குமிழித்தூம்புகள்

0 c
குமிழித்தூம்புகள்:

தொல்காப்பியம்
பொருளதிகாரத்தில், “பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப்
போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது’
(வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

இதைப்போல, மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான “அறவணர் தொழுத காதை’ என்னும்
பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,
“”பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்” (1384-87)
என்கிறார். “சுருங்கை’ என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய்.
அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை
வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில்
பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச்
சென்றடையும் என்பதே இதன் பொருள்.
1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து
நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே
“குமிழித்தூம்பு’ என்பதாகும்.

பழங்காலந்தொட்டு நடைபெற்றுவரும் நீர்மேலாண்மைக்கு பயன்பட்ட இவ்வகை குமிழித்தூம்புகள் தற்பொழுதுள்ள சூழலில் முற்றிலுமாய் தவிர்க்கப்பட்டு, வெறும் நினைவுச்சின்னங்களாய் காட்சியளிக்கிறது.

பட.திலிருக்கும் குமிழிக்கல் கொடும்பாளூர் அருகேயுள்ள ஓர் ஊரணியிலிருந்தது. ஐநூற்றுவர் வணிகக்குழுவின் தன்மம் இது...

Kathiervel Kumar‎

கோநகர் கொற்கை

0 c







https://www.vaaa.in/shop/korkkai/

மறைந்து போன தமிழக துறைமுக நகரமான கொற்கை நகரம் பற்றிய இலக்கிய மற்றும் தொல்லியல் செய்திகள்

சாத்தான் குளம் அ இராகவன்

https://www.youtube.com/watch?v=38iDO2h6290&feature=player_embedded
பக்கம் 160

இட்டேரி

0 c
Chandru Shanmugasundaram
கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில்.
ஒரு பெண்மணி கேட்டார்.!
மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ? என்று?
அதற்குப் பதிலளித்தார் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவுமுள்ள ஒரு அதிகாரி:
முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன.
இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல்.
இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை.
இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன்.
கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.
இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன.
கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.
இவற்றை உணவாக கொள்ள வண்டுகள் , நண்டுகள்
பாம்புகள், பாப்பிராண்டிகள்,
உடும்புகள், ஓணான்கள்,
கோழிகள், குருவிகள்
அலுங்குகள், ஆமைகள்
இப்படி பல உயிர்களும்
இவற்றை உணவாக கொள்ள
பாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.
மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும்,
கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும்,
மூலிகைகளும் கிடைத்தன. (ஏன் இன்று பணமழை பொழியும் கண்வலிப்பூக்கள் காய்கள் வேலியில்தான் ஆங்காங்கு படர்ந்திருக்கும்)
இங்கே பலருக்கும் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில்
ஓனானைக்கண்டால் ஓட ஓட விரட்டு
பாப்பிராண்டி கண்டால் பாவம்ன்னு விடு என்று ஓனான் வேட்டைக்குப் போன அனுபவம் கண்டிப்பாக இருக்கும்.
இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓனான்கள், தவளைகள் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன.
பாம்புகள், ஆந்தைகள் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.
பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின.
"மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின."
ஆனால்
இன்று .....???
விவசாய நிலங்கள் ப்ளாட்டுகள் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகள் ஆன போது இட்டேரிகள் மறைந்தன.
கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் வேலியை அழித்து காக்கா குருவி கூட கூடு கட்டாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன.
இதனால் எண்ணற்ற ஜீவராசிகள் வாழ இடமின்றி போனது.
அதில் முக்கியமானது குள்ளநரிகள்.
இவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்.
இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.
விளைவு ??
மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டன.
" நாம் விதைத்தது நாம் அறுவடை செய்கிறோம்."
கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும்.
மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள்.
இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.
#copy paste...

காவல்குடி

0 c

காவல்குடிகளிடமிருந்து என்றைக்கு நாட்டுக்காவல் பறிக்கப்பட்டு சனநாயகம் என்ற பெயரில் காவலுக்கு சம்மந்தமே இல்லாதவரிடமும், கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திடம் கைமாற்றப்பட்டதோ, சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்ததது மட்டுமில்லாமல், குற்றம் நடப்பதற்க்கு முன் தடுப்பது என்பேதே பெருவாரியாக இல்லை, மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை குறித்த பயமே இல்லாமல் போனது ...
இப்போது இருப்பவர்கள் குற்றவாளியின் பின்னணி தெரிந்து தான் அதற்கான நடவடிக்கையே எடுக்கிறார்கள் ...

சமூகத்தில் ஆபாத்தான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால் காவல்குடிகள் மீண்டும் காவல் பொருப்பை ஏற்கவேண்டும் ...

அரசு ஒருபோதும் நமக்கு அந்த பொருப்பை திரும்ப கொடுக்காது, ஆனால் நாம் வேறு வகையில் தான் அதை ஏற்கவேண்டும் ..

#அகமுடையார்

சோழராஜன் அ
11 மார்ச், பிற்பகல் 11:58