Origin of Cholas- Tamil Myth

2 c



Origin of Cholas- Tamil Myth

Cholas are said to be the three dynasties who ruled Tamil nadu from ancient times, But all three dynasties origin remain a question. Let us see the cholas origin.

Sora
The etymology of the word Chola has been agreed upon by many historians and linguists to be derived from the Tamil word Sora or Chora. Moreover, numerous inscriptions confirm that the name of the Dynasty was Sora but pronounced today as Chola(sanskrit).

kalvar caste
Cholas belong to kalvar caste, Kalvar are said to be invaders in sangam literatures better known as kalabhras. The kalvar people still live around tanjor. So are the Cholas natives of Tamil nadu.

chalukya cholas
The Eastern Chalukyas ruled a kingdom in Vengi (eastern Andhra Pradesh) from about 625 until 1070, Then they took over the chola kingdom and dynasty. Earlier three generations of Eastern Chalukyan prince have married chola princess. So the question is how they did not face any resistance. In this background Rajendra Chalukya accended chola throne as Kulothunga chola I , thus annexing chola empire to Eastern chalukya empire and there again was no resistance eventhough Virarajendra died and his son and successor Adhirajendra was assassinated. That clearly caste doubts on cholas as any different from chalukya stock.

Chalukya author Bilhana gives a version of the background to Athirajendra’s troubles in his Vikramankadeva Charita.
'On hearing news of trouble and revolt in the Chola country following the emperor’s death, Vikramaditya, immediately marched to Kanchipuram to quell troubles there. Then he went to Gangaikonda Cholapuram, destroyed the forces of the enemy and installed the prince (Athirajendra) on the throne. After spending a month in the Chola capital, Vikramaditya apparently satisfied that peace was restored, returned to his country. '

Vikramaditya VI has come to chola country and he is called Kannadasandhivigrahi as said by his kannada inscription at the Ranganatha Swami Temple, Srirangam as peacemaker between fighting cousins.

Udayaditya, Choda wrote a treatise Udayadityalankaram in Kannada, 75 stanzas on the art of Poetry based on Dandin Kavyadarsa

And they never combined with pandyas and after accession Rajendra chalukya defeated pandyas and annexed the whole of tamil nadu. This raises the question whether chola are kannada stock.

Cholas and Prakrit.
All the Inscriptions are in prakrit, not in tamil. That has to be noted. If they are Tamil rulers then what was the hesitancy in promoting tamil.

Telugu chola
We do not know the origin of Cholas dynasty,but we know the origin of Telugu cholas pronounced Chodas from 5th century AD onwards. We have inscriptions on the following telugu dynasties who were feudataries of Chalukyas. The chodas trace their decent to Ikshavakus , who trace their origin to Manu, the cholas also trace their origin to Manu, Manu Needhi Cholan

  • Velanati Cholas ( Ruled the Velanadu Region Current E.G,W.G and Krishna Districts)
  • Renati Cholas (Ruled the Renadu Regions Current Cuddapah, Kurnool Regions)
  • Pottapi Cholas (Ruled the Renadu Regions Current Cuddapah, Chittor Districts)
  • Konidena Cholas (Ruled the Palanadu region Current Guntur, Prakasam Districts)
  • Nannuru Cholas (Ruled the Pakanadu region Current Anantapur District)
  • Nellore Cholas (Ruled the Nellore,Chittor, Chengalpeta and Cuddapah Regions)
So the chola dyansty who started under 8th century can also have origin from above telugu cholas. Most apt description would be cholas are telugus , not tamil.

But Rajendra chola came to help Eastern chalukya king Danarnava against Telugu choda king jata choda bhima(Amma II brother in law). Later after Kulothunga I acended throne as chola king, they shifted loyalty to Chola kings.

Pallava origin
Killivalavan was a chola king mentioned in Sangam Literature, and of a period close to that of Nedunkilli and Nalankilli , in the Purananuru and Agananuru.The etymology of Killi is kilai (Branch in Tamil)

The word Pallava means branch in Sanskrit, denoting that they are a later offshoot (Kilai-> Branch(tamil)) of Chutus (satkarnis).Pallava is rendered as Tondaiyar in the Tamil language. The Pallava kings at several places are called Thondamans or Thondaiyarkon.The territory of the Pallavas was known as Tundaka Visaya or Tundaka Rashtra.(tundaka - Branch) The Sanskrit meaning of Pallava is Kilai The Tamil Thondai means the same, It shows that Pallavas are descendants (Kilay or Pirivu) of Chutus(satakarnis).

Karnata dynasties Chalukyas and Rastrakutas call themselves Vallabhas and Pallava also from Karnata have called themselves vallabhas in some places, which translates to valavan in Tamil.

If we take the killi -> Kilai and Pallava -> kilai and vallabha -> valavan

We have killi valvan and it shows that killi valavan is generic term applied to pallava vallabha.

After the pallavas revenge against pulikesin II, Ganga king who had marital relations with chalukyas defeated the pallavas and chased them out of kanchi. So the pallavas shifted themselves to a place called Kaduvetti, which is now in chola country. Many of their inscriptions are from kaduveti. Only after this time we see cholas rising. Cholas might have marital relations with pallavas and  putting killivalavan as one of their ancestors, shows their ancestors are  pllavas. Until Nirputunga pallava cornation ,they were feudatories of pallavas.
This also solves myth Pallavas are not mentioned in Sangam literature ,so sangam literature has to be dated before pallavas.

Others
There is no tiger in chola country ,but their emblem is Tiger has to be noted, which show they are from outside Chola region.

Chola kingdom fell despite efforts to propup their proxy administration by Hoysalas of Halebidu against Pandyas.

Bengali 's
The Following is a interesting take from Bengali community. Some Sangam works talks about five tribes who settled in Tamil Nadu. These are Naga tribes from north who moved down to south.the
  • VaeLir - the farmers,
  • Mazhavar - the hill people who gather hill products, and the traders
  • Naagar - people in charge of border security, who guarded the city wall and distant fortresses .
  • Kadambar - people who thrive on forests
  • Thiraiyar - the seafarers.
Pallavas are said to be sect of Thiraiyar. Later sub sects arose and one of the important sects is MaRavar( warriors, conquerors and rulers; including the major Tamil dynasties of Cheras, Cholas and Pandyas. The Following Paragraph is bengali take on the above subject.

Bengali's say many Naga-worshipping tribes proceeded from Bengal as well as from other parts of Northern India to establish their supremacy in Tamil Nadu. Of these tribes, the Marans, the Cheras and the Pangala Thiraiyar interest us most. The Cheras, it is stated, proceeded to Southern India from the north-west of Pangala or Bengal and established the "Chera" kingdom of much historical note. It is significant that the Cheras are mentioned in the old Brahmin literature as occupying the eastern tract of the Magadba country. As to the Marans, who are said to have been the neighbours of the Cheras in Northern India, it is equally important to note, that the Pandya kings claim to be of Maran descent. The Marans, who were also called Maravars, are reported to have been a very fierce and warlike people, and that they worshipped the goddess Kali on the top-knot of whose hair stood an infuriated cobra snake. The Pangala Thiraiyars are recorded as the latest immigrants, and it is narrated of them, that they proceeded from the sea coast of Bengal by boat and founded the Chola kingdom at Kanchi. As the phrase Pangala or Bangala Thiraiyar is equivalent to (Tlra-Vanga), we can assert un- hesitatingly, that these people had received Aryan influence in Bengal before they left for the Madras coast.

So the question is who are cholas , From the above points they are not definitely tamils, they are either Telugu or kannada stock

THANKS TO  http://controversialhistory.blogspot.com/2007/10/origin-of-cholas-tamil-myth.html

பிறமலைக் கள்ளர்--கொக்குளம்

0 c
பிறமலைக் கள்ளர் என்கிற சாதியினர் அதிகம் வாழும் பகுதி மதுரை மாவட்டம். எட்டு நாடுகளைக் கொண்டதாக சொல்லப்படும் இந்தப் பகுதியில், செக்கானூரணியை அடுத்த கொக்குளம் முக்கியமானது. இது ஒரு நாடு என்றழைக்கப்படுகிறது. இந்த மக்களின் பிரதான வழிபாட்டு மரியாதை, பேய்க்காமன் என்கிற நாட்டார் தெய்வத்திற்கு வழங்கப்படு கிறது. இத்தெய்வத்திற்கு பூசை புனஸ் காரங்களை நிகழ்த்துபவர் ஒரு பறையர். கள்ளர்கள் கோவிலாக இருந்தாலும், தீண்டத் தகாதவர்களுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு. இக்கோவிலின் நான்காம் நாள் திரு விழா பறையர்களுக்கானது, என்று லூயிஸ் டூமாண்ட் என்ற பிரெஞ்சு நாட்டு மானுவியல் அறிஞர், தனது பிரமலைக் கள்ளரின் சமூக அமைப்பு மற்றும் மதம் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். லூயிஸ் டூமாண்ட் தனது ஆய்வினை பிரமலைக் கள்ளர் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும், சுமார் 2 ஆண்டு காலம் (1957-59) தங்கியிருந்து ஆய்வு நடத்தி தெரிவித்த தகவல்களில் ஒன்றுதான், மேலே நாம் குறிப்பிட்டது. இன்றைய நிலை குறித்து விசாரித்த போதும், ஆமாம், பறையர் சாதியைச் சார்ந்த மனிதர் பூசை செய்து தருகிற பொருள் களை பக்தியோடு கள்ளர் சாதியைச் சார்ந்த மனிதர்கள் பெற்றுக் கொள்வதைப் பார்க்க முடியும், என்கிறார்கள். இது நெடுங்காலமாக, தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப் பட்டுவரும் உண்மை என்பதை தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் அறியாதது.

thanks to   http://esskannan.blogspot.com/2010/05/blog-post_7950.html

தமிழின் தலையெழுத்து...!

