இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல

0 c
Kalaiyarasan K
வனத்தில் இருக்கும்
 வன விலங்குகள் பற்றியோ, 
அதன் வாழ்விடம் பற்றியோ யோசிக்க நமக்கு நேரமில்லை.

  இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. 
 சின்னத்தம்பி யானை, 
தன் இனத்துக்குச் சூழப்பட்டுள்ள பிரச்னையை 
அனைத்துத் தரப்பிலும் பேச வைத்துவிட்டான்.

உணவு யுத்தம் கவனம்

0 c
உணவு யுத்தம் கவனம்: நீண்ட நாட்களுக்குப்பிறகு தம்பி ஒருவரை சந்தித்தேன் விசாரிப்புகளுக்கு இடையே அண்ணே பொண்ணு பெரிய மனுசி ஆகிட்டானே என்றார்.
என்ன தம்பி சொல்றீங்க பாப்பாவுக்கு வயசு என்ன என்றேன் இப்பத்தான்னே ஒன்பது முடிஞ்சு பத்து நடக்குது என்றவர் எனது தோழில் சாய்ந்தே தூங்குகிற பழக்கமுடையவர் இன்னும் மனதளவில் தான் பருவமடைந்ததை உணரவில்லை என்றார் கண்கலங்கியவாறே
சராசரியாக பதினைந்து வயதிற்கு மேல் பருவமடைகிற சமூகம் ஒம்பது வயதில் பருவமடைந்தால் அந்த சமூகத்தின் ஆயுட்காலம் சராசரி அறுபது எனில் தொடர்ந்து இதுபோல் உண்வு வகைகளை மேற்கொண்டால் சராசரி ஆயுட்காலம் நாற்பது என்பதற்கான எச்சரிக்கையாகவே கருதவேண்டும்
நாம் அன்றாடம் பயன்படுத்துகிற
1.ஊசி மூலம் சினைகொள்ளும் மாட்டின் பால்
2 கொழுப்பற்ற எண்ணெய் என்கிற ரசாயனம்
3.மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் பழங்கள்
4.முற்றிலும் தீட்டப்பட்ட அரிசி
5.இரசாயண கறிக்கோழிகள்
இப்படியே போனால் அணு ஆயுத யுத்தம் இன்றி இந்த உணவு யுத்தத்தினாலேயே மனித இனம் பேரழிவை சந்திக்கும்
மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் மக்கள்செல்வர் போன்றோர்களின் கையில் ஆட்சி அதிகாரம் வரும்போது இதற்கு நல்ல தீர்வுகள் கிடைக்க வழிவகைகள் செய்யப்படவேண்டும்.

Umpire Murugan

காஷ்மீர்

0 c
காஷ்மீர் வரலாற்றை அரைகுறையாக படித்தவர்கள் காஷ்மீரின் பூர்வகுடிகளான
பண்டிட்டுகள்
ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டது பற்றியும் பேச வேண்டும்
முஸ்லீம் படையெடுப்பின் மூலம் 
அங்குள்ள இந்துக்கள்
லட்சக் கணக்கில் கொல்லப்பட்டது பற்றிப் பேச வேண்டும்
உயிருக்குப் பயந்து
மதம் மாறிய மக்கள் பற்றி பேச வேண்டும்
இன்றும்
பல லட்சம் பேர்
அங்கு சென்று வாழ முடியாத நிலையில் காஷ்மீருக்கு வெளியே அகதிகளாக உள்ளது
பற்றி பேச வேண்டும்
காஷ்மீரில் முஸ்லிம்கள்
இன்று எண்ணிக்கையில்
பெருந்தொகை மக்களாக இருப்பதற்கு காரணம் என்ன என்று பேச வேண்டும்
அங்கு
பூர்வகுடிகளாக இந்துக்களை
சுத்தமாக மறந்துவிட்டு
அங்கு பூர்வகுடிகளாக முஸ்லிம்கள் தான் இருந்தார்கள் என்ற ஒரு மனநிலையில் பேசுவது நடுநிலையான பேச்சாக இருக்காது
(காஷ்மீர் முழுமையும் இந்து மயமாக இருந்ததும் இந்துக்கள் இருந்ததும் பின் எப்படி இன்றைய நிலைக்கு மாறியது என்பது பற்றியும் குறைந்தபட்சம் விக்கிபீடியா சென்றாவது படித்து தெரிந்து கொள்ளுங்கள்)
Athiyaman Thamuka

