதுரையில் இருந்து வந்திருந்த ஒரு மனுவிற்கு பதில் எழுதுகையில் கவர்னரின் ஆலோசகர்களில் ஒருவர் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். 'எக்காரணம் கொண்டும் குற்றப் பரம்பரைச் சட்டத்தை என்னால் தள்ளுபடி செய்ய இயலாது. அதை இன்னும் நன்றாகச் செயல்படுத்துவதற்காக மாற்றங்கள் என்றால் சரி. நீக்குவது என்றால் முடியாது' என்கிறார். இறுதியாக 1947 இல் காங்கிரŠ இடைக்கால அமைச்சரவையால் இச் சட்டம் நீக்கப்பட்டது. ஆனால் காங்கிர…ாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் முத்துராமலிங்கத்தேவர் 1949 இல் ஃபார்வர்டு பிளாக்கைத் தொடங்கினார். மறவர்கள் பெரும் எண்ணிக்கையில் காங்கிர … விட்டு வெளியேறித் தேவரின்த்பார்வர்டு பிளாக்கில் இணைந்தனர்.1957 இல் முதுகுளத்தூர் கலவரங்களின் காரணமாக மறவர்களைத் தமிழகக் காங்கிரŠ ஆட்சி கொடூரமாகக் கையாண்டது. குற்றப் பரம்பரைச் சட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த இம் மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அமல்படுத்த வேண்டிய தருணத்தில் காங்கிரŠ ஆட்சி அவர்களைக் கடுமையாக ஒடுக்கியது. துயரப்பட்ட முன் சரித்திரம் அவர்களுக்கு இருந்தது மறுக்கப்பட்டது. இது ஒரு வருந்தத்தக்க நிலையே.
கல்வியும் வளர்ச்சியும் இம் மக்களின் பெருந்திரளானவர்களுக்கு இன்னமும் போய்ச் சேரவில்லை. இன்றும் தொடர்கிற அவர்களின் கொந்தளிப்புக்கும், தாக்குதல் மனோபாவத்துக்கும் இவையே காரணமாக அமைந்துள்ளன.
வட ஈழ மறவர் மான்மியம்
முத்தமிழ்காத்த முடி மன்னரின் கொடிபறக்கவும், குடை சிறக்கவும், கொற்றந்தழைக்கவும் வித்திட்ட பெருமை படைவீரர்களானமறவர்குலப் பெருங்குடிமக்களையே முதற்கண் சாரும்.இக்குலத்தவர்களின் வாள்வலிக்குந் தோள்வலிக்கும், வயமிகுந்த ஆள்வலிக்கும் எட்டாத தேசத்து அட்டதிசை மன்னரும் பட்டாங்கில் அஞ்சிப்பயந்தனர்.
Read full book click here
book 26
மறவர் உறவு முறை
| எழுத்தாளர் / தொகுப்பாளர் : | சின்னத்தம்பி.எம்.ஏ | |
| பதிப்பு : | முதற் பதிப்பு(ஜூன் 2002) | |
| விலை : | 150 .00 In Rs | |
| பிரிவு : | ஆய்வு | |
| பக்கங்கள் : | 368 | |
| ISBN : | | |
| பதிப்பகம் : | இளவழகன் பதிப்பகம் | |
| முகவரி : | 16, முதல் தளம்ஞ இரண்டாவது தெரு | |
| பாலாஜி நகர் | ||
| சென்னை 600014 | ||
| இந்தியா | ||
| ||
நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுத தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்க கூட முடியவில்லை.
நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையை சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது?
வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா? கள்ளர்களின் பூர்வீக தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய பொய். ஏன் கள்ளர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளின் மீது அக்கறை கொள்ளவேயில்லை
அவருக்கு கள்ளர்களின் வாழ்க்கை அவலங்களை விடவும் அவர்கள் இரவில் களவு செய்யப்போவதில் தான் அதிகமான சுவராஸ்யமிருக்கிறது. இதை தான் காலம்காலமாக தமிழ் சினிமா காட்டி வருகிறது. திருடன் எப்பேர்பட்ட காவலையும் மீறி திருடிவிடுவான். அவனை போலீஸôல் ஒருநாளும் பிடிக்கவே முடியாது. திருடன் அதி புத்திசாலி.
