சிவந்தெழுந்த பல்லவராயர்

0 c
வெண்குடை உரிமை பெற்ற பிற இனத்தவர் பற்றி நான் இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்டேன்.பார்த்திருப்பீர்கள்.

நான் குறிப்பிட்ட பல்லவராயர் என்போர் புதுக்கோட்டையை ஆண்ட கள்ளர் குலத்தவர்.சிவந்தெழுந்த பல்லவராயர் என்ற குறு நில மன்னர் இவர்களுள் சிறந்தவராவர். இந்த குறுநில மன்னர்கள் கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள்.
வரலாற்று நூல்களில் கூட இவர்களைப் பற்றி ஆதாரங்களுடன் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.
இவர்கள் வெண்குடை,ஆத்தி மாலை போன்ற விருதுகளைப் பெற்றவர்கள்.
புலிக்கொடி,மீன் கொடி,வெண்குடை,ஆறுகாற்சிங்காதனம்.ஆத்தி மாலை

THANKS TO http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=3268&PN=21

நாட்டார் ஐயா---நூல்

0 c

திங்கள், ஏப்ரல் 04, 2005

THANKS TO http://annakannan-katturaigal.blogspot.com/2005_04_01_archive.html


நாட்டார் ஐயா



அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது. இதே தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை ஆயின.
இவரைப் பற்றி இவரின் மகன் வே. நடராஜன் எழுதிய நாட்டார் ஐயா என்ற நூல், படிக்கக் கிடைத்தது. இதனைத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (சுருக்கமாக ‘கழகம்’) வெளியிட்டுள்ளது. (முதல் பதிப்பு 1998, பக்- 277, விலை- ரூ.60.00)
ஒரே ஒரு பிரதிதான் உள்ளது. எனவே உடனே திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் எனப் பதிப்பாளர் முத்துக்குமாரசுவாமி கூறியிருந்தார். எனவே, அதைத் திருப்பிக் கொடுக்கும் முன் ஒரு முறை படித்துவிட வேண்டும் என்ற உந்துதல் பிறந்தது.
அக்காலத் தமிழ் நடையில் நூல் உள்ளது. வே. நடராஜன் , இடையிடையே தன் அநுபவங்களையும் கலந்தே எழுதியுள்ளார். எனினும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரங்களை அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.
நாட்டார் என்பது, கள்ளர் மரபில் வந்தவர்களின் பட்டப் பெயர். கள்ளர் என்பவர், பல்லவரின் ஒரு கிளை. தொண்டை நாட்டினின்றும் சோழ பாண்டிய நாடுகளில் குடியேறி அரையர் என்னும் பெயருடன் ஆட்சி புரிந்து வந்தனர். பின்னர் சோழர் குடி முதலியனவும் இம்மரபில் கலந்துவிட்டது. (பக்-12)
நாட்டார், கள்ளர் சரித்திரம் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளமை குறிப்பித்தக்கது. உ.வே.சா., இந்நூலை மிகவும் பாராட்டியிருக்கிறார். இதனைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கவும் பரிந்துரைத்துள்ளார். மாண்புமிகு மு. கருணாநிதி, தன் தென்பாண்டிச் சிங்கம் நூலுக்குக் கள்ளர் சரித்திரத்தைத் துணையாகக் கொண்டுள்ளார். ‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று முன்னுரையில் எழுதியுள்ளார்.
வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி (1915), நக்கீரர் (1919), கபிலர் (1921), கள்ளர் சரித்திரம் (1923), கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் (1926), சோழர் சரித்திரம் (1928), ஆகியன நாட்டாரின் நூல்கள். கட்டுரைத் திரட்டு I என்ற நூலும் வெளிவந்துள்ளது. சில செய்யுள்களும் இயற்றியுள்ளார்.
இவை தவிர, பண்டைய இலக்கியங்கள் பலவற்றுக்கு உரை வரைந்துள்ளார். கீழ்க்கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது என்பவற்றிற்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி என்னும் பிற்கால நீதி நூல்களுக்கும் நாட்டார், திருந்திய முறையில் உரையும் முகவுரையும் எழுதியுள்ளார்.
அ.மு.சரவண முதலியாரைத் துணையாகக் கொண்டு, திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், அகநானூறு, மணிமேகலை ஆகியவற்றுக்கும் நாட்டார், சிறந்த உரை எழுதியுள்ளார்.
திருவருட் கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரியைத் தொடங்க நாட்டார் முயன்றுள்ளார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கும் முயற்சியிலும் இவருக்குப் பங்கு உண்டு. கல்லூரி, பல்கலை இரண்டின் தேவையையும் வலியுறுத்தி, அறிக்கைகளை நாட்டார் உருவாக்கியுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றவேண்டும் என்ற எண்ணத்தை, மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் 1981ஆம் ஆண்டு நிறைவேற்றினார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.
*********
''ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட் பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான்.
சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும்.
புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும். கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல் உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும். ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது.''
***********
நாட்டாரின் கருத்து, இன்றைக்கும் தேவைப்படுவது. தமிழின் தூய்மையைக் காக்கும் வரையே அதன் உயிர் பொலிவுறும். அப்படியே வேற்றுச் சொல் தேவையெனினும் கூடிய விரைவில் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து, புழக்கத்திற்குக் கொணர்வது நம் அனைவரின் கடமை.
இங்கு, நாட்டாரின் வரலாற்றினைச் சுருக்கமாகக் காண்போம்.
12-4-1884 அன்று நாட்டார், தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவேரி என்ற ஊரில் பிறந்தார். தந்தை, முத்துச்சாமி நாட்டார். தாயார், தையலம்மாள். நாட்டாருக்கு முதலில் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டனர். இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அதனால் ஒரு குறவனைக் கொண்டு சூடு போட்டு ஆற்றி முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரையும் வேங்கடசாமி என மாற்றினர்.
தொடக்கக் கல்வி வரை பள்ளியில் கற்ற இவர், பிறகு வீட்டில் இருந்தவாறு தாமே தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கம், மூன்று தேர்வுகளை நடத்தும் விவரம் அறிந்தார். அவற்றை எழுத விழைந்தார்.
1901ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி மதுரைத் தமிழ்ச் சங்கத்தை வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நிறுவினார். அச்சங்கத்தின் கீழ் பாண்டியன் புத்தகசாலை என்னும் நூல் நிலையமும் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை என்னும் தமிழ்க் கல்லூரியும் செந்தமிழ் என்னும் மாத இதழும் நிறுவப்பெற்றன.
இந்தத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய தனித்தமிழ்த் தேர்வுகளும் நடத்தப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இக்கலாசாலையில் இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும் என்ற விதியிருந்தது. இக்கலாசாலையில் படிக்காதோர், வெளியிலிருந்தும் தேர்வு எழுதலாம் என்ற விதிவிலக்கு இருந்தது.அதைப் பயன்படுத்தி நாட்டார் திருச்சியிலிருந்து தேர்வு எழுதினார்.
ஆண்டுக்கு ஒரு தேர்வு எழுதி மூன்றே ஆண்டுகளில் மூன்று தேர்வுகளிலும் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு இவர், ‘பண்டித’ ந.மு.வேங்கடசாமி நாட்டார் என அழைக்கப்பெற்றுள்ளார்.
திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் கோவையில் பணியாற்றிவிட்டு, மீண்டும் எஸ்.பி.ஜி. கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். திருச்சியில் பணியாற்றிய பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராகவும பணிபுரிந்துள்ளார்.
1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார்.
அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் தந்தையார் அ.மு.சரவண முதலியார், நாட்டாரின் நண்பர். இருவரும் இணைந்து கழகத்தின் வேண்டுகோளின் பேரில் திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளனர். (இந்நூலாசிரியர் வே. நடராஜனும் அ.ச.ஞானசம்பந்தனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தார், 1940ஆம் ஆண்டு நாட்டாருக்கு நாவலர் என்னும் பட்டம் அளித்துள்ளனர்.
இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக் கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார்.
நாட்டாரின் மணிவிழாவை 8-5-1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு செய்திருந்தது. ஆனால், 28-3-1944 அன்றே நாட்டார் மறைந்தார். அவர் மணிவிழாவுக்காக வசூலித்த 1712-4-0(ரூ-அணா-பைசா) தொகையை அவருடைய நினைவு விழாவுக்குப் பயன்படுத்தினர்.
அவர் சமாதி வைத்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பியுள்ளனர். ( 1944ஆம் ஆண்டு ஒரு மூட்டை சிமெண்டு விலை 3 ரூபாய் 12 அணா. 1000 செங்கற்கள் விலை ரூ.18. கொத்தனார் கூலி ரூ.5.)
1984இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும் 22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது.
நாட்டாரின் கனவுகளில் ஒன்றான திருவருள் கல்லூரியை 1992ஆம் ஆண்டு பி.விருத்தாசலம் தொடங்கினார். இதற்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இசைவு வழங்கியுள்ளது. இதில் தேர்ச்சியடைந்தோர், இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்குத் தகுதியுடையவர் என்று இப்பல்கலை தெரிவித்துள்ளது.
தமிழில் பெரும்புலமை பெற்றவர்கள் இக்காலத்தில் மிகவும் அருகிவிட்டார்கள். பண்டைய நூல்கள் பலவற்றைப் பெயரளவில் அறிந்திருப்பதே இப்பொழுது வியப்பைத் தருவதாய் உள்ளது. ஆயினும் நாட்டார் அவர்கள், தமிழின் பழைய நூல்களை மிகவும் ஆழ்ந்து கற்றுள்ளார். சிக்கலான பாடல்களுக்கும் பொருளுணர்த்தியுள்ளார். முக்கியமாகத் தனி ஆசிரியரிடம் கல்வி பயிலாமல் தாமே முயன்று தமிழ் பயின்றுள்ளார். கடும் உழைப்பாளியான இவர், எளிய வாழ்க்கை நடத்தியுள்ளார். நாள்தோறும் நாட்குறிப்பும் எழுதியுள்ளார். அதில் பல முக்கிய நிகழ்வுகளைக் குறித்துள்ளார். மாணவர்களிடம் அன்புடன் பழகி, கற்றலின் மேல் ஆர்வம் மிகச் செய்துள்ளார்.
நமக்கு முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.
நாட்டாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியதன் மூலம், தமிழக அரசு ஒரு நற்பணியைச் செய்துள்ளது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு பதிப்பக வல்லோர், நாட்டாரின் படைப்புகளை மக்கள் அறியச் செய்திடல் வேண்டும். நாட்டாரின் உழைப்பையும் உயர் கருத்துகளையும் தமிழ்ச் சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

ஐயப்பன் கதை -அய்யனார் மற்றும் பதினெட்டுப் படிக் கருப்பன்

0 c

 thanks to http://manakkumural.blogspot.com/2011/01/blog-post_11.html

எத்தனையோ முறை சொல்லிச் சலித்தாயிற்று இருந்தாலும் நான் சொல்லியே தீரவேண்டும். ஐயப்பன் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதில் வரலாற்றுத் திரிபு ஒன்று என்னால் கண்டறியப் பட்டது.(Anachronism). 

பந்தள ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் என்பது கதை. இந்தப் பந்தள வம்சம் மதுரை மன்னர்களின் வழித் தோன்றல்கள். இதை தற்போது இருக்கும் பந்தள வாரிசு ஒப்புக் கொண்டு தமிழ் வார இதழுக்குப் பேட்டியும் தந்து இருக்கிறார். பந்தள வம்சத்தின் முக்கியக் கடவுள் மதுரை மீனாட்சி அம்மன். இதையும் அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் அய்யப்பனுக்குச் செய்யும் சடங்கிற்கு மதுரையில் இருந்து சீர் செல்கிறது. இதுவும் அவரது பேட்டியில் இருக்கிறது. சரி இப்போது அதற்கு என்ன? இன்னும் தமிழக கிராமப் புறத்தில் வணங்கப்படும் அய்யனார் மற்றும் பதினெட்டுப் படிக் கருப்பன் தான் ஐயப்பன் என்பது புலனாகின்றாதா?
ஐயப்பன் என்பது தமிழக நாட்டுப்புறக் கடவுளின் தாக்கம் தான் என்று உறுதியாகக் கூறலாம்.

