பொன்னியின் செல்வனில் கல்கி எழுதியது

0 c
//"சூரிய வம்சத்திலே பிறந்த
மனுமாந்தாதா. அந்த வம்சத்திலே புறாவுக்காக உடலை அறுத்துக் கொடுத்த சிபிச்
சக்கரவர்த்தி, சிபிச் சக்கரவர்த்திக்குப் பின் தோன்றிய இராஜ கேசரி, அவருடைய
புதல்வர் பரகேசரி, பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காகப் புதல்வனைப் பலி
கொடுத்த மனுநீதிச் சோழன், இமயமலையில் புலி இலச்சினை பொறித்த கரிகால்
பெருவளத்தான், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளி வளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், எழுபத்திரண்டு
சிவாலயம் எடுப்பித்த கோப்பெருஞ் சோழர், இவர்கள் வழிவழித் தோன்றிய
தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த பழையாறை விஜயாலயச் சோழர், அவருடைய குமாரர்
ஸஸ்யமலையிலிருந்து புகார் நகரம் வரையில் காவேரி நதி தீரத்தில்
எண்பத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த ஆதித்த சோழர், அவருடைய குமாரர்
மதுரையும் ஈழமும் கொண்டு தில்லைச் சிதம்பரத்தில் பொன் மண்டபம் கட்டிய
பராந்தகச் சோழ சக்கரவர்த்தி, அவருடைய குமாரர் இரட்டை மண்டலத்துக் கன்னர
தேவன் படைகளை முறியடித்து ஆற்றூர்த் துஞ்சிய வீராதி வீரராகிய அரிஞ்சய
தேவர், அவருடைய குமாரர் ஈழம் முதல் சீட்புலி நாடு வரை ஒரு குடை நிழலில்
ஆளும் பழையாறைப் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி, அவருடைய மூத்த குமாரர் -
கோப்பெரு மகனார் - வடதிசை மாதண்ட நாயகர் - யுவராஜ சக்கரவர்த்தி -
வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகால சோழர் விஜயம் செய்திருக்கிறார்!
பராக்! பராக்!" என்று அக்கட்டியங் கூறுவோன் கூறி முடித்ததும் மழை பெய்து
இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது. //
thnks to http://mukkulam.ace.st/t16-topic

வல்லம்பர் சாதி

1 c
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரைச் சேர்ந்தவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற இடத்தில் தொடக்க காலத்தில் இருந்தவர்கள், பின்னாளில் இடம் பெயர்ந்து சிவகங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். இவர்கள் தங்களை நாட்டார் என்று அழைத்துக் கொள்கின்றனர். 18ம் நூற்றாண்டில், மருது சகோதரர்களோடு சேர்ந்து போர் புரிகிறார்கள் வல்லம்பர்கள். இதனால், சிவகங்கை மன்னர், காரைக்குடி நகரத்தை ஆளும் பொறுப்பை வல்லம்பர்களுக்குத் தருகிறார். அதன் பின், வல்லம்பர்களுக்கு அம்பலம் என்ற பட்டம் வருகிறது.



கள்ளர், மறவர், தேவர் ஆகிய முக்குலத்தோர் சாதியோடு, பெண் கொடுத்து, பெண் எடுக்கும் பழக்கம் இச்சமூகத்தில் ஏற்பட்டதால், வல்லம்பர்கள் ஏறக்குறைய முக்குலத்தோர் என்றே அழைக்கப் படுகிறார்கள்.

thanks to savukku

கள்ளர் சீரமைப்புத் துறை - பள்ளிகள்

0 c
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் 260 பள்ளிகள் உள்ளன.

இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 45. இப்பள்ளிகளின் வளர்ச்சியில் கல்வித்துறை போதிய அக்கறை காட்டவில்லை என கள்ளர் பள்ளிகளின் ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

இதற்கு உதாரணமாக பல புகார்களையும் தெரிவிக்கின்றனர். பள்ளிகளில் சிறப்பு கட்டணம், கல்வி கட்டணம் வசூலிக்க தடைவிதித்து அரசு உத்தரவிட்டது. அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு அரசே கட்டணத்தை வழங்கி உதவியது. இவை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

இரண்டு ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. நிலுவைத் தொகை ரூ. 17 லட்சத்து 98 ஆயிரத்து 701. ஆண்டுதோறும் நூறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகள் ஒன்று கூட தரம் உயர்த்தப்படவில்லை. கள்ளர் பள்ளிகளில் 110 பட்டதாரி ஆசிரியர், 52 முதுகலை ஆசிரியர், 40 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2 ஆண்டுகளாக இப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 14ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம்.

இதற் காக மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 300ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 200ம் வழங்கப்பட்டது. இது மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும் கள்ளர் பள்ளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. ஆண்டு துவக்கத்தில் அரசு இலவச பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல ரூ.ஆயிரத்து 200 வழங்கப்படும். இதுவும் தராமல் கள்ளர் பள்ளிகள் வஞ்சிக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரப்படி விளையாட்டு ஆசிரியர், அலுவலர் பணியிடம் எந்த கள்ளர் பள்ளியிலும் நியமிக்கப்படவில்லை.

நபார்டு வங்கி மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் கட்டடம், தளவாடங்கள் வாங்குகின்றனர். கள்ளர் பள்ளிகளுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை. ரூ. 27 கோடி அளவுக்கு கருத்துரு அனுப்பியும் நீண்ட நாட்களாக பலனில்லை. இதுபோன்ற பல குறைபாடுகள் உள்ளன.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் எம்.சின்னப் பாண்டி கூறுகையில், கள்ளர் சீரமைப்புத் துறையில் பலகுறைபாடுகள் இருந் தாலும் கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் 83, பிளஸ் 2ல் 73 சதவீதம் தேர்ச்சி இருந்தது. பெண்களுக்கென உயர் நிலை,மேல்நிலை பள்ளிகள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. கள்ளர் பள்ளிகள் புறக்கணிக்கப்படும் நிலையில் உள்ளன. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
thanks to http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=5052

விடுமுறையில் கிராமத்துக்குச் செல்வோம்!