இருட்டிலும் அவனுக்கு கண் தெரியும் , அவன் ஒரு மாயாவி என்று தமிழ் சினிமா கட்டிய பிம்பத்திற்கும் அசலான கள்ளர்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ வேறுபாடு இருக்கிறது.
மதுரையை சுற்றிய கள்ளர் கிராமங்களில் வாழ்ந்து வருபவர்களிடம் பேசிப்பாருங்கள். எவ்வளவு வாழ்க்கை அவலங்களை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். எத்தனை ரணங்கள், வலிகள் அவர்களிடம் மறைந்திருக்கின்றன என்று புரியும்.
வெங்கடேசன் கள்ளர்களின் அந்த வலியை வாசகனுக்கு பகிர்ந்து தரவில்லை. தகவலாக திரட்டி நிரப்பியிருக்கிறார். வேல ராமமூர்த்தியின் எழுத்தில் வெளிப்படும் கள்ளர் வாழ்க்கையின் ரணமும் ஆற்றாமையும் உக்கிரமான கோபமும் வெங்கடேசனின் நாவலில் துளியுமில்லை.
கள்ளர் வாழ்வியல் பகுதி முழுவதும் திருடன் என்ற சினிமா பிம்பத்தை இன்னும் ஊதி பெருக்கியிருக்கிறார். மாடு திருடுதல், தானியக்கொள்ளைக்காக ரயிலில் திருடுவது. வீடு புகுந்து கன்னம் வைப்பது என்று களவினை கொண்டாடுகிறார். ஜல்லிகட்டில்மாடு பிடிப்பதையும், பார வண்டி திருட்டையும் சிலாக்கிறார்.
இந்தக் கொண்டாட்டத்தில் அடிபட்டு போய்விடுவது அவர்களின் நிம்மதியற்ற அன்றாட வாழ்க்கை மற்றும் கள்ளர் குடும்ப பெண்களின் அல்லல்படும் பிழைப்பு. குற்றாவளிகளாக அடையாளம் காணப்பட்டு சிறை சென்று திரும்பியவர்களை சமூகம் நடத்தும் புறக்கணிப்பு போன்றவை இந்த நாவலில் விரிவாக அடையாளம் காட்டப்படவேயில்லை.
கள்ளர் வீடுகளுக்கும் கதவிருக்கிறது. அதை பூட்டிக் கொண்டு தான் உறங்குகிறார்கள். கள்ளர் வீட்டு பெண்களின் தாலியும் தங்கம் தான் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. வாழ்க்கை நெருக்கடி தான் மனிதனை திருடனாக்குகிறது. எவனும் பிறப்பால் திருடன் இல்லை.
பழங்கதைகளில் வரும் திருடர்களை போல மதுரைக்கள்ளர்கள் எப்படி திருட போனார்கள். எப்படி கன்னம் வைத்தார்கள். அதில் எந்த கோஷ்டி பிரபலமானது என்பதை இருநூறு பக்கங்களுக்கு விளக்கியிருக்கிறார். அதிலாவது ஏதாவது புதிய விஷயங்கள் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை
சிறுவயதில் கால் திருடன் அரை திருடன் முக்கால் திருடன் முழு திருடன் என்று நாலு திருடர்களை பற்றிய கதை ஒன்றை கேட்டிருக்கிறேன். இதில் முழுதிருடன் அப்பா, மற்ற மூவரும் பிள்ளைகள். கால் திருடன் உடைந்த மண்பானை ஒட்டை காலணா என நம்ப வைத்து ஏமாற்றுவான். அரை திருடன் ஒரு ஆளை துணைக்கு கூட்டி போய் ஜவுளிகடையில் உட்கார வைத்துவிட்டு தேவையான பொருளை வாங்கி வந்துவிடுவான். திருடன் கூட்டி போன ஆள் மாட்டிக் கொள்வான்.