0 c

தமிழின் தலையெழுத்து...!

>> Sunday, August 17, 2008

அண்மையில் தமிழர்களுக்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் உள்ளத் தொடர்பை மொழி ஆய்வியல் ரீதியாக நிரூபணமாக்கும் சில திடுக்கிடும் தகவல்களைக் கொண்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. இக்கட்டுரையை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ம.இராசேந்திரன் படைத்திருந்தார். இதோ வாசகர்களுக்காக அக்கட்டுரை...

தமிழின் தலையெழுத்து, பெருமையும் வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல தலையெழுத்தைத் தொடக்க கால எழுத்து என்றும் பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து மொழியாகும். எழுத்து என்றால் ஒலிஎழுத்து என்றும் வரி எழுத்து என்றும் இரண்டையும் குறிக்கும். எழுப்பப்படுதலாலும் எழுதப்படுதலாலும் இரண்டு வகைக்கும் பொதுச் சொல்லாக இருந்த எழுத்து பிறகு வரி வடிவ எழுத்திற்கு மட்டுமே உரியதாக வழக்கத்திற்கு வந்துவிட்டது.

நெடுங்காலத்திற்கு முன்பே தமிழுக்கு எழுத்து இருந்திருக்கிறது. இப்போதும்கூட எழுத்தில்லா மொழிகள் பல உள்ளன. பாரசீக மன்னன் டரையசு என்பவனுக்கு சிந்தியர்கள் ஒரு தூது அனுப்பியதாக கிரேக்க வரலாற்றாசிரியர் அராடோட்டசு குறிப்பிடுகிறார். அஞ்சி ஓடாவிட்டால் இறந்துவிடுவாய் என்பதே தூதின் செய்தி. தவளை தண்ணீருக்குள் அஞ்சி மறைவதுபோலவும், எலி வளைக்குள் ஒளிவது போலவும் ஓடாவிட்டால் அம்புகளால் நீ கொல்லப்படுவாய் என்பதைச் சொல்வதற்காக, ஒருவரிடம் தவளை, எலி, அம்பு ஆகியவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். அது எழுத்தில்லாத காலம்.

தொல்காப்பியர் மெய்யெழுத்துகளும் எ,ஒ குறில்களும் புள்ளிபெறும் என்று வரிவடிவ எழுத்துகளைப் பற்றி நூற்பா தந்துள்ளார். சித்திரக் கோடுகள், குறியீடுகள், எழுத்துகள் என்று உலக மொழிகளின் எழுத்து வளர்ச்சியும் வரலாறும் அறியப்பட்டு வருகின்றன.

ஒரு பொருளைக் குறிக்க வரையப்பட்ட சித்திர எழுத்து உரு எழுத்து என்றும்; எண்ணத்தை வெளிப்படுத்துவது கரு எழுத்து என்றும்; ஓசையைக் காட்டுவது ஒலி எழுத்து என்றும்; உணர்வை வெளிப்படுத்துவது உணர்வெழுத்தென்றும் தமிழில் பல்வேறு எழுத்துகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.



சிந்துவெளி எழுத்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்ட தொன்மையான எழுத்துகளாகும். எல்லோரும் ஏற்கத் தக்க வகையில் இதுவரை யாரும் இவற்றைப் படித்தறிய முடியவில்லை. சிந்துவெளிக்குப் பின் கிடைப்பவை குறியீடுகள். குறியீடுகளையும் படித்தறிய முடியவில்லை. ஆனால் சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகள், கல்வெட்டுகள் நாணயங்கள் என்று மக்கள் வாழ்க்கையோடு கலந்து இடம்பெற்றுள்ளன.

சிந்துவெளி எழுத்துகள், குறியீடுகளுக்குப் பிறகு வந்தவை பிராமி எழுத்துகள். தமிழுக்கும், சமற்கிருதத்திற்கும், பிராகிருதத்திற்கும், பாலிக்கும் பொதுவாகவும் தமிழ் தவிர மற்ற மொழிகளுக்கு வர்க்க எழுத்துகளைக் கூடுதலாகவும் கொண்டு பிராமி எழுத்துகள் உள்ளன.

அப்படியென்றால் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உட்பட்ட நாடுகள் அடங்கிய நிலப்பகுதி முழுவதும் மொழிகள் வேறுவேறாக வழங்கப்பட்டு வந்திருப்பினும் பொதுவாக ஒரே எழுத்து முறை (சிற்சில கூடுதல் எழுத்துகளுடன்) இருந்து வந்துள்ளது.

அசோகன் கல்வெட்டுகளால் அறியப்பட்ட பிராமி எழுத்து, அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழ் நாட்டில் தமிழுக்கு உரியதாக இருந்திருக்கிறது. அசோகன் கல்வெட்டுகளில் குசராத்து மாநிலம் கிர்நார் 16ஆம் பாறைக் கல்வெட்டில் சேர சோழ பாண்டியர்களும் சத்தியபுத்திரராகிய அதியமான் மரபினரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் கிடைத்த எழுத்தாதாரங்கள் அசோகன் காலத்துக்கும் முற்பட்டவை என்று தொல்லியல் அறிஞர்கள் பேராசிரியர் முனைவர் கா.ராசனும் முனைவர் தூ.இராசவேலும் கருதுகின்றனர்.

'அத்திபடாவிலும்' அயோத்தியாவிலும் கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமற்கிருத கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அசோகன் கல்வெட்டுகளில் பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தின் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் ஒரே எழுத்து (பிராமி) முறையில் (வர்க்க எழுத்துகள் தவிர) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தமத நூலான லலித விசுத்தாரத்திலும் சமண நூலான பன்னவனசுதாவிலும் 'பிராமி' குறிப்பிடப்படுகிறது. பிராமி எழுத்தை உருவாக்கியவர் புத்தர் என்றும் சமண சமய தீர்த்தங்கரர் ரிசபதேவர் மகள் பிராதமி பெயரில் உருவாக்கப்பட்டதென்றும் பிராமி பற்றிய சமயக் கதைகள் பல உள்ளன.

அசோகன் கல்வெட்டில் இடம் பெற்றதால் பிராமி என்று அழைக்கப்படுகிறது. மொழியின் பெயரில் எழுத்து அமைக்கப்படுவதே மரபு. அசோகன் என்பதோ பிராமி என்பதோ மொழிகளின் பெயர்களாக இல்லை.

எந்த ஒரு தனிப்பட்ட மொழிக்கும் பிராமியை உடைமையாக்கிவிடக் கூடாது என்பதால் பயன்படுத்தியவர் பெயரில் அசோகன் பிராமி என்று அழைக்கப்படிருக்கலாம். அதிலும் தமிழ் மொழிக்கான பிராமியைத் தென்பிராமி என்றும் தமிழ் பிராமி என்றும் தமிழில் அழைக்கிறோம். தொல்காப்பியரும் சங்க இலக்கியப் பாடல்களும் 'தமிழியில் தாம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் மதிவாணன் கூறுகிறார்.

இந்தியாவின் தொன்மையான வரிவடிவமாம் சிந்து வெளிக் குறியீடுகள் பூம்புகார், மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் முதுமக்கள் தாழிகளிலும், சூலூர் மண்வட்டிலிலும் இடம் பெற்றுள்ளமையைத் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். சிந்துவெளி எழுத்துகளின் காலம் குறைந்தது கி.மு1500 என்று கருதப்படுகிறது.

சிந்துவெளி எழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் இடைப்பட்ட குறியீடுகள் இந்தியாவின் தமிழகத்தில்தான் குறிப்பாக சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஊர்களில்தான் அதிக அளவில் கிடைத்துள்ளன. பிராமி இந்திய மொழிகளுக்கான எழுத்துகளின் தாய் என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

புதிய கற்காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் (விந்தியமலைப் பகுதி நீங்கலாக) திராவிட இன மொழிகளே பேசப்பட்டன என்று பேராசிரியர் பி.டிசீனிவாச ஐயங்காரும் (Stone Age in India) பேராசிரியர் டி.ஆர்.சேச ஐயங்காரும் (Dravidian India) திராவிட மொழி தென்னிந்திய மொழி மட்டுமன்று, காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி என்று அறிஞர் அம்பேத்காரும் (The unTouchables) கூறியுள்ளார்.

தமிழ் பிராமி எழுத்துகளோடு கிடைத்துள்ள குறியீடுகளை அதற்கும் முற்பட்ட சிந்துவெளி எழுத்துகளோடு இணைத்துக் கொள்ளத் தேவைப்படும் இணைப்புக் கண்ணிகள் கிடைக்குமாயின் தமிழின் தலையெழுத்து தீர்மானமாகிவிடும்.
0 c
மெல்ல நகை பூத்து
மேனி மலர் போர்த்தி
துள்ளி நடை போடும்
பொன்னி நதி ஓடும்
வண்டை வளநாடா !
வண்டை வளநாட்டை
ஆண்ட குல கொழுந்தே!
சோழர் குல விளக்கே !

வண்டை நிலமான
சோழ வளநாட்டை
ஆண்ட பரம்பரையால்
வாண்டையார் என பெற்ற
சேர பாண்டியரின் ரத்த உறவினறே !
முடி வேந்தர் மூவரின்
வழி வந்த காரணத்தால்
முக்குலம் என கொண்டோய் !

மூவேந்தர் முன்னேற்ற
கழகம் கண்ட கொற்றவனே !
முன்னவனின் பின்னவனே!
தேவர்களின் மன்னவனே !
வாழ்க
நீ பல்லாண்டு !