Senthilram Palani நல்லவேளை, 1324ல் முழுவதுமாக மதுரை சுல்தான்கள் வசம் சென்றது, பின்னர் கம்பன்னர் மீட்டார், இல்லையென்றால், நமது தமிழ்க்குடிகள் என்றோ மாற்றப்பட்டு அரேபிய மதத்தின் அடிமைகளாக ஆகியிருப்பர், பிறகு மீதமுள்ள தமிழ்க்குடிகளையும் அடித்து விரட்டி அகதிகளாக அலைய விட்டிறுப்பர். இங்கும் உருதுதான் பிரதானமாக இருந்திருக்கும், தமிழ் நூல்கள் எரிக்கப்பட்டிறுக்கும்.

நம் அப்பன் ஈசன் அருளினால் தப்பினோம்.

ஏகத்துவம் ஓர் இறைவன் கொள்கை இந்த தேசத்துக்கு புதிதல்ல

1 c
ஏகத்துவம்
ஓர் இறைவன் கொள்கை
இந்த தேசத்துக்கு புதிதல்ல ...
பொதுவாக கடவுள் கொள்கை 5
முன்னோர் வழிபாடு ,
இயற்கை வழிபாடு போன்றவை
சிறுதெய்வ வழிபாடாகவும்
பின்பு
பெருந் தெய்வ வழிபாடாகவும் மாறியது ..
கடவுட்கொள்கை தோன்றியது ...
கடவுள் கொள்கை 5 வகைப்படும்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.ஒன்றாய் - ஒரே தெய்வம் --அல்லது தெய்வம் ஒன்றே ,எங்கும் நிறைந்தது
.
பலவாய் - தெய்வம் பல வடிவாகவும் பல கொள்கையும் பல நம்பிக்கையும் கொண்டது,எங்கும் நிறைந்தது
.
உருவாய் - தெய்வம் உருவம் கொண்டது ,எங்கும் நிறைந்தது
.
அருவாய் - தெய்வம் உருவமற்றது , எங்கும் நிறைந்தது
.
அருவுருவாய்- உருவமாகவும் அருவமாகவும் இருக்கக்கூடியது , எங்கும் நிறைத்தது
.
ஆக மதங்கள்
இந்த 5 கொள்கைகளில்
ஒன்றோ
அல்லது
பல கொள்கைகளின் கூட்டாகவோ உருவாகியுள்ளன
ஆனால்
நமது நாவலந்தீவில்
ஐந்து கடவுட் கொள்கைகளும் வழங்கி வருகிறது
ஒன்றாய் , பலவாய் , உருவாய், அருவாய் , அருவுருவாய்
என கடவுள் கோட்பாடு ஐந்து வகைக்குள் அடங்கும்
ஏகத்துவம் எனப்படும்
ஓர் இறைவன் கொள்கை
இந்த தேசத்துக்கு புதிதல்ல ...
இந்த ஐந்து வகை மதங்களில்
இதுவும் ஒன்றே...
இது மட்டும் தான்
உண்மை என சொல்வது
இறைவன் முட்டாள் என்று சொல்வதற்கு சமம்
ஏகன் அனேகன் என்று
சிவபெருமானை போற்றுகிறது தமிழ்
ஒரே நேரத்தில்
ஏகனாகவும்
அநேக உருவத்துடனும் இருக்கிறான் இறைவன் .