முக்கால் திருடன் இதில் என்ன சவால் இருக்கிறது என்று அரண்மனைக்குள் உடும்பை போட்டு ஏறி அத்தனை காவலையும் மீறி ராணியின் கழுத்து மாலையை திருடி வருவான். இது எல்லாம் திருட்டா என்று முழுத்திருடன் திருடர்களை பிடிக்க மாறுவேஷத்தில் வந்த ராஜாவை மடக்கி, தான் உதவி செய்தவாக அவர் முத்திரை மோதிரத்தை வாங்கி கொண்டு அவரை ஒரு சாக்கில் கட்டி வைத்துவிட்டு அரண்மனைக்கு போய் முத்திரை மோதிரத்தை காட்டி வேண்டிய தங்கம் அள்ளி கொண்டு வந்துவிடுவான்.
இந்தக் கதை வேடிக்கைக்காக சொல்லப்படுகிறது. இதை சரித்திர உண்மையாக்கியிருக்கிறார் வெங்கடேசன்.
யாரும் நுழைய முடியாத திருமலை நாயக்க மன்னரின் அரண்மனைக்குள் இரண்டு கள்ளர்கள் கன்னம் வைத்து போய் ராஜ முத்திரையை திருடி வந்த காரணத்தால் அவர்களை பிடித்து வர ஆணையிட்டு சபைக்கு கொண்டு வந்ததும் திருடியவனுக்கு மூன்று சவுக்கடி தந்து இனிமேல் நீங்கள் தான் மதுரை நகரை காவல் காக்க வேண்டும் என்று பட்டயம் தருகிறார். திருடனை அரசன் முன் கொண்டுவந்தவனுக்கு கள்ளநாட்டில் நீதி பரிபாலனம் செய்யும் உரிமை தருகிறார்.
திருடனும் தான் அரண்மனையில் கன்னம் வைத்த ஒட்டை அப்படியே இருக்கட்டும் என்று பணிவாக வேண்டுகோள் விடுக்கிறான். திருமலை நாயக்கரும் அதற்கும் சம்மதிக்கிறார். எவ்வளவு அப்பாவியான ராஜா. எவ்வளவு அப்பாவியான மக்கள். திருடன் கையில் கஜானா சாவியை ஒப்படைத்து விடுவது என்பது எவ்வளவு பெரிய ராஜதந்திரம் .
இதுதான் கள்ளர்களின் வீரபரம்பரை சான்று என்று நாவலின் இரண்டாம் பகுதி கூறுகிறது.
கள்ளர்கள் மதுரையை காவல் புரிந்தார்கள் என்று புகழாரம் சூட்டுகிறது. சரி காவல் புரிந்தார்கள். யாருக்கு. எதற்காக, யாரிடமிருந்து ? சம்பளத்திற்காக செய்த வேலை தானே அது. அவர்கள் வாழ்க்கை அப்போது எப்படியிருந்தது. மதுரை நகரையே காவல் காக்கின்றவன் என்பதற்காக மாநகரில் அவர்கள் தங்கி கொள்ள வசதி செய்யபட்டிருந்தா? இல்லை அவர்கள் மனைவி மக்கள் அரசு அதிகாரத்தில் பங்கு பெற அனுமதிக்கபட்டார்களா, இல்லையே? மீனாட்சி அம்மன் கோவிலில் கள்ளர்களுக்கு என்ன மரியாதை தரப்பட்டது.? கள்ளழகர் உருவான கதை அறிந்தவர்கள் அதன் பின் உள்ள புறக்கணிப்பின் வலியை அறியாமலா இருப்பார்கள்?
கள்ளர்களை ஒடுக்குவதற்கு நாயக்கர் செய்த தந்திரமே இந்தக் காவல் முறை. தன் கையை வைத்து தன் கண்ணைக் குத்தி கொள்ள வைப்பது போன்றது.மதுரை வீரன் கதையில் கள்ளர்கூட்டத்தை ஒடுக்குவதற்காக மதுரை வீரன் வந்தான். ஒடுக்கினான் என்று நாட்டார் கதை பேசுகிறதே. அது நாயக்கர் காலத்தில் தானே நடந்தது.