அவதார் – ஒரு வாக்குமூலம்

0 c
 


 

1988ல் மங்களூர் திரையரங்கு ஒன்றில் ராபர்ட் போல்ட் எழுதி ரோலண்ட் ஜோ·ப் இயக்கிய ‘த மிஷன்’ என்ற திரைபப்டத்தைப் பார்த்தேன். என்னுடைய சிந்தனையில் ஆழமான ஒது திருப்புமுனையை உருவாக்கிய திரைப்படம் அது. அதுவரை நான் கிறித்தவ மதத்தையும் ஐரோப்பிய ஆதிக்கத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்வையை மிகவும் விரிவாக்கியது. அதன்பின் நான் வாசித்த ஏராளமான நூல்களுக்கான தொடக்கம் அந்த திரைப்படம்தான்.
 
1750களில் தென்னமேரிக்க பழங்குடிகளின் நிலங்களை ஸ்பானிஷ் ஆக்ரமிப்பாளார்கள் கைப்பற்றி அவர்களை அடிமையாக்கி வணிகம் செய்ததின் சித்தரிப்பு இந்த திரைப்படம்.  திரையை விட்டு அரங்குக்குள் கொட்டுவதுபோல இகுவாழ்சு [ Iguazu ]  அருவியைக் கண்டதுமே நான் வேறு ஓர் உலகுக்குள் சென்றுவிட்டேன். ஒரு பாதிரியாரை அங்கே காட்டுக்குள் வாழக்கூடிய  குவாரன்னி [Guaranni] சிவப்பிந்தியர்கள் சிறைப்பிடித்து அந்த அருவில் போட்டு விடுகிறார்கள். அதுதான் படத்தொடக்கம்.

மீண்டும் ஒரு ஜேசு சபைப் பாதிரியார் அந்த பிரம்மாண்டமான அருவியின் விளிம்பில் வழுக்கும் பாறை வழியாக தொற்றி மேலே ஏறும் காட்சியுடன் படம் மீண்டும் ஆரம்பிக்கிறது. ·பாதர் கப்ரியேல் [ஜெர்மி அயன்ஸ்] அந்த காட்டுக்குள் சென்று சிவப்பிந்தியர் நடுவே அமர்ந்து தன் புல்லாங்குழலை இசைக்கிறார். அன்னியர் எவரையும் கொல்லக்கூடிய அந்த மக்கள் அந்த இசையால் மயங்கி அவரை தங்களுடன் வாழ அனுமதிக்கிறார்கள். சேவையால் அவர் அவர்களில் ஒருவராக ஆகிறார்.
 
ஒரு முறை ஸ்பெயினுக்கு வரும்போது தன் காதலியின் தோழனைக் கொன்ற குற்றவுணர்ச்சியில் இருக்கும் ரோட்டிரிகோ மெண்டாஸா [ராபர்ட் டி நீரோ] வைச் சந்திக்கும் ·பாதர் கப்ரியேல் அவனை தன்னுடன் வந்து சேவையாற்றி குற்றவுணர்ச்சியை தீர்க்கும்படி அழைக்கிறார். அவனும் அவருடன் செவ்விந்தியர்களின் காட்டுக்குள் வருகிறான்.

மெண்டாஸா ·பாதர் கப்ரியேலுடன் இணைந்து அந்தக் காட்டுக்குள் செவ்விந்தியர்களுக்குச் சேவை செய்கிறான். அந்த மக்களுக்கு கல்வி கற்பிப்பதே ·பாதர் கப்ரியேல்லின் பணி. கல்வி என அவர் சொல்வது ஸ்பானிஷ் மொழி பைபிளை வாசிக்கக் கற்றுக்கொடுப்பதைத்தான். இந்நிலையில் ஸ்பெயின் தன் நிலங்களை ஓர் போர் ஒப்பந்தம் மூலம் போர்ச்சுக்கலுக்கு அளிக்கிறது. செவ்விந்தியப் பழங்குடிகளை அடிமைகளாக ஆக்கி விற்பதற்கான அனுமதியுடன்.
 
செவ்விந்தியர்களை ஆன்மா இல்லாதவர்கள் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே அவர்களை அடிமைகளாக விற்க கிறித்தவ அறவியல் அனுமதிக்கும். ஆகவே அவர்களை மதம் மாற்றுவதற்கு போர்ச்சுக்கல் அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்த மக்கள் கிறித்தவர்கள் தான் , அவர்களால் ஜெபம்செய்யவும் பைபிளை புரிந்துகொள்ளவும் முடியும் என்று ·பாதர் கப்ரியேல் வாதிடுகிறார். அவர்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கத்தோலிக்க தேவாலயத்தின் உயர்பீடம் வரைச் சென்று மன்றாடுகிறார்

ஆனால் போர்ச்சுக்கல் அரசின் ஆதரவை இழக்க விரும்பாத கத்தோலிக்கத் திருச்சபை செவ்விந்தியர்கள் மனிதர்களல்ல, அவர்களை மதம் மாற்றியது செல்லாது என்று ஆணையிடுகிறது. போர்ச்சுக்கல் படைகள் குவாரன்னி மக்களை ஒடுக்கி சிறைப்பிடிக்க வருகின்றன. அருவியின் கீழே செவ்விந்தியர்களை அடிமைகளாக்கி பெரும் தோட்டங்களை நடத்தும் முதலாளிகளும் அவர்களுடன் கைகோர்த்துக்கொள்கிறார்கள். சிலுவையேந்தி கத்தோலிக்க பாதிரிகளும் உடன் வருகிறார்கள்.

படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் என் நெஞ்சை உலுக்கின. படைகளின் எதிரே குவாரென்னி இனத்து சிறுவர் சிறுமியர்களை அழைத்துக்கொண்டு ·பாதர் கப்ரியேல் வருகிறார். அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு கிறிஸ்துவின் நாமத்தைப் பாடியபடி வருகிறார்கள். அவர்களை கண்டு கொஞ்சமும் தயங்காத காலனியப்படைகள் அவர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள். கூட்டம்கூட்டமாக அவர்கள் செத்து குவிகிறார்கள்.

·பாதர் கப்ரியேலின் வழிகளை நம்பாத மெண்டாஸா அம்மக்களை திரட்டி அம்புவில்லுடன்  ஆதிக்கவாதிகளுக்கு எதிராக போரிடுகிறார். கடுமையான போருக்குப்பின்னர் அவர்களும் கொல்லப்படுகிறார்கள். குவாரென்னி இனக்குழுவின் சில குழந்தைகள் மட்டுமே எஞ்சுகிறார்கள். அவர்கள் அந்தபப்டுகொலை நடந்த இடத்துக்கு வருகிறார்கள். அங்கிருந்து ·பாதர் கப்ரியேல்லின் வயலின் புல்லாங்குழல் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் சிறிய படகில் ஏறி காட்டுக்குள் செல்லும் நீரோடை வழியாக தப்பி இன்னும் அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு மரச்சிலுவை, ·பாதர் கப்ரியேல் அவர்களுக்குக் கொடுத்த சிலுவை, கிடைக்கிறது. ஒரு பையன் அதை எடுத்துக்கொள்கிறான். அவர்கள் காட்டுக்குள் சென்று மறைகிறார்கள். அவர்கள் மறைந்தபின் அந்தக்காட்டை காட்டியபடி படம் முடிகிறது.

·பாதர் கப்ரியேல் உண்மையில் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டார். குவாரென்னி இனக்குழுவின் காட்டுக்குள் ஊடுவுவதற்கான ஒற்றராக அவரை அறியாமலேயே அவர் பயன்படுத்தப்பட்டார். அவர் காட்டுக்குள் செல்ல ஏற்பாடுகளைச் செய்தவர்கள் அடிமை வணிகம் செய்யும் தோட்டமுதலாளிகள் மற்றும் ராணுவத்தினர்தான். ஆனால் அவரது மனசாட்சி அவர்களுடன் இணைந்து  அவரை பலியாகச் செய்தது.

என்யோ மோரிகனின் [Ennio Morricone] அற்புதமான இசையை இன்னமும் நான் மறக்கவில்லை. அந்த கடைசிக்காட்சியின் இசை அவ்வப்போது என்னை வந்து தீண்டுவதுண்டு. சமீபத்தில் அமெரிக்கா சென்று மிஷனரிகளாலும் காலனியவாதிகளாலும் கலி·போர்னியாவில் கொன்றே அழிக்கப்பட்ட பூர்வகுடிகளின் நினைவுக்காக அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை பார்த்தபடி இருந்தபோது ஒரு மெட்டு என் மனதில் ஓடியபடியே இருந்தது. அது எனியோ மோரிகோனின் அந்த  உச்சகட்ட இசைதான் என பின்னரே அறிந்தேன்.

***
 
நேற்று ஜேம்ஸ் கேமரோன் எழுதி இயக்கிய ‘அவதார்’ என்ற படத்தை குழந்தைகளுடன் பார்த்தேன். 2154ல் விண்வெளியில் உள்ள பாலி·பிமஸ் என்ற வாயுவாலான கிரகத்தின் நிலவாகிய பண்டோரா என்ற கோளத்தில் நிகழ்கிறது கதை. பூமியளவுக்கே பெரியது இந்த நிலவு. இங்கே நாவி என்ற மனிதவகையினர் வாழ்கிறார்கள். மனிதர்களை விட இருமடங்கு பெரிய, மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட, நீல நிறமான உயிரினங்கள் இவர்கள்.

பண்டோராவில் மனிதர்கள் குடியேறிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கே ஆக்ரமிப்பாளர்களாகவே வந்திருக்கிறார்கள். தங்கள் உயர்தொழில்நுட்ப முகாமில் அனைத்து வகையான ஆயுதங்களுடனும் இருக்கும் மனிதர்கள் நாவிகளுக்கு ‘கல்வி’ கற்றுகொடுக்கிறார்கள். அவர்களை ‘முன்னேற்ற’ முயல்கிறார்கள். ஆனால் நாவிகள் இவர்களை நம்புவதோ ஏற்றுக்கொள்வதோ இல்லை. நாவிகளுடன் நிகழும் போர்களில் ஏராளமான மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். நாவிகள் ‘பண்படாத’வர்களாகவே இருக்கிறார்கள்

நாவிகள் அங்கிருக்கும் இயற்கையுடன் கலந்து அதன் ஒரு பகுதியாகவே வாழ்கிறார்கள். அவர்கள் இயற்கையை ஏய்யா என்ற தாய்தெய்வமாக வழிபடுகிறார்கள். அவர்களுக்கு இயற்கையுடனும் அதன் உயிர்களுடனும் உரையாடக்கூடிய நுண்ணறிவு  இருக்கிறது.ளந்த கிரகத்தின் அத்தனை மரங்களும் வேர்கள் பின்னி ஒன்றுடன் ஒன்று உரையாடுகின்றன, அந்தக்கிரகமே ஒரு மகத்தான மூளை!
 