சரி Anachronism  என்றால் என்ன ?
வரலாற்றில் முன்னுக்குப்பின் முரணாக நடந்தவைகளை மாற்றிச் சொல்வது. அதாவது ராஜ ராஜ சோழனும் சேரன் செங்குட்டுவனும் சேர்ந்து கல்லணை கட்டினார்கள் என்பது போல.

சரி இங்கே எது Anachronism? 
ஐயப்பன் கடவுளர்களின் மகன் அதாவது சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறந்தவர். (HOMOSEXUAL அல்ல) அந்தக் கட்டுக் கதையை இப்போது சொல்லவில்லை. ஐயப்பனின் நண்பர் வாவர் என்னும் முஸ்லிம்.

இந்தியாவிற்கு ஏழாம் நூற்றாண்டில் தான் முஸ்லிம் வணிகர்கள் கேரளா  வருகிறார்கள். அதன் பின் எப்படியோ முஸ்லிம் மக்கள் பெருகி வாவர் என்பவர் படை உருவாக்குகிறார். சரி அதை எல்லாம் விடுங்கள். ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு கடவுளின் மகனும் ஒரு முஸ்லிம் படைத்தலைவனும் மோதிக்கொண்டு சமாதானமாகி நண்பர்கள் ஆகிறார்கள். ஏழாம் நூற்றாண்டு என்பது வரலாற்றுக்கு உட்பட்ட காலம். இதை ஏன் இந்திய வரலாற்று அறிஞர்களால் கண்டு கொள்ள முடியவில்லை?

சட்டங்களாக்கப்படும் அரச வன்முறை - காவல்கோட்டத்தை முன்வைத்து...

0 c
ஜ.சிவகுமார் புதன், 05 ஜனவரி 2011 16:48 
thanks to http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12238:2011-01-05-11-19-39&catid=1237:2010&Itemid=499 