ராமேஸ்வரம் போகின்ற யாத்ரீகர்களை கொன்று வழிப்பறி செய்தார்கள் என்ற குற்றசாட்டுகள் லண்டன் நீதிமன்றம் வரை சென்ற வழக்குகளை இன்றைக்கும் வாசிக்க முடிகிறதே?
கள்ளர்கள் கிராமங்களில் காவல் பணி புரிவதும், வரி வசூலில் ஈடுபட்டு வந்ததிற்கும் நாயக்கர் காலத்திற்கு முன்பே நிறைய சான்றுகள் இருக்கின்றன. வெங்கடேசன் நாயக்கர்களால் தான் கள்ளர்கள் நல்வாழ்வு பெற்றார்கள் என்று நாயக்கர் பெருமையை உயர்த்தி பிடிக்கவே மறைமுகமாக முயற்சித்திருக்கிறார்.
மதுரை மாநகர் காவல் தான் கள்ளர்களுக்கு கிடைத்த பெரிய பேறு என்று வைத்துக் கொண்டாலும் காவல் பணிக்கு எத்தனை பேர் போயிருப்பார்கள். அதிகம் சென்றால் நூறு பேர் போயிருக்க கூடும். மற்றவர்கள். தாதனூரை தவிர மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்த கள்ளர்கள் எதை நம்பி வாழ்ந்தார்கள். மதுரை ஏன் அவர்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை. எது அவர்களை தொடர்ந்து இருண்ட மூலைகளில் குற்றசமூகமாகவே வைத்திருந்தது.
மதுரையின் மேற்கில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்தை தான் வெங்கடேசன் உருமாற்றி புனைஉருவம் தந்திருக்கிறார். இந்த கிராமம் குற்றபரம்பரை சட்டத்தில் பாதிப்பு அடைந்த கிராமம். ஊரின் வடபுறத்தில் சமண மலை ஒன்றும் சமண பிரதிமைகளும் காணப்படுகின்றன. மலையின் உச்சியில் ஆடுஉறிச்சான் பாறை என்று ஒன்று காணப்படுகிறது. அங்கே திருடி கொண்டு போன ஆட்டை உறிப்பார்கள். இந்த ஊர் பற்றிய ரிக்காடுகளே அவரது நாவலின் முக்கிய அம்சம்.
அந்த ஊரின் துயர்படிந்த வரலாற்றையாவது முழுமையாக சித்திரிக்க முடிந்திருக்கிறதா என்றால் அதிலும் தோல்வியே. தரவுகள், தகவல்கள் கையில் இருந்த போதும் கதையாக்க முடியாத அவரது எழுத்து தோல்வியே பக்கம் பக்கமாக பிரசங்கம் போல நீட்டி செல்கிறது.
திருடுவது, பிடிபடுவது, விசாரணை, தண்டனை, மறுபடியும் அதன் தொடர்ச்சியான வன்கொலை என்று சலிப்பூட்டுகின்றன சம்பவங்கள். அதை தினுசு தினுசாக மாற்றி சொல்லிபார்த்திருக்கிறார்.
தேர்தல் சுற்றுபயணம் போகின்றவர்கள் ஒரு நாளில் எண்பது கிராமங்களை வட்டமடித்து வருவதை போல தான் நாவலும் மாறிமாறி வட்டமடிக்கிறது. தாதனூர் . பிறகு உசிலம்பட்டி , பிறகு கம்பம் .அதற்குள் பெரியார் அணைகட்டு. இடையிடையில் மதுரை.
பெரியார் அணை கட்டுவதில் ஈடுபட்ட கள்ளர் இன மக்களின் வம்பாடுகளை, உயிரிழப்பை பற்றி நிறைய நானே கேள்விபட்டிருக்கிறேன். அணைக்கட்டு வேலையில் இறந்து போனவர்களின் கல்லறைகளை நேரில் பார்த்திருக்கிறேன். கொட்டும் மழையும் நோயும் விஷக்கொசுக்கடியும் உள்ள சூழலில் அவர்கள் ஒன்றிணைந்து அணையை உருவாக்கிய அந்த பிரம்மாண்ட கனவு நாவலில் காற்றில் பறக்கும் இலவம்பஞ்சு போல போய்விடுகிறது. பென்னி குக்கின் வருகையும் அவரது அணைக்கட்டு முயற்சிகளும் தனித்து விரிவாக எழுதப்பட வேண்டிய நாவலது.