பண்டோராவில் அபூர்வமான ஒரு தனிமம் கிடைக்கிறது. அதைக் கொள்ளையடிப்பதற்காகவே அங்கே மனிதர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நாவிகளை நெருங்க முடிவதில்லை. பண்டோராவில் மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் இல்லை. ஆகவே மனிதர்கள் கண்ணாடி அறைக்கு வெளியெ செல்ல முடியவில்லை. கடைசியில் அதற்காக ஒரு வழி கண்டுபிடிக்கப்படுகிறது. நாவிகளின் உடலின் மரபணுக்களையும் மனித மரபணுக்களையும் கலந்து நாவிகளை போலவே சில உடல்களை உருவாக்குகிறார்கள்
 
இந்த செயற்கை நாவிகளுக்கு மனம் இல்லை. அந்த மனம்  மனிதர்களில் ஒருவருடையது. அவர் ஒரு கருவிக்குள் படுத்துக்கொள்ளும்போது அவரது மூளையுடன் அந்த நாவியின் மூளை இணைப்பு பெறுகிறது. அந்த நாவியின் உடலில் தன் மனதுடன் அந்த மனிதர் வெளியே சென்று  உலாவி வரமுடியும்.  அந்த பயணம் ஒரு கனவு போல் இருக்கும். 

ஜாக் ஸல்லி போலியோ வந்து நடக்க முடியாமலிருக்கும் இளைஞன். அவனது சகோதரன் பண்டாரா கிரகத்தில் கொல்லப்பட்டதனால் அவனுக்குப் பதிலாக இவன் வருகிறான். அவனுடைய சகோதரனைப்போல ஜாக் ஒரு ஆராய்ச்சியாளன் அல்ல, படைவீரன். தன் சக்கர நாற்காலியில் இருந்தே அவனால் போரிட முடியும். அவனுக்கு கால்களை செய்து தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு ஜாக் கொண்டுவரப்பட்டிருக்கிறான்.
அந்த முகாம் ராணுவ கர்னலான மைல்ஸ் குவாரிட்ச் ஜாக்கை ஏன் நாவிகளுக்குள் அனுப்புகிறார் என்பதை விளக்குகிறார். அவன் பணி அந்த நாவிக்குலத்திற்குள் ஒரு நாவியாக ஊடுருவுவது. அவர்களில் ஒருவனாக ஆவது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து எப்படியாவது அவர்களை அந்த பகுதியில் இருந்து விரட்டியடிப்பது. ஜாக் ஒப்புக்கொள்கிறான்.

மனப்பரிமாற்றம் செய்யும் கருவியில் படுத்து நாவியின் உடலுக்குள் புகுந்து விழித்துக்கொள்கிறான் ஜாக். பண்டோராவின் காட்டுக்குள் செல்பவன் அங்குள்ள அதிசயங்களில் மெய்மறக்கிறான். ஆபத்தில் சிக்கி வழிதவறுபவனை அங்குள்ள இளவரசி நெய்த்ரி காப்பாற்றுகிறாள். அவனை தன் அப்பாவாகிய அரசனிடம் இட்டுச்செல்கிறாள். ஜாக் மீது எப்படியோ நம்பிக்கை கொள்ளும் அந்த நாவிகள் குலம் அவனை தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்கிறது. அக்குலத்துக்கு ஒம்மட்டிகாயா என்று பெயர்.

ஜாக் அவர்களை உளவறிந்து அந்த தகவல்களை குவாரிட்ச்சுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவர்களுக்கு ஒரு தாய்மரம் இருக்கிறது. அந்த மாபெரும் மரம் அவர்களுக்கு கடவுள் போன்றது. இயற்கையின் மையம் அது. அந்த மரத்தின் அடியில்தான் மனித ஆக்ரமிப்பாளர்கள் தேடிச்செல்லும் கனிமம் உள்ளது. அந்த மரத்தை நாவிகளை துரத்திவிட்டு அவர்கள் அழித்தாகவேண்டும். ஆனால் அந்த மரத்தை நாவிகள் எக்காரணம்கொண்டும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்கிறான் ஜாக்.
 
இளவரசி நெய்த்ரியுடன் ஜாக் மெல்ல மெல்ல காதல் கொள்கிறான். அவன் மனம் அந்த நாவிகளில் ஒன்றாக ஆகிறது. ஒருமுறை அவன் நாவிகளின் காட்டை அழிக்கவரும் பிரம்மாண்டமான புல்டோசரை செயலிழக்கச் செய்வதைக் கண்ட குவாரிட்ச் அவன் மனம் தடம் மாறிவிட்டதை உணர்ந்துகொள்கிறான். மேற்கொண்டு அவன் நாவிகளிடம் செல்லவேண்டாம் என தடுக்கிறான்.

ஆனால் அந்த முகாமில் இருந்து தப்பும் ஜாக்கும் அவன் நண்பர்களும் நாவிகளுக்கு ஆதரவாக போரிடுகிறார்கள். குவாரிட்ச் தன் பெரும் விமானபப்டையுடனும் வெடிப்பொருட்களுடனும் நாவிகளுடன் போர்புரிந்து அந்த தாய்மரத்தை அழிக்கிறான். நாவிகள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் வனம் சூறையாடப்படுகிறது.

அவர்கள் செயலிழந்து தங்கள் தாய்தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று கூடியிருக்கையில் அங்கே செல்லும் ஜாக் அவர்களிடம் உண்மைகளை சொல்கிறான். அவர்களை திரட்டி மனிதர்களுக்கு எதிரான பெரும்போரை நடத்துகிறான். மனித இனம் தோற்கடிக்கப்பட்டு சிறையிடப்பட்டு பூமிக்கே திருப்பி அனுப்பப்படுகிறது.
 
மனிதனாகிய ஜாக்கில் இருந்து அவன் ஆன்மாவை இயற்கையாகிய தாய் தெய்வத்தின் உதவியுடன் அவனுடைய நாவி உடலுக்கு மாற்றுகிறார்கள். நாவியாக மாறிய ஜாக் அவர்களுடனேயே இருந்துவிடுகிறான்.

*
 
அவதார் ஒரு பிரம்மாண்டமான படம். திரைத்தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டப்பாய்ச்சலுக்கான  முதற்புள்ளி இது. இதன் பெரும்பகுதி முழுக்க முழுக்க வரைவிய நுட்பத்தாலெயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த கதைச்சூழலே செயற்கையாக வடிவமைப்பட்டிருப்பது அனேகமாக உலகிலேயே இதுதான் முதல்முறை.  மையக்கதாபாத்திரங்கள், பல்லாயிரம் துணைக்கதாபாத்திரங்கள், பறவைகள், மிருகங்கள், பூச்சிகள், மரங்கள், நிலம்,வானம் எல்லாமே வரைவியம் உருவாக்கியவை.

அந்த வரைவியப் பிம்பங்களின் ‘நடிப்பு’ மிகுந்த நுட்பத்துடனும் உணர்ச்சிகரமாகவும் இருப்பது ஒரு கட்டத்தில் என்னை இனிமேல் நடிப்பு என்றால் என்ன பொருள் என்றே எண்ணச்செய்துவிட்டது. இனி நடிப்பதற்கு மனிதர்களோ காட்டுவதற்கு நிலமோ தேவையில்லையா என்ன? அந்த விசித்திரமான குதிரைகளின் ஒவ்வொரு தசைச்சிலிர்ப்பும் துல்லியம்.  அந்த மாபெரும் வவ்வால்பறவைகளின் ஒவ்வொரு சிறசைப்பும் துல்லியம். ஒளிவிடும் தாவரங்கள் பறக்கும் மலர்கள் – அவதார் ஒரு மகத்தான கனவு.  
 
திரும்பி வரும்போது சட்டென்று எனக்கு தி மிஷன் நினைவுக்கு வந்தது. இரண்டுமே ஒரே படங்கள் அல்லவா? உலகத்தைக் காலனியாக்கி முடித்த ஐரோப்பா வேறு கிரகங்களைக் காலனியாக்குகிறது.  அவதாரில் ஒரு வசனம் வருகிறது ‘நமக்கு வேண்டிய ஒன்று அவர்களிடம் இருக்கிறது என்பதற்காக அவர்களை எதிரிகளாக எண்ணுவது அநீதி’ ஆனால் ஐரோப்பா முந்நூறு வருடங்களாகச் செய்துகொண்டிருப்பது அதைத்தான்.

·பாதர் கப்ரியேலுக்கும் ஜாக்குக்கும் எத்தனை ஒற்றுமை. ஏதோ ஒரு வாக்குறுதியால் அந்த அன்னிய மனிதர்கள் நடுவே ஊடுருவ விடப்படுகிறார்கள் அவர்கள். உள்ளூர வெள்ளையர், வெளியே இன்னொருவர். அந்த  அன்னிய மனிதக்கூட்டத்திற்குள் செலுத்தப்பட்ட நுட்பமான உளவுப்படை அவர்.  அதை உணரும்போது அவரது மனசாட்சி அவரை திசை திருப்புகிறது.

இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளிலேயே பலர் அத்தகையவர்கள். உதாரணம், ஜி.யு.போப், ஹெர்மன் குண்டர்ட். ஆனால் பலர் அந்த உளவுத்தொழிலை தங்களை அறியாமலேயே செய்து இந்திய சமூகங்கள் மீது காலனியாதிக்கம் வேர்விட்டெழுவதற்குக் காரணமாக அமைந்தார்கள் என்பதே வரலாறு.

இந்த சினிமாவில் ஜாக் நாவிகளுக்குள் செல்வதை அப்படியே ஒத்திருக்கிறது சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ காட்டும் ஒரு நிகழ்வு.. பிறமலைக்கள்ளர்களை ஒடுக்கவோ வெல்லவோ முடியாத வெள்ளைய ஆட்சி பிறமலைக்கள்ளர்களில் இருந்து எடுத்து வளர்க்கபப்ட்டு கிறித்தவ பாதிரியாராக ஆக்கப்பட்ட ஒரு ஜேசுசபை உறுப்பினரை அனுப்புகிறது. அவருக்கு அந்த மக்கள் மீது பிரியம்தான்.  தன் சொந்த முன்னோர்களை அறியும் ஆர்வத்துடன்தான் அவர் அந்த மக்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார். ஆனால் அந்த ஆய்வேடு வெள்ளையர்களுக்கு மாபெரும் ஆயுதமாக ஆகிறது. பிறமலைக்கள்ளர்களின் எல்லா குலரகசியங்களும் அவர்களுக்கு தெரிந்துவிடுகின்றன. அவர்களை குற்றபரம்பரை என்று முத்திரை குத்தி வேருடன் கெல்லி எறிகிறார்கள்!

ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் ‘உலகைவெல்லும்’ இலக்கியங்கள் எழுதப்பட ஆரம்பித்தன. உலகம் என்பது ஐரோப்பியனுக்கான புதையலை ஒளித்து வைத்திருக்கும் மர்மவெளி என்று சித்தரிக்கப்பட்டது. ‘புதியஉலகத்தின்’ ஆச்சரியங்கள் களியாட்டங்கள் அபாயங்கள் விதந்து எழுதப்பட்டன. அங்குள்ள ‘பண்படாத’ ‘மூர்க்கமான’ ‘மனிதத்தன்மை குறைவான’ மக்களுக்கு அங்குள்ள செல்வங்களால் பயனில்லை. அவர்களை வென்று, கொன்றழித்து, அச்செல்வங்களை எடுத்துக்கொள்வதே ஐரோப்பிய வெள்ளையனின் அறம். அவனுடைய சாகசத்திற்கான பரிசு அது.
பலநூறு ஹாலிவுட் படங்களில் இந்த புதையல்வேட்டை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு இப்போது நினைவுக்கு வருவது ‘கிங் சாலமோன்ஸ் மைன்ஸ்’ என்ற மாபெரும் படம். இளமையில் நான் அதன் அகன்ற காட்சியமைப்புக்காக மீண்டும் மீண்டும் அதைப்பார்த்திருக்கிறேன். எச். ரைடர் ஹகார்ட் எழுதிய சாகச நாவல் இது. 1985 ல் இது படமாக வெளிவந்தது. புகழ்பெற்ற பெரும்பட இயக்குநரான லீ தாம்ஸன் இயக்கியது. ஏற்கனவே இந்த நாவல் மூன்று முறை படமாக வெளிவந்திருக்கிறது.  எம்.ஜி.எம் தயாரிப்பாக வந்த முந்தையபடம் நாகர்கோயில் பயோனியர் சரஸ்வதி அரங்கில் அக்காலத்தில் ஐம்பதுநாள் ஓடியிருக்கிறது.

புதையலை பயன்படுத்த தெரியாத ‘காட்டுத்தனமான’ மக்கள் நடுவே அது இருக்கிறது. சாகசக்காரனான வெள்ளையன் அபாயங்கள் வழியாக அந்த புதையலை கண்டுபிடித்து எடுக்கிறான். அந்தப்பயணத்தில் அந்தக் காட்டுஜனங்களுக்கு உதவி அவர்களுக்கும் வேண்டியவனாக ஆகிறான் என்பதே இந்நாவலின் கதை. அந்த ஜனங்கள் மனிதர்கள் போல அல்லாமல் ஏதோ பூச்சிக்கூட்டம் போல பெரும்திரளாக காட்டப்படுகிறார்கள். எந்தவிதமான அறிவுக்கூர்மையும் இல்லாமல் விலங்குகள் போல  கதாநாயகனை துரத்தி வந்து கொண்டே இருக்கிறார்கள். அவனை பிடித்ததும் பெரிய பானையில் தக்காளி வெங்காயம் பூண்டு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைக்கப்போட்டுவிட்டு ஈட்டிகளை உன்றியபடி ஊகா ஊகா என்று ஒலியெழுப்பி நடனமாடுகிறார்கள். தெளிவாகவே ஐரோப்பா அல்லாத உலகத்தைப்பற்றிய ஐரோப்பிய மனச்சித்திரத்தைக் காட்டும் படம்.
மீண்டும் மீண்டும் நமக்கு வந்துசேரும் படக்கதைகளில் இந்தக்கதையின் வேறு வேறு வடிவங்களே உள்ளன. டார்ஜான், வேதாளர் போன்ற கதைகளில் இதன்  இன்னொரு நுட்பமான மறு வடிவம் உள்ளது. அந்த அறிவில்லாத காட்டு மக்களின் செல்வங்களைக் காப்பாற்றும் ரட்சகராக வெள்ளையர் இருக்கிறார். அவர்கள் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்.

ஐரோப்பிய சாகச நாவல்கள், திரைப்படங்கள் அனைத்துமே மனிதனை மையமாக்கியவை. மனிதன் என்றால் ஐரோப்பிய மனிதன். அவனுக்கு எதிரான தீய சக்திகளாகவே பிற  நாகரீங்கள், பிற மனிதர்கள், பிற உயிர்கள் காட்டப்படுகின்றன. அது ஆப்ரிக்க காட்டுமனிதர்களாக இருக்கலாம் அல்லது வேற்று கிரக உயிராக இருக்கலாம் அல்லது அனகோண்டா போல வேறு உயிராக இருக்கலாம். அவற்றை நோக்கி சடசடனெ குண்டு மழை பொழியும் ஐரோப்பியன் அந்தப்படங்களின் கதாநாயகன். அவனது வெறுப்பும் சினமும் பொங்கும் கடைசித் தாக்குதல் காட்சியே உச்சம். அதற்காக அந்த ‘மாற்று சக்தி’ படத்தில் தீமையின் வடிவமாக காட்டப்பட்டிருக்கும்.

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற மம்மி படவரிசைகளில் புதையலைக் காக்கும் மம்மிகளும் பூதகணங்களும் எப்படிச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன? கிங்க்ஸ் சாலமோன்ஸ் மைன்ஸ்-ல் ஆப்ரிக்கப் பழங்குடிகள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றனவ் அப்படியேதான். அதே காட்சிப்பிம்பங்கள்தான். காதலியுடன் புதையலிருக்கும் அன்னிய நிலத்தில் அலையும் சாகசக்காரனான கதாநாயகன்!  

அந்த வழக்கமான சித்தரிப்பை தலைகீழாக்குகிறது என்பதே அவதாரின் மிகமுக்கியமான தனித்தன்மை. இங்கே மனிதர்கள் பேராசையின் அழிவின் தீமையின் வடிவங்களாகக் காட்டப்படுகிறார்கள். கதை அவர்களின் கோணத்தில் சொல்லப்படாமல் அவர்கள் சுரண்டி அழிக்க விரும்பும் தரப்பின் கோணத்தில் சொல்லப்படுகிறது. அந்த மக்கள் இயற்கையின் மடியில் வாழும் வாழ்க்கையின் சுதந்திரமும் அழகும் சித்தரிக்கப்பட்டு அதற்கு நேர்மாறாக தனக்குத்தானே கட்டிக்கொண்ட கண்ணாடிக்கூண்டுக்குள் கொலையந்திரங்கள் சூழ வாழும் மனிதர்கள் காட்டப்படுகிறார்கள். இந்தப்படம் முழுக்க காட்சிரீதியாகவே இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் நிறுவப்படுகிறது. பேரழகு கொண்ட பண்டோராவின் நிலக்காட்சி முடிந்த கணத்தில் பளபளக்கும் இயந்திரங்கள் நிறைந்த இடுங்கலான ராணுவ முகாம் காட்டப்படுகிறது.

பேராசையால் வளங்களை சுரண்டுவது அப்படிச் சுரண்டுவதற்கு தேவையான ராணுவத்தை உருவாக்குவது அந்த ராணுவத்திற்கு தீனிபோட மேலும் உலகை சுரண்டுவது என்ற ஐரோப்பிய வாழ்க்கைமுறையை திட்டவட்டமாகச் சித்தரிக்கிறது அவதார். ராணுவவெறியும் அறிவியலும் கைகோர்த்துக்கொள்வதை பிற உலகத்தை முழுக்க அவர்கள் துச்சமாக நினைப்பதை காட்டுகிறது. அந்த கூட்டணி நடத்தும் தாக்குதல்களில் தெரியும் ஆணவமும் கண்மூடித்தனமான அழிவு மோகமும் மனதை பெரிதும் பாதிக்கின்றன.

குறிப்பாக அந்த அதிபிரம்மாண்டமான தாய்மரம் வேருடன் சரியும் காட்சி மகத்தானதோர் குறியீடு போல் உள்ளது. சென்ற இருநூறு வருடங்களில் ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகமெங்கும் உள்ள இயற்கைச்செல்வங்களில் முக்கால்பகுதியை அழித்திருக்கிறது என்ற பிரக்ஞையுடன் பார்க்கும் ஒருவருக்கு நெஞ்சடைக்கச் செய்யும் தருணம் அது. பறவைகள் பறந்து தவிக்க உயிரினங்கள் சிதற நாவிகள் கதறி அழ அது சரிவது ஒரு முதுமூதாதையின் மரணம் போலிருக்கிறது.