அரிகண்டம்

0 c
போர்குடிகளிடம் ஒரு குணம் உண்டு
அஞ்சாமையல்ல அதை தாண்டி
தன் இன்னுயிரை தத்தம் செய்தல்

அரிகண்டம் - என்பது தொண்டையை அரிந்து பலி கொடுத்தல்
தங்கள் கழுத்தை தாங்களே அறுத்து தெய்வத்துக்கு பலி கொடுத்தல்
அரிகண்டம் எனப்படுகிறது.

போர்குடிகளான முக்குலத்தோர் தங்கள்
தாய் தெய்வமான கொற்றவைக்கு இது போல பலியாதல்
வரலாற்று நெடுகிலும் பதியப்பட்டுள்ளது .
அவளுடைய கொப்பு கிளைகள்
அவளிடமே சென்றடைகிறார்கள்

குன்றாண்டார் கோவிலில் இருக்கும் அரிகண்ட சிற்பம் பற்றி சியாம் சுந்தர் சம்பட்டியார் பதிவை படிப்போம்

குண்ணன்டார் கோயில் அரிகண்டம் நடுகல்:-
-+++++++++++++++++++++++++++++++++++++++

புதுக்கோட்டை மாவட்டம்
குண்ணன்டார் கோயில் எனும் ஊரில்
கிபி 8 ஆம் நூற்றாண்டில்
இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோயில் உள்ளது.

இக்கோயிலின் வலது புறம் உள்ள
நூற்றுக்கால் மண்டபத்தில்
ஒரு அரிகண்டம் நடுகல் உள்ளது.

''வீரர்கள்,
போரில் தன் அரசனுக்கு வெற்றி கிடைக்கவும்,
தன் தலைவன் உடல் நலம் பெறவும்,
ஊரின் நன்மைக்காகவும்
காளி,
கொற்றவை போன்ற தெய்வங்களை வேண்டிக்கொண்டு,

அக்கோயில் முன்பு
வாளால் தங்கள் தலையை
தாங்களே அறுத்து
அத்தெய்வங்களுக்கு காணிக்கையாகக் கொடுப்பர்.

இதனை கல்வெட்டுகள்
'தூங்குதலை குடுத்தல்' என்கின்றன.

இந்தகைய வழிபாடு
தலைப்பலி, அரிகண்டம்
எனவும் அழைக்கப்படுகிறது.

சிற்பத்தில்
ஒரு வீரன் தனது கழுத்தை தானே அறுத்துக்கொள்வதை போன்று செதுக்கப்பட்டுள்ளது. வீரன் இடுப்பில் போர் வாள் உள்ளது.

தற்காலத்தில் வழிபாடுகள் நடைபெறுவதாக தெரியவில்லை..இப்பகுதியில் வாழ்ந்த ஒரு வீரன் தன் தலைவனுக்காக, கடவுளுக்காகவோ தன்னையே பலியிட்டு இன்று நடுகல்லாக உள்ளார்.

குண்ணன்டார் கோயில் வடமலை மற்றும் தென்மலை நாட்டு கள்ளர்கள் வாழும் முக்கிய ஊர் எனவும், இந்த கோயிலில் தான் நாட்டுக்கூட்டங்கள் நடைபெறுவதாகவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது.

# சியாம் சுந்தர் சம்பட்டியார் #

வீரபாகு தேவர்

0 c
வீரபாகு தேவர்
என்று இருந்தது
வீரபாகு மூர்த்தி என்று ஆகி விட்டது
திருச்செந்தூரில்
மேகநாதன் முக்குலத்து புலி
5 மணி நேரம்

ராமலிங்கம் ஒரு அப்பாவி.