பெரியார்அணை முடிந்தவுடன் நீர்பங்கீடு அடுத்தது சிடி ஆக்ட் எனப்படும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு தாவி செல்கிறார்..
குற்றபரம்பரை சட்டம் கள்ளர்களை ஒடுக்குவதற்காக மட்டும் போடப்பட்ட சட்டமல்ல. மாறாக இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் உப்புக் குறவர்கள்.அவர்கள் ஊர் ஊராக போய் உப்பு விற்றார்கள். வெள்ளை அரசாங்கம் உப்பை தாங்களே வாங்கி விற்க துவங்கிய பிறகு இவர்களை ஒடுக்க நினைத்தது. ஆனால் அவர்களை கட்டுபடுத்த முடியவில்லை.
இந்த நேரம் இந்தியாவில் ரயில் போக்குவரத்து துவங்கவே உப்பு குறவர்களை ஒடுக்குவதற்காக அந்த இனமே திருடர்கள் என்று அறிவித்து அவர்களை குற்றவாளிகள் ஆக்கியது. அப்போது தான் இந்த சட்டம் மறுஉயிர்ப்புபெற்றது.
உடனே இந்த சட்டத்தை பயன்படுத்தி தொல்லை தரும் நபர்களை ஒடுக்கிவிடலாம் என்று காவல் உயரதிகாரிகள் சொன்ன ஆலோசனை படியே பல்வேறு மாநிலங்களிலும் உள்ள ஆதிவாசிகள், அடித்தட்டு இனங்களை, குற்றக்குழுக்களை ஒன்றிணைத்து குற்றபரம்பரை சட்டம் (The Criminal Tribes Act ) 1871 அமுலுக்கு வந்தது. அதன் திருத்தபட்ட வடிவம் 1911ல் ஏற்றுக் கொள்ளபட்டு நடை முறைபடுத்தபட்டது.
இந்த நடைமுறைபடுத்தலுக்கான வழிகாட்டும் குழுவில் ராமானுஜம் அய்யங்கார் என்ற தமிழ் காவல் துறை அதிகாரிசெயல்பட்டிருக்கிறார். வங்காளத்தில் இருந்த நதிக் கொள்ளையர்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்த நாடோடி வழிப்பறி கொள்ளைகளையும் தடுக்க இந்த முயற்சி தீவிரப்படுத்தபட்டது.
இந்தியா முழுவதும் 160 சாதிகளின் மீது இந்த சட்டம் பாய்ந்திருக்கிறது. இதில் சில இன்றும் நடைமுறையில் இருக்கிறது. வங்காள எழுத்தாளர் மகேஸ்வததா தேவி குற்றப்பரம்பரையான ஆதிவாசிகளின் உரிமைக்காக இன்றும் போராடிவருகிறார்.
தமிழ்நாட்டில் இந்த சட்டம் பெரிதும் அதிகார வர்க்கத்தின் நலனுக்ககாவே நடைமுறைபடுத்தபட்டது. அதை எதிர்த்து பெருங்காமநல்லூரில் போலீஸôருடன் துப்பாக்கி சூடு நடந்து பலர் உயிர்பலியானர்கள். எதிர்ப்பு வலுத்தது. முத்துராமலிங்க தேவருடன் பி. ராமமூர்த்தி ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் போராடி அந்த சட்டத்தை ரத்து செய்தார்கள் என்பதே வரலாறு.