தமிழ் நாவல் வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகள் மாற்றங்களை யும் வளர்ச்சியையும் கொண்டியங்குகின்றன. பல்வேறு கோட்பாடுகளின் ஊடாட்டம், உலக இலக்கியங்கள் மற்றும் அது குறித்த விவாதங்களை உடனுக்குடன் வாசிக்க வாய்ப்பு கிடைத்தமை, கணினியின் உதவியால் புத்தக வெளியீடு எளிதானமை, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருந்தாலும் நூல்கள் வாங்குவதும் வாசிப்பதும் அது குறித்த எதிர் வினையைப் பதிவு செய்வதும் தீவிரம் பெற்றமை, சிறுபத்திரிகை கள் அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் வெளிவந்தமை, நவீன இலக்கியவாதிகள் மற்றும் சிறுபத்திரிகைகளால் பதிப்பகங்கள் தொடங்கப்பெற்றுத் தொடர்ந்து நூல்கள் வெளிவந்தமை முதலானவை இக்காலகட்டங்களில் தான் நிகழ்ந்தன. தவிரவும் தமிழில் புதிதாக நாவல் எழுத வந்தவர்களும் அதிக பக்கங்களைக் கொண்ட நாவல்களும் இக்காலகட்டங்களில்தான் அதிகம்.
அதிகமான பக்கங்களைக் கொண்டு வெளியான நாவல்களுள் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட இனத்தின் வாழ்வியலை - குறிப்பாக அந்த இனத்தின் துக்கங்களைப் - பதிவு செய்தன (சான்று: ஆழிசூழ் உலகு, செடல் முதலானவை). ஒரு குடும்பத்தின் வாழ்வியலைப் புனைவதாக இருந்தாலும் அது அந்த இனத்தின் பின்புலத்திலிருந்தே சித்திரிக்கப்பட்டிருக்கும் (தலைமுறைகள், கவலை முதலானவை). இப்பின்புலத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘நெடுங்குருதி’ (2003, 469 பக்கங்கள்), வேல ராமமூர்த்தியின் ‘குற்றப்பரம்பரை’1 (2007, 399 பக்கங்கள்), சு. வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ (2008, 1046 பக்கங்கள்) ஆகிய மூன்று புதினங்களும்2 குற்றப் பழங்குடியினர் சட்டத்தையும் பிரான்மலைக் கள்ளர்களின் வாழ்வியலையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன. இப்புதினங்களை வாசித்த அனுபவம் குறித்து இக்கட்டுரை அமைகிறது.
புதினங்கள் குறித்து எழுதுவதற்கு முன் குற்றப் பழங்குடியினர் சட்டம் (Criminal Tribes Act) பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தருவது அவசியமாகப்படுகிறது. பழங்குடியினரின் சுதந்திரமான தனிநபர் வாழ்வும் சமூக அமைப்பும் அரசாங்கத்துக்குக் கட்டுப்படாத சுயேச்சையான நடவடிக்கைகளும் தனது நிர்வாகத்திற்கு இடையூறாக இருப்பதனை அறிந்த பிரித்தானிய அரசு, அவர்களுடைய சமூக நடைமுறையைச் சிதைத்து அடிமைப்படுத்துவதற்கான அனைத்துத் திட்டங்களையும் வகுத்தது. இந்தியாவில் பிரித்தானிய அரசை எதிர்த்து உருவான கிளர்ச்சி களைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்துப் பழங்குடியினர் மற்றும் சாதிகளைப் பற்றிய தரவுகளைக் கள ஆய்வின் மூலம் திரட்டும் பணியைப் பிரித்தானிய அரசு தொடங்கியது. இந்தியச் சமூகத்தினரின் பண்பாட்டை, உளவியலை அறிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை ஒடுக்கி அரச கட்டுப்பாட் டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதே இவ்வாய்வின் நோக்கம். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடைபெற்ற கலகங்களுக்குப் பின்பும் அவர்களை ஒடுக்க ஆய்வுகளை மேற்கொண்டனர்; கடுமையான சட்டங்களை இயற்றினர்.
 இதே முறைமையிலான உத்திகளையே சாதிய மற்றும் இனக்குழுச் சமூகங்களாக வாழ்ந்திருந்த இந்தியச் சமூகத்தினருக்கும் பயன்படுத்தினர். ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களைக் ‘கட்டுப்படுத்த’ ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதேபோல் பிரித்தானிய அரசுக்கெதிரான எதிர்ப்புணர்வை ஒடுக்கத் தனிநபர் கட்டுப்பாட்டுச் சட்டம், வாய்ப்பூட்டுச் சட்டம், பத்திரிகைச் சட்டம் முதலான சட்டங் களும் இயற்றப்பட்டன. ஆனால் ஓர் இனத்தை அல்லது சாதியைச் சார்ந்த அனைவரையுமே ‘குற்றவாளிகளாக’ அடையாளப்படுத்தி ஒடுக்கும் அதிகாரம் ‘குற்றப் பழங்குடியினர் சட்டம்’ மூலமே நடைமுறைக்கு வந்தது. அந்நிய ஆதிக்கத்தின் மீதான எதிர்ப்புணர்வும் கையில் ஆயுதமும் கொண்ட சீக்கியர்கள் அதிகம் வாழும் மாநிலமான பஞ்சாபில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகக் ‘குற்றப் பழங்குடி யினர் சட்டம்’ அமல்படுத்தப்பட்டது. பின்னர் மேற்குவங்கம், மகா ராஷ்டிரம், தமிழகம் எனப் பல மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
‘1938 ஆம் ஆண்டில் தமிழகத்தில் வசித்த தொண்ணூhறு சாதிகள் குற்றப் பழங்குடியினர் சட்டத்தின்கீழ் இருந்தன. அவற்றுள் பெரும் பாலானவை குறவர், கள்ளர் மற்றும் மறவர்களின் பல்வகைப் பிரிவுகளே. மேலும் வேட்கோ பறையர், வெள்ளையாங்குப்பம் படையாச்சி முதலானோர் மீதும் இச்சட்டம் போடப்பட்டிருந்தது. வெள்ளையாங் குப்பம் படையாச்சிகளுக்குப் பன்றிக்கறி சாப்பிடும் பழக்கமிருந்ததே அவர்கள் மீது இச்சட்டம் திணிக்கப்பட்டதற்கான முக்கியக் காரணம். இச்சட்டம் ‘நாகரிகம்’ அற்ற பழங்குடிகளை அடக்கிச் ‘சீர்திருத்த’ காவல்துறைக்கு அளவற்ற அதிகாரத்தைத் தந்தது. நாடோடி வாழ்க்கையின் மூலம் வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்ட இனங்களை ‘ராதாரி’ சீட்டு மூலம் காவல்துறை கட்டுப்படுத்தி அவர்களின் இயல்பான வாழ்வியலைச் சிதைத்தது. குறவர், எருக்குலா, கொறச்சாஸ், வாகனூர் பறையர் முதலானோரின் வணிகம் இதனால் பாதிக்கப்பட்டது;’ (தினகரன் ஜெய், ரேகை) கள்ளர், மறவர், குறவர், வலையர் உள்ளிட்டோரின் காவல்முறையும் பாதிக்கப் பட்டது. ஒரு இனம் தன்னுடைய மரபான தொழிலில் நெருக்கடி ஏற்படும்போதும், ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் அவர்களின் வாழ்வியல் ஆதாரத்தைப் பறிக்கிறபோதும் அந்த இனம் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவது இயல்பே. பிரித்தானிய அரசு குறிப்பிட்ட இனங்களின் தொழிலையும் வாழ்வியலை யும் சிதைத்ததோடு அவர்களைக் குற்றப் பழங்குடிகளாக அடையாளப் படுத்திச் சுரங்கங்கள், கல்குவாரிகள், தோட்டங்கள், தொழிற்சாலை களில் கட்டாய வேலை செய்யவும் நிர்ப்பந்தித்தனர்.
‘சென்னை மாகாணத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான், குற்றத் தொழில் புரிபவர்கள் அதிகமுள்ளனர் என்றும், எனவே கள்ளர், மறவர், அகமுடையார், குறவர், ஒட்டர், வலையர் ஆகிய ஜாதியினரைக் குற்றப் பரம்பரையினர் என்றும் அரசு ஆணை பிறப்பித்தது (Madurai District Gazeteers; பக். 215-216)..... ஆறு சாதியினர் மீது இச்சட்டம் போடப்பட்டிருந்தாலும், நடைமுறையில் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் கள்ளர்கள் என்று அழைக்கப்படும் பிரான்மலை நாட்டு இந்திரகுல கள்ளர்களேயாவர் (சு.வெங்கடேசன், 2001; ப. 99). பிரான்மலை நாட்டுக் கள்ளர்கள் மீது இச்சட்டம் கடுமையாக்கப்பட்டதற்குக் காரணம் இவர்கள் எந்த அரசுக்கும் பணியாத தன்னரசு நாட்டுக் கள்ளர்களாய் இருந்தனர். அரசாங்கத்துக்கு வரிகள் செலுத்தாததோடு அதன் எவ்வித சட்டங் களையும் பின்பற்றாமல் வாழ்ந்தனர். பிரித்தானிய அரசு காவல்துறையை உருவாக்கிய பின்பும் அதற்கும் அதன் அதிகாரத்திற்கும் ‘கட்டுப்படாத தோடு’ மதுரை நகரத்தைக் காவல் காக்கும் உரிமையைத் தங்களுக் குரியதாக எண்ணிச் செயல்பட்டனர். எனவேதான் பிரித்தானிய அரசு அத்தனை வன்மங்களோடு அவர்களை ஒடுக்கியது. இந்த ஒடுக்கு முறையால் கள்ளர்கள் அனுபவித்த வலிகளையும் இழப்புகளையும் புனைவின் வழிப் பதிவு செய்யும் வகையில் இம்மூன்று நாவல்கள் வெளிவந்துள்ளன.
களம் - காலம்
குற்றப் பழங்குடியினர் சட்டத்தையும் பிரான்மலைக் கள்ளர்களின் வாழ்வியலையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த முதல் புதினம் நெடுங்குருதி. வேம்பலை கிராமம், வெயில், நாகு எனும் வேம்பன் ஆகியவற்றைச் சுற்றியே இந்நாவல் பின்னப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட ஊரையோ, குறிப்பிட்ட இனத்தையோ சுட்டாமல் வேம்பர் களின் (கள்ளர்களின்) வலியை அனைவருக்குமானதாக உணர்த்துகிறது. பிற இரண்டு நாவல்களிலும் ஊர் எது என்பது தெளிவாக உணர்த்தப் படுகிறது. காவல்கோட்டத்தில் தாதனூரும் (கீழக்குயில்குடி) குற்றப் பரம்பரையில் கொம்பூதி கிராமமும் (பெருநாழிக்கு அருகில்) முக்கியக் கதைக்களமாகிறது. நெடுங்குருதி நாவலில் நாகு எனும் 11 வயது சிறுவனில் தொடங்கி அவனது மகன் (திருமால் பிரான்சிஸ்) மற்றும் மகளின் (வசந்தா) வாலிப வயதுவரை கதையின் காலம் அமைந்துள்ளது. கதை நிகழும் காலம் தெளிவாகச் சுட்டப்படாவிட்டாலும் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலேயே நாவல் புனையப்படுகிறது என்பதை வாசிப்பின்வழி உணர முடிகிறது. மாலிக்காபூரின் மதுரை படை யெடுப்பு தொடங்கிப் பெருங்காமநல்லூர் படுகொலை வரையிலுமான அறுநூறு ஆண்டுகள் காலகட்டத்தினைக் காவல்கோட்டம் கொண் டுள்ளது. குற்றப் பரம்பரையில் சேது எனும் சிறுவனில் தொடங்கி அவனது வாலிப வயதுவரை கதை நிகழ்கிறது. இந்நாவலின் காலமும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலமாகும். பிற இரண்டு நாவல்களிலும் கிராமமக்கள் பலரும் மையப் பாத்திரங்களாக அமைய, ‘நெடுங்குருதி’ நாகுவைச் (நாகர்களின் குறியீடோ?) சுற்றியே பின்னப் பட்டுள்ளது. இந்நாவலில் வரலாறு மாயாவாதத் தன்மையுடன் புனைவுமயப் படுத்தப்பட்டுள்ளது.
இம்மூன்று நாவல்களுள் அண்மையில் வெளிவந்ததும் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கொடுமைகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்தது மான ‘காவல் கோட்டத்தை’ முதன்மைப்படுத்தி இக்கட்டுரை அமைகிறது. இந்நாவலின் தொடக்கமாக, மாலிக்காபூரின் படை யெடுப்பிலிருந்து, தான் காவல் இருக்கும் ஊரைக் காப்பாற்றும் முயற்சியில் கருப்பணன் உயிரை விடும் நிகழ்வு அமைந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியான இவனது மனைவி சடச்சி தாதனூருக்கு வந்து குழந்தை பெறுகிறாள். இவளின் சந்ததிகளாகப் பெருகும் தாதனூர் கள்ளர்களை மையமிட்டே இந்நாவல் அமைந்துள்ளது.
தாதனூர்காரர்களின் வாழ்முறை, காவலின் நுட்பங்கள், களவின் சாகசங்கள், இரவின் இரகசியங்கள், மூதாதையர் வழிபாட்டு முறைகள், ஆண் - பெண் உறவுகள், பெண்ணின் ஆளுமை முதலானவை குறித்த சு.வெங்கடேசனின் (இனி சு.வெ.) கதைசொல்லல் முறைதான் நாவலின் பலம். மொண்டியின் கதையொன்றே தாதனூரின் பல்வேறு வழமை களைச் சொல்லிவிடுகிறது. களவுக்குப் போன மொண்டி கன்னம் போட்டு உடலை உள்ளே நுழைக்கும்போது உள்ளே இருந்தவர்களால் வெட்டப் பட்டு இறக்கிறான். ஊராருக்கு அவன் தலை கிடைத்தால் வீண்பிரச்சினை எனக் கருதிக் கூட வந்தவர்கள் ‘சூதானமாக’ உடைக் கல்லைப் போட்டு அவனது தலையை நசுக்கிவிடுகின்றனர். அவனது உடலோடு பனைமரத் தலையைச் சேர்த்துவைத்துப் புதைக்கின்றனர். அன்றிலிருந்து கன்னம் போட்டவுடன் ஆள் நுழையாமல், ஒரு கம்பில் துணியையோ சாக்கையோ தலைப்பாகை போல் சுற்றி உள்ளேவிடு கின்றனர். அக்கம்பிற்கு ‘மொண்டிக்’ கம்பு என்று பெயர். மொண்டிக் கம்புக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால்தான் ஆட்கள் உள்ளே போவர். மேலும் முதன்முதலில் கன்னம் போடப் போகிறவன் மொண்டிக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் எனும் வழமை உருவாகிறது. மொண்டியின் நினைவாகப் பனைமரத்தை வழிபட்ட அவனது உடன்பங்காளிகள் ‘பனைமரத்தான் வகையறா’ ஆகின்றனர். ‘பெரியாம்பிள’ மாயாண்டியின் தழும்பிலிருந்து கிளைப்பது போல் இப்படி எத்தனை எத்தனை கதைகள்! அதிலிருந்து எத்தனை எத்தனை சடங்குகள்! ‘கதை அறுந்துபோனால் ஊர் அறுந்துபோகும். ஊரும் கதையும் வேறல்ல, கதையும் உயிரும் வேறல்ல’ எனும் சு.வெ.வின் வார்த்தை நாவலுக்கும் பொருந்தும். குற்றப்பரம்பரையிலும் கன்னிமார்கள் கேட்கக்கூடாத காளத்தி கதை, வைரப் புதையலைத் தேடும் நாகமுனி கதை முதலானவை சிறப்பாக அமைந்துள்ளன. நெடுங்குருதியில் கொற்கைப் பாண்டியனின் வீரர்களால் விரட்டப் படும் வேம்பர்கள் கதை முதலானவை மாயத் தன்மையுடன் சித்திரிக்கப்பட்டுள்ளன.