உலகம் முழுக்க இருந்த பன்மைத்தன்மை கொண்ட பண்பாடுகளில் நாமறியாத எத்தனையோ வாழ்க்கைச் சாத்தியங்கள் ஞானங்கள் இருந்தன, மூர்க்கமான ஒற்றைப்படையாக்கும் போக்கால் அவற்றை அழித்துவிட்டோம் என்ற உணர்வை அடைந்துவரும் நவீன ஐரோப்பிய மனத்தின் வெளிப்பாடாக அமைந்த திரைப்படம் இது. அமெரிக்கா சென்றபோது அங்குள்ள அருங்காட்சியகங்களில் வரலாற்று மையங்களில் ஐரோப்பிய மிஷனரிகளும் ஆக்ரமிப்பாளர்களும் அங்கு இருந்த நாகரீகத்தை முற்றாக அழித்ததை எந்தவிதமான மழுப்பல்களும் இல்லாமல் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டேன்.  அந்த வெளிப்படைத்தன்மை அவர்களின் அடுத்த தலைமுறைக்கு அறவுணர்ச்சியை ஊட்டும் என்பது உறுதி

பலநுறு நூல்கள் வழியாக பேசப்பட்ட விஷயம்தான். எஞ்சும் உலகையாவது ஐரோப்பியமைய லாபவெறியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற  பதற்றம் உலகமெங்கும் இன்றுள்ளது. அவதார் போன்ற ஒரு மகத்தான கேளிக்கைப்படம் இளம் மனங்களில் அந்தச் சித்திரத்தை ஆழமாக நிலைநாட்டுமென்றால் அது மானுடத்திற்கு லாபமாக அமையும்.

ஆனாலும் இந்த எளிய திரைப்படத்திலும் ஓர் ஐரோப்பியமையவாதம் உள்ளது. அந்த நாவிகளில் ஒருவருக்குக் கூட மனிதர்களை எதிர்க்கும் நுண்ணிய  அறிவு வாய்க்கவில்லை. தங்கள் அனைத்து சக்திகளுடன் அவர்களும் பழங்குடிகளாகவே இருக்கிறார்கள். ஆப்ரிக்க மனிதர்களைப்பற்றி பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியன் என்ன வகையான மனச்ச்சித்திரத்தை வைத்திருந்தானோ அதுதான் நாவிகளைப்பற்றி இந்தப்படத்திலும் உள்ளது.  ஆம் கிங்க்ஸ் சாலமோன்ஸ் மைனிலும் தி மிஷனிலும் பழங்குடிகள் காட்டப்படுவதுபோல, மம்மியில் வேதாளாபப்டை காட்டப்படுவதுபோல இதில் நாவிகள் காட்டப்படுகிறார்கள்! முகமற்ற பெருந்திரளாக. மூர்க்கமான உடல்கூட்டமாக.

அவர்களை காப்பாற்ற வெள்ளை மனிதன் உருமாறிச் செல்லவேண்டியிருக்கிறது. இன்னொரு டார்ஜான்! ஆனால் இந்த டார்ஜான் தன் வெள்ளைய அடையாளத்தை இழந்து அந்த மனிதர்களில் ஒருவனாக ஆகிறான். அந்தவரைக்கும் ஐரோப்பியமைய உலகநோக்கு முன்னகர்ந்திருப்பதே ஆச்சரியமளிப்பதுதான்.

thanks to http://www.jeyamohan.in/?p=6018

அவதார் – ஒரு வாக்குமூலம்

0 c
·பாதர் கப்ரியேலுக்கும் ஜாக்குக்கும் எத்தனை ஒற்றுமை. ஏதோ ஒரு வாக்குறுதியால் அந்த அன்னிய மனிதர்கள் நடுவே ஊடுருவ விடப்படுகிறார்கள் அவர்கள். உள்ளூர வெள்ளையர், வெளியே இன்னொருவர். அந்த  அன்னிய மனிதக்கூட்டத்திற்குள் செலுத்தப்பட்ட நுட்பமான உளவுப்படை அவர்.  அதை உணரும்போது அவரது மனசாட்சி அவரை திசை திருப்புகிறது.

இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளிலேயே பலர் அத்தகையவர்கள். உதாரணம், ஜி.யு.போப், ஹெர்மன் குண்டர்ட். ஆனால் பலர் அந்த உளவுத்தொழிலை தங்களை அறியாமலேயே செய்து இந்திய சமூகங்கள் மீது காலனியாதிக்கம் வேர்விட்டெழுவதற்குக் காரணமாக அமைந்தார்கள் என்பதே வரலாறு.

இந்த சினிமாவில் ஜாக் நாவிகளுக்குள் செல்வதை அப்படியே ஒத்திருக்கிறது சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ காட்டும் ஒரு நிகழ்வு.. பிறமலைக்கள்ளர்களை ஒடுக்கவோ வெல்லவோ முடியாத வெள்ளைய ஆட்சி பிறமலைக்கள்ளர்களில் இருந்து எடுத்து வளர்க்கபப்ட்டு கிறித்தவ பாதிரியாராக ஆக்கப்பட்ட ஒரு ஜேசுசபை உறுப்பினரை அனுப்புகிறது. அவருக்கு அந்த மக்கள் மீது பிரியம்தான்.  தன் சொந்த முன்னோர்களை அறியும் ஆர்வத்துடன்தான் அவர் அந்த மக்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார். ஆனால் அந்த ஆய்வேடு வெள்ளையர்களுக்கு மாபெரும் ஆயுதமாக ஆகிறது. பிறமலைக்கள்ளர்களின் எல்லா குலரகசியங்களும் அவர்களுக்கு தெரிந்துவிடுகின்றன. அவர்களை குற்றபரம்பரை என்று முத்திரை குத்தி வேருடன் கெல்லி எறிகிறார்கள்!

ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் ‘உலகைவெல்லும்’ இலக்கியங்கள் எழுதப்பட ஆரம்பித்தன. உலகம் என்பது ஐரோப்பியனுக்கான புதையலை ஒளித்து வைத்திருக்கும் மர்மவெளி என்று சித்தரிக்கப்பட்டது. ‘புதியஉலகத்தின்’ ஆச்சரியங்கள் களியாட்டங்கள் அபாயங்கள் விதந்து எழுதப்பட்டன. அங்குள்ள ‘பண்படாத’ ‘மூர்க்கமான’ ‘மனிதத்தன்மை குறைவான’ மக்களுக்கு அங்குள்ள செல்வங்களால் பயனில்லை. அவர்களை வென்று, கொன்றழித்து, அச்செல்வங்களை எடுத்துக்கொள்வதே ஐரோப்பிய வெள்ளையனின் அறம். அவனுடைய சாகசத்திற்கான பரிசு அது.

thanks to http://www.jeyamohan.in/?p=6018

ஆதிச்சநல்லூர் - மறைக்கப்பட்ட தமிழ் நாகரீகம்

0 c

ஆதிச்சநல்லூர் - மறைக்கப்பட்ட தமிழ் நாகரீகம்

-எழுத்தாளர் ஜெயமோகன்

சென்ற மார்ச் பதினொன்றாம் தேதி நானும் யுவன் சந்திரசேகரும் மலையாள கவிஞர் கல்பற்றா நாராயணனும் ஈரோடு நண்பர்கள் தங்கமணியும் கிருஷ்ணனும் நவதிருப்பதிகளுக்குச் சென்றபின் திரும்பும் வழியில் கிருஷ்ணாபுரம் பார்த்துவிட்டு ஆதிச்ச நல்லூர் செல்வது என முடிவுசெய்தோம். ஆதிச்ச நல்லூரைப்பற்றி பொதுவாக நண்பர்களிடையே பெரிய புரிதல் இல்லை. சுருக்கமாக தன் முக்கியத்துவத்தை விளக்கினேன்

ஆதிச்ச நல்லூர் திருநெல்வேலியில் இருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள சிறிய கிராமம். தாமிரவருணி இந்த ஊர் வழியாக ஓடுகிறது. ஆனால் நிலம் வளமானதல்ல. இங்கே தாமிரவருணியின் கரையில் ஒரு மேடு இருந்திருக்கிறது. இந்தமேடு ஒரு இடுகாடு. கிமு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய பெருங்கலக் காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே.

ஆதிச்சநல்லூர் கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு ஆர்வமூட்டும் கதை. பதினேழாம் நூற்றாண்டு இஸ்லாமியப் படையெடுப்புகளின்போது நகைகளையும் காசுகளையும் புதைத்து வைக்கும் வழக்கம் உருவானது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் புதையல் எடுப்பது ஒரு மனநோய் அளவுக்கு தமிழ்ச் சமூகத்தை பீடித்தது. இவ்வாறு கண்ட இடங்களில் தோண்டிக்கொண்டிருந்த காலத்தில் மேய்ச்சல் மக்கள் இந்தக் குன்றில் இருந்து சில தங்க நகைத்துண்டுகளை தோண்டி எடுத்தனர். பின்னர் இங்கே தேடுதல்வேட்டை ஆவேசமாக நடந்தது.