0 c
‎Raja Narayanaswamy Gounder‎ - அவர்கள் பதிவு
ராமலிங்கத்தின் மைய உரையாடல்
சொல்ல வருவது ஒன்றுதான்
நீங்கள் உங்கள் மதத்திற்கு வருபவர்களைத்தானே மாற்றுவீர்கள் ஆனால் நீங்களே இப்படி இறங்கி வந்து மதமாற்றுவது சரியா? என்கிற வாதம்தான் ஆதாரப்புள்ளி.
ஆனால் ராமலிங்கம் ஒரு அப்பாவி.
ஆபிரஹாமிய மதங்கள்
நீயும் இரு,நானும் இருக்கிறேன்
என்ற சிந்தனையின் அடிப்படையில்
எங்கும் இருக்காது என்பதை
புரிந்துகொள்ளாத எளிய இந்து அவர்.
இஸ்லாமியர்கள் ஆள்கிற நாடுகளை
கவனித்தாலே புரியும்
அங்கு 40% இன்னொரு மதம் வாழ முடியுமா?
என்றும் முடியாது.
அங்கிருக்கும் மாற்று மத சிறு சதவிகிதமும் அவர்களுக்கு அடிமை வேலை செய்ய மட்டுமே இருப்பார்கள்
ஆபிரஹாமிய மதங்கள்
தங்களுக்குள் இருக்கும் போட்டியே
இந்துவை யாராக மாற்றுவது என்பதுதானே ஒழிய
நம்மை இந்துவாக வாழவிடுவதில் இல்லை
.வாள் முனைக்கு
வேறு வேறு முகமூடிகள்
மட்டும்தான் நம் நாட்டில் போடப்படுகிறதே ஒழிய
மற்றபடி
அந்த ஔரங்கசிப்பின் வாள்
மறையாமல் அப்படியேதான் உள்ளது.
மாற்று மதத்தவர்
ராமலிங்கத்திடம் கேட்கிறார்
ஐயர் வீட்டில் போய் சாப்பிடுவோமா?
நீ பெண் கொடுப்பாயா என்று.
இந்த பெரியாரிய பேச்சுதான்
அது மதம் மாற்றுவதற்கும்
,இங்கிருக்கும் பண்பாட்டை நிர்மூலமாக்குவதற்கும் வைத்திருக்கும் மிகப்பெரிய கேடையம்
.பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள் ஏற்படுத்துகிற மோதலே
இங்கு திட்டமிட்டு
பல சதிகளால் நிறைவேறுகிறது
என்பதே உண்மை.
நமக்குள் இருக்கும் ஒரு பிரச்சனையை ஊதி பெரிதாக்கி நாமே நம் வன்மத்தை வளர்தெடுக்க உதவும் ஒரு உளவியல் பயிற்ச்சியை செய்கிறார்கள்.
எங்கள் பிரச்சனையை
நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
என்று சொல்ல இங்கு நாதியில்லாமல் போனது
அப்படி சொல்பவர்களை
இல்லாமலாக்குவதை பற்றிய விழிப்புணர்வு யாரிடமும் இல்லை.
நான் கோவில் கருவறைக்கு போக முடியுமா?
நீ உன் பெண்ணை தருவாயா
என்கிற கேள்வி
அத்தனையும்
விதண்டாவாதத்துடனும்,
மட்டரகமான
உள்நோக்கத்துடனும் கேட்கப்படுவது.
உதாரணத்திற்கு
ஒரு ஏழை பிராமணருக்கு
தன் வீட்டில் சம்மந்தம் செய்ய ஒப்புக்கொள்வாரா முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா? மாட்டார்தானே ஏன்?
1947க்கு பின் நாமெல்லாம் நெறுப்பில்
விழுந்து அப்படியே மாறி
ஜனநாயகத்தில் புகுந்துவிட்டோமா?
இல்லை.
நமக்கு ஆயிரம் வருட தொடர்பு அறுந்து போகாமல் உள்ளது.
எனவே உங்களிடம் புகுத்தப்படுகிற
உருப்படாத கருத்துகளை தூக்கி
கிடாசுங்கள்
நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு
கேள்வி கேட்காமல் இந்துவாக ஜனநாயகத்தன்மையில் திரளுவதும்
நமக்கான அரசை அமைத்துக் கொள்வதும்தான்.
ஏனென்றால்
நீங்கள் இந்துவாகவோ
அல்லது ஒரு மதமற்றவனாகவோ வாழ்வது
உங்கள் சுயவிருப்பினால் அல்ல
அது பலபேரின் தியாகத்தால் என்பது மட்டுமே உண்மை.
பங்களாதேஷ்-பாக்கிஸ்த்தானில்
இந்துக்களுக்கு ஏற்பட்ட நிலையை
கண் முன்னால்
இங்கே கொண்டு வந்துவிட
துணை போகாதீர்கள்.
நீங்கள் எந்த கட்சியிலும் இருங்கள்
உங்கள் பிரதிநிதித்துவத்திற்கு
ஆனால் எங்கும் இந்துவாக இருங்கள்.
Raja Narayanaswamy Gounder‎