கதைகளையடுத்து வாசகனை வியக்கவைப்பது பெண்ணின் ஆளுமை. தீராக் கோபம் கொண்டு எதிரிகளைக் கருவறுக்கும் கங்கா முதல் காவல் துறையினரின் வன்முறையை எதிர்த்து ‘பட்ட சாமி’யாகும் அங்கம்மா கிழவி வரை பெண்கள் தனித்துவமுடை யவர்களாக உள்ளனர். தன் புருஷனின் ‘உறவு’ சரியில்லாத காரணத்தால் தீத்துக்கொள்வது, இன்னொருவன் மீது ஏற்பட்ட பிரியத்தினால் மிகச் சாதாரணமாகக் கணவனைத் தீத்துக்கொள்வது எனப் பெண்கள் சுதந்திரமானவர்களாகவும் கணவன், குடும்பம் குறித்த மிகை மதிப்பீடு கள் இல்லாதவர்களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் தங்களுக்குள்ளே பாலியல் கதைகளைச் சொல்லிக் கேலிசெய்து கொள்வ தோடு, வம்புக்கிழுத்த கிழவனையும் பாடுபடுத்துவது என எல்லா வகையிலும் சுதந்திரமாக இயங்குகின்றனர். தன் இனத்தின் பெருமையே பெண்ணுடலில்தான் பாதுகாக்கப்பட்டிருக்கிறது எனக் கருதும் சமூகத் தில் இவ்வாறான பதிவுகளும் அவற்றின் அரசியலும் மதிக்கத்தக்கவை. குற்றப்பரம்பரையிலும் தன்னை வல்லுறவு செய்யும் வெள்ளையனைத் தன் தலைமுடியாலேயே கழுத்தை இறுக்கிக் கொல்லும் ரௌத்திரம் நிறைந்த பெண்களும் சுதந்திரமான உடலியக்கம் கொண்டவர்களும் உலவுகின்றனர்.
களவும் வலியும்
களவின் நுட்பங்களும் சாகசங்களும் இருளின் இரகசியங்களும் காவல்கோட்டத்தில் பெரும்பான்மை இடம்பெறுகின்றன. களவுக்குப் போவதற்கு முன் தாதனூர்காரர்கள் எடுக்கும் பயிற்சி நாவலில் விரிவாகப் (639-642) பதிவு செய்யப்பட்டுள்ளது. மாயாண்டிக்கும் சின்னானுக்கும் நடைபெறும் களவுப்போட்டி போலச் சொல்லப்படும் ஒவ்வொரு களவின் நுட்பமும் தங்களுக்குள் போட்டியிடுகின்றன. திருமலை நாயக்கன் மாளிகையில் நடைபெறும் களவு ஒருபுறம் என்றால் எட்டப்ப நாயக்கனைத் தன் கோட்டையையே மாற்றிக்கொள்ளச் செய்யும் களவுகள் மறுபுறம். தங்கள் வலிகளிலிருந்தும் இழப்புகளிலிருந் துமே இவர்கள் களவின் நுட்பங்களை வளர்த்தெடுக்கின்றனர் என்பதற்கு மொண்டிக் கம்பே சாட்சி. கன்னம் போட்டவுடன் மொண்டிக் கம்பை உள்நுழைத்து நோட்டம் பார்ப்பது தாதனூர்காரர்களின் நுட்பமென்றால் ஆக்காட்டுக் குருவியை உள்ளேவிட்டு நோட்டம் பார்ப்பது கொம்பூதிகளின் (குற்றப்பரம்பரை) நுட்பம். காட்டுக் கொடியைக் கொடுத்து மாடுகளைக் கத்தவிடாமல் செய்து திருடிப் போவதோடு அதன் வாலில் முள்ளைக் குத்தி வேகமாக ஓட்டிச் செல்வது வேம்பர் களின் (நெடுங்குருதி) நுட்பம். இவர்களின் நுட்பமும் பழிவாங்கும் ரௌத்திரமும் 42 வேம்பர்களைச் சுட்டுக் கொன்று, அவர்களின் மனைவி மக்களின் குரல்வளையை அறுத்த வெல்சித்துரையைப் பயமாகத் துரத்திக் கொன்றுபோடுகிறது. இவ்வாறு மூன்று நாவல்களிலும் - குறிப்பாக, காவல் கோட்டத்தில் - களவின் நுட்பங்களும் சாகசங் களும் உயிர்ப்புடன் சொல்லப்பட்டுள்ளன. களவுக்கு வழியில்லாத போது கள்ளர்கள் வேட்டையைத் தேர்ந்தெடுப்பதாகவே மூன்று நாவல்களும் பதிவுசெய்துள்ளன. இவர்கள் வாழ்வின் பொருட்டுத் தங்கள் உடலையும் உயிரையும் பணயம் வைக்கும் வேட்டைச் சமூகத்தின் எச்சங்களாகவே உள்ளனர். களவின்போது நேரும் இழப்பு களையும் வலிகளையும் மூன்று நாவல்களும் பதிவு செய்திருந்தாலும் வேல ராமமூர்த்தியின் பதிவுகள் உயிர்த்தன்மையும் வீரியமும் உடையன. இத்தனை வலிகளுக்கிடையில் களவுசெய்யும் பொருளைத் துப்புக் கூலிக்குக் (நெடுங்குருதி, காவல்கோட்டம்) கொடுத்துவிடுகின் றனர்; அல்லது அந்தப் பொருளின் மதிப்பு தெரியாமல் தானியத்துக் கும் தவசத்துக்கும் (குற்றப் பரம்பரை) விற்றுவிடுகின்றனர்.
கள்ளர்களின் வலிகளையும் இழப்புகளையும் பதிவுசெய்த ‘காவல் கோட்டமும்’ ‘குற்றப்பரம்பரையும்’ களவு கொடுத்தவர்களின் மன நிலையைக் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. நெடுங்குருதி மட்டும்தான் அதைச் செய்கிறது.
“குப்பையள்ளுபவர் அருகில் போய் தனக்கு களவு போன மாடு இருக்குமிடம் தெரியுமென்றான் (நாகு). ஆத்திரத்தில் மண்வெட்டியை உயர்த்தியபடி எங்க களவாண்டு வெச்சிருக்க சொல்லுடா எனக் கத்தினான்.
செல்லையா இதைக் கவனித்தவரைப் போல தனது கத்தியை உருவி எடுத்தபடி அருகே வந்து,
“விடுய்யா....மாடு களவு போச்சுனு கேள்விப்பட்டு துப்பு சொல்ல வந்தா அடிக்க ஓங்குறே... வகுந்துருவேன் வகுந்து” என மிரட்டினார்.
செல்லையாவின் திருக்கை மீசையை வெறித்தபடி அந்த ஆள் மண்வெட்டியைக் கீழே போட்டபடி செயலற்று நின்றான். செல்லையா மிரட்டும் குரலில் சொன்னார். “இருப்பிடத்தை சொல்லணும்னா துப்புக்கூலி இருபது முப்பது ரூபா ஆகும் பரவாயில்லயா.” ஆத்திரத்தில் நடுங்கும் கைகளுடன் அவன் மறுத்து தலையை ஆட்டினான். செல்லையா “வா மாப்பிள்ளை. நமக்கென்ன மாடு கைமாறிப் போகப் போகுது” என விறுவிறுவென அவனையும் கூட்டிக்கொண்டு நடக்கத் துவங்கினார். கீழே கிடந்த கரம்பைக் கட்டியை எடுத்து அவர்களை நோக்கி வீசிய அவன் தெலுங்கில் ஏதோ கத்தினார். அவர்கள் விடு விடுவென சந்திற்குள்ளாக நடந்தார்கள். ஊர் முனைக்கு வரும்போது ஒருவன் துப்புக்கூலி அதிகமென பேரம் பேசத் துவங்கினான். செல்லையா அப்படியானால் பத்துபடி கம்மம்புல்லும் பத்து ரூவாயும் தந்துவிடும்படி சொல்லி முடித்தார். (எஸ்.ராமகிருஷ்ணன், 2003; பக். 254-255)
விவசாயக் காலத்தில் மாட்டைக் களவாண்டால் என்ன துப்புக்கூலி கொடுத்தேனும் வாங்கும் விவசாயியின் நிலையை அறிந்து களவாடும் வேம்பர்களின் மனநிலையும், குழந்தைகள் அணிந்திருக்கும் நகைகளைக் களவாண்டால் அவை ஏங்கிப்போகும் என்பதற்காக அதனைத் தவிர்க்கும் வேம்பனின் (சிங்கி) மனநிலையும் நெடுங்குருதியில் ஒருசேரப் பதிவாகி யுள்ளன. மேலும் களவில் உடன் வந்தவர்களுக்கே துரோகம் செய்பவர்கள் (சின்னு, லட்சுமணன் மகன்) நெடுங்குருதியில் மட்டுமே வருகின்றனர். பிற நாவல்களில் வரும் கள்ளர்கள் களவாடிய பொருளுக்குக் கிடைத்த தானிய தவசங்களையும் காவல் உரிமைகளை யும் ஊருக்குப் பகிர்ந்து கொடுக்கும் நேர்மையானவர்களாக இருக் கின்றனர். கள்ளர்களின் வாழ்வை நெடுங்குருதி மனித பலவீனங்களுடன் சித்திரிக்கிறது. காவல்கோட்டமும் குற்றப்பரம்பரையும் தரப்படுத்தப் பட்ட கள்ளர்களின் வாழ்வியலையே பதிவு செய்துள்ளன. ‘பண்டு கலவரம்’ என்பதே உயர்சாதியினர் கள்ளர்களுக்கு எதிராக, அம்மை யப்பக் கோனாரைச் சூழ்ச்சி செய்து பயன்படுத்தியதன் விளைவுதான் என சு.வெ. பதிவுசெய்வது தற்செயலானதல்ல. கள்ளர் - கோனார் உறவு, வணிகத்தில் வளர்ந்துவரும் நாடார்களுக்குப் பாதுகாப்பளிக்கும் கள்ளர்கள் முதலானவை சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தும் தன்மையில் அமைந்துள்ளமை வரவேற்கத்தக்கதே. அதே சமயம் கால்நடைகளைப் பறிகொடுத்த கோனார்களின் வலி, ரௌத்திரம் மற்றும் சிவகாசி கலவரத்தில் மேலூர் கள்ளர்களின் பங்கு முதலானவை மௌனப்படுத்தப்பட்டதன் அரசியல் குறித்த கேள்விகளும் எழாம லில்லை. டேவிட் சாம்ராஜ் பொன்னாங்கனாக மாறுவது போல மார்க் சிஸ்ட் சு.வெ. தாதனூர்காரராக மாறுகிறாரோ என்ற ஐயம் எழுகிறது.
குற்றப் பரம்பரைச் சட்டம்
கள்ளர்களின் வாழ்வில் குற்றப் பரம்பரைச் சட்டம் வினை புரிந்தது குறித்து இந்நாவல்கள் ஒவ்வொன்றும் புனைவுமயப்படுத்தியுள்ளன. நெடுங்குருதியில் கள்ளர்களின் துயரங்களுக்குக் காரணமாக ஆங்கிலே யர் மட்டுமே சித்திரிக்கப்படவில்லை; இந்நாவல் முழுக்க மனிதர்களை வருத்துவது வெயில். வெயிலின் கடுமையால் பிற மக்களோடு எறும்பு களும் கூட வெளியேறிப் போகும் கிராமத்தில் வேம்பர்கள் மட்டும் அதிகமாக வாழத் தொடங்குகின்றனர்.
‘கதவுகளற்ற தனது வீட்டிற்குள் வெயில் ஏறிவருவதைக் கண்ட சிங்கிக்கிழவன் ஆத்திரத்துடன் வைக்கோல் பிரிகளுக்குள் பதுக்கி வைத்தி ருந்த தனது கத்தியை எடுத்துக்கொண்டு சூரியனைப் பார்த்து கத்தினான்.
“வகுந்துருவேன் வகுந்து. சூரியன்னா பெரிய மசிரா. சங்கை அறுத்துப்புடுவேன்.”’ (எஸ். இராமகிருஷ்ணன், 2003, பக்.)
இவ்வாறு வறட்சியையும் ரௌத்திரத்தையும் அவர்களுக்குப் பழக்கியது வெயில். எனவேதான் இவர்களுக்கு வாழ்க்கை குறித்த மிகை மதிப்பீடுகளோ, கனவுகளோ ஏதுமில்லை. உயிர் வாழ்தலுக்காக உயிரைப் பணயம் வைத்துக் களவாடுவதுதான் இவர்களின் தொழில். களவில் பொருள் சம்பாதித்து வந்தால் குடியும் கறியும்தான் உச்சபட்ச மகிழ்ச்சி. கிணறு வெட்டும் தொழிலுக்குப் போவதிலோ, செருப்பு விற்பதிலோ எத்தகைய ஆர்வமுமற்று உயிரைப் பணயம் வைக்கும் களவிலும் வேட்டையிலுமே நாகுவின் அய்யாவிற்கு ஆர்வம் உண்டா கிறது. நாகுவின் அய்யா பெரும்பான்மை கள்ளர்களின் குறியீடு. இவர்களின் ஆறாவது விரலாகக் கத்தி இருக்கிறது. இவர்களிடம் இருந்து சமூகத்தைப் ‘பாதுகாத்து’ தங்களின் ‘அதிகாரத்தை’ நிலைநாட்டும் பிரித்தானிய அரசின் செயல்பாடுகள் இந்நாவலில் அழுத்தத்துடன் பதிவு செய்யப்படவில்லை; ஆங்காங்கேதான் பதிவு செய்யப்படுகிறது. ஏனெனில் பொதுவான வாழ்க்கையை நோக்கி நகரும் எஸ்.ரா.வின் மனநிலை வேம்பலையையும் வேம்பர்களையும் ‘தீமையின்’ உருக்களா கவே காண்கிறது. அதனால் தானோ என்னவோ தீமையின் உருக்கள் மீது திணிக்கப்படும் அரச வன்முறை இவரைப் பெரிய அளவு பாதிக்க வில்லை. அதேசமயம் வேம்பர்கள் என்பதனாலேயே பொது இடங்களில் காவல்துறையினரால் அவமானப்படுத்தப்படுவதின், தண்டிக்கப்படுவதின், தனிமைப்படுத்தப்படுவதின் வலி, களவாலும் காவல்துறையா லும் கணவனைப் பிரிந்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்களின் வலி முதலான மன உணர்வுகள் நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
‘குற்றப்பரம்பரை’யில் கள்ளர்கள் மீது குற்றப் பரம்பரைச் சட்டம் திணிக்கப்பட்டதற்குப் பெருநாழியில் வசிக்கும் வேறு சாதியினரே (என்ன சாதி என்பது உணர்த்தப்படவில்லை) காரணம் என்பதாகச் சொல்லப்படுகிறது. விக்டர், வில்லியம்ஸ் ஆகிய ஆங்கிலேயே அதி காரிகள் கள்ளர்கள் மீது மரியாதையும் அனுதாபமும் கொண்டவர் களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். அதேசமயம் பெருநாழிக்காரர்கள் சிலர் காவல்நிலையத்தை ஊருக்குள் கொண்டுவந்து கொம்பூதிக் காரர்களை ஒடுக்குவதாக நாவல் சித்திரிக்கிறது. காவல்துறையினரின் கடும் ஒடுக்குமுறைக்கு அடங்காத கொம்பூதிகள், தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சேது, காவல்துறை உயரதிகாரியாக வந்து கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காகக் ‘களவுக்குப் போகமாட்டோம்’ எனச் சத்தியம் செய்து கொடுக்கின்றனர். கள்ளர்களைச் ‘சீர்திருத்த’ வழங்கப்படும் கல்விக்குப் பச்சமுத்து எனும் வியாபாரியே பணஉதவி செய்கிறான். இவை எழுதப்பட்ட வரலாற்றுக்கு மாறான சித்திரங்கள். இவை வெகுசனரீதியில் கதையை விறுவிறுப்பாக்க ஆசிரியர் மேற்கொண்ட புனைவா? அல்லது வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த கள்ளர் களின் (கொண்டையங்கோட்டை மறவர்களின்) அனுபவங்களா? என்பது தெளிவுபடவில்லை. ஆனால் உளவியல் ரீதியாகவும் பருண்மையாகவும் வினைபுரியும் அரச வன்முறையின் முழுச்சித்திரம் இந்நாவலுள் வெளிப்படவில்லை; காவல்கோட்டம் அதனை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.