குற்றபரம்பரை சடடம் பற்றி பேசும் போது அதில் விவசாய நிலம் கொண்டவர்கள். நில வரி கட்டுபவர் விதி விலக்கு பெற்றதும், தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த கள்ளர் இன மக்கள் மீது இந்த சட்டம் தீவிரமாக பாயவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏன் மதுரையின் மேற்கில் உள்ள கள்ளர் கிராமங்கள் அடைந்த பாதிப்பை ஆற்று பாசனம் சார்ந்த கிராமம் அடையவில்லை, கிழக்கே ராமநாதபுர பகுதி அதிகம் பாதிப்பு கொள்ளவில்லை. ஆகவே இது முழுமையான அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறை சட்டமாகவே அமுல்படுத்தபட்டிருக்கிறது
வெங்கடேசன் மேடை பேச்சை போல குற்றபரம்பரை தரவுகளை அடுக்கி கட்டியிருக்கிறார். சிடி ஆக்டின் பாதிப்போ. மறுவாழ்வு தருகிறோம் என்ற பெயரில் நடைபெற்ற அதிகார கூத்துகளோ மனதை பாதிப்பதாக அமையவில்லை.
குற்றபரம்பரை சட்டம் ஒழிக்கபடுவதன் முன்பே நாவல் முடிந்து போய்விடுகிறது. எப்படி இதிலிருந்து மக்கள் விடுதலை ஆனார்கள் என்பதில் தான் ஒன்றுபட்ட மக்களின் முயற்சியும் ஆவேசமும் உள்ளது. அதை நாவல் கவனம் கொள்ளவேயில்லை.
அதே நேரம் இவ்வளவு அரும்பாடுபட்டு தங்கள் உரிமைகளை பாதுகாத்துகொண்ட மக்கள் இன்று தனது சகமனிதர்களான தலித் மக்களை தேர்தலில் நிற்கவிடாமல் தடுப்பதும் அவர்கள் அடிப்படை உரிமையை பறித்து வன்கொலை செய்வதும் அதே மதுரை பகுதியில் தான் நடந்துவருகிறது என்ற சமூக உண்மையை மறந்து இந்த நாவலை வாசிக்க முடியவில்லை.
நாவல் சிடி ஆக்ட் பற்றிய நிறைய ஆவணங்களை ஒன்று சேர்த்திருக்கிறது. அவை எல்லாம் கீழக்குயில் குடி ஆவணங்கள் தான். அந்த ஆவணங்களின் உதவியால் மட்டும் மனித அவமானத்தின் வலியை எழுத்தில் கொண்டுவர இயலவில்லை.
ரயில் வருகை, பள்ளிகளின் வருகை, போலீஸ் ஸ்டேஷன் அமைக்கபட்டது என்று தனிதனி அத்யாயம் போட்டு பிரித்து எழுதிய வெங்கடேசன் கண்டு கொள்ளாமல் விட்டு போன முக்கிய விஷயம் கிறிஸ்துவத்தின் வருகைûயும் அது மதுரை சீமையில் ஏற்படுத்திய உள்ளார்ந்த கொந்தளிப்பும்.பசுமலையில் உள்ள மதுரை மிஷினரி பற்றி ஏற்படுத்தி பள்ளி ,போதகர்கள் சேவை பற்றி போகிற போக்கில் சொல்லி போக தெரிந்தவருக்கு மதுரை மிஷனரியின் 75 ஆண்டுகால வரலாற்றின் இருண்ட பக்கங்களை புரட்டி எழுத வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை .
நாயக்க மன்னர்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது கிறிஸ்துவரின் வருகையும் அதை தொடர்ந்த மதமாற்றங்களும். அவர்களை ஏற்றுக் கொள்வதாக அல்லது ஒதுக்கி வைப்பதா என்று தெரியாத குழப்பம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மறவர் நாட்டில் கிறிஸ்துவம் நுழைவதற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருந்தது. பிரசங்கிகள் தாக்கபட்டார்கள். அடித்து காயப்படுத்தபட்டார்கள்.
ஜெசுவிட் பாதிரி ஒருவர் தனது சபைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிரசங்கம் செய்ய போகின்றவர்களின் பல்லை உடைக்கிறார்கள். அதையும் மீறி சென்றால் பிடித்து சிறையில் இடுகிறார்கள். திரும்பவும் அந்த பகுதிக்கு போனால் தலையை துண்டித்துவிடுகிறார்கள் என்று புகார் சொல்கிறார்.