கள்ளர் சரித்திரம் ந.மு.வேங்கடசாமி நாட்டார்

0 c
கள்ளர் சரித்திரம்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்

Rs.50/00

வாங்க

https://www.vaaa.in/shop/kallar-sariththiram/Kallar Sariththiram கள்ளர் சரித்திரம் ந.மு.வேங்கடசாமி நாட்டார்


சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .
12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் ஈங்குரைக்க விளைகிறேன்.
கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால மக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.
நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.
அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.
எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய 'தென்பாண்டிச் சிங்கம் ' எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.

மதுரைச் சுல்தான்

0 c
துக்ளக்
மதுரைச் சுல்தான்களின் ஆட்சிபற்றி மதுரைத் தல வரலாறு கூறுவதாவது :
"சாலிவாகன சகாப்தம் 1246ல் கொல்லமாண்டு 500 (கி. பி 1324)
ருத்ரோத் காரி வருஷம் ஆனிமாதம் வடக்கே இருந்து வந்த
ஆதிசுல்தான் மலுக்கு நேமி என்பவனும்
மதுரை வந்து வாளால் விழித்துறங்கும் பாண்டியன் என்ற
பராக்கிரம பாண்டிய தேவரைச் செயித்து
பிடித்துக் கட்டிக் கொண்டு டில்லியில் அனுப்பிப் போட்டு
ராச்சியத்தை கட்டிக் கொண்டான்.
” ‘மலுக்கு’ என்ற பெயரொற்றுமையைக் கண்டு
இவனே மாலிக் காபூர் என்று ஒரு சாரார் கருதுகிருர்கள்.
மாலிக்காபூரின் படை யெடுப்புக் காலத்தை
முஸ்லிம் ஆசிரியர்கள் 13:09, 1321 என்று வரையறுத்துக் கூறுகிருர்கள்.
இதனையே தென்னிந்திய வரலாற்று
ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அவன் படையெடுப்புக் காலத்தில்
வீரபாண்டியனும், சுந்தர பாண்டியனும்
தாயப் போரில் ஈடுப்பட்டிருந்தனர்.
விக்ரம பாண்டியன் மாலிக்காபூரை முறி யடித்து விரட்டினன்.
ஆனல் மதுரையை முஸ்லீம் சுல்தான்கள் கைப்பற்றிக் கொண்ட காலம்
1321 என்பது தலவரலாற்றுச் செய்தியால் தெரிய வருகிறது.
அது மாலிக்காபூரிள் படை யெடுப்புக்கு
13 ஆண்டுகளுக்குப் பின்னர் என்றே படுகிறது.
மாலிக்காபூரின் படையெடுப்பு அல்லாவுதீன் கில்ஜி
டில்லியை ஆண்ட காலத்தில் நிகழ்ந்தது.
1324ல் கில்ஜி வம்சம் அழிந்து,
துக்ளக் வம்சம் ஆளத் தொடங்கிவிட்டது.
எனவே முகமது பின்துக்ளக் தட்சிண ராஜ்யங்களை அடக்கி
டில்லி ஆட்சியின் கீழ் கொணர்வதற்காக அனுப்பிய
‘மாலிக்ஸ்ாதா” என்ற புகழ் பெற்ற தளகர்த்தனை அனுப்பி வைத்தான்.
இவன்தான் மலுக்கு நேமி என்று
மதுரைத் தல வரலாறு குறுப்பிடும்
ஆதிசுல்தானவான் அவன்தான் மதுரைச் சுல்தானிய ஆட்சியை நிறுவியவன்.
இவ் வாட்சி கி. பி. 1324 முதல் 1372 வரை நிலவி இருந்தது.
ஐவர் ராசாக்கள் கதை நூலிலிருந்து ..