நெடுங்குருதியிலும் குற்றப்பரம்பரையிலும் களவின்பேரால் அரச வன்முறை நிகழ்கிறதென்றால் காவல்கோட்டத்தில் காவலின் பேராலும் நிகழ்த்தப்படுகின்றது. களவின் மூலத்தைத் தேடிச் சென்று காவலைக் கண்டடைகிறார் சு.வெ. களவும் காவலும் வேறு வேறல்ல; புதிய காவலைப் பிடிக்கவும் அதனைத் தொடர்ந்து உறுதி செய்யவும் சில நேரங்களில் பிறர் காவலை உலைக்கவும் களவுதான் வழி. களவில் தேர்ச்சி பெற்றவர்களே காவலுக்குத் தகுதியானவர்கள். நாவல் முழுக்க ‘பெரிய நாயக்கர் கொடுத்த காவல்; அதை விடமாட்டோம்’ என்ற குரல் மந்திரம்போல உச்சரிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு அரசு ஆயுதங்களால் மக்களை, குறிப்பிட்ட இனத்தைக் கட்டுப்படுத்த முடியாதபோது சலுகைகளைக் கொடுத்து அவர்களைத் திருப்திப் படுத்தும். அரசுக்கு தன்னுடைய வளர்ச்சியும் நிலைத்த தன்மையும் தான் முக்கியமே தவிர, அறமோ பாசமோ ஒரு பொருட்டே அல்ல. பிரித்தானியரின் நிர்வாகத்துக்கும் சட்டத்துக்கும் எவ்வித ஒத்துழைப்பும் தராத மேலூர் பகுதி கள்ளர்களைப் பெரியாற்றுப் பாசனம் வழங்கிய தன் மூலம் கட்டுப்படுத்தியது பிரித்தானிய அரசு. மேலும் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பொதுப்பணிகள் எவ்வாறு மக்களை எளிதில் கண்காணிக்கவும், அதிகாரம் செலுத்தவும் உதவுகிறது என்பதை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ள சு.வெ. பெரியநாயக்கர் கொடுத்த காவலைக் கள்ளர்களின்வழிக் கொண்டாடுகிறார். அதேசமயம் கள்ளர்கள் மட்டுமல்ல; அவர்களின் சாமிகளும் தன் அதிகாரத்தின்கீழ் இருக்கவேண்டும் என்பதற்காகத் தந்திரமாகச் செயல்படும் நாயக்க அரசையும் பதிவு செய்யத் தவறவில்லை.
மதுரை வட்டாரத்திலேயே திறமையான காவல்காரர்களான தாதனூர்காரர்களின் காவல் நுட்பங்கள் இந்நாவலுள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் இத்தனை திறமைவாய்ந்த தாதனூர் காரர்களின் ஊரிலேயே காது வளர்க்கவும் கவரடைப்பு (சுன்னத்) செய்யவும் வரும் குறவன் களவாண்டு போவது நுட்பமாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. கால ஓட்டத்தில் பிரித்தானிய அரசால் மதுரை நகரம் மீள்நிர் மாணம் செய்யப்படும்போது காவல் மற்றும் நீதித்துறை அமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன. காவல்துறை கள்ளர், மறவர், குறவர், வலையர் உள்ளிட்டோரின் காவல்முறையை ‘நவீன’ ஆயுதங் களைக் கொண்டு ஒழித்து, தனது அதிகாரத்தினைப் படரவிடுவதனைத் தர்க்கபூர்வமாக சு. வெ. சித்திரித்துள்ளார். அதேபோல் ஆரம்பகட்டத் தில் காவல்துறையின் நடைமுறைகளை ‘விசித்திரமானதாக’ மக்கள் எதிர்கொண்ட விதம் குறித்தும் பதிவு செய்துள்ளார். கோபால் ஐயரைப் போலீஸ் உடுப்புடன் கண்டவர், ‘என்னவோ....ய், எப்படி வோய் இதப் போட்டீரு? நீர் விட்டத்துல தொங்கிக்கிட்டு, ஆத்துக்காரிய ரெண்டு ஓட்டைக்குள்ளேயும் கால் ரெண்டையும் வுட்டு மாட்டுன்னு சொல்லி மாட்டுனீரோ?’ என்று கேட்கிறார். இதைவிட மருதக்கோனார் இயற்றிய கச்சேரி கும்மி சுவாரசியமானது.
‘வெள்ளைக்காரெ கொடுத்த சட்டைய
       வேடிக்கையா நின்னு பாருங்கடி
 உள்ள காலுல பாதியக் காணோம்
       ஒதச்சு நடக்கிறதப் பாருங்கடி
 ஆட்டக்காரி ரவிக்க போல
       அரக்கையி தான் இருக்குது
 ஓட்ட போட்ட ரெண்டு மரக்கா
       காலுக்கு ஒண்ணா தொங்குது
 ......... ............ ......... ............ .......
 காத்துப் போக ஒரு ஓட்ட
       மூத்திரம் போக ஒரு ஓட்ட
 பாத்து பாத்து நடந்து வர்றாரு
       பரமசிவ முதலியாரு’ (சு.வெ; 2008; 438)
இவ்வாறு விசித்திரமாகவும் கேலியாகவும் பார்க்கப்படும் காவல் துறை தாதனூர்காரர்களிடம் கச்சேரிக்கும் காவல்கூலி கொடுக்கிறது. பின்னர் மெல்ல மெல்லக் காவல் காப்பவர்களையே களவாடுபவர் களாகவும் குற்றவாளிகளாகவும் உருமாற்றி அவர்களின் வாழ்வியலையே சிதைக்கும் வரலாறு நுட்பமாகவும் இயங்கியல் தன்மையோடும் சொல்லப்பட்டுள்ளது. மூன்று நாவல்களிலும் காவலையும் கள்ளர்களை யும் ஒடுக்கப் பிரித்தானிய அரசும் காவல்துறையும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும்; அதற்கு எதிரான கள்ளர்களின் தீவிரமான எதிர்ப்பு களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கள்ளர்களின் முக்கியப் பலமே ஆயுதங்களும் அவற்றைக் கையாளும் திறமும்தான். பிரித்தானிய அரசு சூழ்ச்சியாக அவ்வாயுதங்களைப் பறிப்பது, இரவில் ஆஜர் பார்ப்பதாகச் சொல்லி அவர்களின் தொழிலையும் தன்மானத்தையும் சிதைத்து மந்தைகளாக நடத்துவது, முகாம்களில் கட்டாயவேலை செய்யச் சொல்லி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது முதலானவை வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடக்கத்தில் கள்ளர்கள் காவல் துறையைக் கடுமையாக எதிர்த்தாலும் நவீன ஆயுதங்களால் ஏற்படும் இழப்புகளும் வலிகளும் செயலற்ற தன்மையும் மெல்ல மெல்ல அவர்களைக் ‘கட்டுப்படுத்து வது’ குறித்த சித்திரம் முக்கியமானது. சுதந்திரமாகச் சுற்றித் திரிபவர்களை அரசு உடல்ரீதியாகவும் உளவியல்ரீதி யாகவும் எப்படி ஒடுக்குகிறது என்பதற்கு சு.வெ. பதிவு செய்த பிரான்மலைக் கள்ளர்களின் வாழ்வு ஒரு குறியீடு.
ஆங்கிலேயரின் அரச வன்முறையைப் பதிவு செய்யும் இவர் சாதியச் சமூகத்திற்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். தாழ்த்தப்பட்ட மாணவனைப் பள்ளியிலிருந்து நீக்கவேண்டும் எனும் உயர்சாதியினரின் நெருக்கடியை மறுத்து அனைவருக்கும் கல்வியை வழங்குதல், மதுரை மீனாட்சி கோவில் நிர்வாகக் குழுவைச் சீரமைத்தல் எனப் பிரித்தானிய அரசை நேர்மறையாக வும் பதிவு செய்துள்ளார். நாயக்கர் காலம் தொடங்கிப் பெருங்காமநல்லூர் படுகொலை வரையிலான காலகட்டத்தில் மதுரையின் புறக்கட்டுமானம் மற்றும் சமூக அசைவுகளில் நிகழும் மாற்றங்கள் வரலாற்றுணர்வுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.3 எனவேதான் இந்நாவல் புனைவு என்பதைத் தாண்டி ஆவணம் எனும் தகுதியையும் பெறுகிறது. மிக நீண்ட தேடலினூடாகப் பெற்ற எழுத்தாவணங்கள், மக்களிடையே புழங்கும்/ புழுங்கிய நாட்டார் வழக்காறுகள் (குறிப்பாகக் கதை), சமூக இயங்கிய லுடன் கூடிய தர்க்கபூர்வமான கற்பனை முதலானவற்றின் இணைவு களோடுதான் பென்னாம் பெரிய நாவலான காவல்கோட்டத்தின் நிலையான இருப்பும் வெற்றியும் சாத்தியமாகியுள்ளது.
இந்நாவல் குறித்து எழுத எழுதத் தீராமல் ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் இந்நாவலில் சில இடைவெளிகள் புனைவு மயப் படுத்தப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன. மேலூர் கள்ளர்களை அடக்குவ தற்காக ரூம்ளேயின் தலைமையில் சென்ற படை 5000 பேரைக் கொன்று குவித்த நிகழ்வு இந்நாவலில் எட்டுவரிச் செய்தியாக மட்டுமே இடம் பெறுகிறது. இது அதிகம் அறியப்படாத நிகழ்வு. இந்த இடைவெளியைப் பூர்த்திசெய்யத் தன் கற்பனையாலும் புனைவுணர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் கொன்ற வர்களின் வன்மத்தையும் சு.வெ. வாசகனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்; அது தவறவிடப்பட்டுள்ளது. இதற்கு நம்பகமான தரவுகள் (எழுத்தாவணங்கள், நாட்டார் வழக்காறுகள்) இல்லாமல் எதையும் பதிவு செய்யவேண்டாம் என எண்ணும் படைப்பாளியின் மனநிலை காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எழுதப்படும், சொல்லப்படும் வரலாறுகள் எல்லாம் ஏதோ ஓர் தற்சார்பினோடும் புனைவுத் தன்மையோடுமே கட்டமைக்கப்படுகின்றன. வரலாறு உண்மையானதா என்பதைவிட அதன் அரசியல் நியாயமானதா என்பது குறித்தே நாம் விவாதிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (சமவெளிப்) பழங்குடி யினர் - கள்ளர்கள் - மீது நிகழ்த்தப்பட்ட அரச வன்முறை குறித்தும் அதனால் நிலைகுலைந்த அவர்களின் வாழ்வியல் குறித்தும் இருபத்தோ ராம் நூற்றாண்டில் புனைவின்வழி மூன்றுபேர் பதிவு செய்துள்ளனர். இவை வெறும் புனைவும் பதிவும் மட்டும்தானா? இந்த எழுத்துகளின் நிகழ்கால இயைபு என்ன எனும் கேள்வி எழலாம். இப்புனைவுகள் இனக்குழுக்களை அழித்துப் பேரரசை உருவாக்க முயன்ற வம்ப வேந்தர்கள் தொடங்கி இன்றுவரையிலும் நடைபெறும் அரச பயங்கர வாதத்தினை அதன் சூழ்ச்சிகளைக் குறியீடாக உணர்த்தவல்லன. இந்நாவல்கள், கள்ளர்களின் மீதான அரச பயங்கரவாதத்தை மட்டு மல்லாமல், தற்பொழுது வடகிழக்கு மாகாணங்களிலும் காஷ்மீரிலும் ஈழத்திலும் மாவோயிஸ்டுகள் மீதும் ‘தேசிய’ ஒற்றுமை மற்றும் பாதுகாப்பைக் காரணம்காட்டி நிகழ்த்தப்படுகிற அரச பயங்கரவாதங் களையும்4 சில பக்கங்களாவது புனைவுமயப்படுத்தியிருக்கலாம். (தாண்டவராயன் கதையில் இத்தகைய விரிவான புனைவு மயப்படுத் தலின் சாத்தியம் நிகழ்ந்துள்ளது.) மேலும் உலக அளவில் இஸ்லாமியப் பயங்கரவாதம், சோமாலியக் கடற்கொள்ளையர்கள் முதலானவை பற்றிய கற்பிதமான வரலாறுகளைப் புனைவுமயப்படுத்தி (கட்டுடைப்பு) இருந்தால் இந்நாவல்கள் மேலும் வீரியமுடையதாக அமைந்திருக்கும். இது உலகமயமாக்கப்பட்ட சூழலில் தமிழ் நாவல்கள் உலக அரசியலையும் தன் எழுத்துகளின் இடைவெளிகளினுடாகப் புனைவுமயப்படுத்த வேண்டும் என எண்ணும் வாசகனின் விருப்பமே தவிர இந்நாவல்கள் மீதான விமர்சனமல்ல.
அடிக்குறிப்புகள்
1.     இந்நாவல் கொண்டையங்கோட்டை மறவர்களின் வாழ்க்கையைக் கொம்பூதி கள்ளர்களின் வாழ்க்கையாகச் சித்திரிப்பதனை அவதானிக்க முடிகிறது.
2.     இம்மூன்று நாவல்கள் பற்றிய அறிமுகம் ஆவணம் பகுதியில் இடம் பெற்றுள்ளன.
3.     முதல் 272 பக்கங்களில் நாயக்கர் வரலாறு துல்லியமாகக் கூறப்படுகிறது. ஆனால் வரலாற்றுக்கும் புனைவுக்கும் அதிக வேறுபாடுள்ளது. சு.வெ. தொடர்ச்சியான தேடலினூடாகத் தொகுத்த தகவல்களையெல்லாம் சிறிதும் விடுபடாமல் பதிவு செய்திருக்கிறார். இவை ஆவணமாக அமைகின்றனவே தவிரத் தேர்ந்த வாசிப்பனுபவத்தை வழங்கவில்லை; சில இடங்களில் சலிப்பூட்டவும் செய்கிறது. அதேசமயம் வடுகப் பெண்களின் ஆளுமை, கொல்லவாருகள், சக்கிலியர் மற்றும் கள்ளர்களின் வீரம், நாயக்கர் காலப் போர் முறைமைகள் முதலானவை உயிர்ப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொல்லவாருகள் மற்றும் சக்கிலியர்களின் வீரத்தால் நிர்மாணிக்கப்பட்ட விஜயநகரப் பேரரசில் வினைபுரியும் பலிஜவாருகளின் (சாதிய) அதிகாரம் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தப்படுகிறது. அதேபோல் பார்ப்பன‌ர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் நெகிழ்ந்து கொடுத்து அதிகாரத்தில் பங்கு வகிப்பது குறித்த விமர்சனமும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இவை நாவல் போக்கினோடு இயல்பாக அமையவில்லை; செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கிறது.
4.     மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிற இந்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவையும் இந்தியரையும் சுரண்ட அனுமதி கொடுத்து, ‘சட்டம் - ஒழுங்கை’ நிலைநாட்டும் பணியை உன்னிப்பாகச் செய்து வருகிறது. எனவேதான் விவசாயிகள் ஒடுங்கிப்போன நிலையில், நிலங்களைக் கையகப்படுத்தவும், மாவோயிஸ்டுகளை ஒடுக்கவுமான ‘வளர்ச்சி’ நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.
துணைநூற்பட்டியல்
1.     ராமகிருஷ்ணன், எஸ்., நெடுங்குருதி, உயிர்மை பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: டிசம்பர் 2003.
2.     வெங்கடேசன், சு., கலாச்சாரத்தின் அரசியல், வைகை வெளியீடு, மதுரை, முதல் பதிப்பு : ஜுலை 2001
3.     வெங்கடேசன், சு., காவல் கோட்டம், தமிழினி, சென்னை, முதல் பதிப்பு: டிசம்பர் 2008.
4. வேல ராமமூர்த்தி, குற்றப்பரம்பரை, காவ்யா, சென்னை, முதல் பதிப்பு : டிசம்பர் 2007.
குறும்படம்
5.     தினகரன் ஜெய், ரேகை, ஜெகமதி கலைக்கூடம். 
(கட்டுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர். ‘இருபதாம் நூற்றாண்டு தொடக்ககாலத் தமிழியல் ஆய்வு’ குறித்து ஆய்வு செய்து வருகிறார். )