0 c


First Published : 07 May 2011 02:37:45 AM IST


தாத்தா, பாட்டி, சித்தி, ஒன்றுவிட்ட சித்தப்பா, தாய்மாமா, பெரியப்பா, அண்ணன், அத்தான்.. இப்படி நீண்டுகொண்டே சென்ற உறவுகளின் பட்டியல் இன்று வெறும் அங்கிள்.., ஆன்டி. கசின்.. என சுருங்கிய வடிவத்தில் புதுப் பரிமாணம் எடுத்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் அப்பாவுடன் கூடப்பிறந்த தம்பிகூட இன்று தூரத்துச் சொந்தமாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்.கால ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கவும், பொருளாதார வசதியில் முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற வேகத்திலும் கிராமத்தைவிட்டு வெளியேறி நகரை நோக்கி ஓடியவர்களில் பெரும்பாலானோர், அந்த வேக ஓட்டத்துக்குப் பழகி, அதை விரும்பி ஏற்று மீண்டும் அங்கேயே தங்களின் வாழ்க்கையைத் தொடர நினைக்கிறார்கள் என்பதும் உண்மை. உங்களின் குடும்பம் வசதியாக வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதும் சரிதான். அதற்கு நீங்கள் நகரத்தில் இருந்துகொண்டு பகல், இரவு பார்க்காமல் உழைப்பதும் சரி. ஆனால், அந்த வேகத்தை இப்பொழுதே உங்களின் செல்ல மகன் அல்லது மகள் மீதும் செலுத்துவது சரியா என்று கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை.மெட்ரோபாலிட்டன் சிட்டிகளிலுள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பலர், தங்களின் ரத்த உறவுகளையும், தூரத்து உறவுகளையும் பற்றித் தெரியாமலேயே வளர்ந்து வருகிறார்கள் அல்லது வளர்க்கப்பட்டு வருகிறார்கள். கிராமத்தில் சொந்தக்காரங்க இருக்காங்கன்னு எங்க அப்பா சொல்லியிருக்காங்க என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த விஷயம். முன்பெல்லாம் நகர வாழ்க்கை சூழலில் சிக்கியிருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கோடை விடுமுறை எப்பொழுது விடும் என்று ஆவலுடன் காத்திருந்து, விடுமுறை விட்டவுடன் உடனே குடும்பத்துடன் கிராமத்துக்குச் சென்று தங்கள் மூத்த குடும்ப அங்கத்தினரின் வீடுகளில் தங்கியிருந்து மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்து வந்தார்கள். தங்கள் வேலை காரணமாகப் பெற்றோர்கள், மீண்டும் நகரத்துக்குச் சென்றுவிட்டாலும்கூட அவர்களின் பிள்ளைகளை விடுமுறை முடியும்வரை கிராமத்திலேயே விட்டுவிட்டுச் சென்றனர். இதனால் வளரும் தலைமுறைக்கு தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை எனப் பலதரப்பட்ட உறவுகள் குறித்தும், உறவுகளிலுள்ள அன்னியோன்மும், உறவுகளின் பாசமும் முழுமையாகத் தெரிய வாய்ப்பிருந்தது. இதனால் நல்ல பழக்கவழக்கங்களும் இளம் தலைமுறையினருக்குத் தாமாகவே உருவாகி வந்தன.ஆனால், இன்றோ கிராமம் என்றாலே அதைப் படத்தில்தான் பார்த்திருக்கிறோம். கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் சில பிள்ளைகளுக்கும் இன்றைய போட்டி நிறைந்த உலகம் அதற்கான வாய்ப்பை அளிக்க மறுத்து வருகிறது. எதிர்த்த வீட்டு கோமு சம்மர் லீவில் டான்ஸ் கிளாஸ் போறான். அடுத்த வீட்டு சோமு கோடை விடுமுறையில் புது சாப்ட்வேர் படிக்கப் போறான். அந்தப் பொண்ணு பரதநாட்டியம் கத்துக்கப் போகுது, அப்ப நம்ம பிள்ளையையும் சம்மர் ஸ்பெஷல் கோர்ஸýக்கு அனுப்புவோம் என்பதே இன்றைய பெற்றோர்களின் எண்ணம். அக்கம்பக்கத்தாரின் இந்தப் போட்டியால் விடுமுறையில் கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நினைக்கும் ஒரு சிலருக்கும்கூட அந்த வாய்ப்பு, பெற்றோர்களால் பறிக்கப்பட்டே வருகிறது.இதற்கிடையே நகரத்திலுள்ள பல பள்ளிகளில் கோடை விடுமுறையிலும்கூட சிறப்பு வகுப்புகள் அரங்கேறி வருகின்றன. 
 
ஓராண்டு தொடர்ந்து படித்த மாணவ, மாணவிகள் ஓய்வெடுப்பதற்காக அரசு அளித்துள்ள இந்த விடுமுறையிலும்கூட மாணவர்களுக்கு ஓய்வளிக்காமல் படிக்கச் சொன்னால் அவர்களின் ஆர்வம் குறைந்து போகாதா? ஆனால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஜெயராமன், கோடை விடுமுறையில் பள்ளிகள் செயல்படக் கூடாது எனவும், அப்படிச் செயல்பட்டால் இழுத்து மூடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம். இதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுவிட்டால், விடுமுறையைக் கிராமத்தில் கழிக்க மாணவர்களும் முன்வரலாம்.எங்கோ ஒரு கிராமத்தின் மூலையில், அதுவும் வாழ்க்கையின் விளிம்பில் இருந்துகொண்டு, தங்களின் பேரன், பேத்தி, மகன், மருமகன் என எல்லோருடைய நலனுக்காகவும், இன்றும் வேண்டிக் கொண்டிருக்கும் தாத்தா, பாட்டியின் மனதைப் புரிந்தாவது, கிராமத்துக்கு வர நகரத்து சொந்தங்கள் முயல வேண்டும். இந்திய கலாசாரத்தின் பெரிய அடிப்படையான விஷயமே இந்த உறவுகள்தான் என்பதை வரும் தலைமுறையினருக்கும் உணர்த்த வேண்டும். செய்வார்களா?
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=414892&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!

கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278)

0 c

நட்சத்திரம் - வரலாற்றில் மறைக்கப்பட்ட பேரரசன்

முன்குறிப்பு:

சில ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கோப்பெருஞ்சிங்கன் என்கிற அரசனை பற்றிய ஒரு ஆராய்ச்சி நூலை படித்தேன், கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களுடன் எழுதப்பட்ட அந்த நூலின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர் எதுவும் நினைவில்லை ச்ச்எனினும் சில நாட்களுக்கு முன் அதை நூலகத்தில் தேடியபோது கிடைக்கவில்லை, எனவே அந்த நூலில் கூறப்பட்டிருந்தவற்றை என் நினைவிலிருந்தும் மற்றவற்றை வரலாற்று நூல் ஆதாரங்களுடனும் எழுதுகின்றேன்.

கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278)
தற்போதைய ஆரணியின் அருகிலுள்ள படவேடு என்கிற ஊர் அந்த நாட்களில் படைவீடு என்று அழைக்கப்பட்டது அங்கே நிலை கொண்டிருந்தது கோப்பெருஞ்சிங்கனின் படை.

கருத்த மேனியுடன் ஆஜானுபகவான தோற்றத்துடன் இருந்த அரசன் கோப்பெருஞ்சிங்கன் தன் படை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு சென்று அணிவகுத்து நிற்கும் தன் படையை பார்வையிடுகின்றான்.தீர்க்கமான அவன் கண்கள் செக்கச்செவேல் என சிவந்திருந்தது, உள்ளம் எங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டெறிந்து கொண்டிருந்தது.

வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கங்களுக்கிடையில் படையினை பார்வையிடுகின்றான், படையின் ஒவ்வொரு வீரனும் சுதந்திர தாகத்துடன் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதையும் எதிர்கொள்ள தயாராக கட்டுக்கோப்பாக நின்ற படையை பார்த்த நிமிடத்தில் சுதந்திரத்திற்காக தாங்கள் மோதப்போகும் சோழப்படையின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தாலும் நிச்சயம் சுதந்திர தாகம் தீரும் என்ற நம்பிக்கையில் தன் கூடாரத்திற்கு சென்றான்.

அன்றிரவு முழுதும் தூங்காமல் ஏதேதோ சிந்தனைகள், தன் தளபதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள், ச்ச்தம் மூத்தோர்கள் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் கட்டிக் காத்த பல்லவ பேரரசு சோழர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டால் சிதைக்கப்பட்டு சிதறிய கதைகள் கேட்டு வளர்ந்த போதே சோழப்பேரரசை வென்று அதன் அடிமையாக இருக்கும் இந்த அரசை மீட்டு மீண்டும் பல்லவ பேரரசை நிறுவ வேண்டுமென உறுதி பூண்டான், சத்திரியனாக மட்டும் இருந்தால் போதாது, இதற்கு சாணக்கியத் தனமும் வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தான். தான் எழுதப்போகும் சோழப்பேரரசின் முடிவுரையை நாளைய வரலாறு பேசும், பல்லவ குலத்தின் மாவீரனொருவன் சோழப்பேரரசை முடித்து மீண்டும் பல்லவ பேரரசை நிலைநிறுத்தியதை வரலாறு பாராட்டும் என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான், சோழப்பேரரசுக்கும் சேந்தமங்கலப் போரில் முடிவுரை எழுதினான், ஆனால் அன்று கோப்பெருஞ்சிங்கன் எண்ணியிருக்க மாட்டான் சோழ மாயை இருபதாம் நூற்றாண்டிலும் கூட வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மறைத்திருக்குமென்று.

கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை தென்னாற்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான்(ர்)(வரலாற்று நூல்களில் அவன்,இவன் என்று பேசினாலும் நாம் இனி அவர் என்றே அழைப்போம்) சில வரலாற்று ஆசிரியர்கள் ஆரணி அருகிலிருக்கும் படைவீடு(படவேடு) தான் இவரின் தலை நகரம் என்கிறார்கள். வெகு சில ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட பல அரசர்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்கு கூட கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலம் அரசாண்ட இவரின் பெயர் வெளியில் தெரியவில்லை.

ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன், வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது.

இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன்.

பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார். இதை சில வரலாற்று ஆசிரியர்கள் சோழமன்னன் தப்பியோடியபோது அவரை கைது செய்து சிறையிலடைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

வட நாட்டு அரசர்களையும், இசுலாமிய அரசர்களையும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்கும் போது பொதுவாகவே தமிழக அரசர்கள் மிகுந்த கருணையுடன் இருந்துள்ளனர்.பொதுவாகவே பெரிய அளவில் வாரிசுரிமைப்போர் தமிழகத்தில் நடந்தது என்றால் அது வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் கி.பி.1310ல் நடந்த ஒன்றே ஒன்றுதான், மேலும் போரில் தோல்வியுற்ற அரசர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர், ஆனால் வட நாட்டு வரலாறிலும், இசுலாமிய அரசர்களும், இலங்கை மகாவம்ச வரலாறும் சீன வரலாறும் சொல்வது அரசுகட்டிலுக்காக சொந்த மகனையும், தாயையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றழித்தனர், அது மட்டுமின்றி தலைவேறு உடல்வேறாக கிடப்பவன் மட்டுமே பிரச்சினை தராத எதிரி என்று நம்பியதால் தோல்வியுற்ற மன்னர்களை உடனடியாக கொன்றழித்தனர், மேலும் எதிரிகளின் குழந்தைகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்தாலும் கூட கொல்வர் அல்லது கண்களை தோண்டி எடுப்பர்.

அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தது மட்டுமின்றி அவர்களின் மகளிரையும் சிறைபிடித்து சென்றார். சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்

தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார், அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், பல கோவில்களை கட்டியும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு அவற்றில் சில பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன். பல கோவில்களை கட்டிய இவர் சில கோவில்களை இடித்தும் உள்ளார், சோழ நாட்டை போர் தொடுத்து வென்றபோது சோழ நாட்டில் சில கோவில்களை இடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொண்டைமண்டலம் முழுவதும், சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.


கி.பி.1255ல் மீண்டும் விதி கோப்பெருஞ்சிங்கனை பார்த்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வடிவில் சிரித்தது, சேந்தமங்கலம் பாண்டியர்களால் முற்றுகையிடப்பட்டு மீண்டும் வேற்றரசுக்கு அடிமையானார் கோப்பெருஞ்சிங்கன், பாண்டிய மன்னர்களின் வடக்கத்திய போர்முனைக்கு தன் படைகளை நல்கி பாண்டிய அரசுடன் ஒரு சமாதான போக்கையே இறுதி வரை கடைபிடித்தார்.

