மழவர் தாயகம்
மழ கொங்கம் என்று அழைக்கப்படும் பகுதி.இன்றைய தருமபுரி மாவட்டப் பகுதியே அவர்கள் தாயகம்.அவர்கள் கொடுந்தொழில் புரிவோர் அல்ல.போரில் வல்ல வீரர் குடியினர்.அதியமான், வல் வில் ஓரி போன்றோர் இம்மழவர் குடியினரே.தகடூர் மழவர் என்றும் கொல்லி மழவர் என்றும் அழைக்கப்பட்டனர்.பல வருடங்களுக்கு முன் இவர்களைப் பற்றிய ஒரு வேடிக்கையான ஒரு செய்தியை ஒரு நூலில் கண்டேன். இம்மழவர்கள் இருமல் வந்தால் புற்று மண்ணை வாயில் அடைத்துக்கொள்வார்களாம்
மழவர் குடியினர் தமது வீரத்தினால் அரசர்களில் நன்மதிப்பைப் பெற்றனர். சோழ மன்னர் இவர்களுடன் மணத்தொடர்பு கொள்ளும் அளவிற்கு செல்வாக்குப் பெற்றனர். சோழர் காலத்தில் வாழ்ந்த பளுவேட்டரையர் மழவர் மரபினரே.கல்வெட்டுகளில் இவர்கள் "மகரிஷி வம்சத்து ஷத்திரியர்கள்" எனக் குறிக்கப்பட்டுள்ளனராம்.
அக்காலத்தில் மன்னர்கள் மழவர் படை வைத்துக்கொள்ள ஆர்வம் கொண்டிருந்தனராம்.இம்மழவர்கள் பலர் சோழர் காலத்தில் இன்றைக்குள்ள திருச்சி மாவட்டப் பகுதிகளில் குடியமர்ந்தனர்.
இம் மழவர்கள் தற்போது கள்ளர் இனத்தவர் என்ப புலப்படும்.
மேலும் குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக, பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன.விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள்.
ஆராய்ச்சி கீழ் கண்டவற்றை கருத்தில் கொண்டு செய்வதே முறை.
1.மழவர் தாயகம் 2.அவர்கள் குடியைச் சேர்ந்த மன்னர்கள்
திருவழுந்தூர் (தேரழுந்தூர் என்றும் கூறப்படுகிறது)
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சென்று கோமல் செல்லும் சாலையில் திரும்பி மூவலூர் தாண்டிச் சென்றால் தேரழுந்தூர்...
தலப் பெயர்க் காரணம்: ஊர்த்துவரதன் என்ற மழவ அரசன் தவத்திறகு மெச்சி பிரம்மா அவனுக்கு ஆகாயத்தில் பறந்து செல்லக் கூடிய ஒரு தேரைப் பரிசாக அளித்தார். அந்த தேரில் ஏறி ஒரு முறை ஊர்த்துவரதன் ஆகாயத்தில் சென்று கொண்டு இருந்த போது ஓரிடத்திற்கு மேல் தேர் முன்னே செல்ல முடியாமல் தடுமாறியது. அதோடு இல்லாமல் பூமியை நோக்கி கீழே இறங்கி பூமியில் அழுந்தி நின்றது. ஊர்த்துவரதன் தேர் பூமியில் இறங்கி அழுந்தி நின்றதற்கு காரணம் என்ன என்று பார்த்த போது அவ்விடத்தில் அகத்திய முனிவர் இறைவனை பூஜித்து வந்ததைப் பார்த்தான். அதனாலேயே தேர் அவ்விடத்தைத் தாண்டிச் செல்லாமல் கீழே இறங்கி அழுந்தி நின்றது எனபதைக் கண்டான். தேர் கீழே அழுந்தி நின்றதால் இத்தலம் தேரழுந்தூர் என்று பெயர் பெற்றது. மேலும் சீர்காழிப் பிள்ளையான திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இத்தலத்தை "அழுந்தை" என்றே குறிப்பிடுகிறார். அழுந்தை எனபதே மருவி அழுந்தூர் என்று மாறியது என்றும் கூறுவர்.
திருவழுந்தூர் வேதம் தழைத்த ஊர். வேத முழக்கம் எதிரொலித்த ஊர். ஒமப்புகை எங்கும் பரவிய ஊர். இங்குள்ள அந்தணர்கள் பெருமளவில் வாழ்ந்து வேதம் ஓதி, வேத தர்மத்தில் திளைத்து, வேதத்தை பறை சாற்றி இறைவனைத் தொழுது வழிபடுதலில் வல்லவர்களாக விளங்கினர். இத்தலத்திற்கு வருகை தந்த திருஞானசம்பந்தர் அழுந்தூர் வாழ் மறையவர்களின் பெருமையைப் போற்றி ஒரு பதிகமே பாடியிருக்கிறார். அழுந்தை மறையோர் என்ற் ஒவ்வொரு பாட்டிலும் அவர்களுக்குத் தனி ஏற்றம் தருகிறார். திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
http://www.shivatemples.com/sofct/sct038.html
Subscribe to:
Posts (Atom)