ஆதித்த கரிகாலச் சோழன் கொலை

0 c

பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும்


சோழப் பேரரசன் முதலாம் இராசராசன் கி.பி.985இல் முடிபுனைந்திருக்கிறான். முடி புனைந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே சேர நாட்டிலிருந்த காந்தளூர்ச் சாலையைத் தாக்கி வெற்றி பெற்றிருக்கிறான் என்பது அவனது மெய்க்கீர்த்தியால் நமக்குத் தெரிய வருகிறது. அவன் அவ்வாறு விரைந்து காந்தளூர்ச் சாலையைத் தாக்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆதித்த கரிகாலச் சோழன் கொலை

பொன் மாளிகைத் துஞ்சிய தேவரான சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், அருண்மொழி என்று இரு மகன்களும் குந்தவை என்று ஒரு மகளும் இருந்திருக்கின்றனர். சுந்தர சோழன் இறப்புக்கு முன்பாகவே ஆதித்த கரிகாலன் சில சூழ்ச்சிக்காரர்களால் இரண்டகமாகச் சாகடிக்கப் பெற்றிருக்கிறான்

இத்துன்பச் செய்தி கடலூர் மாவட்டம், காட்டு மன்னார் கோயிலின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரன் கோயில் கல்வெட்டினால் தெரியவருகிறது. இவ்வூர், கல்வெட்டுகளில் “வீர நாராயணபுரச் சதுர்வேதிமங்கலம்” என்று குறிக்கப் பெறுகிறது. ஆதலால் இது முதலாம் பராந்தகச் சோழனால் ஏற்படுத்தப் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனருகில்தான் இப்பராந்தகச் சோழன் காலத்தில் அமைக்கப்பெற்ற வீரநாராயண ஏரியும் உள்ளது.

வீரநாராயணச் சதுர்வேதிமங்கலம்தான் வைணவ இலக்கியங்களில் பேசப்படும் வீரநாராயணபுரம் ஆகும். இவ்வீரநாரயணபுரத்தில்தான் வைணவப் பெரியார்கள் நாதமுனியும் அவரது திருப்பெயரர் யமுனாசார்யா என்று வழங்கப்பெற்ற ஆளவந்தாரும் தோன்றினர். ஆதலால் நான்கு வேதங்களும் கற்ற பார்ப்பன‌ர்கள் இவ்வூரில் முதலாம் பராந்தகன் காலம் முதலே வைணவ ஆசாரியர்கள் காலம் முடிய வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. இங்குப் பெரும்பாலும் பார்ப்பன‌ர்கள்தான் நில உடைமையாளர்களாக விளங்கியிருக்கின்றனர் என்பதையும் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

உடையார்குடிக் கல்வெட்டு

இவ்வூர் அனந்தீசுவரன் கோயில் உண்ணாழியின் மேற்குச் சுவரில் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டுப் பகுதியைக் கீழே காண்போம்.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம் “பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)...(இவன்) றம்பி
  2. ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
  3. பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
  4. கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர…

மேலே காணப்பெற்ற கல்வெட்டில் “பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனைக்” கொன்று “த்ரோஹிகளானவர்கள்” என்று தெளிவாகக் கூறப்பெற்றிருக்கிறது. அக்கொடும் பாதகச் செயலைச் செய்த துரோகிகள் யாவர் என்று அக்கொலையாளியின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறது. கொலையாளியின் பெயர்கள் அவர்கள் பார்ப்பன‌ர்கள் என்பதைக் காட்டுகின்றன. அப்பார்ப்பன‌ர்கள் ஏன் இந்த அழிவுச் செயலைச் செய்தார்கள் என்பது வரலாற்றாசிரியர்களுக்குப் புரியாத புதிராக இருந்து வருகிறது.

கொலைக்கான காரணம்

ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் சில ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாகச் சோழர் வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாத்திரியார், கண்டராதித்த சோழரின் மகனும், சுந்தரசோழனின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பான உத்தம சோழன்தான் இவ்வந்தணர்களை ஏவி ஆதித்த கரிகாலனைக் கொன்றிருப்பான் என்று கருதியுள்ளார். இக்கருத்து முற்றிலும் தவறு என்று வரலாற்றிலும் தமிழிலக்கியத்திலும் சிறந்த அறிஞரான தி.வை.சதாசிவ பண்டாரத்தார் தக்க சான்றுகளுடன் மறுத்திருக்கிறார். இருப்பினும் அவர் மறுப்பை ஏற்றுக்கொள்ளாத சென்னை விவேகாநந்தர் கல்லூரிப் பேராசிரியர், கே.ஏ.நீலகண்ட சாத்திரியார் கருத்தே மேலோங்கி நிற்கிறது என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

“இக்கட்டுரை உள்நோக்கம் கொண்ட கட்டுரை என்றும் தம் மரபினரைப் பாதுகாக்க எடுத்துக்கொண்ட முயற்சி” என்றும் தெரிவித்து வரலாற்று அறிஞர் க.த. திருநாவுக்கரசு தம் கட்டுரையொன்றில் சாடியிருக்கிறார். இவர், ஆதித்த கரிகாலன் பாண்டியனை வென்று அவனது தலையைக் கொண்டதால், பாண்டியனின் மரபினர் இவ்வந்தணர்களில் ஒருவனான “பஞ்சவன் பிரமாதிராசன்” மூலம் ஆதித்த கரிகாலச் சோழனைத் தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்று புது விளக்கம் தந்துள்ளார். இவர், “பஞ்சவன் பிரமாதிராசன்” பாண்டியர்களின் அரசு அலுவலர் என்று கருதியிருக்கிறார். இவர் குறிப்பிட்டுள்ள “பஞ்சவன் பிரமாதிராசன்”, “ரவிதாசன்” என்பது ரவி குலத்தவனின் (சூரிய குலத்தினனின்) அடியான் என்று பொருள். எனவே, சூரியகுல அடியானாகிய பஞ்சவன் பிரமாதிராசன் சோழர், பாண்டியர்களை வென்றபொழுது, “பஞ்சவன் பிரமாதிராசன்” என்ற விருதுப் பெயரைச் சோழ வேந்தனால் சூட்டப்பட்டவனாகலாம். ஆதலால் அவன் சோழ அதிகாரியே தவிர பாண்டியனின் அரசதிகாரியில்லை.

கொலைக் கரணியம் யாது?

இந்தச் சூழ்நிலையில், ஆதித்த கரிகாலனைக் கொன்ற தீயவர் யாவர்? அவனைக் கொன்றதற்கான கரணியம் யாது? என்பது நம்முன் நிற்கும் வினாக்களாகும். இதற்கு விடை காண வேண்டுமென்றால் தொன்மத்தையும், இலக்கியத்தையும், கல்வெட்டு, செப்பேட்டு வரிகளையும் நாம் ஆராய வேண்டுவது தேவையாகிறது.

தொன்மம் கூறுவது என்ன?

சூரிய குலத்தில், கேகயநாட்டுக் கிருதவீரியனுக்கும் சுகந்தைக்கும் பிறந்தவன் கார்த்த வீரியன். இவன் ஒரு சத்திரியன். இவன் சமதக்கனி முனிவரிடமிருந்து “ஓமதேனு” எனும் பசுவைக் கவர்ந்ததனால் பரசுராமர் இவனைக் கொன்றார். இதைக் கேள்வியுற்ற கார்த்த வீரியர் மைந்தர், பரசுராமர் இல்லாத நேரத்தில் சமதக்கினி முனிவரைக் கொலை புரிந்தனர். பரசுராமர் அங்கு வந்தவுடன், சமதக்கினி முனிவர் தேவியார் இருபத்தோரு முறை தம் மார்பிலடித்துக்கொண்டு அவன் தந்தை இறந்த செய்தியைத் தெரிவித்தாள். கோபமுற்ற பரசுராமர் கார்த்தவீரியன் குலமாகிய சூரியகுல மரபினர்களை அழிப்பதாக உறுதிகூறி இருபத்தொரு தலைமுறை கருவறுத்தனன். அப்போது தப்பியவர்கள் கார்த்தவீரியன் புதல்வர்களாகிய சய்த்துவசன், வீரசேனன்,விருடணன்,மதுசூரன் அல்லது ஊர்ச்சிதன் ஆகியோராவர் என்று மச்சிய புராணம் கூறுகிறது.

இத்தொன்மத்தில் சூரிய குலத்தின் 21 தலைமுறைச் சத்திரியர்களைப் பரசுராமர் பூண்டோடு அழித்தார் என்பது மையக்கருத்தாகும். ஆனாலும் அவரிடமிருந்து தப்பியவர்களும் சிலர் இருந்தனர் என்பதுமாகும்.

இலக்கியக் கூற்று

இத்தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஒரு செய்தியை மணிமேகலையில் தெரிவித்திருக்கிறார்.

“மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்

தன்முன் தோன்றல் தகாதொளி நீயெனக்

கன்னி யேவலின் காந்த மன்னவன்

இந்நகர் காப்போன் யாரென நினைஇ

…………….

காவற் கணிகை தனக்காங் காதலன்

இகழ்ந்தோர்க் காயினும் என்சுத லில்லான்

ககந்தனா மெனக் காதலிற் கூஉய்

அரசா ளுரிமை நின்பால் இன்மையின்

பரசுராம னின்பால் வந்தணுகான்”

அதாவது, பரசுராமன்(மழுவாள் நெடியோன்) அரச குலத்தை(சத்திரிய குலத்தை) அழிப்பதற்காக உறுதியேற்றுக் கொண்டு புகார் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். நீ அவன் கண்ணில்படுவது தகாது, ஆதலால் நீ உன் கணிகை மகனான சுகந்தனிடம் ஆட்சியை ஒப்ப்டைத்துவிட்டு ஓடி ஒளிந்துகொள் என்று புகாரின் கன்னித்தெய்வம் “காந்தமன்” என்ற சோழ அரசினிடம் கூறியதுதான் அச்செய்தி. சோழர் சூரிய குலத்த்தைச் சார்ந்த சத்திரியர்கள் என்பதால்தான் பரசுராமன் சோழ வேந்தன் காந்த்மனைத் தாக்க வந்திருக்கிறான்.

மேலே குறிக்கப்பெற்ற இரு செய்திகளையும் அடிபடையாகக் கொண்டு ஆய்ந்து பார்ப்போமானால், சூரிய குலத்தில் தோன்றிய சோழ சத்திரிய அரசர்கள் மீது பரசுராமனுக்கும் அவரது மரபினர்க்கும் சினமும் எரிச்சலும் இருந்திருக்கிறது என்பது தெரியவரும்.

கல்வெட்டு, செப்புப் பட்டயச் சான்று

இயல்பாகவே கற்றறிந்த அந்தணர்கள் சத்திரியர் மீது மனக்கசப்பு கொண்டிருந்திருக்கின்றனர் என்பது பல்லவர் காலத்தில் கதம்ப பார்ப்பன‌ அரசன் “மயூரசர்மன்”, காஞ்சிபுரம் கடிகைக்கு உயர் கல்வி கற்க வந்தபோது, பல்லவர் குதிரை வீரன் ஒருவனால் கடிகைக்குள் நுழையவிடாது தடுத்துவிட்டபொழுது, அப்பார்ப்பன‌ மன்னன், “கடவுளே இந்தக் கலியுகத்தில் பார்ப்பன‌ர் சத்திரியர்களுக்கு அடங்கிய நிலையில் இருக்க வேண்டியுள்ளதே! பார்ப்பன‌ர் தன் குருவின் குடும்பத்துகு உரிய பணிவிடை செய்திருந்தாலும், வேதங்களின் உறுப்புகளை முறையாகப் படித்திருந்தாலும், அவன் சமயத்தில் முழுத்துவம் அடைவதற்கு (பல்லவ) அரசனைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மனவலியை ஏற்படுத்த இதைவிட வேறு என்ன வேண்டியிருக்கிறது?” என்று தமக்குத் தாமே புலம்பியிருக்கிறான். இச்செய்தி தாலகுண்டாக் கல்வெட்டினால் புலப்படுகிறது. பல்லவர் சத்திரியர் என்பது காசாக்குடிச் செப்பேடு நரசிம்மவர்மனை “சத்திரிய சூளாமணி” என்பதாலும், திருவெள்ளறை மூன்றாம் நரசிம்மப் பல்லவன் தம்மை “சத்திரிய சிம்மன்” என்று அழைத்துக் கொண்டதாலும் உணரலாம்.

தாலகுண்டா கல்வெட்டு தெரிவிக்கும் முதன்மைச் செய்தி யாதெனில் பார்ப்பன‌ மன்னர்களும் பார்ப்பனர்களும் சத்திரிய மன்னர்கள் மீது வெளியில் காட்டிக் கொள்ளாத பகைமை உணர்வைக் கொண்டிருந்தார்கள் என்பதேயாகும். இதுவும் அந்தப் பரசுராமனின் சத்திரிய மன்னர்களின் அழிப்பின் ஒரு கூறே என்று கருதலாம்.

பரசுராமன் கதை மேற்போக்காகப் பார்க்கையில் ஒரு தொன்மம் போன்று தோன்றினாலும், பார்ப்பன‌ – சத்திரிய அரசர்களின் பகைமையை எதிரொலிப்பதாகவே அதைக் கொள்ளல் வேண்டும்.

கண்டராதித்தன் மேற்கெழுந்தருளியது எதற்காக?

பிறகாலச் சோழ மன்னர்களில் முதற்பராந்தகனின் மகன் கண்டராதித்தனை “மேற்கெழுந்தருளிய தேவர்” என்று உடையார்குடிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவர் சோழ நாட்டின், மேற்குப் பகுதிக்கு எதற்காகச் சென்றார் என்பதில் வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்தைக் கூறியுள்ளனர். இவன் மேற்றிசையில் இராட்டிரகூட மன்னரோடு பொருது அதில் இறந்திருக்கலாம் என்பது ஒரு கருத்து. இம்மன்னன் தல யாத்திரைக்குச் சென்று திரும்பாமை என்பது பிறிதொரு கருத்து.

இவர் காலத்தில் முதன் முதலாகக் “கண்டராதித்த பெரும் பள்ளி” என்ற புறச் சமயக் கோயில் ஏற்படுத்தப்பெற்றிருக்கிறது. கண்டராதித்த சோழனின் இப்புறச் சமயச் சார்பும், இவன் ஒரு சத்திரிய மன்னன் என்ற நிலையும், இவன், 9ஆம் திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவன் என்பதும், காந்தளுர்ச் சாலையிலிருந்த பரசுராமன் வழிவந்தோரை இவன் மீது வெறுப்படையச் செய்திருக்கும். அவர்களை அமைதிப்படுத்த இம்மன்னன் சென்றிருக்கலாம். அப்போது மேற்குத் திசையில் (சேர நாட்டுக் காந்தளூர்ச் சாலையில்) இம்மன்னன் நயவஞ்சகமாக சாகடிக்கப்பட்டிருக்கலாம். ஆதலால் இவன் மீண்டும் சோழ நாட்டுக்குத் திரும்ப இயலாது போய்விட்டது. இதுதான் “மேற்கெழுந்தருளிய தேவர்” என்ற மரியாதைச் சொல்லுக்கு உரிய பொருளாக இருக்கும்.

இம்மன்னன் காந்தளூர்ச் சாலையில் கொல்லப்பெற்ற செய்தி, இவரது தம்பி மகனாகிய சுந்தரசோழன் ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான் தெரிய நேர்ந்திருக்கிறது. சுந்தர சோழனை அவன் காலத்தில் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடு “சத்திரியர்களில் முதன்மையானவன்” என்று புகழ்ந்துரைக்கிறது.

சத்திரியர்களின் எதிரியான பரசுராமனின் வழிவந்தோரால் தம் பெரிய தந்தை சாகடிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தவுடன் தம் மூத்த மகன் ஆதித்த கரிகாலனைக் காந்தளூர்ச்சாலைக்கு அனுப்பி அந்நயவஞ்சகர்களைத் தண்டிக்க தக்க நடவடிக்கையை மேற்கொண்டிருப்பான்.அத்திட்டம் தம் செவிகளுக்கு எட்டவே பரசுராமன் வழிவந்தோரில், உடையார்குடியில் வாழ்ந்து வந்த மேலே குறிப்பிட்ட நான்கு “துரோகிகளும்” ஆதித்த கரிகாலனைச் சூழ்ச்சி செய்து கொன்றுவிட்டனர்.

சுந்தர சோழனும் மிகுந்த தமிழ்ப்பற்றாளன் என்பதை “வீரசோழியம்” என்னும் தமிழ் இலக்கண நூல் உரை விரித்துரைத்துள்ளது. தாம் ஒரு சத்திரியன் என்பதும், தம் தமிழ்ப்பற்றும்தான் சுந்தர சோழனின் உடனடி நடவடிக்கைகுக் காரணமாகலாம்.

கொலையாளிகளைக் கண்டறிவதில் சுணக்கம்

ஆதித்த கரிகாலனைக் கொன்ற தீயவர்களைக் கண்டறிவதில் காலச் சுணக்கமாகியிருக்கும். ஆதலால் தான் உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் அக்கயவர்களைத் தண்டிக்க இயலவில்லை. அவனுக்குப் பின்பு அரசாட்சி ஏற்ற முதலாம் இராசராசன் தம் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே “அத்துரோகிகள்” யார் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களது நிலம் மற்றும் அவர்களது உறவினர்களின் நிலங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விற்று, அரசுக்கருவூலத்தில் ஒப்படைக்கக் கட்டளையிட்டிருக்கிறான் இராசராசன் என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும்.

காந்தளூர்ச் சாலையை முதலில் தாக்கியதன் காரணம்

ஆதலால் தம் இரண்டாம் ஆட்சியாண்டில் அக்கயவர்களுக்குத் தண்டனை வழங்கிவிட்டு,தம் மூன்றாம் ஆட்சியாண்டிலேயே அக்கொலைக்கு மூலக்காரணியர்களான காந்தளூர்ச்சாலையிலிருந்த பரசுராமன் வழிவந்தோரை வாதத்தில் வென்று தாம் ஒரு “ராஜஸர்வஞ்ஞன்” என்பதைப் புலப்படுத்தியதோடு, அச்சாலையை நிலைகுலையச் செய்து, பின்பு தம் பெருந்தன்மையால் மீண்டும் அதைப் பழைய நிலையிலேயே இயங்கவும் செய்ததைத் தம் முதல் வெற்றியாகவும், மற்ற எல்லா வெற்றிகளிலும் முதன்மையானதாகவும் கருதியிருக்கிறான். எனவேதான் அவ்வெற்றியை தம் மெய்கீர்த்தியில் “காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி” என்று முதலாவதாகக் குறிப்பிட்டுக் கொண்டான்.

பரசுராமன் நாடு

திருவாலங்காட்டுச் செப்பேட்டில் முதலாம் இராசராசனுடைய இவ்வெற்றி “பரசுராமனது நாட்டை வென்றது” என்று குறிப்பிடப்படுகிறது. இதேபோன்று இப்பெருவேந்தனின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மகன் முதலாம் இராசேந்திரனும் “சோழ நாட்டுக்கு மேற்கே அமைந்திருந்த சேரநாட்டையும் பல்பழந்தீவுகளையும் வெற்றி கொண்டதோடு, சேரரின் முடியையும், மாலையையும், பரசுராமரால் சாந்திமத்தீவில் வைக்கப்பெற்றிருந்த செம்பொன் முடியையும் தம் ஐந்தாம் ஆட்சியாண்டில் கவர்ந்து கொண்டான்” என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

திருமறை இருக்குமிடம் காட்ட மறுத்ததன் காரணம்

ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகளைத் தண்டித்ததற்கும் தில்லை நடராசர் கோயிலில் திருமறைகள் இருக்குமிடத்தைக் காட்ட மறுத்த தில்லை மூவாயிரவர் செயலுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். ஏனெனில் தில்லை மூவாயிரவரும் சேர நாட்டைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்களுக்கும் பரசுராமன் வழி வந்தோரான காந்தளூர்ச்சாலை அந்தணர்களுக்கும் உடையார்குடித் துரோகிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். ஏனெனில் திருமறை ஓத முக்கிய இடம்.