சரி இனி சில வரலாற்று ஆசிரியர்கள் இவர் மீது எழுப்பும் குற்றசாட்டை பார்ப்போம்.

முதல் குற்றசாட்டு சோழனுக்கு அடங்கிய சிற்றரசன் எப்படி சோழப்பேரரசனையே சிறையிலடைப்பான் இது துரோகமல்லவா?

எது துரோகம்? தன்னை நம்பிய தன் மாமனார் எண்பத்திமூன்று வயது ஜாலாலுதின் கில்ஜி தம்மை வரவேற்க தனியாக வந்தவரை வெட்டிக்கொன்றாரே அலாவுதின் கில்ஜி அது வரலாற்றுத்துரோகம், தன்னை தத்தெடுத்து வளர்த்த தாய் மீனாட்சியை எதிர்த்து கலகம் செய்தானே விஜயகுமாரன் அது துரோகம் (சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜபேரிகை நாவலில் இந்த விஜயகுமாரன் தான் கதாநாயகன்)

பல்லவ வழித்தோன்றல் தன் மூத்தோர்களின் பேரரசை நிறுவ முயன்றதா துரோகம்? சோழர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் நாட்டை விடுவிக்க போர்புரிந்தது துரோகமென்றால் இந்த துரோக குற்றச்சாட்டு பாய வேண்டியது முதலில் சோழர்களின் மீது தான். பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள் பாண்டிய பல்லவப் போரில் நடத்திய அரசியல் சதுரங்கத்தில் முதலில் பாண்டியர்களை பல்லவர்களுக்கு துணையாக நின்று வீழ்த்தி பிறகு பல்லவர்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள் எனக் கூறி போர்தொடுத்து வீழ்த்தினார்களே!! (பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்)

அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கனை பற்றியும் அவரது அரைநூற்றாண்டு அரசைப்பற்றியும் சில வரிகள் மட்டுமே பல வரலாற்று புத்தகங்களில் காணக்கிடைக்கின்றது, அதில் பாதிக்கும் மேல் அவரின் மீதான எள்ளல்களாகவே இருக்கின்றன.
டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்

"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான் பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் என்பன அவற்றுள் சிலவாம்"(வென்றது உண்மை தானே, வெல்லாமலா தஞ்சையிலிருந்து கோதாவரி வரை இவரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன? தெள்ளாறு, சேந்தமங்கலம், பெரம்பலூர் போர்களின் முடிவு கோப்பெருஞ்சிங்கனுக்கு தானே சாதகமாக இருந்தது.)

"பல்லவர்கள் அல்லது காடுவெட்டி பரம்பரையில் தான் தோன்றியதாக பெருமை பிதற்றினான்"(பிதற்றினானா? பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன? இதைப்பற்றிய ஒரு பெரிய அத்தியாயமே முனைவர் பட்டத்திற்கான அந்த ஆராய்ச்சி நூலில் இருந்தது, மேலும் இவரின் கல்வெட்டுகள் பல்லவர் கல்வெட்டுகள் என்ற பிரிவின் கீழ்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளது)

இது மட்டுமின்றி பல வரலாற்று நூல்களில் கோப்பெருஞ்சிங்கன் அவருக்கு அவரே பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டதாகவும் எள்ளல் தொனிக்கும் படி எழுதியுள்ளனர், இவருக்கு பட்டபெயர் விடயத்தில் எள்ளலாக எழுதினால் இராசராசன் முதல் பல அரசர்கள் பட்டப்பெயர்கள் வைத்திருந்ததை எப்படி எழுதுவது?

அரைநூற்றாண்டுகள் தமிழக அரசியலின் மையமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் பற்றிய பதிவுகளும் இடமும் வரலாற்று நூல்களில் மிகச்சிலவே. ஏன் இப்படி? சில வரலாற்று ஆசிரியர்களுக்கும் சோழ மாயையா?

மேற்கோள் நூல்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை
தாய்நிலவரலாறு - பேராசிரியர் கோ.தங்கவேலு
தமிழகவரலாறு - சென்னை பல்கலைகழக இளங்கலை வரலாற்று பாடநூல்
whatisindia.com

thanks to http://kuzhali.blogspot.com/2005/12/blog-post_05.html

நிகழ்காலத்தில்

0 c
இனத்திற்கும், மொழிக்கும் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த அந்நிய கலாச்சார படையெடுப்புகளால் ஏற்படவிருக்கும் பெரிதான பாதிப்புகளை எவருமே தொலை நோக்க பார்வையுடன் பார்ப்பதில்லை.  ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு வரவேற்பு அளித்தவர்கள்  முதன் முதலில் என்ற கணக்கில் தென்னிந்தியர்கள் தான் அந்த சிறப்பை பெறுகின்றனர்.

வாஸ்கோடகாமா (1498) என்ற போர்த்துகீசியர் முதன் முறையாக ஆப்ரிக்க தென்முனையைச் சுற்றிக்கொண்டு  இந்தியாவிற்குள் வந்து புதிய வரலாற்றை உருவாக்கினார்.  வரவேற்பு அளித்த முதல் இடம் சேரநாட்டு கள்ளிக்கோட்டை.  இவரைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்தனர்.  வணிகம், வாணிபம், பண்டமாற்று என்று தொடங்கி மத இன மொழி திணித்தலும் ஒரே சமயத்தில் படிபடியாக நடந்து கொண்டேயிருந்தது.

முதன் முதலில் பைபிள் மொழிபெயர்ப்பு தமிழில்.  நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கிறது?  என்ன செய்வது நம்மவர்களின் தராள மனப்பான்மைக்கு எல்லை ஏதும் இல்லை.  ஆமாம் இன்று வரையிலும்.  பண்பாடு என்ற கோட்டுக்குள் பதவிசாய் வாழும் பதர்கள்.  அதனால் தான் போர்த்திய பொன்னாடைகளும், வெடித்து சிரித்த புகைப்படமும் நீங்கள் பார்த்த போது எழவு வீட்டில் எவ்வாறு தமிழன் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு உணர்த்திய காலப்பெட்டகம் அது.