உடனே திருச்சபை வெளிநாட்டிலிருந்து வரும் பாதிரிகள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இதற்காக இன்றுள்ள களியக்காவிளை பகுதியில் தமிழ் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்கிறது. அங்கே பயின்று பிரசங்கத்திற்கு வந்தவர்கள் தங்களை ஐயர் என்று சொல்லிக் கொண்டுவேஷ்டி அணிந்திருந்தார்கள். சைவம் மட்டுமே சாப்பிட்டார்கள். அப்படியும் அவர்களால் தங்கள் மத நம்பிக்கையை மக்களிடம் சுலபமாக கொண்டு போக முடியவில்லை என்று ஜெசுவிட் மிஷனரி ஏடுகள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பக்கம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ மக்கள் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டனர். போர்த்துகீசியர் அதற்கு நிதி நல்கை தந்தனர் என்பதால் போர்த்துகீசிய வணிகர்கள் அந்த பகுதிகளில் வரிவிலக்கோடு வணிகம் செய்ய அனுமதிக்கட்டனர். அது நிர்வாக குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு நாயக்க மன்னிரின் முன்னாலும் இருந்த முக்கிய கேள்வி கிறிஸ்துவ போதகர்களை என்ன செய்வது. எப்படி நடத்துவது என்பதே. ஆராய்ந்து பார்த்தால் பல அரசியல் மாற்றங்களின் பின்னே இந்த காரணம் ஆழமாக வேரோடியிருக்கிறது.
ராணி மங்கம்மாளை காண்பதற்காக லிஸ்பனில் இருந்து வந்த கிறிஸ்துவ மிஷனரியை சேர்ந்த மூத்த பாதிரி முதன்முறையாக ஒரு உலக உருண்டை ஒன்றை அவளுக்கு பரிசளிக்கிறார். அதுவரை அவள் உலக உருண்டை பற்றி கேள்விபட்டது கூட கிடையாது. வியப்போடு பார்க்கிறாள். அந்த உலக உருண்டையில் தங்க பிடி உள்ளது. ஊர்களின் பெயர்கள் பொறிக்கபட்டிருக்கின்றன. உலகம் இவ்வளவு தானா என்று பிரமிப்பதாக இருக்கிறது.
அத்தோடு இரண்டு லென்சுகளை பரிசாக தருகிறார். ஒன்று தூரத்தில் உள்ளதை அருகில் காட்டுகிறது. மற்றது அருகில் உள்ளதை தூரத்தில் காட்டுகிறது. இது எப்படி என ராணி வியக்கும் போது இது தேவனின் மகிமை என்கிறார் மிஷனரி.
அவள் மிஷனரியை பாராட்டி தன் எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல அனுமதித்து தன் சார்பில் பரிசுகள் தருகிறாள். ஆனால் அன்றிரவே மனம்மாறி அவரை கைது செய்து சிறையில் அடைத்து தன் எல்லைக்குள் அவர் நடமாட கூடாது என்று வெளியேற்றினாள் என்றும் மிஷனரி ரிக்காடுகள் கூறுகின்றன.
இப்படி தோண்ட தோண்ட பூதம் கிளம்பும் விஷயங்களை கண்டு கொள்ளாமல் ஏன் விலக்கி போனார் . ஒரே காரணம் இந்த தகவல்கள் எளிதில் கிடைக்க கூடியதில்லை. இதற்காக பாரீஸில் உள்ள ஆவணகாப்பகத்தை நாட வேண்டியதிருக்கும். தேடி அலைவது பெரிய சவாலாக இருந்திருக்கும். இன்னொன்று அதை கற்பனை செய்து ஆழமாக எழுதுவது மிகப்பெரிய வேலை.
வெங்கடேசன் நாவலில் வரும் மிஷனரி போதகரின் கடிதங்கள் யாவும் வெற்று தகவல்கள் மட்டுமே.