குடும்ப பாசம் , சாதி பாசம்

0 c
சாதி ஒழிப்பாளர்கள் ...கவனிக்க ...
இதை தான் குடும்ப பாசம் , சாதி பாசம்
என்று சொல்கிறார்கள்
----------------------------------------------------------------------
டிசம்பர் மாதம் முதுமலை பயணம் சென்றிருந்தேன். யானை தன் குட்டியை
மிகவும் அதிக கவனத்துடன் பாதுகாத்து அழைத்துச்செல்வதை நிறைய சந்தர்ப்பங்களில் பார்த்து இருக்கிறேன் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால்
முதுமலையில் ஆறு யானைகள்
குளித்துக்கொண்டு இருந்த போது
எங்களது இடதுபுறம் சரிவில் நின்றிருந்த
ஒரு யானை, குட்டியுடன் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தயானையைப் பார்த்து கத்திக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த யானையின் பிளிரல் தொடரவே குளித்துக்கொண்டிருந்த யானைகள் கரை ஏறத்தொடங்கின.
வளர்ந்த யானைகள்சாதுரியத்துடன் கரை ஏறுகையில், குட்டி கரை ஏறமுடியாமல் தவித்த போது, தாய் யானை தனது முன் இரண்டுகால்களுக்கு இடையில் குட்டியை இருத்திக்கொண்டு அது விழாமல் கரை ஏற தனது முன்காலில் குட்டியை உந்திஏற உதவியது.
இருந்தபோதிலும் எங்களது இடது பக்கம் பிளிரிக்கொண்டிருந்த யானை தனது அறைகூவலைதொடர்ந்து கொண்டே
எங்களை நோக்கி மிக அருகில் வந்து கொண்டிருந்தது. கரை ஏறிய யானை தனது குட்டியை பாதுகாப்பாக தனது அருகிலேயே வருமாறு அழைத்துக்கொண்டு பிளிரிய யானையை நோக்கி சென்றது
. குட்டி யானை பாதுகாப்பாக
தாய் யானையுடன் பிளிறிய யானை அருகில் வந்த போது உணர்ச்சிப்பூர்வமானது.
பின்னர் யானைகள் அனைத்தும்
குட்டியை யாரும் பார்க்காதவாறு அனைத்தும் சென்றது.
விலங்குகள் ஆறு அறிவுள்ள
மனிதனைப் காட்டிலும்
பாசமாக பாதுகாப்பாக
தனதுகுட்டியை அழைத்துச்சென்ற முறை மெய்சிலிர்க்க வைத்தது.
‎Ponmoorthy Ramasamy‎ பெறுநர் காடுகள் (forest)
25 நிமிடங்கள்










இந்திய இராணுவ தினம் ஜனவரி 15

0 c


இந்திய இராணுவ தினம் ஜனவரி 15...
இந்திய இராணுவ நாள் இந்தியாவில் ஜனவரி 15 ம் ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர்
இந்திய இராணுவ தளபதியாக 
ஆங்கில அதிகாரிகள் இருந்தனர்.
சுதந்திர இந்தியாவில் 