அதனால் தான் எல்லையை கடந்து சென்றவர்கள் அத்தனை பேருமே எல்லையில்லா பேரின்ப வாழ் நிலையை இன்று அடைந்து கொண்டுருந்த போதிலும் நாம் நம்முடைய நிகழ்கால கடமைகளில் மட்டும் கண்ணும் கருத்துமாய் முன்னேறிக்கொண்டுருக்கிறோம்.

கள்ளிக்கோட்டை குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று நம்மவர்கள் அவர்களுக்கு கீழே பணிபுரிவதை மிகப் பெருமையாக கருதினர்.  மற்ற எவரையும் விட நம்முடைய தமிழர்கள், அவர்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்காத குறை தான்.  சென்னை ஜார்ஜ் கோட்டையை பண்டக சாலையாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடைந்தனர்.  நம்முடைய முக்கிய புள்ளிகள் அத்தனை பேருமே அவர்களுடன் கலந்து சிறுபுள்ளியாகி சீக்கிரம் கால்புள்ளி கால் இல்லாத புள்ளியாய் மாறிப்போனார்கள்.

ஐரோப்பியர்களின் ஆதிக்கமும் வாணிகத் தொடர்புகளும் ஆதிக்கம் செலுத்திய கால கட்டத்தில் ஒரே ஒரு நாடு மட்டும் உறுதியாய் இருந்தது.  ஆமாம் அவர்களை உள்ளே விடக்கூடாது என்று தீர்மானமாய் இருந்தார்கள்.  அது ஜப்பான்.  200 ஆண்டுகளாக அந்நியர் எவரும் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் வந்தவர்களைக்கூட ஓதுக்குப்புற தீவுகளில் தான் வணிகம் செய்ய அனுமதித்தனர்.  ஆனால் இத்தனையும் மீறி இரண்டு பாதிரிமார்கள் உள்ளே நுழைந்த போது அவர்களை கண்டுபிடித்து உலகறிய நாகசாகியில் கழுவேற்றி கொன்றனர்.

நாகசாகியில் குண்டுமழை பொழிந்த காரணங்களுக்குப்பின்னால் இதுவும் ஒன்று என்று இன்றுவரையிலும் நம்பப்படுகிறது.

கூலியாக பயணப்பட்ட தமிழர்கள் கூட தவறாக தெரியவில்லை.  ஆனால் அன்றும் இன்றம் தொலை நோக்கு பார்வையில்லாத காரணத்தால் எத்தனை எத்தனை அவஸ்த்தைகளை பார்த்துக்கொண்டுருக்கிறார்கள்?.  படித்துக்கொண்டுருக்கிறோம்?
ஆனால் இன்றும் அன்றும் நம் மக்களைப் போலவே சீனர்களும், யூதர்களும் எல்லா நாடுகளிலும் குடியேறினார்கள்.  ஆனால் இன்று உலகத்தின் நாட்டமை அமெரிக்காவின் ஆதிக்க வர்க்கம் என்பது மொத்த அங்கு வாழும் யூதர்களின் கையில் தான் உள்ளது.  சீனர்களின் சிறப்பை சொல்லத் தேவையில்லை.  சிங்கப்பூர், மலேசியா ஆரம்பித்து பல நாடுகள் அவர்களின் கண் அசைவில் தான் உள்ளது.  மெஜாரிட்டி மைனாரிட்டு என்று பேச்லெல்லாம் அவர்களின் வாழ்வியலில் எங்குமே இல்லை.  இந்தியாவில் தாஜ்மாகால் ஹோட்டலில் தாக்குதலில் டாடாவை விட அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளுக்குத் தான் முக்கிய அக்கறை.  அது தான் யூதர்கள்.  அவர்களின் சிறப்பு.  அவர்களின் வணிக பலம். மூலதனம்.  மூளை உள்ளவர்களின் முகவரி அது.

ஆனால் நாம் வேறு ஒரு வகையில் சிறப்பை பெற்றுள்ளோம்.  பர்மா அகதி, வியட்நாம் அகதி, இலங்கை அகதி.  இந்த பட்டியல் எதிர்காலத்தில் இப்போது உள்ள இந்திய அயல்உறவு கொள்கையினால் இன்னமும் நீளும் என்று தோன்றுகிறது?

இதன் விட்டகுறை தொட்ட குறை தான் இன்று வரையிலும் "பாண்டி" (கேரளா), "அரவாடு" (ஆந்திரா), மற்றும் வட இந்திய மார்வாடிகள் நம்மை அழைக்கும் "தீவானாதேசு".  ஆனால் நாம் ரொம்ப நல்லவர்கள்.  பழிப்பவர்களை வளர்ப்பதிலும், ஏமாற்றுபவர்களையும் புகழ்பாடுவதிலும், ஆளுமையில் இருப்பவர்களை உணர்ச்சி வேகத்தில் தேர்ந்து எடுப்பதிலும் நம்மை மிஞ்சுபவர்கள் எந்த உலகில் காணஇயலும்?

வயிற்றுப் பிழைப்புக்காக சென்றவர்களின் கதி தான் இன்று அதோகதி என்றால் பண்டைய தமிழ் வரலாற்றில் வாளெடுத்துச் சென்ற அத்தனை மன்னர்களும் தங்களுடைய வீரத்தை அகில உலகமெங்கும் பறைசாற்றியதோடு அவர்களின் கடமை முடிந்ததாகவே கருதினர்.  எந்த சீரழிவும் அவர்கள் செய்தவர்கள் இல்லை.  நான் தான் சிகாமணி என்று நிரூபிக்கவும் இல்லை.

பொருளாதார சீரழிப்பும் செய்யவில்லை.  உலகம் வெறுக்கக்கூடிய கலாச்சார சீழிப்பையும் செய்தவர்களில்லை.  ஆனால் இங்கு வந்து இறங்கிய போர்த்துகீசீயரும், பாரசீகரும், பிரெஞ்ச் நாட்டுக்காரரும் முடிந்தவரையிலும் தங்களுடைய தாக்கங்களை எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் நிலைநாட்ட தவறவில்லை.  வாணிகம் முதல் பட்சம்.  கொள்ளை லாபம் முக்கியம்.  ஆனால் இதைவிட முக்கியம் மதம் மாற்றுதல்.  அத்துடன் இருந்தாலும் பராவாயில்லை.  இங்கே உள்ள அத்தனை விசயங்களையும் முடக்கவும், முயற்சிகளை தடுக்கவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகக் கவனமாக செயல்பட்டனர்.