புதையல்களை பறிமுதல் செய்வதில் ஜரூராக இருந்த பரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்துக்கு இது சென்றது. அவர்களிடமிருந்து புதைபொருள் ஆய்வாளர்கள் களத்துக்கு வந்தார்கள். 1876ல் பிரிட்டிஷ் ஆய்வாளரான அலக்ஸாண்டர் ரெயா இங்கே விரிவான தொல்லியலாய்வுகளை நடத்தினார். தென்னிந்தியாவில் இத்தனை பிரம்மாண்டமான தொல்பொருட்குவியல் எங்குமே கிடைத்தது இல்லை. பல்லாயிரம் பொருட்கள் இங்கே கிடைத்தன. மண்பாண்டங்கள், மண்ணினால் ஆன வீட்டுப்பொருட்கள், மண்சிலைகள், வெள்ளி தங்க நகைத்துண்டுகள் இரும்புக்கருவிகள் என அவை பலவகைப்படும்உண்மையில் இவற்றின் தொன்மையும் அருமையும் அப்போது முழுமையாக உணரப்படவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அன்றைய பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் இந்தியப்பெருநிலத்தில் பண்பாடு வெளியில் இருந்துதான் வந்திருக்கவேண்டும் என்ற கோட்பாட்டில் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆரிய இனக்கோட்பாடு ஆய்வாளர்களை முழுமையாகவே கவர்ந்திருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து ஈரான் வழியாக வந்த ஆரியர்களே இந்தியாவில் பண்பாட்டைக் கொண்டுவந்தவர்கள் என்ற நம்பிக்கை ஓங்கி இருந்தது. காரணம் ஐரோப்பியர் தங்களை ஆரிய இனமாக எண்ணி ஆரிய இனமே பண்பாட்டின் ஊற்று என நம்பினர்

ஆதிச்சநல்லூர் சான்றாதாரங்கள் இந்தக் கோட்பாட்டுக்கு நேர் எதிரானவை. அவை மிகத்தொன்மையான ஒரு பண்பாட்டை காட்டின என்பதோடல்லாமல் அந்தப்பண்பாடு மிக வளர்ச்சி கொண்டிருந்தது என்பதையும் காட்டின. அங்கே கிடைத்த மண்பாண்டங்களில் எழுத்துருக்கள் இருந்தன. பல்வேறு இறைவடிவங்கள் இருந்தன. உலோகப்பொருட்கள் மிகநுண்மையாகச் செய்யப்பட்டிருந்தன

பல்வேறு காலகட்டங்களிலாக இங்கே தொடர்ந்து தொல்லியலாய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கிடைத்துள்ளன. நாலாயிரம் வருடப்பழமை அவற்றுக்கு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஏறத்தாழ 114 ஏக்கர் சுற்றளவில் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாழிகள் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக மூன்று மண்அடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறைந்தது ஆயிரம் வருடக்காலம் இந்த இடுகாடு பயன்படுத்தப்பட்டிருக்கப் பட்டதன் ஆதாரம்.

இங்குள்ள உலோகப்பொருட்களும் மண்பாண்டங்களின் உற்பத்தியில் உள்ள நேர்த்தியும் அவற்றில் உள்ள எழுத்துக்களும்தான் ஆய்வாளர்கள் மத்தியில் மிகச்சிக்கலான கேள்விகளை எழுப்பி இன்றுவரை தீராத விவாதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காலத்தால் ஆதிச்சநல்லூர் சிந்துசமவெளி நாகரீகத்துக்கும் முந்தையதாக இருக்கக் கூடும் என்கிறார்கள். இத்தகைய உயர்தரமான உலோகப்பொருட்கள் இங்கே புழக்கத்தில் இருந்தன என்பதைப் பார்க்கையில் சிந்து சமவெளி நாகரீகத்தைவிட மேலான ஒரு பண்பாடு இங்கே இருந்திருக்கலாம் என்கிறார்கள்மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாக கண்டறிந்துள்ளார்கள். அன்றாடப்புழக்கத்துக்கான மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களைக் காணும்போது அக்காலத்தில் கல்வியறிவு மிகப்பரவலாக இருந்தது என்றும் அது ஒரு நாகரீக சமூகம் என்றும் ஊகிக்கிறார்கள்.

ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தொடங்கப்பட்டாலும் அவை சீராக முன்னெடுக்கபப்டவில்லை என்பதும் ஆதிச்சநல்லூர் திட்டமிட்டே மறைக்கப்பட்டது என்பதும் உண்மை. வரலாறு எப்போதுமே சமகால வரலார்றுஎழுத்தின் தேவைக்கு ஏற்பத்தான் ஆய்வுசெய்யப்படுகிறது. டாக்டர் சத்யார்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூரில் மேலும் விரிவான ஆய்வுகளைத் தொடங்கி இன்றைய கவனம் அதன் மீது உருவாக வழிவகுத்தவர். 2004 முதல் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தமிழ் வரலாற்றின் காலக்கணிப்புகளையும் தமிழ்ப்பண்பாட்டின் ஆழத்தையும் பிரமிக்கத்தக்க முறையில் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை.

ஆதிச்ச நல்லூருக்கு நாங்கள் நல்ல மதிய வெயிலில் சென்று சேர்ந்தோம். அந்த பெரிய செம்மண்பாறைக் குன்றைச் சென்றடைந்ததும் அங்குமிங்கும் பார்த்தோம். தொல்பொருள்துறையின் அறிவிப்போ வேறு அடையாளங்களோ ஏதும் இல்லை. தடுமாறிக்கொண்டிருந்தபோது ஒரு சிறிய கல்மண்டபத்தில் இருவர் அமர்ந்திருப்பதைக் கண்டோம். வண்டியை நிறுத்தி அவர்களிடம் ஆதிச்சநல்லூர் இதுதானா என்று கேட்டோம்

அதில் ஒரு கிழவர் எழுந்துவந்தார். ஆடுமேய்ப்பவர் என்பதை அவர் வைத்திருந்த வளைந்த அரிவாள்நுனி கொண்ட துரட்டியாலேயே சொல்ல முடிந்தது. தலையில் ஒரு துண்டு. தொடைக்குமேல் கட்டிய அழுக்கு வேட்டி. டயர் செருப்பு. சட்டை இலலத கரிய உடல் மெலிந்து உறுதியாக வெயில்பட்டு காய்ந்து கரிந்து ஒரு காட்டுச்சுள்ளி போல இருந்தது. தங்கமணி இறங்கிச் சென்று விசாரித்தார்

கிழவர் அருகே வந்து ”இதுதான் எடம்…இதுதான் ஆதிச்சநல்லூர்…ஆனா இங்க ஒண்ணுமே கெடையாது. எல்லாத்தையும் மெட்ராஸ¤க்குக் கொண்டு போயிட்டாங்க… எங்கயோ வச்சிருக்காங்க…ஒண்ணுமே இங்க கெடையாது” என்றார். ஏமாற்றமாக ”சரி எடத்தையாவது காட்டுங்க ”என்றேன்

”எதுக்கு இந்த வெயிலிலே” என்றான் யுவன். நான் ”சரி வந்தாச்சுல்ல?” என்றேன். கிருஷ்ணன் ”ஒண்ணுமில்ல சார், வெப்சைட்டுலே எழுதணுமேன்னு போய் பாக்கலாம்னு சொல்றார்” என்றார். ”நான் அதுக்கும்தான், என்ன இப்ப?” என்று இறங்கினேன். கிருஷ்ணனும் பிறரும் கூட்வே வந்தார்கள்.அங்கே குழிதோண்டியெடுத்த பொருட்களைக் கொண்டுசென்றபின் குழிகளையும் சுத்தமாக மூடிவிட்டார்கள். மூடிய குழிகள் மேலே நடந்தோம் ”இங்கதான் இந்திய நாகரீகமே உருவாகியிருக்கு…மறைக்கிறானுங்க” என்றார் சிதம்பரம். சரிதான் இன்னொரு உள்ளூர் வளவள என்று எண்ணிய கிருஷ்ணன் சற்றே கடுப்பாகி ”ஆமாமா, உலக நாகரீகமே இங்கதான்”என்றார். நான் கிருஷ்ணனின் கையைப்பிடித்து அழுத்தி சும்மா இருக்கச் சொன்னேன். ஏனென்றால் நாகரீகம் என்ற சொல்லை அத்தனை சாதாரணமாக ஒரு கிராமவாசி சொல்ல மாட்டார் என்று தோன்றியது

கிழவர் என்னிடம் ”இதிலே தமிழ் ஆசிரியர் யாராவது உண்டா?”என்றார். இல்லை என்றேன். அவர் பெருமூச்சு விட்டு ”பாத்திஹள்ல? எப்டி போட்டுவச்சிருக்கானுக? ஒரு குறிப்பு உண்டா? ஒரு அடையாளம் உண்டா? எடுத்த பொருட்களை அங்கங்க தொல்பொருள்துறை ஆபீஸ்களிலே பிரிச்சு பதுக்கி வச்சிருக்காங்க. என்ன செஞ்சிருக்கணும், இங்க ஒரு மியூசியம் கட்டியிருக்க வேண்டாமா? இங்க எல்லாத்தையும் வச்சு வேணுங்கிறவன் இங்க வந்து ஆராய்ச்சி செய்யச் சொல்லணும். அப்பதான் இந்த எடத்தோட முக்கியத்துவம் தெரியும். இது எப்பேற்பட்ட எடம் இதோட வரலாறு என்ன எல்லாம் வெளியே தெரியும்….இப்ப ஆதிச்சநல்லூர்னா யாருக்குத் தெரியும்? நான் ஜனாதிபதிக்கு எழுதினேன். கவர்னருக்குஎழுதினேன். கலைஞருக்கு எத்தனையோ மனு கொடுத்திருக்கேன். யாருக்கு அக்கறை? ஒண்ணுமே நடக்கலை”