இந்தியத் தரைப்படையின்
முதல் படைத்தலைவராக (commander-in-chief)
லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா
1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார்.
இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி
ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார்.
சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து 
ஜெனரல் கே எம் கரியப்பா
இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.
இந்திய ராணுவத்துக்கு 
இந்தியரே 
முதல் இந்திய
இராணுவ தளபதியாக
லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் ஆண்டுதோறும் 
இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

களப்பிரர் பற்றிய வரலாற்று நூல்

0 c

#சேர #சோழ #பாண்டியர் என #மூவேந்தரையும் வென்று தமிழகத்தை ஒரு குடைக்குள் ஆட்சி செய்த
#களப்பிரர் பற்றிய வரலாற்று நூல்களும்
அவை கிடைக்கும் தொடரிகளும் (EBOOK LINK)
இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
.
.
நூல் 1
.
களப்பிரர் காலத் தமிழகம் (கி.பி.300-600) ஆசிரியர் திரு .பன்னீர்செல்வம்
https://www.amazon.in/dp/B07L1RNBCW
.
.
நூல் 2
.
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் ஆசிரியர் . திரு மயிலை,சீனி.வேங்கடசாமி
https://www.amazon.in/dp/B07L69236F
.
.
நூல் 3
.
களப்பிரர் வருகை ஆசிரியர் . திரு நடன காசிநாதன்
https://www.amazon.in/dp/B07MBR2L92
.
.
நூல் 4
.
பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆசிரியர் . திரு அருணாசலம் மு.
https://www.amazon.in/dp/B07LH4B7YC
.
.
நூல் 5
.
வச்சிரநந்தியின் திரமிள சங்கம் ஆசிரியர் . திரு மயிலை,சீனி.வேங்கடசாமி
https://www.amazon.in/dp/B07L1RNBCW
.
.
நூல் 6
.
இறையனார் அகப்பொருள் வரலாற்று ஆய்வு ஆசிரியர் . திரு மயிலை,சீனி.வேங்கடசாமி
https://www.amazon.in/dp/B07L6JKV8W
.
.
.
நூல்களை பற்றிய விரிவான விபரங்கள்
-----------------------------------------------------------------------
களப்பிரர் காலத் தமிழகம் (கி.பி.300-600)
.
https://www.amazon.in/dp/B07L1RNBCW
KALAPIRAR KAALA TAMILAGAM
(Tamil Edition) Kindle Edition
by PANNEER SELVAM R (Author)
கிபி 300 முதல் 600 வரை
தமிழகத்தை ஆட்சி செய்த
அரசவம்சம் பற்றிய வரலாறு
--------------------------------------------------------
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
.
https://www.amazon.in/dp/B07L69236F
(Tamil Edition) Kindle Edition
by SEENI.VENKATASAMI MAYALAI (Author)
களப்பிரர் ஆட்சியின் கீழ் அடங்கியிருந்த நாடுகள் சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, துளுநாடு, கொங்கு நாடு, இரேணாடு, ஈழநாடு.
களப்பிரர் ஆட்சிக்காலம்
தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது.
ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது.
வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து,
இது வெளியிடப்பட்ட பிறகுதான்
களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும்
அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரியவந்தது.
--------------------------------------------------------------------------------------
களப்பிரர் வருகை Kindle Edition
by நடன காசிநாதன் (Author)
https://www.amazon.in/dp/B07MBR2L92