ஆதித்த கரிகாலனைப் பார்ப்பன‌ர்கள் கொன்றதன் கரணியத்தாலோ என்னவோ இராசராசன் தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பகரமாகத் திருமறை ஓதுவதற்கு மிகுந்த முதன்மை தந்திருக்கிறான். இங்கு மற்றொன்றையும் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரேயொரு செப்புப் பட்டயம்

பிற்காலச் சோழர்களில் பெரும் புகழ் படைத்த பேரரசாக விளங்கிய இராசராசன் வெளியிட்டதாக ஒரே ஒரு செப்புப் பட்டயம்தான் இதுவரை கிடைத்திருக்கிறது. அப்பட்டயமும் “க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுப் பட்டணக் கூற்றத்து நாகப்பட்டிணத்தில் கடாரத்தரையன் சூளாமணி பன்மனால் அமைக்கப் பெற்ற புத்தப் பள்ளிக்கு” அளிக்கப் பெற்ற நிலக் கொடையைக் குறிப்பதாகத்தான் உள்ளது. பார்ப்பன‌ர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கி வெளியிட்ட செப்புப் பட்டயம் ஒன்றுகூட இதுவரை கிடைக்காமலிருப்பதும், இவன் பார்ப்பன‌ர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பை எதிரொலிப்பதாகவே தெரிகிறது.

இம்மன்னன் தாம் “சத்திரியர்களின் சிகாமணி” என்று பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறான். மேலும் ஒரு வளநாட்டுக்குச் “சத்திரிய சிகாமணி வளநாடு” என்று பெயரிட்டிருக்கிறான். ஆதலால் தாம் ஒரு “சத்திரியன்” என்று கூறிப் பெருமைப்பட்டிருக்கிறான். இவையெல்லாம் முதலாம் இராசராசனின் பரசுராமர் வழிவந்தோர் எதிர்ப்பைப் புலப்படுத்துவதாகத் தோன்றுகிறது.

- தொல்லியலறிஞர் நடன. காசிநாதன், தமிழ்நாட்டரசுத் தொல்லியல் துறை மேனாள் இயக்குநர்

(கட்டுரை: “முதன்மொழி” சிற்றிதழின் அக்தோபர் – திசம்பர் 2010 வெளியீட்டில் வந்தது)

நன்றி http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12330:2011-01-10-05-51-57&catid=1:articles&Itemid=264



சாதி - wiki

0 c

சாதியின் தோற்றம்

சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின் மானிடவியல் கோட்பாடுகள்[1] என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்த பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாக கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
  1. மரபுக் கோட்பாடு (traditional theory)
  2. தொழிற் கோட்பாடு (occupational theory)
  3. சமயக் கோட்பாடு (religious theory)
  4. அரசியற் கோட்பாடு (political theory)
  5. இனக் கோட்பாடு (racial theory)
  6. படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)

[தொகு] மரபுக் கோட்பாடு

சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும். ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.

[தொகு] தொழிற் கோட்பாடு

சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.
பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.

[தொகு] சமயக் கோட்பாடு

சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையை தோற்றுவித்தது.

[தொகு] அரசியற் கோட்பாடு

உயர் சாதியினர் தமது சலுகைகளை தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துகொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.

[தொகு] இனக் கோட்பாடு

ஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டை காட்டத் தொடங்கினர்."[2]

[தொகு] படிமலர்ச்சிக் கோட்பாடு

[தொகு] இந்திய சாதி அமைப்பு

இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றாம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன.
தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன. வடமொழியில் உள்ள மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருபதாகத் தெரியவில்லை.

முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

0 c
 




ஆசிரியர்: ஏ.ஆர்.பெருமாள்
வெளியீடு: குமரன் பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்:
விலை:  ரூ.150


 குமரன் பதிப்பகம், 3, முத்துக்கிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 408).
தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் தன் இரு கண்களாகக் கொண்டு, இல்லற வாழ்வை ஏற்காமல், சமூகத் தொண்டிற்காகவே வாழ்ந்து, என்றென்றும் நினைவில் நின்று வழிகாட்டும் தேவரின் இனிய வாழ்க்கை வரலாற்றைக் காட்டும் நூல்.

நேதாஜியின் வீரப்போரில் தேவருக்கு இருந்த ஈடுபாடும், காங்கிரஸ் மேல் கொண்ட அன்பும், வீர சாவர்க்கரின் தீவிர தேசத் தொண்டுக்குத் துணை நின்றதும், தொழிலாளர், விவசாயிகளுக்காக போராடியதும் மிகவும் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

எவரையும் ஈர்க்கும் மிடுக்கான தோற்றமும், எதற்கும் அஞ்சாத எடுப்பான பேச்சும், எவருக்கும் நியாயம் தேடித் தரும் எழுத்தாற்றலும் இந்த நூலில் சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன. பாரதம், ராமாயணம் இரண்டையும் மேற்கோள் காட்டி பேசுவதுடன், முருகன் கையில் உள்ள வேல் அணுகுண்டை விட சக்திமிக்கது என்பது போலவும் பேசும் ஆற்றல்களை, இந்நூலில் பல இடங்களில் காண முடிகிறது.

கொலை வழக்கில் சிக்கி, நிரபராதியாய் வெளிவந்து, டில்லி பார்லிமென்ட், தமிழக சட்டசபை ஆகியவற்றில் துணிவுடன் பேசியதும், தனது 54 வயது வரை பக்தியுடன் அவர் ஆற்றிய தொண்டும் இந்நூலில் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஒரு ஜாதியின் தலைவராக அவரை இன்று சிலர் ஆக்க நினைத்தாலும், தமிழ் ஜாதியின் மாபெரும் தலைவர் தான் அவர் என்றும் என்பதை இந்த நூல் நின்று நிலைநாட்டும்.
 

தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர்

0 c
 




ஆசிரியர்: கே.ஜீவபாரதி
வெளியீடு: வைரம் வெளியீடு
பகுதி: பொது
ISBN எண்:
விலை:  ரூ.40


 வெளியீடு: வைரம் வெளியீடு,30, முதலியாண்டான் தோட்டம், காமராஜர் சாலை, சென்னை-18. பக்கங்கள்: 128.  

தமிழ்நாட்டின் தலவரலாறுகளும் பண்பாட்டுச்சின்னங்களும்

0 c
   தமிழ்நாட்டின் தலவரலாறுகளும் பண்பாட்டுச்சின்னங்களும்
 




ஆசிரியர்: நடராஜத் தேவர்
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
பகுதி: பொது
ISBN எண்:
விலை:  ரூ. 104.00


 பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.  

தேவர்

0 c


http://books.dinamalar.com/BookView.aspx?id=20363
http://books.dinamalar.com/BookView.aspx?id=3591
http://books.dinamalar.com/BookView.aspx?id=16580
http://books.dinamalar.com/BookView.aspx?id=4187
http://books.dinamalar.com/BookView.aspx?id=5715
http://books.dinamalar.com/BookView.aspx?id=15653
http://books.dinamalar.com/BookView.aspx?id=4019

http://books.dinamalar.com/BookView.aspx?id=609
தேவர் திருமகன் 
 
 


இதழியல் பார்வையில் பசும்பொன் தேவர்

ஆசிரியர்: சபீதா ஜோஸப்
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்
பகுதி: வரலாறு
ISBN எண்:
விலை:  ரூ.75


 நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105 ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை -14.போன் : 28482424, பக்கங்கள்: 120  

 

 


பசும்பொன் தேவர் திருமகனார்

Advertisement
ஆசிரியர்: என்.துரைசிங்கம்
வெளியீடு: குமரன் பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
விலை:  ரூ.40


 குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, (பாலாஜி கல்யாண மண்டபம் அருகில்), தியாகராயநகர், சென்னை-17.  
 

பொக்கிஷம் (பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு)


Advertisement
ஆசிரியர்: தி.நா. அங்கமுத்து
வெளியீடு: அழகு பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்:
விலை:  ரூ. 45.00


 அழகு பதிப்பகம், 15/21 டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை - 600 049. தொலைபேசி: 26502086.  
 




ஆசிரியர்: க.பூபதிராஜா
வெளியீடு: பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்:
விலை:  ரூ.600


 பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம், 14, ஆண்டாள் நகர், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 720+64+16.)

தலைசிறந்த தேச பக்தரும், மிக உயர்ந்த ஆன்மிகவாதியுமான பசும்பொன் தேவரின் அரசியல், சமூக, மொழி, ஆன்மிகம் சார்ந்த தொண்டைப் பற்றி விரிவாக, விளக்கமாக, ஆய்வு நோக்கில், அலசி, ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல். தென் மாவட்டங்களில் முக்குலத்து மக்களால் போற்றி வணங்கப்படும் பசும்பொன் தேவர் மனிதாபிமானம் மிகுந்த நல்ல மனிதர். தமிழ் மொழியின் ஏற்றம், தமிழகத்தின் ஆன்மிகப் பெருமை, தரமான அரசியல், பலனை எதிர்பார்க்காத தொண்டு எனப் பயனுள்ள பலதரப்பட்ட துறைகளில் வாழ்நாளெல்லாம், சுற்றுப்பத்து கிராமங்களில் வாழ்ந்த ஏழை விவசாயக்கூலிகள். இவர்களில் பெரும்பாலோர் பசும்பொன் தேவரின் சொத்துக்களுக்குப் பதிவு செய்யப்படாத உரிமையாளர்கள்.

பிரம்மச்சார்யத்தைக் கடைப்பிடித்த ஒழுக்க சீலர். சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகத்தைப் பெரிதும் போற்றியவர். மிகச் சிறிய வயதிலேயே மேடை ஏறிச் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் கைவரப் பெற்றவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாகப் பேசக்கூடிய திறமைசாலி. பார்லிமென்டில் அைனைத்து மாநில உறுப்பினர்களின் கவனத்தையும், ஈர்க்கும் வகையில் விவாதங்களில் கலந்து கொண்டு சிறப்பித்தவர். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்து கட்சியை வளர்த்த பெருமைக்குரியவர். நூலாசிரியர் க.பூபதி ராஜா, பசும்பொன் தேவரின் பேரன் உறவு நிலையுடன் திகழ்பவர். தேவர் திருமகனாரைப் பற்றி நூல் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை செயல்படுத்த பெரு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். தேவர் தொடர்பான அநேகமாக எல்லா தகவல்களையும், அவருடைய ஜாதகம் தொடங்கி, அவருடைய அன்றாடப் பழக்க வழக்கங்கள் ஈறாகச் சேகரித்து சிரத்தையுடன் கோர்வைப்படுத்தித் தயாரித்திருக்கிறார்.மதுரைத் தமிழ்ச் சங்க பொன் விழாவில், அறிஞர் அண்ணாதுரை ஆன்மிக நம்பிக்கைக்கு விரோதமாக ஒரு கருத்தை தெரிவிக்க, பசும்பொன் தேவர் மறுநாள் அதே மேடையில் அதற்கு மறுப்பும் தெரிவித்தது அன்றைய நாட்களில் பேசப்பட்ட சுவையான சமாச்சாரம். அதேபோல, மூதறிஞர் ராஜாஜி எழுதிய `வியாசர் விருந்து' நூல் வெளியீட்டு விழாவில் தானே முன்வந்து கலந்து கொண்டு ராஜாஜியைப் பற்றி புகழ்ந்து பேசிய பேச்சு வரலாற்றுப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துக் குவியல். காமராஜருடன் நட்புடன் இருந்து அவர் கரங்களை வலுப்படுத்திய நாட்களும் தேவரின் வாழ்க்கையில் உள்ளடக்கம். இந்த ஆய்வு நூலை மிகச் சிறப்பாக எழுதித் தயாரித்துள்ள க.பூபதிராஜா பாராட்டுக்குரியவர். உற்சாக மிகுதியில் நூலாசிரியர் அரிய பல தகவல்களை கூறியிருந்தபோதிலும் சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம். அவை மிகப் பெரும் அறிஞரான தேவரை, அவரது பெருமையை சற்று சுருக்கி விடுகிறது.

தெய்வீக திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு
 


 
 




ஆசிரியர்: முகவை மேத்தா
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்:
மொத்த
விலை:  ரூ.75


 நூற்றாண்டு சிறப்பு வெளியீடு, ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட், சென்னை -94. பக்கங்கள்- 272,