கிருஷ்ணன் பிரமித்துப் போய்விட்டார். கிழவர் சரசரவென பேசிக்கொண்டே போனார் ”இதுதான் இந்தியாவிலேயே பழமையான தொல்பொருள் எடம். இங்கதான் இந்தியாவிலேயே வளார்ச்சிஅடைஞ்ச நாகரீகமும் கண்டுபிடிச்சிருக்காங்க…இன்னும் முழுசா கண்டுபிடிக்கலை…கண்டுபிடிச்சிட்டே இருக்காங்க…எழுத்துக்களை இப்பதான் கண்டுபிடிக்கிறாங்க…ஏய், தாழிகளிலே நெல்லும் உமியும் இருந்ததே அது என்ன எனம் நெல்லுன்னு கண்டுபிடிச்சியா நீ? அந்த நகையில எப்டி செம்பையும் தங்கத்தையும் கலந்தான்னு கண்டுபிடிச்சியா நீ? இல்ல. இதுவரைக்கும் ஒரு நல்ல ஆராய்ச்சி நடக்கலை…””ஏன்? ஏன்னா நாகரீகம்னா அது வடக்கேன்னு வெள்ளைக்காரன் சொல்லிட்டான். அவனுக்கு மூக்கு நீளமான ஈரானிலே இருந்து பண்பாடு வந்ததுன்னு சொல்ல ஆசை. அதுக்கு சிந்து சமவெளி நாகரீகத்தை உசத்திப்பிடிக்கணும்….அப்பவே ஆதிச்சநல்லூரைக் கண்டுபிடிச்சாச்சு. எத்தனை அறிஞர்கள் பேசியிருக்காங்க? பேசலை. அப்டியே விட்டுட்டாங்க. நம்மாளுகளும் அதுக்குமேலே பேசலை. அம்பதுவருடம் ஆதிச்சநல்லூரைப்பத்தி பேச்சே கெடையாது ஐயா…வெளங்குமா? நாடா இது? வெள்ளைக்காரனுக்கு கறுப்பன்னா எளக்காரம் இங்க வந்து பனங்கொட்டை மூஞ்சுற நம்ம பயக்களை போட்டோ பிடிச்சு பேப்பரிலே போட்டு எல்லாரும் ஆதிவாசிகள் இங்க நாகரீகமே கெடையாதுன்னுட்டான். உண்மையா ஒருத்தன் ஆராய்ச்சி செஞ்சா அவனுக்கு தெரியும் ஆதிச்சநல்லூரோட எடம் என்னன்னு…இப்ப வருது…இப்ப ஒண்ணொண்ணா சில ஆய்வுகள்லாம் வருது…அப்டி புதைச்சு வச்சிட முடியாது…”

எனக்கும் அது மிக ஆச்சரியமாக இருந்தது. ஏன் ஆதிச்சநல்லூரில் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் வைக்கக் கூடாது? ஒரு நிரந்தர தொல்பொருள் மையம் இங்கே உண்டு என்றே எண்ணியிருந்தேன். அந்த மகத்தான தொல்பொருள் புதைபூமி இப்படி கைவிடப்பட்டு திறந்து கிடப்பதை எண்ணவே ஆச்சரியமாக இருந்தது. ஆதிச்சநல்லூர் தொல்பொருட்களை ஏன் பல்வேறு இடங்களிலாக பிரித்து வைக்கவேண்டும். அவை ஆய்வாளர்களுக்கு உரியவை, சரி. ஆனால் அவை மக்கள் பார்வைக்கும் உரியவை அல்லவா? அவை மாபெரும் குறியீடுகள் அல்லவா? ஒரு சமூகம் தன் வேர்களை உணரும் ஆன்மீகமான பேரனுபவத்தை அளிக்க வல்லவை அல்லவா? குறைந்தபட்சம் ஆதிச்சநல்லூரில் அந்த அரும்பொருட்கள் எங்கே உள்ளன என்றாவது ஒரு குறிப்பு இருக்கலாமே?

கிழவர் பேசிக்கொண்டே போனார். ”ஆரியன் திராவிடன் ஒண்ணும் கெடையாது. எல்லாம் இங்கேருந்து போனவங்க தான்… இதுதான் பூர்வீக நெலம். இந்த தாமிரவருணி மண்ணு… எத்தனை ஆயிரம் வருஷம் முன்னாடி… மொகஞ்சதாரோ ஹரப்பா எல்லாம் இங்கேருந்து போனவங்க உண்டுபண்ணின விஷயங்கள். இந்தியாவிலே உளல் எல்லா சிந்தனைகளும் இங்கேருந்து மேலே போனதுதான்…இதைச் சொல்ல இன்னைக்கு ஆளில்லை…” நான் சீண்டுவதற்காக ”ஆனா ஆதிச்சநல்லூர்னுதானே பேரு? ஆதித்தன்னா வடமொழியாச்சே” என்றேன்”ஆதித்த நல்லூர்னு எவன் சொன்னான்?”என்று கிழவர் நின்றுவிட்டார். ”…இந்த ஊருக்குப்பேரு ஆதி எச்ச நல்லூர்…இது எத்தனையோ காலமா சுடுகாடா இருந்திருக்கு. இந்த எடம் சுடுகாடா ஆனதுக்கு அந்தக்காலத்திலே ஏதோ காரணம் இருந்திருக்கு…தேடிக்கொண்டுவந்து புதைச்சிருக்காங்க…ஏன்னு தெரியல்லை” கிழவர் கோபமானார் ”ஆதித்தன்னு பேரு வச்சுகிட்டவன் சோழன்…பாண்டியனுக்கு அந்தபேரு கெடையாது. ஏன்னா சோழர்கள் சுத்த தமிழர்களே கெடையாது. வெங்கிநாட்டுலேருந்து வந்தவனுங்க. ஆதித்தன்னு எங்க சொல்லியிருக்கு தமிழிலே? ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்னுதானே இளங்கோ சொல்றார்?”

நான் ”ஆதின்னாலும் வடமொழிதானே?”என்றேன். ”என்னய்யா? ஆதிங்கிற வடமொழிச்சொல்லுக்கு எங்க வேர் இருக்கு? சொல்லுங்கய்யா…ஆதிங்கிற சொல்லு சுத்தமான தமிழ்ச்சொல்லு. அதுங்கிற வேர்தான் ஆதியாகியிருக்கு. அதை வடமொழிக்காரன் எடுத்துகிட்டான். அவன் மொழியே முக்காவாசி சொற்களை அங்க இங்க இருந்து பொறுக்கி எடுத்துக்கிடுறதுதான்…” அதற்குமேல் நான் அவரிடம் பேச ஒன்றுமில்லை. அவர் சொன்னது உண்மை. ”நம்ம வரலாறுக்கு எத்தனையோ ஆழம் இருக்கு தம்பி …நீங்கள்லாம் படிச்சுப்பாக்கணும். சிலப்பதிகாரத்திலே சொல்லியிருக்கு ப·றுளி ஆறும் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள அப்டீன்னு…நம்ம வேரு எங்கியோ கெடக்கு”

கிழவர் ஒரு உடைந்த ஓட்டுக்குவியலைக் காட்டினார். ”இதெல்லாம் மண்பாண்டக்குவியல் உடைஞ்சது. சும்மா வந்துகிட்டே இருக்கு…” கறுப்பு ஓடுகள் சிவப்பு ஓடுகள் கறுப்பும் சிவப்பும் கலந்த ஓடுகள். மிக மெல்லியவை,ஆனால் மிக உறுதியானவை ”அந்தக்ககாலத்திலே இலுப்பை எண்ணையைப்போட்டு களிமண்ணை பெசைஞ்சு பானை வனைஞ்சாங்க. அந்த இலுப்பை எண்ணைதான் கறுப்பா ஆகியிருக்கு…”என்றார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணில் நின்று அந்த கலத்தூண்டுகளை எடுத்துப் பார்ப்பது மனக்கிளர்ச்சி ஊட்டும் அனுபவமாக இருந்தது. என்றோ ஒருநாள் ஆதிச்சநல்லூரின் பாடங்கள் மேலும் துல்லியமாகப் படிக்கப்படலாம். அப்போது நம் வரலாறு முழுமையுடன் மேலெழுந்து வரலாம். ”அப்ப நான் கெளம்புறேன்…”என்றார் கிழவர்”அய்யா பேரு என்னங்க?” என்றேன் ”சிதம்பரம்…” என்றார். ”என்ன பண்றீங்க?”என்றான் யுவன் ”பாத்தா தெரியலை, மாடுமேய்க்கிரது. நமக்கு அந்தப்பக்கமா கொஞ்சம் நெலம் உண்டு. வெவசாயம். ஸ்கூலுக்குப் போகலை. அண்ணாவைத்தான் படிகக் வச்சாங்க. எல்லாம் நானே வாசிச்சு படிச்சுகிட்டதுதான்” ”இப்பவும் படிக்கிறீங்களா?”என்றார் கிருஷ்னன் ”நாளைக்கும் படிப்பேன்”என்றார் சிதம்பரம் ஆணித்தரமாக. ”அப்ப நான் வாரேன்” கும்பிட்டு கெளம்பினார்

”சார் தலையிலே கடப்பாரையாலே அடிச்சது மாதிரி இருந்தது”என்றார் கிருஷ்ணன் ”ஆனா எனக்கு ரொம்ப தேவையான அடிதான்” என்றார். யுவன் சந்திரசேகர் ”என்னய்யா இது கதையிலே இருந்து எந்திரிச்சு வாரதுமாதிரி வந்திட்டார்… சொன்னா நம்பவே மாட்டாங்க…”என்றார் .”அவரு நம்மளை ஒரு பொருட்டாகவே நெனைக்கலை பாத்தியா? அவருக்கு நம்ம கிட்ட பேசுறதிலே ஆர்வமே கெடையாது. நாம வழி கேட்டப்ப பேசாமத்தான் இருந்தார். கட்டாயப்படுத்தி தங்கமனி கூப்பிடப்பதான் வந்தார்…”

அங்கிருந்து திரும்பும்போது எண்ணிக்கொண்டேன் , ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் இன்னும் எத்தனையோ தொல்மூதாதையர் உறங்கிக்கொண்டிருக்கலாம். நம் ஞானம் இன்னும் சென்று தீண்டாத ஆழத்தில். சிதம்பரம் வாயிலிருந்துகோண்டு அவர்கள்தான் பேசியிருக்கிறார்கள். 
 http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=8897072&tid=5498038651381713813