நம்மவர்களின் வரவேற்ற கைகள் இறுதியில் வணங்கியது.  ஆமாம் அவர்களைப் பார்த்து?  பேசிய மொழியை, வாழ்ந்த வாழ்க்கையை, அடிப்பைட கலாச்சார பெருமைகளை மறந்தனர்.  ஆமாம் காலம் முழுக்க அவர்களை துதிபாட போதவில்லை என்ற போது எங்கே போய் உள்ளே உள்ள விசயங்களில் கவனம் செலுத்த முடியும்?

உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்த நம்முடைய சாதனைகள் தான் எத்தனை எத்தனை?

மருத்துவம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம், போர்க்கலை, கப்பற்கட்டும் தொழில் நுட்பம் போன்றவற்றை மறைத்தார்களா? மழுங்கிய சிந்தனைகளால் அத்தனையும் மறந்து தொலைத்தார்களா?  இல்லை அடுத்தவர் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நல் சிந்தனைகளினால் "குரு + மாணவன் " என்ற போர்வைக்குள் ஓளித்து கரையான் அரித்ததைக்கண்டும் காணாமல் இருந்தார்களா?

மொத்தத்தில் காலம் அத்தனையும் விழுங்கி விட்டது.

ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி தவிர வளையாபதியையும், குண்டலகேசியையும் அழியவிட்டோம்.  பெரும்பாலான சங்க இலக்கியங்களை தமிழ்த்தாத்தா உ.வெ.சாமிநாதய்யர் கண்டுபிடித்த தரவில்லையென்றால் தமிழ் இலக்கியத்ன் ஒரு பெரிய பரப்பளவுகளையும் இழந்து இருப்போம்.

தமிழ் காவல் தெய்வங்கள், இன காவலர்கள், இன்னும் பல பட்டங்களை சுமந்து வாழ்ந்துகொண்டுருக்கும் நிகழ்கால தலைவர்கள் எவருமே தெளிவான நோக்கில் தமிழை வளர்ப்பதில் கவனம் இல்லாத காரணத்தால் மொரிசீயஸ், யூனியன் பிரதேசங்கள், தென்னாப்ரிக்கா, பீஜீ தீவுகளில் இன்னும் பல நாடுகளில் தமிழர்கள் பரவி வாழும் இடங்களில் தமிழ் மொழி பேச்சு வழக்கில் இருந்து மாறி விட்டது.  இன்று கிட்டத்தட்ட வாழ்ந்து கொண்டுருக்கும் நிகழ்கால தலைமுறைகள் வைத்துருக்கும் பெயர் மட்டும் கொண்ட தமிழராக வாழ்ந்து கொண்டுருக்கின்றார்கள்.


தமிழன், தமிழ்மொழி, மொத்த தமிழனத்தில் வாழ்வியல், ஒரு நீண்ட தொடர் ஓட்டம் இது.
மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள் கம்பிகளுக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டுருப்பது வரையிலும் உள்ள நிகழ்வுகள் குறித்து ஒரு சிந்தனையோட்டம்.
thanks to http://deviyar-illam.blogspot.com/2009/10/blog-post_26.html

தமிழ் மன்னர்கள் நிறைந்த வீரம். கதறடித்த கட்டுறுதி

0 c
காலம் போட்ட அவசர கோலத்தில் இன்று வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி சகிப்புத்தன்மையாக மாற்றிவிட்டுள்ளது.  கத்தி, வாளை தூக்க முடியாதவர்கள் இன்று புத்தியை மட்டும் சுமந்து கொண்டு கடல் கடந்து சென்று கொண்டுருக்கிறார்கள்.

சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் வட இந்திய மன்னர்கள் அத்தனை பேரையும் வென்று வரிசையாக வென்ற நாடுகளையும் தன்னுடைய ஆளுமைகக்குள் கொண்டு வந்தவன்.  இறுதியாக இமயத்தில் தமிழர் சின்னத்தை பொறித்து கண்ட வெற்றிகளை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.  இவர் தான் உலகத்தின் முதல் அணையை உருவாக்கி கல்லணையை காவிரிக்குக் குறுக்கே கட்டியவர்.

பூலித்தேவன் (18ம் நூற்றாண்டு) வெள்ளையருக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்த்து நின்ற போது அவனை அழித்தே தீருவதென்று வெள்ளை அதிகாரி ஹெரான், பெரும்படைகளுடன் வந்தான்.  அவனுடன் மற்ற தளபதிகள், கும்பனி படைகள் (நம்மவர்கள்), தளபதி கான்சாகிப் என்கிற மருதநாயகம், நவாப் முகமதலியின் படைகள், தலைவன் மகபூல்கான் போன்ற கூட்டணி படைகளும் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டது.

ஒற்றுமை என்பது மற்ற இனத்தை விட நம்மவர்களின் பெரிய குறைபாடு என்பதை அன்று முதல் இன்று வரையிலும் நாம் உணர்ந்து கொண்டு தானே இருக்கிறோம்?

ஆனால் இவர்கள் அத்தனை வைத்திருந்த அத்தனை நவீன ரக ஆயுதங்கள், பெரும்படை பலம் என அத்தனையும் தன்னுடைய மன உறுதியால் தன்னுடைய சுத்தமான வீரத்தால் விரட்டி அடித்தான்.  கடைசியில் வெள்ளையர் நீ கப்பம் தரவேண்டாம்.  தருவதாக மட்டும் ஒத்துக்கொள்.   காரணம் நீ மறுப்பதாக தெரிந்தால் மற்ற அனைவரும் அதேபோல் மறுப்பார்கள் என்றார்.

இது வரலாற்று உண்மை. 
 இப்போது புரியுமே 
குறைந்த வீரர்கள்.
நிறைந்த வீரம். 
 கதறடித்த கட்டுறுதி.