தமிழக வரலாற்றைக் கற்காலம் தொட்டு தற்காலம் வரை வரலாற்றாசிரியர்கள் எழுதி வருகின்றனர் என்றாலும் சங்க காலத்தை அடுத்து மூன்று நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தின் நிலை என்ன என்பதைச் சரிவரக் கூறமுடியாத நிலையிலேயே உள்ளனர். அக்கால கட்டத்து வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் குறிப்பிட்ட அளவில் கிடைக்காத காரணத்தால் அதனை ‘இருண்டகாலம்’ என்று கூறுகின்றனர். அக்கால கட்டத்தில் ‘களப்பிரர்கள்’ என்னும் அரச பரம்பரையினர் ஆண்டிருக்கக்கூடும் என்பதை வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பால் உணர்த்துவதால் ‘களப்பிரர் காலம்’ என்றும் கூறுவர். பொதுவாகக் களப்பிரர்கள் கி. பி. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 6-ஆம் நூற்றாண்டு வரை ஆண்டவர் என்பர். அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில கல்வெட்டுக்களால் அவர்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழகத்தில் சிறுபகுதியையேனும் ஆண்டிருக்க கூடும் என்பது தெரியவருகிறது. அதற்குப் பிற்பட்ட காலத்தில் அவர்கள் ஓரளவுக்குத் தம் நிலை தாழ்ந்து சோழ, பாண்டிய மன்னர்களிடத்தில் அரசு அதிகாரிகளாகப் பணிபுரிந்து வந்திருக் கின்றனர் என்பதற்கும் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன.
--------------------------------------------------------------------------------------
வச்சிரநந்தியின் திரமிள சங்கம்
https://www.amazon.in/dp/B07L1RNBCW
VACHIRA NANDHI THIRAMILA SANGAM
(Tamil Edition) Kindle Edition by MAYILAI SEENI VENKATASAMY (Author)
களப்பிரர் ஆட்சிக்கு முன்னே பாண்டியர் தமிழ் மொழியை ஆராய்வதற்குப் புலவர்களின் கூட்டத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தமிழ்ச் சங்கம் என்பது பிற்காலத்துப் பெயர். அதன் பழைய பெயர் தமிழ்க் கழகம் என்பது. பிற்காலத்துப் பாண்டியர் அமைத்திருந்த சங்கம் மதச் சார்பான சங்கம் அன்று. அது தமிழ் மொழியை ஆராய்வதற்கு ஏற்பட்ட சங்கம்
வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கம் இது கி.பி. 470 இல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நடந்தது. . இந்தத் திரமிள சங்கத்தில் சைன சமயத் துறவிகள் மட்டுமே இருந்தார்கள். இவர்களுடைய வேலை, முன்னமே சொல்லியது போல சைன சமயத்தைப் பரப்பியதாகும்
வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் சைன மதத்தை வளர்ப்ப தற்கான சங்கமாகும் (சங்கம்- கூட்டம்). பௌத்தப் பிக்குகளின் கூட்டத்துக்குப் பௌத்த சங்கம் என்பது பெயர்.
--------------------------------------------------------------------------------------
இறையனார் அகப்பொருள் வரலாற்று ஆய்வு
https://www.amazon.in/dp/B07L6JKV8W
Iraiyanar Agaporul Varalatru Aivu (Tamil History Book 3) (Tamil Edition) Kindle Edition
களப்பிரர் ஆட்சிக் காலத்தில், பக்தி இயக்கம் தோன்றிய போது இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூல் எழுதப்பட்டது . தொல்காப்பியப் பொருளதி காரம் இருக்கும்போது இந்தப் புதிய அகப்பொருள் நூலை எழுதிய நோக்கம் என்ன? யாது காரணம் பற்றி இந்தப் புதிய நூல் எழுதப்பட்டது என்பதை பற்றிய ஆய்வு நூல் இது
--------------------------------------------------------------------------------------
பாண்டிய நாட்டில் களப்பிரர்
PANDIYA NAATIL KALAPPIRAR (TAMIL HISTORY Book 7) (Tamil Edition) Kindle Edition
by அருணாசலம் மு. (Author)
நன்றி
KALAPRAR TAMIL BOOK