நாவல் பெருங்காம நல்லூர் போலீஸ் துப்பாக்கி சூட்டோடு நிறைவு பெறுகிறது. நாளிதழ் செய்தி வரை எத்தனையோ தகவல்கள் கிடைப்பதால் அதை எளிதாக நிரப்பமுடிந்திருக்கிறது.
நாவலை படித்து முடித்த பிறகு ஒவ்வொரு அத்தியாயத்திலும் வந்து போகும் பத்து பதினைந்து பெயர்கள், சம்பவங்கள் எதுவும் நினைவில் இருப்பதில்லை. எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். துண்டு துண்டான அத்யாயங்கள்.
கதை என்று இந்த நாவலில் எதுவுமில்லை. தலைமுறை தலைமுறையாக வளரந்து செல்லும் கதை போக்கு கூட இல்லை. சர்வே ரிக்கார்ட் அல்லது சென்சஸ் ரிக்கார்ட் ஒன்றை எடுத்து அதில் வரும் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அத்யாயம் தகவல்களை நிரப்பி எழுதினால் எப்படியிருக்குமோ அந்த சோர்வு தான் மிஞ்சுகிறது.
நாவல் முழுவதும் ஆங்காங்கே சமணர்களை பற்றிய விஷயங்கள் லேசாக தூவப்பட்டிருக்கின்றன. ஒன்றிரண்டு இடங்களில் புத்த பிரதிமை வருகிறது. அது எதற்கு என்று நாவல் முடிந்தபிறகும் புரியவேயில்லை. ஒரு வேளை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் இருக்கிறது சமணமும் பௌத்தமும் போட்டுவிட்டால் மத ஒற்றுமையை பற்றிய எழுதியதாக சொல்லலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?
மிதமிஞ்சிய தகவல் சேகரிப்பும், தான்சேர்த்து வைத்த தகவல்களை மொத்தமாக கொட்டி வாசகனை திணறடிக்க வேண்டும் என்ற முனைப்பும், கற்பனையே இல்லாத வறட்டு விவரணைகளும், கோணங்கியின் மொழியிலிருந்து உருவி எடுக்கபட்ட இருளை பற்றிய, நிசப்தம் பற்றிய, ஊரை பற்றிய, களவு, வேட்டை குறித்த வர்ணனைகளும், முழுமையற்ற கதாபாத்திரங்களும், தொடர்ந்து வெங்கடசனே நாவலில் நுழைந்து செய்யும் பிரசங்கங்களும் நாவலை மிக பலவீனமானதாக ஆக்குகின்றன.
காவல் கோட்டம் மதுரையை பற்றிய வெறும் கட்அவுட் சித்திரம் மட்டுமே
காவல் கோட்டத்தில் பாராட்டும்படியாக எதுவும் இல்லையா என்று கேட்பது புரிகிறது. உண்மையில் பாராட்ட பட வேண்டியவர்கள் காவல்கோட்டம் போன்ற நாவலை கூட விபரம் தெரியாமல் படித்துவிடக்கூடிய வாசகர்கள் தான். ( நான் இதற்கு பலியாக்கபட்டவன். ஆகவே என்னை சேர்க்க முடியாது )
அதிலும் வெளியான நாலு நாளில் அதை படித்து விகடன் விருதுக்கு தேர்வு செய்த அந்த மகானுக்கு இந்த ஆண்டின் சிறந்த வாசகர் விருது தரலாம்.
பின்குறிப்புகள்
என்னிடம் உள்ள பிரதியில் கடைசி அத்யாயம் இரண்டு தடவை அச்சாகி வேறு இருக்கிறது. அதையும் சேர்த்து படித்து வைக்கவேண்டிய இம்சை ஏற்பட்டது.
நாவலை இரண்டு ஆண்டுகாலம் மூன்று பேர் எடிட் செய்தார்கள் என்று கேள்விபட்டேன். எடிட்செய்ததே இப்படியிருக்கிறது என்றால் இதை எடிட் செய்யாமல் படித்திருந்தால், நினைக்கவே பயமாக இருக்கிறது. இது வெங்கடேசனின் முதல் நாவல் என்கிறார்கள். அது இன்னமும் பயத்தை அதிகப்படுத்துகிறது.writter: s.ramakrishnan