காரணம் தமிழனின் வீரம் என்பது எவருடனும் ஓப்பிட முடியாது.  எதையும் சாதிக்கும் மன உறுதி உடையது. மற்ற எந்த இனத்தையும் விட அதிகமாக இருந்தது தமிழினத்தில் மட்டுமே.  வரலாற்று சான்றுகள் அத்தனையும் இவ்வாறு தான் நமக்கு இன்று வரையிலும் பாடமாக பட்டயமாக காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு காலத்திலும், ஒரு ராஜாவோ, ஒரு நாயகனோ நம் இனத்தை அந்த அளவிற்கு ஆளுமை செய்து இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரில் சிதறடிக்கப்பட் ஜப்பான் இன்று ஒரு வணிக வல்லரசாக உருவானது. இதை நாம் இன்று பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்?

கிரேக்கம், ரோமானியத்தை முன்னோடியாக வைத்து முன்னேறினார்கள்.  ஐரோப்பியர்கள் ஜப்பானியரை காட்டியே சீன இனம் உயர்ந்தது.  அரேபியரைக் காட்டியே யூத இனம் உயர்ந்தது.  ஆங்கிலேயர்களின் வளர்ச்சியைக் காட்டியயே ஜெர்மானிய இனம் வளர்ச்சி அடைந்தது.

ஆனால் இன்று தமிழனுக்கு என்று நாடும் இல்லை.  தமிழனை டெல்லியில் நாடுவாரும் இல்லை.

நடுக்கடலில் உணவு ஏற்றிச் சென்ற கப்பலைப் போல, இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் நாங்கள் போகத்தயார் என்று நடுக்கடலில் அபயம் கேட்டுக்கொண்டுருப்பவர்களைப் போல நம் தமிழினத்தில் ஒலியும் காற்றில் தான் கரைந்து மறைந்து கொண்டு இருக்கிறது.

நாடு நல்ல சூழ்நிலையில் இருந்தாலும் நயவஞ்சகத்தால் நல்லதைத் தவிர அத்தனையும் செய்ய முடிகின்ற தலைவர்களால் தமிழினத்தின் வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்ப முடியும்?

இன்று பெரிய வெற்றிடம்.
காரணம் இன உணர்வும் இல்லை. உணர்வு ஊட்ட வந்தவர்களும் உண்மையானவர்களாக இல்லை.

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று வரையிலும் நமக்கு ஊட்டிக்கொண்டுருப்பவர்கள் ஒன்று ஊட்டியில் ஓய்வெடுக்கிறார்கள்.  இல்லையேல் குத்தீட்டி வரிகளால் குத்திக்கிழிக்கிறார்கள்.  ஒவ்வொரு தலைவரின் பங்களிப்பும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உலகத்தில் இருக்கும் தமிழர்களின் பாதிப்பு இன்று வரையிலும் ஏன் ஓலமாய் நம் காதில் வந்து ஒலிக்கின்றது?
முன்னோர்களான மன்னராக இருக்கட்டும்.  ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும்.  அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது.  தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள்.

வீரம் என்பது அவர்களின் முரட்டுத்தனத்தின் குறியீட அல்ல.  முட்டாள்காளாக வாழ்ந்து விவேகமற்ற செய்ல்களும் செய்தவர்கள் அல்ல.  அவர்களின் ஆளுமை சுருங்கி இருந்ததே தவிர அவர்களின் எண்ணங்களில் இன்றைய தலைவர்கள் போல் எந்த சுருக்கமும் இல்லை.

அன்று வனத்தில் வாழ்க்கை அமைந்த முன்னோர்கள் நறுமணங்களையும் சுவாசித்து சுகமாகவும் வாழ்ந்தார்கள்.  சுகாதாரமாகவும் வாழ்ந்தார்கள்.
இன்று வனமும் அழிந்து கொண்டே வருகின்றது.  மனமும் இருண்டு கொண்டே தொடர்கின்றது.

வனத்தை,தேயிலைத் தோட்டத்தை உருவாக்கியவர்கள் தேம்பி அழக்கூட தெம்பில்லாமல் முள் கம்பிகளுக்கு பின்னால் முகவரி இழந்து வாழ்க்கை எனபதை வாழ முடியாமல் இறப்பு வராதா? என்று ஏங்குகிறார்கள்.

ஆனால் முன்னோர்களாக வாழ்ந்த மூதாதையர்கள் விவேகம் என்று கருத்தில் கொண்டு நம் இனத்தை கதற விட்டது இல்லை.  இனம் முக்கியம்.  அதைவிட வளர்த்து உணர வைக்க வேண்டிய இனமான உணர்வு முக்கியம்.

உணர்ந்து இருந்தால் உணர்த்திக் காட்டியவர்கள் இன்று இருந்து இருந்தால்   ஐந்து லிட்டர் தண்ணீர் கிடைக்காமல் விக்கிக்கொண்டு ராணுவ வீரர்களிடம் தன்னை தொலைக்க வேண்டியதும் இல்லை.

 
இதயத்தில் இடம் பெற்றவர்களும், இன்னலை தீர்க்க வந்து விட்டேன் என்றவர்களும் நடத்தும் ஊடகப்போரில் உங்களையும் என்னையும் எங்கே போய் தேடப்போகிறார்கள்?

அவர்கள் தொலைந்து போயே நாளாகிவிட்டது.

தமிழனின் வாழ்வியல் தடங்கள்.  தொடக்கம் முதல் இன்றைய முடக்கம் வரைக்கும்.
thanks to http://deviyar-illam.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

ராஜராஜ சோழன் Author: Sa.Na. Kannan

0 c

ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.

கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.

ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.

Details
ISBN 978-81-8493-595-0
Genre History
Book Title ராஜராஜ சோழன்
Pages 160
Format Printed
Year Published 2010

Price: Rs 80.00
https://www.nhm.in/shop/978-81-8493-595-0.html

செந்தமிழ் நாடு

0 c
தொல்காப்பியர் இந்நூற்பாவில் செந்தமிழ் நாடு எது என்றோ, பன்னிரு கொடுந்தமிழ் நாடுகள் எவை என்றோ கூறவில்லை. இவை அவர் காலத்தில் கற்றறிந்த பலரும் அறிந்த ஒன்றாக இருந்திருக்கலாம்.
    இடைக்காலத்தில் வாழ்ந்த நன்னூலாரும் நன்னூலில் தொல்காப்பியரை அடியொற்றி, கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று கூறினார். ஆனால் அவரும் அந்நாடுகள் எவை என்று கூறவில்லை.
    இடைக்காலத்தில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர்,     சேனாவரையர்,     நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும், நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் ஆகியோரும் அந்நாடுகள் எவை எனக் குறிப்பிடுகின்றனர். இவர்களுள் சங்கரநமச்சிவாயர் செந்தமிழ்நாடு என்பதை, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையைச் சூழ்ந்துள்ள பாண்டிய நாடு என்று கொண்டார். பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்கள் மதுரையைத் ‘தமிழ்கெழு கூடல்’ என்றே குறிப்பிட்டுள்ளனர். மதுரையைச் சூழ்ந்த பகுதி, பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டின் வடபகுதி ஆகும். இப்பகுதியில் வழங்கிய தமிழைச் செந்தமிழாக - எல்லோருக்கும் விளங்கும் பொதுமொழியாகக் (Standard spoken language) கொண்டு, அதிலிருந்து வேறுபட்டு ஏனைய பன்னிரு தமிழ்ப் பகுதிகளில் வழங்கும் தமிழைக் கொடுந்தமிழ் அல்லது கிளைமொழி (dialect) என்று கொண்டனர். அவர்கள் குறிப்பிடும் பன்னிரு நாடுகள் வருமாறு:
     1. தென்பாண்டி நாடு
     2. குட்ட நாடு
     3. குட நாடு
     4. கற்கா நாடு
     5. வேணாடு
     6. பூழி நாடு
     7. பன்றி நாடு
     8. அருவா நாடு
     9. அருவா வடதலை நாடு
     10. சீத நாடு
     11. மலாடு
     12. புனல் நாடு
    இந்நாடுகளில்     வழங்கும்     திசைச்சொற்களையும், அவற்றுக்கான செந்தமிழ்ச் சொற்களையும் உரையாசிரியர்கள் பலரும்     குறிப்பிட்டுள்ளனர்.     பின்வரும்     பட்டியல் உரையாசிரியர்கள் குறிப்பிடும் பன்னிரு கிளைமொழிப் பகுதிகள், அவற்றிற்குரிய தற்காலப் பெயர்     கொண்ட பகுதிகள், அப்பகுதிகளில் பழங்காலத்தில் வழங்கிய திசைச்சொற்கள் அல்லது கிளைமொழிகள், அச்சொற்களுக்கு     இணையாக அக்காலத்தில் வழங்கிய செந்தமிழ் அல்லது பொதுமொழிச் சொற்கள் ஆகியவற்றைக் காட்டும்.
கிளைமொழி அல்லது திசைச்சொல் வழங்கிய இடம்
தற்காலப் பெயர்
கிளைமொழி அல்லது திசைச்சொல்
பொதுமொழி அல்லது செந்தமிழ்ச்சொல்
1.தென்பாண்டி நாடு
திருநெல்வேலிப் பகுதி
பெற்றம் ஆ(பசு)
சொன்றி சோறு
2. குட்ட      நாடு
கேரளாவில் கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள் தள்ளை தாய்
3. குட நாடு வடமலபார் அச்சன் தந்தை
4. கற்கா      நாடு கோயம்புத்தூர் சார்ந்த மலைப் பகுதிகள் கையர் வஞ்சர்
5. வேணாடு திருவாங்கூரின் தென்பகுதி கிழார் தோட்டம்
6. பூழி நாடு
கோழிக்கோடு
பாழி சிறுகுளம்
ஞமலி நாய்
7. பன்றி      நாடு
பழனி மலை சூழ்ந்த பகுதி
செய் வயல்
8. அருவா      நாடு
வட ஆர்க்காடு தென் ஆர்க்காடு செல்கல்பட்டு
கேணி சிறுகுளம்
9. அருவா வடதலை நாடு
தமிழகத்தின் வடக்குப் பகுதி
எகின் புளி
10. சீத நாடு
நீலகிரி
எலுவன் தோழன்
இகுளை தோழி
11. மலாடு* திருக்கோவலூர் சூழ்ந்த பகுதி இகுளை தோழி
12. புனல்      நாடு
சோழ நாடு
ஆய் தாய்
*மலாடு- மலையமான் நாடு என்பதன் மரூஉ ஆகும். பண்டைக் காலத்தே இருந்த கடையெழு வள்ளல்களுள் ஒருவனான மலையமான் திருமுடிக்காரி என்பவன் ஆண்ட நாடு மலையமான் நாடு ஆகும்.
6.2.2 தற்காலத்தில் கிளைமொழிப் பாகுபாடு
    தற்காலத்தில் மொழியியலார் தமிழ்நாட்டில் பேசப்படும் கிளைமொழியை,
    வட்டாரக் கிளைமொழி (Regional dialect)
    சமூகக் கிளைமொழி (Social dialect)
    பார்வைக் கிளைமொழி (Eye dialect)
    பொதுக் கிளைமொழி (Standard dialect)
என்றாற் போலப் பலவாறு பாகுபடுத்துகின்றனர்.
    கிளைமொழி தமிழ்நாட்டில் வழங்கும் இடம் பற்றி அதை ‘வட்டாரக் கிளைமொழி’ என்றும், அதைப் பேசுகின்ற மக்களின் சமூக நிலை பற்றிச் ‘சமூகக் கிளைமொழி’ என்றும் கூறுவர். கிளைமொழியை வரிவடிவத்தில் அளிக்கும்போது அதனைப் ‘பார்வைக் கிளைமொழி’ என்று கூறுவர். ஒரே மொழி வட்டாரத்திற்கு வட்டாரம், சாதிக்குச் சாதி, தொழிலுக்குத் தொழில் வேறுபட்டாலும் கூட, அவற்றிடையே ஒரு பொதுத்தன்மையைக் காணலாம். எழுத்துமொழியுடன் பெரும்பாலும் ஒத்துப் போகின்ற ஒரு கிளைமொழியைப் ‘பொதுக் கிளைமொழி’ என்று கூறுவர்.
thanks to http://www.tamilvu.org/courses/degree/d041/d0414/html/d0414662.htm